மகத்தான வெற்றி தரும் மனிதவள நிர்வாகம்!

மரத்தில் ஏறி உச்சியை அடைவதற்கு குதிரையைத் தேர்வு செய்யக்கூடாது; அணிலை தேர்வு செய்தால், வேலை சுலபமாக முடியும். சரியான நபரிடம் சரியான வேலையைத் தந்துவிட்டால், நீங்கள் அந்த வேலையைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது!

ஒரு பிசினஸ் வெற்றி பெற வேண்டுமெனில், ஸ்ட்ராட்டஜியும் (யுக்தி) ஸ்ட்ரக்சரும் சரியாக இருந்தால் மட்டும் போதாது; சரியான ஊழியர்களும் இருக்க வேண்டும். சொல்லப் போனால், ஸ்ட்ரக்சரையும் மனிதவள நிர்வாகத்தையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. மனிதவள நிர்வாகமே எல்லா தொழில்களுக்கும் அடிப்படை.

உங்கள் நோக்கம், ஒரு மரத்தின் உச்சியை அடைவதுதான் எனில், ஒரு அணிலை வேலைக்கு அமர்த்துவீர்களா அல்லது ஒரு குதிரையை அமர்த்துவீர்களா?

அணில்தான் என்கிற பதிலை நீங்கள் அரை நொடியில் சொல்லி விடுவீர்கள். ஆனால், நான் ஒரு குதிரையைத்தான் அமர்த்தினேன். எப்படி?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது கவின்கேர் நிறுவனத்தை வட இந்தியாவுக்கும் விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கினேன். காரணம், தென் இந்தியா முழுக்க நாங்கள் நன்கு செயல்பட்டு வந்தோம்.

ஆந்திராவில் எங்கள் பிசினஸை விரிவாக்கம் செய்த போது ஓரளவுக்கு தெலுங்கு தெரிந்த ஒருவரைத் தேர்வு செய்து தலைமைப் பொறுப்பை கொடுத்தோம். கர்நாடகத்தில் தொழில் ஆரம்பித்த போதும் அப்படியே செய்தோம்.

ஆனால், வட இந்தியாவில் தொழில் ஆரம்பிக்க நினைத்தபோது, நமக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு மேனேஜரை அங்கு அனுப்பலாம் என்று பார்த்தால், பலருக்கும் இந்தி தெரியவில்லை. வெறும் இங்கிலீஷை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு அங்கு தொழில் செய்ய முடியாது. அவர்களுடைய மொழியில் விளக்கிச் சொன்னால்தான், நமது தயாரிப்புகளை அங்குள்ள கடைக்காரர்கள் வாங்கு வார்கள். இந்த நிலைமையில் யாரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது என்று தெரியாமல் தவித்தோம்.

என்னைப் பொருத்தவரை வட இந்தியா என்பது எங்களுக்கு புதிது என்பதால் எங்கள் நம்பிக்கைக்கு

பாத்திரமான ஒருவரை தலைமைப் பொறுப்பில் அமர்த்த முடிவு செய்தோம். நாங்கள் தேர்வு செய்த நபர் ஒரு அக்கவுன்டன்ட். கணக்கு விஷயத்தில் அவர் ஒரு புலி என்று தாராளமாக சொல்லலாம். ஆனால், என் தேவை என்ன?

வட இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க வேண்டும். விற்பனை தொடர்பாக அவருக்குக் கீழே உள்ள ஊழியர்களை வழி நடத்த வேண்டும்; எந்த மாதத்தில் எந்த பொருளை விற்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்; எந்த மார்க்கெட்டில் எந்த மாதிரியான பொருளுக்கு முன்னுரிமை தரலாம் என்பதை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆக மொத்தத்தில், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் நன்கு விஷயம் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

ஆனால், வட இந்திய பிசினஸை நடத்துவதற்காக நான் நியமித்தவருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் துளி கூட தெரியாது. கணக்கில் கில்லாடியான அவரை என் நம்பிக்கைக்குப் பாத்திரமான வர் என்கிற ஒரே காரணத்துக்காக தலைமைப் பொறுப்பை கொடுத்தேன். அதாவது, மரத்தின் உச்சியை அடைய ஒரு அணிலுக்கு பதிலாக குதிரையை வேலைக்கு அமர்த்தினேன்.

இதனால் என்ன விளைவு ஏற்பட்டது தெரியுமா?

எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, முதலுக்கே மோசம் வந்துவிட்டது. உடனே கடையைக் காலி செய்துவிட்டு, தமிழகத்துக்கே வந்துவிடலாம். நமக்கு தென் மாநிலங்கள் மட்டுமே லாயக்கு போல என்று நானே நினைக்கத் தொடங்கிவிட்டேன்.

என்றாலும் கடைசி கட்ட முயற்சியாக, இன்னும் ஒருமுறை முயன்று பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். காரணம், ‘ரைட் மேன் இன் த ரைட் ஜாப்’ என்பார்கள் அல்லவா, அது மாதிரி சரியான வேலைக்கு சரியான நபரை நான் நியமிக்க வில்லை. தவறான நபரை சரியான வேலைக்கு அமர்த்தி விட்டு, அந்த வேலை சரியாக நடக்கவில்லையே என்று வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? விற்பனையில் திறமை கொண்ட ஒருவரை கண்டுபிடித்து, அந்த வேலையை அவரிடம் அல்லவா நான் தந்திருக்க வேண்டும்?

