Published:Updated:

வேலை டு பிசினஸ்... மாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வேலை டு பிசினஸ்... மாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீன்குமார், ஏற்றுமதி நிறுவன மொன்றில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை சமீப காலமாக அவர் மனதில் கொழுந்து விட்டு்  எரிந்தது. பணத்தை நிர்வாகம் செய்வதில் நவீன்குமார் கெட்டிக்காரர் என்பதால், தொழிலில் ஏற்பட்ட லாப நஷ்டங்களை சரியாக மேலாண்மை செய்து தொழிலில் முன்னேற்றத்தை தனதாக்கிக் கொண்டார்.

ஆனால், ஐடி வேலையிலிருந்து பிசினஸ் செய்யவந்த ரமேஷுக்கு வேறு அனுபவம். தொழில் அனுபவமும் பண நிர்வாகமும் போதுமான அளவு தெரியாமல் போனதால், நஷ்டமே மிஞ்சியது.

ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? தொழில் தொடங்க  தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? எந்தெந்த விஷயங்களில்  முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஐஐடி பேராசிரியர் தில்லைராஜனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

வேலை டு பிசினஸ்... மாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இரு பிரிவினர்!

“30 வயதுக்கு கீழுள்ளவர்கள், 30 வயதை கடந்தவர்கள் என வேலையிலிருந்து பிஸினஸுக்கு மாறுகிறவர்களை இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் வாழ்க்கை அவரவர்களின் கையில் இருக்கும். இந்த வயதில் அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கலாம். அதனால் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, குடும்பத்துக்கான செலவு என எந்தவொரு ஃபைனான்ஷியல் கமிட்மென்ட்டுகளும் இருக்காது. எனவே, துணிந்து ரிஸ்க் எடுக்க இந்த வயதில் வாய்ப்புண்டு.

ஆனால், 30 வயதை கடந்தவர்க ளுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும். அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவு களுக்காகவும், தங்களது ஓய்வுக் காலத்துக்காகவும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். நம்மை நம்பி நமது குடும்பம் வாழ்கிறது என்கிற எண்ணத்துடன் எடுக்கும், ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.  

முன்னேற்பாடுகள் முக்கியம்!

எனக்கு தொழில் குறித்த அனுபவம் இருக்கிறது; அதற்கான நிதி வசதியும் இருக்கிறது என்னும்

வேலை டு பிசினஸ்... மாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பட்சத்தில் வயது அதற்கு தடையாக இருக்காது.

அதேசமயம், இதுவரை வேலையில் இருந்து பழகிய வர்கள், திடீரென்று தொழிலுக் குள் அடி எடுத்து வைக்கும்போது, மாதாமாதம் கிடைத்துவந்த வருமானம் தடைபடும். இதை சமாளிக்கும் வகையில் போதுமான நிதியையும், தொழிலில் ஏற்படும் செலவுகளுக்கு தேவைப்படும் பணத்தையும் (குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கான செலவுத் தொகை) முன்பாகவே ஏற்பாடு செய்துகொள்வது அவசியம். ஏனெனில், சொந்த தொழிலில் ஆரம்ப காலத்தில் மாதாமாதம் வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. நன்கு வளர்ந்தபிறகு கிடைக்கும் லாபத்திலிருந்து வேண்டுமானால், மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை சம்பள மாக எடுத்துக் கொள்ளலாம்.

வேலையில் இருந்த நேரத்தை விட சொந்த தொழிலுக்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி யிருக்கும். கடின உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்த மனநிலைக்கெல்லாம் தயார் படுத்திக்கொண்டுதான் வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்க வேண்டுமே தவிர, அஜாக்கிரதையுடன் ஆரம்பிப்பது சங்கடத்தை தரும்” என்றவர் எந்த சமயங்களில் வேலையிலிருந்து விலகி சொந்த தொழிலை தொடங்கலாம் எனச் சொன்னார்.

சரியான நேரம்!

“ஒருவர் படித்து முடித்ததும் வேலை என்றில்லாமல் தொழில் தான் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றால், அவர் தொழில் தொடங்க நினைக்கும் துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து அங்கு கற்றுக்கொண்ட விஷயங்களை, தொழில் செய்வதற்கான நெழிவு சுழிவுகளை கற்றுக்கொண்டு அதை வைத்து தொழிலை ஆரம் பிக்கலாம். அப்போது ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தின் வாயிலாக தொழில் சார்ந்த தொடர்புகள் கிடைத்திருக்கும். அந்த தொழில் சார்ந்த அறிவும் வளர்ந்திருக்கும் எனும்போது வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுவதில் பிரச்னை வந்துவிடாது.

உதாரணமாக, தற்போது ஐடி துறையில் ஜாம்பவானாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய நாராயண மூர்த்தியும், தன்னுடைய படிப்பு சார்ந்த துறையிலேயே பணியாற்றி, பின்னர் அதிலிருந்து விலகி இன்ஃபோசிஸ் என்னும் ஐடி நிறுவனத்தை தனது நண்பர் களுடன் ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டவர். ஆக, வேலையிலிருந்து தொழிலுக்கு மாறலாம். ஆனால், அது சார்ந்த அறிவு உங்களுக்கு இருக்கிறதா என்பதைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

வேலை டு பிசினஸ்... மாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தொழில் வளர்ச்சி!

ஒருவர் ஆரம்பிக்கப் போகும் தொழில் சார்ந்த துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை, வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்கள் கவனிக்க தவறுகிறார்கள். இதுவே அவர்களை பிரச்னைக்கு பெரிதும் ஆளாக்குகிறது. இன்றைய உலகம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் அவசரகதியில் சுழன்றுகொண்டு இருக்கிறது. மனிதர்கள் தங்கள் ஒவ்வொருவரையும் அதனுடன் அப்டேட் செய்துகொண்டே வருகிறார்கள். இப்படி இருக்கை யில் இன்றைய நிலையில் தொழிலை ஆரம்பிப்பவர்கள் இன்னும் காலத்துக்கேற்ப புதுமை படைப்பவர்களாய் இருக்க வேண்டும்.

பெரும்பாலானவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தும், ரிஸ்க் எடுக்க பயந்து, தொடங்காமலே  விட்டுவிடுகிறார்கள். வாய்ப்பு களை உருவாக்கிக் கொண்டு சொந்த தொழிலில் காலடி வைப்பவர்களே ஜெயிக் கிறார்கள்'' என்றார் தெளிவாக.

வேலையிலிருந்து விலகி சொந்த தொழில் தொடங்கும் போது, வாய்ப்புகளை சரியாக  அமைத்துக்கொண்டு, முறையாக ஆரம்பித்தால் வெற்றி நிச்சயமே!

செ.கார்த்திகேயன்

சம்பளம் வேண்டாம், லாபம் போதும்!

ராஜேந்திரன், சென்னை.

வேலை டு பிசினஸ்... மாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

‘‘ சிறு வயதிலிருந்தே எனக்கு, பலருக்கும் வேலை தரும் ஒரு முதலாளியாக இருக்க ஆசை. பி.ஹெச்.டி முடித்துவிட்டு பேராசிரியராக வேலை பார்த்தேன். பிறகு தொழில் கற்றுக்கொள்வதற்காக ஒரு சில ஐ.டி கம்பெனிகளில் பணிபுரிந்தேன். என்னைப் போன்ற எண்ணம் உடைய சில நண்பர்கள் கிடைத்தார்கள். நாங்கள் தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்தபின், ஒரு சோதனை முயற்சியாக, சில கம்ப்யூட்டர்களை மட்டும் கொண்டு, ஓய்வு நேரத்தில் வேலை செய்தோம். எங்கள் கிராமத்தில் இருந்து வேலைக்காக சென்னை வரும் ஒரு சிலருக்கும் அங்கு பயிற்சியளித்தேன். அதைக்கண்ட மற்றொரு நண்பர் (நான் வேலை பார்த்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்), “நீங்கள் ஏன் இந்த புதியவர்களைக்  கொண்டு ஒரு நிறுவனம் தொடங்கக்கூடாது. உங்களுக்கு முதல் புராஜெக்ட் நான் தருகிறேன்” என்றார்.

அப்படித் தொடங்கியதுதான் எங்கள் நிறுவனம்.  இன்று சுமார் நூறு பேர் எங்களிடம் பணிபுரிகிறார்கள். லாபம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மிடம் பணிபுரிவோருக்கு சம்பளம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? ஆரம்ப காலத்தில் அது ஒன்றுதான் சமாளிக்க முடியாமல் இருந்தது. அதையும் சீக்கிரம் கற்றுக்கொண்டோம். பல முடிவுகளை துணிந்து எடுத்தோம். அனைவரும் முன்னேற்றம் அடைந்தோம். இன்று பேராசிரியர் வேலையில் கிடைத்த சம்பளத்தைப் போல பல மடங்கு சம்பாதிக்கிறேன்.’’

‘‘தோல்வி வந்தால் சோர்ந்துவிடக் கூடாது!’’

பாலாஜி, சென்னை.

வேலை டு பிசினஸ்... மாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

‘‘நான் பெரிய ஜெனரேட்டர்களை  வாடகைக்கு விடும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். அங்கு வேலைப்பளு அதிகம், சம்பளம் குறைவு. வேலையை மட்டும் கற்றுக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். சொந்தங்களின் உதவியுடன் ரூ.1.5 லட்சம் போட்டு என் முதல் மெஷினை வாங்கினேன். முதல் இரண்டு மாதங்கள் ஒரு ஆர்டரும் கிடைக்கவில்லை. மெஷினை ஓட்ட பணம் தேவைப்பட்டது. மீண்டும் மற்றொரு வேலையில் சேர்ந்தேன். நான்கு மாதங்கள் இப்படியே போனது.

அங்கு கிடைத்த தொடர்புகள் மூலம் எனக்கு 63,000 ரூபாய்க்கு முதல் ஆர்டர் கிடைத்தது. எனக்குள் தன்னம்பிக்கை பிறந்தது. வந்த வருமானத்தை அத்தியாவசிய தேவைகள் போக மீதியை கம்பெனிக்குள்ளேயே போட்டேன். அடுத்த வருஷம் இன்னொரு மெஷின் வாங்கினேன்.

இப்போது ஏழு ஜெனரேட்டர்களுடன் என் கம்பெனி நடக்கிறது. உறவினர்களின் உதவியும், தோல்வி வரும்போது உட்கார்ந்து யோசிக்காமல் ஓடிக்கொண்டே யோசித்ததும் தான் என் வெற்றிக்கு காரணம். எந்த தொழிலாக இருந்தாலும், அதற்கு முதலாளி யாக நான் இருக்க வேண்டும் என்ற இந்த மனப்பான்மை நம் எல்லோருக்கும் தேவை.''

 -அ.செளம்யா

படங்கள்:  ஜெ.விக்னேஷ்.

அடுத்த கட்டுரைக்கு