Published:Updated:

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 13

பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth

பிரீமியம் ஸ்டோரி

ரிஸ்க் மேனேஜ்மென்ட்

ரு நிறுவனத்தின் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் என்கிற போது, அதில் ரிஸ்க் (இடர்பாடு) என்பது மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ரிஸ்க் என்றால் என்ன, அதன் வகைகள் என்ன என கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் பங்கு முதலீட்டின் போது ரிஸ்க்கை எப்படி நிர் வகிப்பது என்பதை உதாரணங் களுடன் பார்ப்போம்.

ராஜன் ஒரு வர்த்தகர். இவர் ஆப்பிரிக்காவில் பொருட்களை வாங்கி, இந்தியாவுக்கு கொண்டு வந்து கொள்முதல் விலையிலிருந்து 100 சதவிகிதம் லாபம் வைத்து விற்பனை செய்கிறார். இந்தப் பொருட்களை அவர் இந்தியாவுக்கு கப்பல் மூலம் கொண்டு வருகிறார்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 13

ராஜன் இந்தியாவுக்கு 1,000  கிலோ தங்கத்தை கப்பல் மூலம் கொண்டு வரத் திட்டமிட்டுள் ளார். இதன் கொள்முதல் விலை ரூ. 250 கோடி. இதனை ரூ. 500 கோடிக்கு விற்க இருக்கிறார். இதன் மூலமான லாபம் ரூ. 250 கோடியாக இருக்கும்.

மிகப் பெரிய கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் 1000 கிலோ தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரலாம். இப்படி செய்யும் போது அவருக்கு சில ரிஸ்க்குகள் இருக்கின்றன. இந்தக் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் மூழ்கிப் போகலாம். அல்லது கடற்கொள்ளையர் களால் தங்கம் கொள்ளை அடிக்கப்படலாம். இதனால்  ராஜனுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்படக்கூடும்.

இந்த ஆபத்தைத் தவிரக்க, ஒரே கப்பலில் 1000 கிலோ தங்கத்தையும் அனுப்பாமல், ஒரே நாளில்

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 13

புறப்படும் 10 பல்வேறு கப்பல்களில் கப்பல் ஒன்றில் 100 கிலோ வீதம் அனுப்பி வைக்க முடிவு செய்கிறார் ராஜன். இதன் மூலம் கப்பல் கடலில் மூழ்குவது அல்லது கொள்ளையர்களின் கையில் சிக்குவது கணிசமாக குறையும். ஒன்று அல்லது இரண்டு கப்பல்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலும் மீதிக் கப்பல்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்து விடும். இரண்டு கப்பல்களில் உள்ள தங்கத்தை அவர் இழந்தாலும் அவருக்கு 200 கிலோ தங்கம் இழப்பு. அதே நேரத்தில் 800 கிலோ தங்கத்தை விற்பனை செய்வது மூலம் ரூ.200 கோடி லாபம் ஈட்டுவார். 

பல்வேறு கப்பல்களில் தங்கத்தை பிரித்து அனுப்புவது மூலம் ராஜன் ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்கிறார். ஒரே பொருளில் முதலீடு செய்யாமல் பல பொருட்களில் முதலீடு செய்வதால், ஒரு பொருள் நஷ்டத்தைக் கொடுத்தாலும் நம்முடைய மொத்த முதலீட்டுக்கும் நஷ்டம் வராது என்பதை மேற்கூறிய உதாரணம் மூலம் அறிகிறோம். (Product Diversification).

ராஜன் 10 கப்பல்களில் தங்கத்தை பிரித்து ஒரே நாளில் அனுப்புவதும் ரிஸ்க் நிறைந்தது தான். அந்தக் குறிப்பிட்ட நாளில் பெரும் புயல் அல்லது சுனாமி ஏற்பட்டு கப்பல்கள் மூழ்கிப் போனால், ராஜனின் மூலதனத்தில் இழப்பு ஏற்படும். இதற்கு பதில் வாரத்துக்கு ஒரு கப்பல் என அனுப்பும்போது, ரிஸ்க் மேலும் குறையும்.

