நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் பகுதியில் ஆன்லைனில் சொத்து வாங்குவது குறித்த

சந்தேகங்களுக்கு இந்தியா பிராப்பர்டி ஆன்லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ கணேஷ் வாசுதேவன் அளித்த பதில்கள்...

பில்டரின் நம்பகத் தன்மையை ஆன்லைனில் சொத்து வாங்கும்போது எப்படித் தெரிந்துகொள்வது?

வலைதளங்களில் பில்டர்களின் முழுமையான விவரங்கள் (எவ்வளவு புராஜெக்ட்கள் செய்திருக்கிறார்கள், எவ்வளவு ஆண்டுகள் இந்தத் துறையில் இருக்கிறார்கள் போன்ற விவரங்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அவர்கள் மேற்கொண்ட புராஜெக்ட்கள் குறித்த விவரங்கள், அவர்கள் அதை எந்த அளவு நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார் என்கிற ரெவியூ வீடியோக்கள் ஆகியவையும் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இதைப் பார்த்து தெரிந்துகொள்வதன் மூலம் நம்பகத்தன்மையான பில்டர்களை இனம் கண்டுகொள்ளலாம். இது தவிர, சட்ட அடிப்படையிலான புராஜெக்ட் வெரிஃபிகேஷன் முத்திரை குறித்த விவரங்களைப் பார்த்தும் (அதாவது, எந்தெந்த புராஜெக்ட்களில் வெரிஃபிகேஷன் முத்திரை இருக்கிறதோ அந்த புராஜெக்ட்கள் நல்ல புராஜெக்ட்கள் என்று அர்த்தம்) நம்பகத்தன்மையான பில்டர்களைத் தெரிந்துகொள்ள முடியும்.''

ஆன்லைனில் சொத்து வாங்கும்போது புரோக்கர் கமிஷன் இல்லாததால், சொத்தை குறைந்த விலையில் வாங்கலாம் என்று சொல்வது உண்மையா?

``இன்றைய நிலையில் யார் ஒருவராலும் ஆன்லைனிலேயே முழுச் சொத்தையும் வாங்கிவிட முடியாது. ஆன்லைனில் அட்வான்ஸ் தொகையைச் செலுத்திவிட்டு, பின்னர் நேரடி முறையிலேயே அதை உறுதி செய்ய முடிகிறது. புதிதாக வாங்கும் சொத்து மனையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் புரோக்கர் கமிஷன் கிடையாதே தவிர, மறுவிற்பனை (ரீசேல்) செய்யும் சொத்துக்களுக்கு புரோக்கர் கமிஷன் உண்டு.''

வில்லங்கப் பிரச்னை, சொத்தின் மீது கடன் இருக்கிறதா போன்ற விபரங்களை ஆன்லைனில் சொத்து வாங்கும்போது எப்படித் தெரிந்து கொள்வது ?

``வில்லங்கம் குறித்தும், சொத்தின் மீது கடன் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்தும் ஆராயப்பட்டு, எங்கள் வலைதளத்தில் 3,500 புராஜெக்ட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தாண்டிய புராஜெக்ட்களுக்கு விசாரணை தேவைப்பட்டால், அதை எங்களுக்கு ஆன்லைன் மூலம் தெரிவிப்பதன் மூலம் எங்களின் வழக்கறிஞர்கள் குழு களமிறங்கி விசாரித்து அதை வழங்கும்.''

ரியல் எஸ்டேட் வெப்சைட் (ஆன்லைன்) மூலம் எந்த வகையான சொத்துக்களை வாங்க முடியும்.?

``வீட்டு மனைகள், அபார்ட்மென்ட்கள், தனி வீடுகள் என அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கலாம். ஆனால், முன்பணத்தைச் செலுத்தி பிளாக் செய்துவிட்டு, இதர விஷயங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்த்துதான் மேற்கொள்ள முடியும். அதிகபட்சம் 10 நாட்களுக்குள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அணுகுவது அவசியம்.''

