செலவு முதல் சேமிப்பு வரை!

‘ரெண்டாயிரம் ரூபா இன்க்ரிமென்ட் வந்துருக்கு இல்லை..? அதுல மாசம் 1,000 ரூபா ‘பாப்பா’ பேருக்கு

ஆர்.டி. போட்டுடலாமா..?’ ‘போடலாங்க. ஆனா, ரெண்டாயிரமே போட்டுருவோம்...’ ‘மாச செலவுக்கு, ஆயிரம் ரூபா வச்சிக்குவோமேன்னு பார்த்தேன்...’

‘ஒண்ணும் வேணாம். இப்போ என்ன, சாப்பாட்டுக்குக் கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்கோமா என்ன..? குழந்தைங்களுக்குதான் புஸ்தகம், துணிமணி வாங்காம இருக்கோமா..? வர்ற ரெண்டாயிரத்தை அப்படியே ‘பேங்க்’ல போட்ருவோம். வேணுமின்னா, ஆயிரத்தை ஆர்.டி.யிலயும், இன்னொரு ஆயிரத்தை, ‘சேவிங்ஸ்’லயும் போடுவோம். அவசரத்துக்குத் தேவைப்பட்டா, எடுத்துக்குவோம்!’

‘சரி, இப்படிச் செய்யலாம். ஆர்.டி.யில 1,000, சேவிங்ஸ்ல 500, பாக்கி 500 செலவுக்கு...’

‘அப்படிங்கறீங்களா...? சரிதான். ஆனா, அந்த 500-யும் வீணா செலவு பண்ண வேண்டாம். மாசம் 500 ரூபா ‘இ்ன்ஸ்டால்மென்ட்’ கட்டற மாதிரி, வீட்டுக்கு ‘உருப்படியா’ ஏதாவது வாங்கிடுவோம்!’
இப்படி ஒரு குடும்பம். இன்னொன்றையும் பார்ப்போம்.

‘இங்க பார்... 2,000 ரூபா இன்க்ரிமென்ட் இந்த மாசத்துல இருந்து வருது; என்ன பண்றோம்... கேபிள் டி.வி. ‘பேக்கேஜ்’ மாத்தறோம். இப்போ நாம குடுக்கற 300 ரூபாய்ல நெறைய, ‘முக்கியமான’ சேனல் எல்லாம் வரவே மாட்டேங்குது. 1,200 ரூபா ‘பேக்கேஜ்’ அருமையா இருக்கும். 250 சேனல்ஸ் வருமாம்!’

‘அப்படியா...? இ..ரு..நூ..த்..த..ம்..ப..தா...?’

‘ஆமா... தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலிஷ்.... ஸ்போர்ட்ஸ், சினிமா... எல்ல்லாம் வரும்..’ ‘சூப்பரா இருக்கே... பண்ணிடுவோம். சும்மா சும்மா பார்த்த சேனலையே பார்த்து போர் அடிக்குது!’

இரண்டையும் படித்தபிறகு, சிலருக்கு, ‘இப்படிக்கூட யாராவது பேசிக்குவாங்களா..?’என்று நினைக்கலாம்.

கேபிள் டி.வி. வேண்டுமானால் இல்லாமல் போகலாம். அதற்குப் பதிலாக வேறு ஏதாவது, ‘ரெக்கரிங் எக்ஸ்பென்டிச்சர்’ இருக்கும். மற்றபடி, செலவின் ‘தன்மை’ அதேதான். மாற்றம் இருப்பதில்லை.

‘அதுசரி... ஏதோ சொன்னீங்களே.. ‘ரெக்கரிங்..’ அது என்ன..?’

ஊம். அதுதான். இந்த ‘ரெக்கரிங் எக்ஸ்பென்டிச்சர்’ பத்தி தெரிஞ்சிக்கிட்டாதான், 50:50 அட்டவணை என்ன சொல்லுதுன்னு புரிஞ்சுக்க முடியும்.

நம்முடைய செலவுகள்ல ரெண்டு வகை இருக்கு. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில, தொடர்ந்து வந்துகிட்டே இருக்குற செலவுகள்னு சிலது. வேற சில செலவுகள், ஒரே முறைதான். வாழ்நாள் முழுக்க, அல்லது சில பத்தாண்டுகளுக்கு திரும்ப அதுக்காகச் செலவு பண்ணவேண்டியது இல்லைங்கற மாதிரி இருக்கும்.