 இந்த உதாரணத்தை  முதலீட்டுக் கோணத்தில் பார்க்கும்போது, ஒருவர் ஒரே முறை மொத்தமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், சந்தை பெரிய சரிவை சந்திக்கும் போது அதிக இழப்பை சந்திக்க நேரிடும். இதற்கு பதில் குறிப் பிட்ட காலத்துக்கு முதலீட்டைப் பிரித்து தொடர்ந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க் குறையும். (Temporal Diversification) எல்லா தங்கமும் கப்பல் மூலம் இந்தியாவுக்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறைவாக இருக்கிறது. அப்போது அவரால் தங்கச் சந்தையில் தங்கத்தை விற்க முடியவில்லை. அப்போது அவர் தன் லாபத்தை சிறிதளவு இழப்பார். தங்கச் சந்தை மிகவும் மோசமாக இருந்தால் அவர், மூலதனத்தைக் கூட இழப்பார்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 13

தங்கத்தை மட்டும் கப்பலில் இறக்குமதி செய்வதற்கு பதில் தங்கம், வெள்ளி, தாமிரம், வைரம் என பலவற்றை ராஜன் இறக்குமதி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு பொருளின்  விலை குறைந்தாலும் வேறு பொருட்களின் விற்பனை மூலம் லாபம் கிடைக்கும். மேலே கூறப் பட்ட ஒவ்வொரு கமாடிட்டியிலும் தலா ரூ. 25 கோடியை முதலீடு செய்து அவற்றை தலா ரூ. 50 கோடிக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது தங்கச் சந்தை மந்தமாக இருக்கிறது. அவரால் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விற்க முடியவில்லை. அதேநேரத்தில், வெள்ளி, தாமிரம் மற்றும் வைர விற்பனையை இரு மடங்கு விலை மூலம் ரூ. 150 கோடி லாபம் பார்க்க முடியும். 

இந்த உதாரணம் மூலம் நாம் தெரிந்துக் கொள்வது: ஒரே ஒரு பொருளை இறக்குமதி செய் வதற்கு பதில் பல பொருள்களை இறக்குமதி செய்யுங்கள் (Market Diversification). 

இதை முதலீட்டுக் கோணத்தில் பார்த்தால், ஒருவர் தன் மொத்த முதலீட்டையும் ஒரே சந்தையில் போட்டு வைக்காமல், பல சந்தைகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது ஒரு சந்தை சரியாக செயல்படவில்லை எனில், மற்ற சந்தைகள் கைகொடுக்கும். 

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 13

ராஜன் தரமான பொருட் களை கொள்முதல் செய்ய வில்லை; கப்பல் தரமானதாக இல்லை அல்லது கப்பல் பராமரிப்பு சரியில்லை போன்ற காரணத்தால் அல்லது கப்பல் கேப்டன் சரக்குகளுடன் ஓடிவிடுவது போன்ற காரணங்களால் அவருக்கு இழப்பு ஏற்படக்கூடும்.

இவற்றைக் குறைக்க அல்லது தவிர்க்க, கொள்முதல் செய்யும் பொருளின் தரத்தை ராஜன் உறுதி செய்ய வேண்டும். மேலும், சரக்கை எடுத்துவரும் கப்பலின் தரத்தை பரிசோதிக்க வேண்டும். கப்பல் கேப்டன் எப்படிப் பட்டவர் என்கிற விவரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உதாரணம் மூலம் நாம் தெரிந்துக் கொள்வது: ஏமாறா மல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். 

இறக்குமதி மட்டுமல்ல, இதன் அடிப்படையில் முதலீட்டுக்கு பங்குகளை தேர்வு செய்தால் ரிஸ்க்-ஐ குறைத்து லாபம் பார்க்க முடியும்.

தொகுப்பு: சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு