ஒரு சின்ன உதாரணம். மாலிக் என்பவர் ஷாப்பிங் மால் ஒன்றை கட்டுவதாக வைத்துக்கொள்வோம்.

அவர் ஒரு சிறந்த மேனேஜர். அவரிடம் சொந்தமாக பணம் எதுவும் கிடையாது. மால் கட்டுவதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து அவர் நிதியைப் பெறுகிறார். இந்த மால், வருமானத்தை பெருக்கும் பல கடைகளைக் கொண்டிருந்தது.

மா லிக்குக்கு பணம் கொடுத்த பல்வேறு தரப்பினர், அவரிடமிருந்து வெவ்வேறு விதமான பலனை எதிர்பார்த்தனர். சிலர் அவர்களின் பணம் நேரடியாக வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். சிலர் வட்டி வருமானத்தை எதிர்பார்த்தனர். இது நிதி ஆதாரம் (Source of Funds) எனப்படுகிறது.

மாலிக் இந்த நிதியைக் கொண்டு, ஷாப்பிங் மாலில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துகிறார். இதில் சில நேரடியாக வருமானத்தை ஈட்டித் தரும். உதாரணத்துக்கு, கடைகள்.

மற்றவை வருமானத்தை பெருக்க மறைமுகமாக உதவி செய்வதாக இருக்கும். உதாரணத்துக்கு, லிப்ஃட்டுகள், மின்சார படிக்கட்டுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மாலிக் பணத்தைச் செலவிடும் இந்த வழிகள் நிதிப் பயன்பாடு (Use of Funds) எனப்படுகிறது.

மாலிக், கீழே காணும் சில முக்கிய முடிவுகளை எடுக்கிறார்

கடைகளின் அளவு!

மால் என்பது பல சிறிய கடைகள், சில பெரிய கடைகளைக் கொண்டிருக்கும். இது வணிகம் கலவையாக இருக்க உதவிகரமாக இருக்கும். ஏதாவது ஒரு பிரிவில் மட்டும் இருந்தால், மாலில் உள்ள கடைகள் விற்பனையாவது அல்லது கடைகளை அமைப்பது கடினம்.

இட ஒதுக்கீடு!

உணவகங்கள், வாகனங்களை நிறுத்தும் இடம், பொதுப் பயன் பாட்டுக்கான இடங்கள் போன்ற வற்றுக்கான இட ஒதுக்கீடுகள். பார்க்கிங் இடவசதி குறைவாக இருந்தால் மாலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இந்த காரணத்துக்காக சில வாடிக்கையாளர்கள் சில சமயங்களில் இந்த மால் பக்கம் வருவதையே தவிர்க்கும் நிலைகூட ஏற்படும். அதே நேரத்தில், வாகனம் நிறுத்து மிடத்துக்கு அதிக இடத்தை ஒதுக்கிவிட்டால் கடைகளுக்கான இடம் குறைந்து வருமானம் குறைவாக இருக்கும்.

மால் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கும்போது, மாற்றங்கள் செய்வது செலவை அதிகரிப்பதோடு, நேர விரையத்தையும் ஏற்படுத்தும். மால் கட்ட நிதி உதவி அளித்தவர்களில் ஒருவர் பணத்தை திரும்பக் கேட்கிறார் என்றால் மாலிக் அந்த பணத்தை கொடுக்க, புதிய நிதி ஆதாரத்தை திரட்ட அதிக காலம் எடுத்துக் கொள்ளும்.

எனவே, மாலிக் எடுக்கும் முடிவுகள் மால் மூலமான லாபத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். மால் கட்டுமானத்தில் செய்யும் மாற்றங்கள் நிறைவு பெற அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.

சுருக்கமாக சொல்வது என்றால், ஒரு நிறுவனத்தின் நிதி நிலையைப் பிரதிபலிப்பதாக அதன் பேலன்ஸ் ஷீட் இருக்கிறது. இந்த பேலன்ஸ் ஷீட்டில் - நிதி ஆதாரம் மற்றும் நிதிப் பயன்பாடு ஆகிய இரண்டும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இவை இரண்டைப் பற்றியும் அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

தொகுப்பு: சி.சரவணன்

(தொடரும்)