விற்பனையில் திறமையான நபர் ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டும் எனில், எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரைத்தான் நான் தேர்வு செய்தாக வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாதவர் ஒருவரை நம்பி நான் எப்படி என் வேலையை ஒப்படைப்பது? நான் சென்னையில் இருக்கும்போது டெல்லியிலும், மும்பையிலும், கொல்கத்தாவிலும் இருக்கும் ஒருவரை நம்பி எப்படி பிசினஸை ஒப்படைப்பது? அவர் எதாவது தில்லுமுல்லு செய்துவிட்டால்…? பொருளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட் டால்…?

நான் மட்டுமல்ல, என்னைப் போன்று உள்ள லட்சக் கணக்கான தொழில்முனை வோர்களுக்கு இப்படி ஒரு பயம் கலந்த யோசனை வருவது இயல்பான விஷயம்தான்.

ஆனால், இந்த யோசனை யிலிருந்து நான் கட்டாயமாக வெளியேறி வந்தாக வேண்டும். சரியான வேலைக்கு சரியான நபரைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. மார்க்கெட்டிங் துறையில் திறமைசாலியாக விளங்கும் ஒருவரைத் தேர்வு செய்ய பத்திரிக்கையில் விளம்பரம் தருவோம். இன்டர்வியூவை இன்னும் கண்ணும் கருத்துமாக செய்வோம். சரியான நபர்களை தேர்வு செய்யும் ஒரு மனிதவள மேலாளரை வைத்து திறமையான ஒருவரை தேர்வு செய்வோம் என்று நினைத்து, அதில் இறங்கினேன்.

திறமைசாலிகள் பலரும் இன்டர்வியூவுக்கு வந்தார்கள். அவர்களின் திறமையை முழுவதுமாக நாங்கள் இன்டர்வியூ செய்யும்போது தெரிந்துகொண்டோம். அவர்களுடைய நம்பகத் தன்மையை கடந்த காலத்தில் அவர்கள் வேலை பார்த்த நிறுவனங்களிடம் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர்கள் வைத்திருக்கும் சான்றிதழ்கள் ஒன்று விடாமல் அத்தனையையும் அலசி ஆராய்ந்தோம்.

இப்படி பல்வேறு அலசல் களை முடித்தபின், ஒருவரை தேர்வு செய்து, அவரிடம் விற்பனையை ஒப்படைத்தேன். அடுத்த மூன்று மாதங்களில் அவர் என்ன செய் கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பின் நடந்தன ஆச்சரியமான பல மாற்றங்கள். எப்போது அங்கிருந்து கடைகளை மூடிவிட்டு, திரும்ப வந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு பல ஆச்சரியங்களைத் தந்தார் அந்த மார்க்கெட்டிங் ஹெட். மூன்றே மாதத்தில் விற்பனையை அப்படியே உயர்த்திவிட்டார். ஒவ்வொரு மாதமும் வளர்ச்சியைக் காட்டினார்.

எப்படி நடந்தது இந்த மாற்றம்? சரியான நபர் சரியான வேலைக்கு அமர்த்தியதே இதற்கு காரணம். மரத்தில் ஏறி உச்சியை அடைவதற்கு நான் குதிரையைத் தேர்வு செய்ததற்கு பதிலாக அணிலை தேர்வு செய்திருந்தால், என் வேலை எப்போதோ முடிந்திருக்கும். ஆனால், குதிரையைத் தேர்வு செய்தது என் தவறுதான். இதனால் இரண்டு மாதங்களில் செய்து முடித்திருக்க வேண்டிய வேலை இரண்டு ஆண்டுகளுக்கு செய்ய வேண்டியதாகிவிட்டது. நஷ்டம், மன உளைச்சல் என பல பிரச்னைகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சரியான நபரிடம் சரியான வேலையைத் தந்துவிட்டால், நீங்கள் அந்த வேலை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது என்கிற பாடத்தை நான் முதல் முதலாக முழுமையாக அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு மனிதர்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இந்த நிகழ்ச்சியை சொன்னேன். மனிதவள நிர்வாகம் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி சொல்கிறேன்.

(ஜெயிப்போம்)

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

நாங்கள் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம்தான். எங்கள் நிறுவனத்தை தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகிறது. வெப் டெவலப்மென்ட், கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட், பிராண்டிங் ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் கிடைக்குமா?

கே.ஜெய்குமார்.

‘‘உங்கள் பிசினஸ் தனித்தன்மை கொண்டதாக இருந்தால்தான் வென்ச்சர் கேப்பிட்டல் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் பிசினஸ் ஐடியாவை நீங்கள் எப்படி செயலாக்கம் செய்யப் போகிறீர்கள் என்பதை வென்ச்சர் கேப்பிட்டல் மூலம் முதலீடு செய்பவர்கள் கட்டாயமாகப் பார்ப்பார்கள். உங்கள் தொழிலை நீங்கள் எப்படி நடத்துவீர்கள், அதற்கான தகுதிகள் உங்களுக்கு என்னென்ன இருக்கிறது. உங்களிடம் தரும் பணத்தை சரியாக செலவு செய்யத் தெரிகிறதா, அந்தத் தொழிலை இன்னும் பல மடங்கு வளர்க்கும் ஆர்வம் உங்களிடம் இருக்கிறதா என்கிற மாதிரி பல கோணங்களில் பார்த்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் உங்களால் சரியான பதில்களை சொல்ல முடிந்தது எனில், உங்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் ஃபண்டிங் கிடைக்க வாய்ப்புண்டு. இப்போது சிலர் பெட்டி நிறைய பணத்தை வைத்துக் கொண்டு, நன்றாக தொழில் செய்பவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உங்கள் திறமைகளை நன்கு வளர்த்துக் கொண்டு, வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களை அணுகுங்கள். உங்களுக்கு ஃபண்டிங் கிடைக்கும்!’’

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.