Published:Updated:

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

டித்து விட்டு வேலைக்குப் போய் சம்பாதிப்பதைவிட, ஏதாவது ஒரு தொழிலை சொந்தமாக ஆரம்பித்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தினை இன்றைக்கு பலரிடமும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. தவிர, பல தொழில்களுக்கும் இப்போது பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சிறிய முதலீட்டில் நடத்தப்படும் இட்லி கடை இருந்தாலும் சரி,ஓரளவு பெரிய முதலீட்டில் நடத்தப்படும் லாண்டரி ஷாப்களாக இருந்தாலும் சரி, நிறையவே வருமானம் தருவதாக இருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம், மக்களிடம் அதிக அளவில் புழங்கும் பணம்தான். இன்றைக்கு எதையுமே நினைத்தவுடன் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

தவிர, தற்போது தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை நிறையவே இருக்கிறது. தொழில் துவங்கத் தேவையான முதலீடுகளான வங்கிக் கடன் எளிதாகவே கிடைக்கிறது. கொஞ்சம் பெரிய தொழில் எனில், பிரைவேட் ஈக்விட்டி என்னும் பிஇ ஃபண்டுகள் பணத்தை முதலீடு செய்யத் தயாராகவே இருக்கின்றன.

வித்தியாசமான அணுகுமுறையும், கடினமான உழைப்பும் உங்களிடம் இருந்தால், நீங்கள் தொடங்கும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலையே தற்போது உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அதிக லாபம் தரும் அற்புதமான ஐந்து தொழில்களை வாசகர்களுக்குத் தருகிறோம். இந்த தொழிலில் உள்ள வாய்ப்புகள் என்ன, இந்தத் தொழில் துவங்குவதற்கு என்னென்ன தேவை என்பதைக் குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறோம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த தொழில்களை கவனிக்கலாமே! 

1 ரெடி டு ஈட் ஃபுட்ஸ்!

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

உலக அளவில் ரெடி டு ஈட் ஃபுட்டுக்கான வரவேற்பு அதிகம் உள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக இதன் தேவை அதிகரித்துள்ளது. இப்போது பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். மேலும், பலரது சம்பளமும் இப்போது குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்திருப்பதால், செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தவிர, வேலை காரணமாக சொந்த ஊரைவிட்டு, வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், இந்த ரெடி டு ஈட் ஃபுட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை கூடுவதால் ஏற்றுமதிக்கும் உகந்த பொருளாக உள்ளது.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

சந்தை மதிப்பு: ரூ. 4,000 கோடி, இத்துறை வருடத்துக்கு 21.99% வளர்ச்சி அடைகிறது.  

இந்தத் தொழில் துவங்குவதற்கு  FSSAI லைசென்ஸ் வாங்க வேண்டும்.

தேவையான இயந்திரங்கள்: இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், டபுள் ஸ்பைரல் மிக்ஸர், பிரையிங் மெஷின் ஆகியவை தேவை.

தேவையான ஆட்கள்: 2 நபர்கள்.

தொழில் வாய்ப்புகள்: சென்னை, கோவை மற்றும் வளர்ச்சி அடையும் மாவட்டங்கள்.

வரிக்குப் பிந்தைய வருமானம்:  30 சதவிகிதம் 

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...
அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

‘‘மாதம் ரூ.70-90 ஆயிரம் வருமானம்!’’

ரவிச்சந்திரன், சென்னை.  ராஜலட்சுமி புட்ஸ்.

‘‘நான், கடந்த 10 வருடமாக இந்தத் தொழில் செய்து வருகிறேன். உணவுப் பொருட்களைவிட ஸ்நாக்ஸ் வகைகளுக்குச் சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. தரமாகவும், விலை குறைவாகவும் உணவுகளை வழங்கினால், மாதத்துக்கு 70-90 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும்."

2 லாண்டரி சர்வீஸ்!