முதல்ல சொன்ன தொடர் செலவுகள்தான், ‘ரெக்கரிங் எக்ஸ்பென்டிச்சர்.’ தீபாவளி, பொங்கல், பிறந்த நாள், திருமண நாள் என (‘ஆமா... நீங்க பெருசா கொண்டாடிட்டீங்க’) சில செலவுகள் மாதாமாதம் வரக் கூடியன; நன்றாகத் தெரியும், வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தனையுமே. இவையல்லாமல், நாள்தோறும் செய்யக்கூடியன என்று சில உண்டு.

பூ, பழம், ‘பேப்பர்’ தொடங்கி, ‘ஷேவிங் பிளேடு’ வரை, பல காரணங்களுக்காக நாம் செய்யும் ‘சில்லறை’ செலவுகள். (தினந்தோறும் போட்டாலும்கூட, பெட்ரோல் செலவு இதில் வராது. அது வேற ‘பட்ஜெட்.’)

இதிலே குழப்பம் எங்கே வருகிறது..? மாதாந்திர செலவு களை, தொடர் செலவுகளாகப் பார்த்து, ‘இனம்’ பிரித்துப் பார்ப்பதில், யாருக்குமே ‘தெளிவு’ இருக்கிறது. ‘கறாராக’ இருக்கிறார்கள். ஆனால், தினசரி அல்லது ஆண்டுதோறும் வருகிற தொடர் செலவுகளில், ஏராளமானோர் ‘கணக்கில் தவறி விடுகின்றனர்.’

பூ, பழம், பேப்பர் போன்றவை, உடல் உள்ளத்துக்கு நலம் பயப்பன. ஆகவே, இவை தொடர லாம். அதேசமயம், நண்பர் களுடன் சேர்ந்து காபி, டீ அருந்துதல், ‘சிகரெட்’ உள்ளிட்ட, ‘காசு குடுத்து’ வாங்கிக்கிற ‘தொல்லைகள்’ சிறிதுசிறிதாகக் குறைக்கப்பட வேண்டும். மாறாக, நாளுக்கு நாள், இந்த வகைச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.

‘அந்தஸ்து’, வருமானம் உயர்கிறபோது, தினசரிச் செலவு களும் உயர்கின்றன. இந்தக் கூடுதல் செலவு, பெரும்பாலும், ‘கூடாப் பழக்கங்கள்’ பட்டியலில் தான் கூடுகிறது. இதைத் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்.

ஒரு சிறிய கணக்கு. ஒருவர் ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் வரை டீ, காபி, சிகரெட் வகையில் செலவு செய்கிறார். (‘ஐம்பது’ - மிகக் குறைவு). ஒரு மாதத்துக்கு 1,500 ரூபாய்; ஆண்டுக்கு சுமார் 18,000 ரூபாய் செலவு செய்கிறார். இது என்ன வகை செலவு?

‘கூடா வகைத் தினசரிச் செலவு.’ மிக்க சரி. ஆனால் இது, இத்துடன் நின்றுவிடுவதில்லை. பிறகு..?

மேற்சொன்ன பழக்கத்தால் ஏற்படும், உடல் நலக் கேடு, செலவு மேலாண்மைக்குள் வராது. ஆனால், உடல் நலம் குன்றி, மருத்துவரிடம் செல்ல வேண்டி வந்தால், செலவு ஆகத்தானே செய்யும்..? என்ன சொல்ல வருகிறோம் என்று புரிந்திருக்குமே?

சில பல செலவுகள், எதிர் காலத்தில், மேலும் செலவுக்கு வழிவகுக்கும். அதனையும் இப்போதே கணக்கில்கொண்டு பார்த்தால், மேலே பல சொன்ன 18,000 ரூபாய் என்பது உண்மை யில், 20,000 ரூபாயாகவும் ஆகவும் இருக்கலாம்; 30,000 ரூபாயாகவும் அல்லது அதற்கு மேலும் இருக்க லாம். இப்போதே மிகுந்த விழிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டியது மிக அவசியம்.

அடுத்து, ஆண்டுதோறும் வருகிற தொடர்ச் செலவுகள்...

