செலவு பாதி; சேமிப்பு பாதி!

‘முன்னல்லாம் அப்படித்தான்... கைக்கும் வாய்க்குமே சரியாப் போய்க்கிட்டு இருந்திச்சு. ரொம்ப கஷ்டப்பட்டோம்.. அப்புறமா.. கொஞ்சம் கொஞ்சமா.., பணம் கூடுதலா வர ஆரம்பிச்சிது... கடவுள் புண்ணியத்துல இப்ப..., நல்லா... தாராளமா... இருக்கு..’

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், பொருளாதார ஏற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பிறரிடம் வெளிப்படை யாகச் சொல்லிக்கொள்வது இல்லை. நாமாகக் கற்பனை செய்துகொண்ட ‘பொறாமை’தான் இதற்கு காரணம். பரவாயில்லை, பிரச்னை என்ன வென்றால், பல சமயங்களில் நம்முடைய ஏற்றம் குறித்து நமக்கே சரியாகத் தெரியாமல் போய் விடுவதுதான்.

பொதுவாக, பொருளாதார முன்னேற்றம் படிப்படியாகத்தான் நிகழும். குலுக்கலில், போட்டிகளில் கோடிகள் வென்று ‘திடீர்’ செல்வந்தர் ஆகிற ‘கதை’ எல்லாம், ‘மேலாண்மை’க்குள் வராது. ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு நிலையாக மேலே வருவதுதான் இயல்பு.

நாம் எல்லாருமே இந்தப் பிரிவில்தான் இருக்கிறோம். இவ்வாறு முன்னேறுகிறபோது, நம்முடைய செலவு, சேமிப்பு முறையிலும் அதற்கேற்ப மாற்றம் செய்துவர வேண்டும். ஆனால், வருமான உயர்வுக்கேற்ற மாற்றம் (A Corresponding Change) பற்றிய சிந்தனையே பலருக்கு ஏற்படுவதில்லலை.

‘ப்ச்... பணமா... வந்து கொட்டிச்சு. அப்பல்லாம், ‘புத்தி’ இல்லாம, கண்டபடி செலவு செஞ்சே அழிச்சுட்டேன். இப்ப கெடந்து அவஸ்தைப்படறேன்...’ என்று புலம்புகிறவர்களை நாம் பார்க்கி றோமா இல்லையா..? ஏன் இப்படி ஆயிற்று..? முறையான, செலவு மேலாண்மை இல்லை.

வரவு அதிகமாகிறபோது, அதிகம் செலவு செய்யலாம். அதே சமயம், சேமிப்பும் அதிக மாக வேண்டும். எல்லாருக்கும் ஒரு வினா எழும். வருமானத்தில் 5% அல்லது 10% சேமிப்பு என்றால், வரவு அதிகமாகும்போது, இந்த 5% அல்லது 10% என்கிற தொகையும் அதிகமாகத்தானே செய்யும்..? மிக்க சரி.

ஆனால், சேமிப்பின் விகிதம் அதிகரிக்கவில்லையே..? சற்றே விளக்கமாகப் பார்க்கலாமா..?

ஒருவருக்கு மாத வருமானம் 50,000 ரூபாய். 10% சேமிக்கிறார். அதாவது, மாதம் 5,000 ரூபாய். சிறிது சிறிதாக அவருடைய வருமானம் உயர்ந்து இப்போது அவருடைய வருமானம் ஒரு லட்சம் ஆகிவிட்டது. இப்போது அவர் சேமிப்பது 10,000 ரூபாய். வருமானம் இரட்டிப்பு; அதற்கேற்ப சேமிப்பும் இரு மடங்கு. இதில் எங்கே தவறு இருக்கிறது..?

சேமிப்பு என்கிற நோக்கில் பார்த்தால், இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், செலவு நோக்கில், மிகப் பெரிய தவறு நேர்ந்து இருக்கிறது. எப்படி..?

முந்தைய வருமானத்தின் போது, அவர் செய்த மாதாந்திர செலவு எவ்வளவு..? 50,000-த்தில் 90%, அதாவது 45,000. தற்போது..? ஒரு லட்சத்தில் 90%. அதாவது 90,000. 45,000-த்தில் குடும்பம் நடத்த முடிந்ததே..! இப்போது ஏன் 90,000 தேவைப்படுகிறது..? வருமானம் கூடிவிட்டதே... செலவு, தொடர்ந்து 90% என்கிற அளவிலேயே இருக்கலாமா..?

