ஒரு நிறுவனத்தில் தேவையான அளவு ஊழியர்கள் இல்லை என்றால் என்ன ஆகும்? ஊழியர்களின் வேலைப்பளு அதிகரிக்கும். இரவு வரை ஊழியர்கள் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தினருடன் இருக்கும் நேரம் குறையும்!

ஒரு தொழில் வெற்றிபெற வேண்டுமெனில், அதற்கு அடிப்படை மனித வளம்தான் என்றும், ஒரு தொழில் சிறப்பாக நடக்க வேண்டுமெனில், தகுதி இல்லாத சொந்தபந்தங்களை பெரிய பதவிகளில் அமர்த்தக் கூடாது என்பதையும் கடந்த வாரங்களில் பார்த்தோம்.

ஒரு தொழில் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனத்தின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து, லாபமும் உயர்ந்துகொண்டே போகும்.

ஒரு நிறுவனம் சிறிய அளவில் இருக்கும்போது குறைந்த அளவிலான நபர்களை வைத்து அந்த நிறுவனத்தை நடத்தலாம். ஆனால், பிசினஸ் ஓரளவுக்கு வளரத் தொடங்கியபின்பு அல்லது வளர்ந்தபின்பு தேவையான அளவுக்கு ஊழியர்களை நியமிக்கவில்லை என்றால் அந்த பிசினஸில் இருந்து நாம் எதிர்பார்க்கும் பலன் நமக்கு கிடைக்காமலே போய்விடும். அதாவது, நன்கு வளர்ந்து வருகிற செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் விட்டால், அது வாடிவிடுவது போன்ற கதையாகிவிடும்.

ஒரு நிறுவனத்தில் தேவையான அளவு ஊழியர்கள் இல்லை என்றால் என்ன ஆகும்?

ஊழியர்களின் வேலைப்பளு அதிகரிக்கும். காலையில் வேலைக்கு வரும் ஊழியர்கள், இரவு வரை வேலை செய்துகொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தினருடன் இருக்கும் நேரம் குறையும். அவர்கள் உற்சாகம் இன்றி எப்போதும் தூங்கி வழிகிற மாதிரி காணப்படுவார்கள். புதிதாக, கிரியேட்டிவ்ஆக யோசிக்க அவர்களால் முடியாமல் போகும்.

சில ஊழியர்கள் எப்போதும் வேலை பார்த்தபடி இருப்பார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும். ஒன்று, அவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்து முடிப்பதற்கான திறமை இல்லாமல் இருப்பார்கள். அல்லது அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

அதிக நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களை பாசிட்டிவ்ஆக பார்ப்பதைவிட நெகட்டிவ்ஆகத்தான் பார்க்க வேண்டும். இது மாதிரியான நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்பட்சத்தில், அந்தப் பிரச்னைக்கு நாம் உடனடியாக தீர்வு காணவிட்டால், நீண்ட காலத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே, இதுமாதிரியான ஊழியர்களை நாம் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். அவர்களிடம் திறமைக் குறைவு இருந்தால், அவர்களின் திறமையை அதிகரிக்க பயிற்சிகள் தரலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் வேலையைப் பகிர்ந்துகொள்கிற மாதிரி இன்னொரு ஊழியரை நியமிப்பது அவசியம்.

சில அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பத்து பேருக்கான வேலை இருக்கும் ஒரு அலுவலகத்தில் 15 பேரை நியமித்திருப்பார்கள். இப்படி அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருக்கும்போது உற்பத்தியும் அதிகமாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. தேவைக்கும் அதிகமாக ஊழியர்கள் இருக்கும்போது வேலை கெடுவதுடன், ஒரு நிறுவனத்தின் வேலைக் கலாசாரத்தையே கெடுத்துவிடும்.

ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து, வேலை குறைவாக இருந்தால் என்ன நடக்கும்?