‘போன வருஷம் தீபாவளி அப்போ, அசிஸ்டன்ட் மேனேஜரா இருந்தீங்க. 2,000 ரூபாய்ல டிரஸ் எடுத்துக் கிட்டீங்க...இந்த வருஷம், மேனேஜர் ஆயிட்டீங்க இல்லை..? 5,000 ரூபாய்க்கு வாங்கினாதான் நல்லது...’ மிகச் சாதாரணமாக நடைபெறுவது தான் இது. வருமான உயர்வுக்கு ஏற்ப, உயர்ரகப் பொருட்களை வாங்க நினைப்பது இயல்பானதே.

‘முன்னெல்லாம், எதுவா இருந்தாலும் பரவாயில்லைன்னு வாங்கிக்கிட்டுதான் இருந்தேன்... இனிமே அதெல்லாம் வேண்டாம்னு பார்க்கிறேன். ‘ஒன்லி, பிராண்டட் புராடக்ட்ஸ்.’ பணம்தான் வருது இல்லை..., அப்புறம் என்ன..?’

வருமானம் உயர்ந்தால் வாழ்க்கை முறையையும் அதற்கேற்றாற்போல் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே தவறான சிந்தனை. எளிமையாக வாழ்வதே இன்பம் என்கிற காந்திய முறையே என்றைக்கும் நல்லது.

‘புரியுது... ஆனா எப்படி ‘இம்ப்ளிமென்ட்’ பண்றது..?’ 50:50 தத்துவம் வழி காட்டுகிறது.

உயர்ந்து வருகிற வருமானத்தில் ‘கையே வைக்காமல்’ தற்போதைய வாழ்க்கையை அப்படியே தொடருங்கள். கூடுதல் பணத்தை, சேமிப்பின் பக்கம் திருப்புங்கள். அல்லது நீண்ட காலச் செலவுகளில் போடுங்கள்.

‘ரெக்கரிங் எக்ஸ்பென்டிச்சர்’ எனப்படும் தொடர் செலவுகள், நம்முடைய வருமானத்தில், 50 சதவிகிதத்தை மிஞ்சவே கூடாது.

கவனித்தீர்களா..? வீட்டுக் கடன் மீதான திருப்புதல் தொகை (Amount of Repayment) மாதம் தோறும் ஏற்படக்கூடிய தொடர் செலவுதான். ஆனாலும், அது ‘சேமிப்பு’ என்றுதான் கொள்ளப் படும். ‘இன்ஷூரன்ஸ்’ பிரீமியம், ‘ஆர்.டி. தொகை போன்ற மாதாந்திரச் செலவுகள்கூட, சேமிப்புதான்.

அப்போதைக்கு அப்போது பயன்பாடு முடிந்து போகிற தொடர் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, நீண்ட காலப் பயன் தருவதான செலவு களில், நம்முடைய பணத்தைத் திருப்பினாலே போதும். 50:50 தீர்வு, எளிதில் சாத்தியம் ஆகும்.

இவ்வாறு, வருமானத்தில் பாதியை மட்டுமே செலவழித்து, மீதமுள்ள பாதியை சேமிக்கத் தொடங்கி விட்டோமா..? தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்...

‘நல்லாப் பார்த்துக்குங்க..! நானும் பணக்காரன்தான்... நானும் பணக்காரன்தான்..!’

இந்தப் புள்ளியில் இருந்து, செலவு மேலாண்மை பயணிக்கப் போகிற பாதையே வேறு. வழு வழுப்பான பாதை! கரடு முரடான பாதை!

அது எப்படி இரண்டாகவும் இருக்க முடியும்..?

(சேர்ப்போம்)

வேகமெடுக்காத கார் விற்பனை!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி, ஹூண்டாய் ஆகிய இரு நிறுவனங்கள் தவிர மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கொஞ்சம் குறையவே செய்திருக்கிறது. மாருதி நிறுவனம் கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட 8% வளர்ச்சியும், ஹூண்டாய் நிறுவனம் 20 சதவிகித வளர்ச்சியும் கண்டிருக்கிறது. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 2 சதவிகித வளர்ச்சி மட்டுமே கண்டிருக்கிறது. டொயோட்டா நிறுவனம் -0.48 சதவிகிதமும், ஹோண்டா நிறுவனம் -6.58 சதவிகிதமும் விற்பனை குறைந்திருக்கிறது. பெட்ரோல் விலை குறைந்தபின்பும் கார் விற்பனை வேகமெடுக்கவில்லை!