ஆன்லைனில் சொத்து வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

``பில்டர்களின் நம்பகத்தன்மை, சட்ட ரீதியான விஷயங்கள், நீங்கள் சொத்து வாங்கும் இடத்துக்கு ஏற்ற விலைதானா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். சொத்து வாங்கும் இடமானது அனைத்து வசதி வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறதா என்பதையும் பார்க்க மறக்கக் கூடாது. அதேபோல, அந்த இடம் எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள்.''

நேரடியாகச் சொத்து வாங்குவதற்கும், ஆன்லைனில் சொத்து வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்?

``நேரடியாகச் சொத்து வாங்கும்போது பலரிடம் விசாரிக்க வேண்டியிருக்கும், நேரம் அதிகமாகச் செலவு செய்ய வேண்டி இருக்கும், சொத்துக்களை வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டால், அதற்கான இன்ஷூரன்ஸ் போன்ற நடவடிக்கைகளையும் ஆஃப்லைனில் நேரத்தை விரையமாக்கி செய்து முடிக்க வேண்டியிருக்கும். ஆனால், ஆன்லைனில் அப்படியில்லை, குறிப்பாக, சில வலைதளங்களைப் பொறுத்தவரை காலி மனையாக இருந்தாலும், கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தாலும் 3டி முறையில் பார்த்துவிட முடியும். இந்த முறையின் மூலம் நேரடியாக இடத்துக்கு அல்லது வீட்டுக்குள் (கட்டி முடிக்கப்பட்ட, கட்டிக் கொண்டிருக்கும்) நடந்து சென்று பார்த்த உணர்வு ஏற்படும். இதற்காக வாரக் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்காது. உட்கார்ந்த இடத்தில் ஓரிரு மணி நேரங்களைச் செலவு செய்தாலே பல மனைகள், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அலுப்பில்லாமல் மனநிறைவுடன் பார்த்துவிட முடியும். அதுமட்டுமில்லாமல் அதற்கான வீட்டுக் கடன் மற்றும் இன்ஷூரன்ஸையும் வலைதளத்தின் உதவியுடனேயே எடுத்துக் கொள்ளலாம்.''

ஆன்லைனில் சொத்து வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்.?

``ஆன்லைனில் சொத்து வாங்க முடியாது. அதற்கு பதிவு செய்யதான் முடியும். எனவே ஆவணங்கள் எதுவும் தேவைப்படாது.''

ஆன்லைனில் முன்பணம் கொடுத்து சொத்தை பதிவு செய்யும் முன்பு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன?

``நீங்கள் கடன் வாங்கிச் சொத்து வாங்குவதாக இருந்தால், சொத்து பற்றிய விவரங்களை ஆன்லைனில் பார்க்கும்போது, கடனுக்காகவும் பதிவு செய்துகொள்ளலாம். அப்படியில்லை எனில், சொத்து வாங்க தேவையான பணத்தை ஏற்பாடு செய்துகொள்வது அவசியம். முன்பதிவு செய்வதற்கு முன்னர் சட்ட ரீதியான விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.''

இந்திய சட்டங்கள் எந்தச் சொத்துக்களையாவது ஆன்லைனில் வாங்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறதா?

``எனக்குத் தெரிந்த வகையில், இந்திய சட்டதிட்டங்களில் ஆன்லைன் வாயிலாகச் சொத்துக்களை வாங்கக் கூடாது என்று சொன்னதாகத் தெரியவில்லை. சொத்துக்களை வாங்குவதற்காகத்தான் ஆன்லைனை பயன்படுத்திக் கொள்கிறோமே தவிர, ஆன்லைனிலேயே முழுச் சொத்தையும் வாங்குவதில்லை என்பதை நினைவில் கொள்க.''

ஆன்லைனில் சொத்தை விற்க எவ்வளவு செலவாகும்?

``வலைதளங்களில் சொத்துக்களை விற்க இலவச சேவைகளும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டால் செலவு எதுவும் ஆகாது. அதே சமயம், கட்டணத்துடன் கூடிய சேவைகளும் இருக்கின்றன. இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளக் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் ஆகும். கட்டணச் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வலைதளங்கள் சட்ட ரீதியான விஷயங்களில், சொத்து மதிப்பிடுவதில் சேவையைச் செய்துதரும். இந்தச் சேவையானது சொத்துக்களை விரைந்து விற்க ஏதுவாக இருக்கும்.''