ஞாயிற்றுக்கிழமை காலை. ஆண்கள் அழகு நிலையம். உட்கார்ந்தபடி, நின்றபடி, சிறிய நடை நடந்தபடி...

பலர். அன்றைய செய்தித்தாளின் வெவ்வேறு பக்கங்கள், வெவ்வேறு நபர்களிடம்.

‘என்னங்க இது..? ஏதோ, முதலீட்டாளர்கள் கூட்டமாம்.. ஈ மொய்க்கிறா மாதிரி, இத்தனை பேரு இருக்காங்க..!’

‘ஆமா.. இங்க இருக்கற கன்ஸ்யூமர் பிஹேவியர் அப்படி..’

‘அப்படின்னா...?’

‘நுகர்வோர் நடந்துகொள்ளும் போக்கு.’

‘சுத்தம். ஒண்ணும் புரியலை...’

‘நுகர்வோர் நடத்தை’ - செலவு மேலாண்மையில் ஒரு புதிய அத்தியாயம்.

‘கன்ஸ்யூமர்’ என்போர் யார்..?

‘யாரெல்லாம் ஒரு பொருளை வாங்குகிறார்களோ, அவர்கள் எல்லாரும்தான்.'

‘அப்போ ‘கஸ்டமர்’..?

‘விற்பனையாளருடன் அவ்வப்போது (நெருங்கிய) தொடர்பில் இருப்பவர்.'

‘ரொம்ப வருஷமா இவரு நம்ம கஸ்டமரு... வேற கடைக்குப் போகவே மாட்டாரு...’

நுகர்வோர் விஷயம் வேறு.

‘வருவாங்க... வாங்குவாங்க... போயிக்கினே இருப்பாங்க.’

‘மேம்போக்கா சொன்னா, இவ்வளவுதான் வித்தியாசம். இதுல, வாடிக்கையாளரால் சந்தையில பெருசா மாற்றம் வந்துடாது. ஆனா.. நுகர்வோர் இருக்காரு பாருங்க... உண்மையிலயே ‘பெரிய ஆளு.’ இவரை வரவழைச்சிட்டா, வியாபாரம் ‘ஒஹோ’ன்னு தூள் பறக்கும்.’

நுகர்வோருடைய மன ஓட்டம் எப்படி இருக்கிறது, அதை எப்படி நமக்குச் சாதகமாகத் திருப்புவது, இதெல்லாம்தான் ‘சந்தை ஆராய்ச்சி’ (market research).

இதனால் என்ன ‘பயன்’..?

விற்பனையாளருக்கு - சந்தை விரிவாக்கம்; அதிக விற்பனை; அதிக லாபம். நுகர்வோருக்கு..? ‘செலவு’!

இந்தியாவைப் பொறுத்த மட்டில், நுகர்வோரின் நடத்தை (consumers’ behaviour) கடந்த சில ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க அளவில் மாறி இருக்கிறது. இது, உயர் நடுத்தரப் பிரிவினர் மத்தியில் அதிகம் தென்படுகிறது. அவர்களின் செலவுப் பழக்க வழக்கத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிற அந்த மாற்றம் என்ன?

சிறு ‘வியாபாரி’ ஒருவர். உண்மையில் இவர் ஒரு விற்பனைப் பிரதிநிதிதான். சொந்தமாக முதல் போட்டு நடத்துவதால், ‘வியாபாரி.’ இது போன்றவர்கள், நமது நாட்டில் நிறைய உண்டு. (இவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து, யாரும் பெரிதாய் பேசுவது இல்லை.)

இவருக்குத் தேவை, ஒரு ‘டூ-வீலர்.’ இரண்டு பக்கங்களிலும் ‘பிரமாண்டமான’ பைகள், நான்கைந்து; இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்பட்ட ‘கேன்’ அல்லது ‘ட்ரே’; எல்லாவற்றிலும், அடுக்கி, திணித்து வைக்கப்பட்ட பொருட்கள்.

பல சரக்குக் கடை முன்னால் ஒரு வண்டியை, பக்கவாட்டில் நிறுத்திவிட்டு, பையில் இருந்து, இரண்டு மூன்று பொருட்களை எடுத்துக்கொண்டு கடைக்குள் நுழைகிறார். ‘அண்ணே... சௌக்கியம்தானே..? ‘லிஸ்ட்’ குடுங்க.. போட்டுருவோம்...’ கடைக்காரர், தயாராய் இருக்கும் பட்டியலை நீட்டுகிறார்.