‘ஏன் கூடாது..? அப்பவே இந்த செலவுகள் எல்லாம் இருந்தது. என்ன, 50,000 ரூபாய்ல அதெல்லாம் செய்ய முடியல. இப்பதான் வருமானம் இருக்கு இல்லை..? அதான் செலவு செய்யறேன்...’

‘இப்பதான் இவரு, மனசு வந்து நாலு இடத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறாரு.. முன்னல்லாம், எப்ப கேளுங்க, ‘இல்லை’ பாட்டுதான். அவரைத் தப்பு சொல்லலை.. நெலைமை அப்படி...’

‘குழந்தைகளுக்கு நல்ல துணிமணி, யாராவது வந்தா போனா உட்கார்றதுக்கு ஒரு சோஃபா செட், அவ்வளவு ஏன்.. அப்பல்லாம் வீட்டுல ஒரு ஃப்ரிட்ஜ்கூட கிடையாது தெரியுமா..? பணம் வந்தப்புறம் கூட, செலவு பண்ணக் கூடாதுன்னா எப்படி..?’

நியாயம்தான். செலவு செய்யாதீர்கள் என்பதல்ல செய்தி. எத்தனை சதவிகிதம்..? அதுதான் முக்கியம். அழுத்தமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டிய, அடிப்படை விதி இது: வருமானம் அதிகரிக்க அதிரிக்க சேமிப்பின் சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்.

மாதம் 50,000 ரூபாயின்போது, நம்மால் 10% சேமிக்க முடிந்தது என்றால், வருமானம் இரட்டிப் பாகும்போது, சேமிப்பும் இரட்டிப்பாக வேண்டும். இந்த நிலையில் சேமிப்பு 20% இருக்க வேண்டும். இதன்படி, நமது செலவு 80% ஆகிறது. அதாவது, 80,000 ரூபாய். முன்னர் இது, 45,000 ரூபாயாக இருந்தது. இப்போது, 80,000 ரூபாய். கணிசமாக அதிகரித்து இருக்கிறதா இல்லையா..? இந்த அளவுக்கு செலவுகளை அதிகரித்துக் கொள்ளலாம்.

80,001 செலவழித்தாலும், மிதமிஞ்சிய செலவுதான். இதில் நாம் கண்ணும் கருத்துமாக இருத்தல் மிக முக்கியம். இப்படி, சிறிதுசிறிதாக சேமிப்பின் விகிதத்தைக் கூட்டிக்கொண்டே போய், வருமானத்தின் 50% வரை நம்மால் சேமிக்க முடியும் என்கிற நிலையை எட்டிவிட்டால்..? நாம் அடுத்த வருமானப் பிரிவில் நுழைந்துவிட்டோம் என்று பொருள்.

சரி. மீண்டும் செலவுக்கு வரு வோம். நம்முடைய சமுதாயத்தில் என்ன நடைபெறுகிறது..? ஆங்கிலத்தில் ‘spending spree’ என்றொரு சொற்றொடர் உண்டு.

‘கண்ணை மூடிக்கிட்டு’ செலவு செய்யறதுன்னு சொல் வார்கள் இல்லையே..? அதேதான். யாரெல்லாம் பொருளாதார ஏற்றத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் மிகுந்த எச்சரிக்கையுடன் கடக்க வேண்டிய பாதை இது.

அகோரப் பசியுடன் இருக்கும் ஒருவனின் முன், தலைவாழை இலை நிறைய, விதவிதமான திண்பண்டங்களை பரிமாறி உண்ணச் சொன்னால், என்ன செய்வான்..? எது முதலில், எது குறைவாய் என்கிற நிதானம் இருக்காதுதானே..?

இதே பந்தியில், மூச்சுமுட்ட மூன்று வேளையும் சுவையாய் சாப்பிட்டுப் பழகியவன், எப்படி நடந்துகொள்வான்..? இது, வறியவனைக் கேலி செய்வதற்காக அல்ல; மாறாக, விருந்தின் முடிவில் என்ன விளைவு என்று பார்ப்பதற்காகச் சொல்லப் படுகிற உதாரணம்.