ஊழியர்கள் உட்கார்ந்து புரணி பேசத் தொடங்குவார்கள். முதலில் வெளியில் இருக்கும் பாலிடிக்ஸைப் பேசத் தொடங்குவார்கள். அது பேசி முடித்தபிறகு அலுவலகத்துக்குள் இருக்கும் பாலிடிக்ஸைப் பேச ஆரம்பிப்பார்கள். இப்படி புரணி பேசி பொழுதைக் கழிக்கிறவர்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருக்கும் விஷ விதைகள் மாதிரி. இந்த விஷ விதைகளை உடனடியாக பிடுங்கி வெளியே எறிந்துவிட வேண்டும். தேவைக்கும் அதிகமாக ஊழியர்கள் இருக்கும் போதுதான் இந்த மாதிரி ஊர்க்கதை பேசி பொழுதைப் போக்குகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு பரிசல்காரர் ஆற்றின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று வருவார். ஒருநாள் மாலை கடைசி முறையாக பரிசலை எடுக்கும்போது, ஒருவர் ஓடிவந்தார்.

''அய்யா, கடைசி முறையாக நீங்கள் கிளம்பிவிட்டீர்கள். இனி நீங்கள் நாளை காலைதான் திரும்ப வருவீர்கள். என்னால் இரவு முழுக்க இங்கு தனியாக இருக்க முடியாது. எனவே, என்னையும் பரிசலில் ஏற்றிக் கொள்ளுங்கள்'' என்றார்.

''இந்த பரிசலில் ஐந்து பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும். ஐந்து பேரும் ஏறிவிட்டார்கள். இனி ஆறாவதாக உன்னை ஏற்றிக் கொள்ள முடியாது!'' என்றார். ஆனால் அவரோ மிகவும் கெஞ்சிக் கேட்டதால், கருணையோடு பரிசலில் ஏற்றிக் கொண்டார்.

பரிசலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்த பரிசல் நட்டாற்றில் கவிழ்ந்தது. ஒரே ஒருவருக்காக பரிதாபப்படப் போய், கடைசியில் அந்த பரிசலே கவிழ்ந்தது. பரிசல் ஓட்டியவர் உள்பட அத்தனை பேரும் உயிருக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிசினஸ் என்பதும் ஒரு படகு போன்றது. தேவைக்கும் அதிகமான நபர்களை சேர்த்தால், அந்த பிசினஸானது வளர்வதற்கு வாய்ப்பிருந்தும் வளராமலே போய்விடும். மிகக் குறைவான நபர்கள் இருந்தாலும் வளரமுடியாமல் வதங்கிப் போய்விடும். இந்த இரண்டு தவறுகளையும் செய்கிறவர்கள் தாங்கள் உருவாக்கிய நிறுவனத்தை தாங்களே குத்திக் கொல்வதற்கு சமம் என்பதை ஒவ்வொரு பிசினஸ்மேனும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பை உணர்ந்த பிசினஸ்மேன்களே தங்கள் தொழிலை இன்னும் திறம்பட செய்து முடிப்பவர்களாக இருப்பார்கள்.

சில தொழில்முனைவோர்கள் அவர் சிபாரிசு செய்தார், இவர் சிபாரிசு செய்தார் என பலபேரை வேலைக்கு எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் அந்த வேலைக்கு அவசியம் தேவைதானா என்று பார்க்க மாட்டார்கள். ஒரு அலுவலகத்தில் ஒருவரை வேலைக்கு எடுக்கிறோம் எனில், அந்த ஊழியர் அவசியம் தேவைதானா, அந்த வேலையை செய்வதற்கான தகுதி அவரிடம் இருக்கிறதா என்று பார்ப்பதை விட்டுவிட்டு, யார் யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஆட்களை எடுக்கக் கூடாது.

எங்கள் அலுவலகத்தைப் பொறுத்தவரை, தேவையான அளவுக்கு மட்டுமே ஊழியர்களை எடுத்திருக்கிறோம். அவர்கள் தங்கள் வேலையை செய்து முடிக்கத் தேவையான அளவுக்கு சுதந்திரமும் தந்திருக்கிறோம். உதாரணமாக, ஒரு ஊழியர் காலை 9.15க்கு அலுவலகத்துக்கு வரவேண்டும் எனில், அவருக்கு ஒன்றிரண்டு சொந்த வேலை இருக்கும்பட்சத்தில் அதை முடித்துவிட்டு, 10.30 மணிக்கு அலுவலகத்துக்கு வரலாம். தாமதமாக வரும் இந்த நேரத்தை மாலை நேரம் கூடுதலாக வேலை பார்த்து நேர் செய்துகொள்ளலாம். இந்த சலுகை எப்போதாவது தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஒரு 'ஃப்ளக்ஸி டைம்’ வசதி தரப்படுவ தால், ஊழியர்கள் தங்கள் சொந்த வேலைகளை முடித்துக் கொள் வதுடன், அலுவலக வேலை யையும் சரியாக செய்து முடிக்கின்றனர்.

தவிர, எங்கள் கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு என இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கிறோம். இதனால் அவர்களுக்கு வார நாட்களில் புத்துணர்ச்சியுடன் வேலை பார்க்க முடிகிறது.

தவிர, வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை என்பது பல அலுவலகத்தில் கிடைப்பதில்லை என்பதால், பல ஊழியர்கள் எங்கள் அலுவலகத்திலிருந்து வேலையை விட்டுச் செல்வதில்லை.

இது மாதிரி உங்கள் அலுவலகத்துக்கு தேவையான அளவுக்கு மட்டுமே நபர்களை எடுங்கள். அவர்களையும் சரியான நபர்களாக எடுங்கள். சரியான நபர்களை வேலைக்கு எடுப்பது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்? அதை பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.

(ஜெயிப்போம்)

சி.கே.ஆரிடம் கேளுங்கள்!

கஸ்டமைஸ்டு டீ சர்ட்களை விற்பனை செய்யும் ஒரு வெப்சைட்டினை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!

சுரேஷ் பி.கே.

''கஸ்டமைஸ்டு டீ சர்ட் விற்பனை செய்யும் வெப்சைட் என்பது புதுமையான ஐடியாதான். ஆனால், உங்கள் ஐடியா எந்த அளவுக்கு நடைமுறையில் ஜெயிக்கும் என்று தெரியவில்லை. அளவெடுத்து டீ சர்ட் தைத்துத் தரும்போது, ஒருவர் தனக்குப் பிடித்த நிறத்தை சொல்லலாம். ஆனால், தன் உடல் பாகங்களின் அளவை சரியாக அளந்து சொல்ல முடியுமா என்பது முக்கியமான கேள்வி. எனவே, கஸ்டமைஸ்டு முறையில் டீ சர்ட் எடுக்க ஒருவர் உங்களை அணுகும்பட்சத்தில் அவருக்கான அளவை எடுக்க நீங்கள் ஆங்காங்கே அளவெடுக்கும் ஆட்களை நியமிக்க வேண்டும். இதை எப்படி செய்வீர்கள் என்பது முக்கியமான கேள்வி.

அடுத்த முக்கியமான பிரச்னை, ஒருவருக்கு பிடித்த நிறத்தில், பிடித்த ஸ்டைலில், அளவெடுத்துத் தைக்கும்போது அதற்கான உற்பத்திச் செலவு வெகுவாக அதிகரிக்கும். பொதுவான உடல்பாக அளவு களில், நிறத்தில், ஸ்டைலில் டீ சர்ட்கள் தைக்கப்படுவதால்தான் அவற்றை பலரும் எளிதில் வாங்கி அணியக்கூடிய விலையில் விற்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒருவருக்கு பிடித்த மாதிரியான நிறத்தில், அவர் உடல்பாக அளவுக்கேற்றபடி டீ சர்ட் தைத்து தரவேண்டும் எனில், இப்போது விற்கப்படும் டீ சர்ட் விலையிலிருந்து அதிகமான விலைக்கே உங்களால் விற்க முடியும். அந்த அளவுக்கு அதிக விலை தந்து உங்கள் தயாரிப்புகளை மக்கள் வாங்குவார்களா என்பது சந்தேகமே.

நிறத்தில், ஸ்டைலில் நீங்கள் பல சாய்ஸ்களை தரலாமே தவிர, முழுக்க கஸ்டமைஸ்டு டீ சர்ட் என்பது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே.''

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 'கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடிக்கு அனுப்பலாம்.