‘என்ன இது..? சரக்கு கம்மியா ‘ஆர்டர்’ பண்ணி இருக்கீங்க..?’

எப்போதும் உதிர்க்கிற கேள்விதான். பதில் சொல்லாமல், ‘அண்ணே’, தனது வியாபாரத்தில் மூழ்கி இருக்கிறார். தன் கையில் உள்ள பொருட்களை, முன்னால் எடுத்து வைக்கிறார்.

‘அண்ணே... இதோ பாருங்க... புதுசா வந்து இருக்கு. அஞ்சு ரூபாதான்... ரெண்டு டஜன் போடட்டுமா..?’

‘வேணாம்... வேணாம். எப்பவும், ஒண்ணையேதான் வாங்குவாங்க... புதுசெல்லாம் போகவே போவாது. எடு... எடு... எடு...’

‘இப்பிடி சொன்னா எப்பிடி..? ஒரு அரை டஜன் போடறேன்... ஃப்ரீயாவே இருக்கட்டும். நல்லா போச்சுன்னா அடுத்த முறை நீங்களே ‘ஆர்டர்’ பண்ணப் போறீங்க.. சரியா..? எடுத்து வையிங்கண்ணே!’

சந்தையில் புதிதாக வருகிற எதுவாக இருந்தாலும், இப்படித் தான் தனது ‘பயணத்தை’த் தொடங்கும் - சில ஆண்டுகளுக்கு முன்பு வரை. இப்போது..?

‘அண்ணே’ முந்திக் கொள்கிறார். ‘ஏன்ப்பா... புதுசா எதாவது வந்து இருந்தா குடு; அந்தக் கடையில கெடைக்கு, இந்தக் கடையில கெடைக்கு... நீங்க ஏன் விக்கறது இல்லைன்னு ஒரே ரோதனைப்பா!’

‘புதுஸ்சா, ஒண்ணும் வரலியேண்ணே... வந்தா, நம்ம கடைக்குக் குடுக்காம, வேற யாருக்கு குடுத்துடப் போறேன்?’ இதுதான் அந்த மாற்றம்.

இரண்டு ரூபாய் துணி சோப்பில் இருந்து, இரண்டாயிரம் ரூபாய் ‘ஸ்மார்ட் ஃபோன்’ வரை, புதிதாய் வந்து இறங்குகிற ரகம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறவர்கள் சந்தை முழுதும் நிரம்பிக் கிடக்கிறார்கள். நம்முடைய பொருளாதாரம் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டு இருப்பதன் அறிகுறி என்றும் இதனைக் கொள்ளலாம்.

ஒரு காலம் இருந்தது. மர நாற்காலி. மரத்தால் செய்யப் பட்ட மேசை. உளுத்துப் போய், தூள் தூளாய்க் கொட்டும். அப்போதும் விடாப் பிடியாய், ஒட்ட வைத்து, ‘தாங்கிப் பிடித்து’ ஏதேதோ ‘மாயமந்திரங்கள்’ செய்து, அதையே பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.

புதிதாய் ஒன்றை வாங்குவது அப்படி ஒன்றும் இயலாத காரியம் இல்லை. ‘டேய்... சும்மா இருடா. முதன் முதலா நம்ம வூட்டுக்கு வந்த ‘ஃபர்னிச்சர்.’ இதுல இருந்து வந்ததுதான் என்னோட படிப்பு, வேலை, சம்பாத்தியம்... இன்னைக்கு நாம எல்லாரும் நல்ல இருக்கறோம்னா அதுல இந்த நாற்காலிக்கும் ஒரு முக்கியப் பங்கு இருக்குதுடா... மறந்துடாதே!’

பழைய கதை பேசுவதுபோல் இருக்கிறதா..? அப்படித் தோன்றினால் தவறு இல்லை. ‘அவுட்டேடட்’ அதாவது, காலத்துக்கு ஒவ்வாதன எதுவாக இருந்தாலும், ‘தள்ளிவிட’ வேண்டியதுதான். அவ்வளவு ஏன்? பழசு ஆகிப் போனாலே, மாற்றிவிடலாம். அதுவும் சரி. ஆனால்..?