நடைமுறை உண்மை - மிகுந்த பசியுடன் அமர்ந்தவனின் இலையில்தான் அதிகம் மீதம் இருக்கும். அதாவது, அதிகம் வீணடிக்கப்பட்டு இருக்கும். பதற்றம் தந்த பாதிப்பு!

இத்தகைய மன நிலையில்தான், பொருளாதார ‘ஏற்றத்தில்’ இருக்கிற எந்த மனிதனும் நடந்து கொள்கிறான். ஆச்சரியம், இந்த மனநிலையை, நம் கிராமத்து மக்கள் சரியாகப் புரிந்து வைத்து இருக்கிறார்கள். ‘என்ன இப்பிடி... பணத்தை தண்ணியா வாரி இறைக்கறானே! எல்லாம்... கை ஏத்தமப்பு... அதான்!’

பணம் வருகிறபோது நிதானத் துடன் கையாள்வது எப்படி என்கிற ‘வித்தை’, நம் விவசாயப் பெருமக்களுக்கு இயல்பாகவே கைவந்து இருக்கிறது. ஏதோ காரணத்தால், ‘பயிரு மோசம் பண்ணிடிச்சு’ என்றாலும், ‘ஆத்தா தயவுல, இந்த வருஷம் அமோக வெளைச்சலு...’ என்றாலும், இரண்டையும் சமமாகப் பாவித்து, ஒரே நிலையில் ஏற்றுச் செயல்படுகிற ‘பேராண்மை’, நம் மண் நமக்குக் கற்றுத் தந்திருக்கிற ஆகச் சிறந்த பொருளாதாரத் தத்துவம்.

கூடுதல் வருமானம், காலம் தந்துள்ள ஆதாயம். ஆனால், நிதானமின்றி செலவு செய்வதால், இந்த ஆதாயம், நாளடைவில் பெரிய சுமையாக, ஆபத்தாக மாறிவிடுகிறது.

ஆக, வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும்போது, செலவுகளின் மீது, ‘ஒரு கண்’ இருந்தேயாக வேண்டும். அவ்வப்போது செலவு அட்டவணையை மாற்றிக்கொண்டே வந்தால் போதும். அதன்படி, 20 சதவிகித தீர்வு என்பதை, 50:50 தீர்வு என்று மாற்றிக்கொள்கிறோம்.
வருமானம் கணிசமான அளவு உயரும்போதெல்லாம், செலவு அட்டவணையும் மாற வேண்டும். ஒவ்வொரு செலவை யும் பார்த்துப் பார்த்து மாற்ற வேண்டியதில்லை. சேமிப்பு விகிதத்தில் மாற்றம் செய்தாலே போதும்.

வருமானத்தில் 50% சேமிப்பு என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுதல் நல்லது. அதாவது, பாதி செலவு; மீதி சேமிப்பு. இந்த 50:50 ‘கான்செப்ட்’தான், மாத சம்பளம் பெறுகிற, நடுத்தரப் பிரிவினருக்கான, ‘அல்ட்டிமேட்’ அட்டவணை. இது என்ன சொல்கிறது..?

(சேர்ப்போம்)

‘ஆப் ஒன்லி’ திட்டத்தை நிறுத்திவைத்த ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ‘ஆப் மூலம் மட்டுமே வர்த்தக சேவை’ தரும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சில மாதங்களுக்குமுன் இந்த நிறுவனம் முழுமையாக ‘ஆப்’ மூலம் மட்டுமே வர்த்தக சேவையை அளிக்க முடிவெடுத்தது. ஆனால், கணினியில் கிடைக்கும் விலை ஒப்பீடு செய்யும் வசதி மற்றும் பரந்த ஸ்கீரின் வியூ போன்றவை மொபைல் ஆப்-ல் கிடைப்பதில்லை என சில வாடிக்கையாளர்கள் குறைபட்டனர். அதோடு விலை உயர்ந்த பொருட்களை ஆப் மூலம் பெரும்பாலும் யாரும் வாங்குவதில்லை. இந்த காரணங்களால் ஃப்ளிப்கார்ட் தனது ‘ஆப் ஒன்லி’ திட்டத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது!