{?} 2008-ல் கல்விக் கடன் வாங்கிய வர்களுக்கு வட்டி தள்ளுபடி உண்டா?

சுஜாதா நடராஜன்,

ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.

‘‘கல்விக் கடன் வாங்கியவர்களுக் கான வட்டி தள்ளுபடி 2009-10-ம் நிதி ஆண்டில் 1.4.2009-க்குபின் கல்விக் கடன் வாங்கிய மாணவர்களுக்கு மட்டும் பொருந்துவதாக உள்ளது. முழுவட்டி தள்ளுபடியானது, படிக்கும் காலத்துக்கும், படிப்பை முடித்தபிறகு வருகிற ஒரு வருடம் அல்லது வேலையில் சேர்ந்தபிறகு ஆறு மாதம் வரைக்கும் கிடைக்கும். இந்தச் சலுகைகள் பெற்றோர் / குடும்ப மொத்த ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், 2008-ல் கடன் வாங்கியவர்களுக்கு எந்தச் சலுகையும் இப்போது இல்லை.’’

{?} சொந்தப் பிரச்னை காரணமாக, என் சகோதரர் சொத்தின் தாய் பத்திரத்தின் நகலைத் தர மறுக்கிறார். அது இல்லாமல், என் பங்குக்கான இடத்தை மறு சீரமைக்க முடியாது. இதற்கு என்ன தீர்வு?

- சி.பி.ராஜு, சுண்ணாம்பு,கொளத்தூர்

த.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டாளர்.

‘‘பொதுவாக, பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்யும்போது, கீழ்க்கண்ட ஷரத்துடன் பதிவு செய்யப்படும். சொத்தின் தாய் பத்திரங்கள், பாகப்பிரிவினை செய்து கொள்கிறவர்களில் ஒருவரிடம் இருக்கும். பொதுவாக, வீட்டின் மூத்தவர் அல்லது அந்த சொத்தில் வசிப்பவர் அல்லது நன்கு படித்தவர் களிடம் அந்த ஆவணங்கள் இருக்கும் என்று எழுதப்படும்.

பாகப்பிரிவினைக்கு உட்பட்ட மற்றவர்கள் மற்றும் அவர்களின் வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள் தாய் பத்திரத்தை பார்க்க தேவை என்றால் முன்கூட்டியே அதை வைத்திருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களுடைய அனுமதியுடன் அதைப் பார்க்கலாம். மேலும், இந்த தாய் பத்திரத்தினை வைத்திருப்பவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சொத்தினை வைத்து கடன் பெறும்போது, தாய் பத்திரத்தினை வங்கியில் சமர்பிக்க தேவையில்லை.

எனவே, சட்டப்படி நீங்கள் உங்கள் அண்ணனிடம் தாய் பத்திரத்தினை கட்டாயமாக காட்டும்படி சொல்லலாம். இல்லை என்றாலும் நீங்கள் வைத்துள்ள தாய் பத்திரத்தின் நகலை (Certified Copy) அந்த பத்திரம் பதிவு செய்யப்பட்ட சார் பதிவு அலுவலகத்தில் (sub-registrar office) இருந்து பெற்று, அதைப் பயன்படுத்தி, தங்களுக்கு தேவையான கடன், கட்டடம் கட்ட அனுமதி உள்ளிட்டவைகளை பெறலாம்.’’

{?} நான் ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட் குரோத், ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ஃபண்டுகளில் கடந்த மூன்று வருடங்களாக எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.1,000 வீதம் முதலீடு செய்து வருகிறேன். இவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? மேலும் ரூ.1,000 முதலீடு செய்ய டாப் இஎல்எல்எஸ் ஃபண்ட் ஒன்றை சொல்லவும்.

பன்னீர்செல்வம்,

த.சற்குணன், நிதி ஆலோசகர்

‘‘ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்டுக்கு பதிலாக எல்அண்ட்இ ஈக்விட்டி ஃபண்டில் (குரோத்) முதலீடு செய்யுங்கள். ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ஃபண்டில் கூடுதலாக ரூ.1,000 முதலீடு செய்யுங்கள். புதிதாக வேறு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.’’

{?} நான் கல்லூரி மாணவன். கமாடிட்டி வர்த்தகத்தில் பகுதி நேரமாக ஈடுபட என்ன செய்ய வேண்டும்?

வினோத், கோவை,

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்

‘‘கல்லூரி மாணவரான நீங்கள் கமாடிட்டி சந்தையில் ஈடுபட நினைப்பது ஆச்சரியம்தான். ஆனால், கமாடிட்டி வர்த்தகம் என்பது வியாபாரம். அதில் லாபம், நஷ்டம் இரண்டும் இருக்கிறது. இந்த வியாபாரத்தில், நஷ்டத்தைக் கட்டுக்குள் வைத்து, லாபத்தைக் கூட்டுவது எப்படி என்ற வித்தையை முழுமையாக கற்றுக்கொண்டு ஈடுபடுவதே சரி. எனவே, முழுமையாக கற்றுக் கொண்டு, படித்து முடித்தபின் அதில் ஈடுபடலாம்.’’ (கமாடிட்டி சந்தை பற்றி அடிப்படை விஷயங்களுக்கு இந்த இணையதள முகவரிக்குச் செல்லவும்: https://www.vikatan.com/personalfinance/index.php?cid=207.)

{?} நான் அரசு ஊழியர். என்னால் ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் வர்த்தகத்தில் ஈடுபட முடியுமா?

வி.சுரேஷ் குமார், மதுரை.

எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, ஷேர் புரோக்கர்,சேலம்.

‘‘அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் துறையின் தலைவரிடம் பங்கு முதலீட்டில் ஈடுபட போவதைப் பற்றிய தகவலை தெரிவித்து முறையாக அனுமதி பெற்றபின் முதலீட்டில் ஈடுபட முடியும். அதேநேரத்தில், டிரேடிங், எஃப் அண்ட் ஓ உள்ளிட்ட ஊக வணிகத்தில் அதிகாரப்பூர்வமாக ஈடுபட முடியாது.’’

{?} உள்நாட்டு விமானப் பயணத்தின்போது எந்த மாதிரி யான பாலிசி எடுத்தால் உபயோகமானதாக இருக்கும்?

சந்தோஷ் , திருப்பூர்

பாகுபலி, ஆலோசகர், ஸ்டார் ஹெல்த் இன்ஷுரன்ஸ்

‘‘தனிநபர் விபத்துக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. பொருட்களின் பாதுகாப்புக்காக பயணத்தின் போதோ அல்லது ஒரு ஆண்டுக்கோ பேக்கேஜ் இன்ஷூரன்ஸ் (Baggage Insurance) வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். பொருட் களின் மதிப்பில் 1.5 - 2% பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். பேக்கேஜ் இன்ஷூரன்ஸ் விமானப் பயணம் மட்டுமில்லாமல் அனைத்து வகையான பயணத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.''

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.