‘நியூ அரைவல்’, ‘லேட்டஸ்ட் மாடல்’ என்கிற சொற்கள் ஏற்படுத்துகிற பாதிப்பு இருக்கிறதே... சொல்லி மாளாது. புத்தம் புதியதன் மீதான மோகம், இந்தியாவின் ‘புதிய’ பணக்காரர் களை, ‘படுத்தி எடுக்கிறது.’ மிகப் பெரிய அச்சுறுத்தலாக, வளர்ந்து நிற்கிறது. சந்தையில் இறங்கும் ‘அறிமுகங்கள்’ அத்தனையும், கையில் பணத்துடன் இருக்கும் இளைஞர்களைக் குறி வைத்தே களத்தில் இறக்கிவிடப் படுகின்றன.

இதுவரை ‘ஸ்மார்ட் ஃபோன்’ வைத்து இருக்காதவர்கள், முதன் முறையாகச் சொந்தமாக கார் வாங்கப் போகிறவர்கள், புத்தம் புதிய ரகங்களைத் தேடிப் போனால், அது இயல்பானதே. ஆனால், யாரெல்லாம் ‘அறிமுக’ப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்?

ஏற்கெனவே, அதே பொருளை, ‘மிக நல்ல நிலையில்’ வைத்து இருப்பவர்கள். ‘புதிது’, ‘அறிமுகம்’ ‘லேட்டஸ்ட்’ என்கிற மந்திரச் சொற்களுக்கு மயங்கி, செலவு செய்கிறவர்கள். இதற்கு என்ன பொருள்?

தேவையற்றது என்று சொன்னால் கோபம் வரலாம்; அவசரமற்றது என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். டஜன் கணக்கில் காலணிகளும் துணிமணிகளும் வாங்கிக் குவிப்போர் யார்? கையில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் வைத்திருப்போர் எத்தனை பேர்? எத்தனை வீட்டில், குடும்ப நபர்களைவிட அதிக எண்ணிக்கையில் டிவி இருக்கிறது?

மறு விற்பனைக்கு (‘ஏன் விற்கணும்?’) தகுதியுடைய பொருட்களாக வாங்கினால் கூடப் பரவாயில்லை. விலையும் போகாது; நம் வீட்டிலும் உபரியாக இருக்கும் என்றால், அது எத்தனை விலையுயர்ந்ததாக இருந்தாலும், அதற்குப் பெயர் என்ன? ‘புரிகிற பாஷையில்’ சொல்வதானால் - ‘எக்ஸ்ட்ரா!’

எவருக்கும் எளிதில் புரிகிற சாதாரணக் கேள்விதான் - ‘எக்ஸ்ட்ரா’ வருமானத்தில் ‘எக்ஸ்ட்ரா’க்களேதான் வாங்க வேண்டுமா? சற்றே நிதானித்து, யோசித்துப் பார்த்தால், ‘அட, இதைக்கூட வாங்கி இருக்கலாமே’ ‘அவசரப்பட்டு விட்டோமே...’ என்று தோன்றும்.

இந்த ‘யோசனை’ இருந்தால் போதும். நாம் தரும் பணம் நமக்கு முழுப் பயன் தரும்.

‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பதற்கு, ‘கையில் காசு இருக்கும்போதே செலவழித்து விடு’ என்று ஒரு அர்த்தம் இல்லவே இல்லை.

சில நாட்கள், ஏன்... சில வாரங்களோ, சில மாதங்களோ கூட, வைத்திருந்து பார்ப்போமே; தேவையும் யோசனையும் வராமலா போகும்?

ஆங்.. சொல்ல மறந்து விட்டது. இது தொடர்பாக நமக்கு வழிகாட்ட ஒரு ‘மந்திரம்’ இருக்கிறது.

அது....

(சேர்ப்போம்)

முன்பு விற்றார்கள்... இப்போது வாங்குகிறார்கள்...!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பலவும் கடந்த ஐந்து வருடங்களாக பங்குச் சந்தையில் செய்திருந்த முதலீடுகளை திரும்பப் பெற்று வந்தன. செபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2015 வரை உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 29 பில்லியன் டாலர் மதிப்புக்கு பங்குகளை விற்றன. இதில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே 24-25 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றன. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இதுவரை 6.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன. இதில் 20% இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் முதலீடு ஆகும்!