லாண்டரி சர்வீஸ் என்பது இன்றைய வேகமான வாழ்க்கை முறைக்கு அவசியமானதாக மாறி உள்ளது. 2017-ம் ஆண்டுக்குள் லாண்டரி சேவை 65 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என சி அண்டு டபிள்யூ (Cushman & Wakefield) ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 52 ஆயிரம் ஹோட்டல்கள் துவக்கப்படும் எனவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மேற்கூறிய துறைகள் வேகமாக வளர்ச்சி அடையும்போது லாண்டரி சேவையின் தேவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

புதிதாக வேலைக்குப் போகும் இளைஞர்களின் வளர்ச்சி அதிகரித்து வருவதாலும் இந்த லாண்டரி சேவைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது, அவர்களின் துணிகளைத் துவைத்து அயன் செய்து தருவதற்கான கட்டணம் என்பது மிகவும் குறைவு. இந்த தொழிலுக்கு தண்ணீர் அதிகம் தேவை.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

தேவையான இயந்திரங்கள்: தொழில் துறைக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஹைட்ரோ கரைப்பன், துணிகளை உலர்த்தும் இயந்திரம், அயன் செய்யும் டேபிள் மற்றும் அதற்கான இயந்திரம்.

தேவையான ஆட்கள்: அதிகபட்சம் 40 நபர்கள்.

தொழில் வாய்ப்புகள்: மருத்துவமனை, ஹோட்டல், வேலைக்குப் போகும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே, பேருந்துகள் போன்றவை.

வரிக்குப் பின் வருமானம்:  16% கிடைக்கும்.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...
அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

‘‘20 - 25% லாபம் கிடைக்கும்!’’

விஜயராகவன், கோவை புளு பபுல்ஸ்

“நான் கடந்த ஒரு வருடமாக இந்தத் தொழில் செய்து வருகிறேன். ஒரு மணி நேரத்தில் துணிகளைத் துவைத்து அயன் செய்து தருவதால், வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகிறார்கள். இதில் 20-25 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும்."

3 கார் வாஷிங்/சர்வீஸ் சென்டர்!

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

இரண்டு சக்கர வாகனத்துக்கு இணையாக கார்களின் தேவை இன்று அதிகரித்துள்ளது. கார் வாங்குவதற்கு எளிதாகக் கடன் கிடைப்பது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை 40 - 45 கோடியாக உயர வாய்ப்புள்ளது. தற்போது 7 கோடி கார்கள் உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் உலகின் 5-வது மிகப் பெரிய கன்ஸ்யூமர் நாடாக இந்தியா மாறும். வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, கார் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக மாறி உள்ளது.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

தேவையான இயந்திரம்: பிரஷ், ஜெட் ஸ்பிரே, உலர்த்தும் இயந்திரம், சென்சர், கன்ட்ரோலர், பம்ப், டைர்வ்ஸ், நாசில் போன்றவை.

தொழில் வாய்ப்பு: வளர்ச்சி அடையும் அனைத்துப் பகுதிகளும்.

வரிக்குப் பின் வருமானம்:  30% கிடைக்கும்.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...
அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

‘‘கவனமாக செய்தால் கூடுதல் லாபம்!’’

ரமேஷ் குமார், சென்னை.  கார்ஸ்பார்க்

“நான் கடந்த ஒரு வருடமாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன். ஒரேநேரத்தில் அதிகபட்சமாக ஐந்து கார்களை வாஷ் செய்யவும், மூன்று கார்களை பார்க் செய்யும் அளவுக்குக் கட்டாயம் இடம் தேவை. மேலும், இந்தத் தொழிலில் தொடர் செலவுகள் என்பது கிடையாது. அதாவது, பணியாளர்களின் சம்பளம் மற்றும் வாஷிங் செய்வதற்கு தேவையான பொருட்களைத் தவிர்த்து வேறு செலவு கிடையாது.

மழைக் காலத்தில் மட்டும் கார்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதிக லாபம் தரக்கூடிய தொழில் இது.  வாடிக்கையாளரின் தேவை என்ன என்பதைத் தெரிந்து சேவைசெய்வது முக்கியம்.”

4 பயோமாஸ்/எரிபொருள் தயாரிப்பு!

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

தொழில் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இந்த பயோமாஸ் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. முக்கியமாக டீ, புகையிலை, லெதர், டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. மேலும், நிலக்கரியின் விலை அதிகம் என்பதால், பாய்லர் உள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும் இதன் பயன்பாடு அதிகம். அதோடு அதிலிருந்து கிடைக்கும் வெப்பமும் குறைவானதாகவே இருக்கும். இதனால் இந்தக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

தேவையான இயந்திரம்: கழிவுகளை அரைக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் அவசியம் தேவை.

தொழில் வாய்ப்பு: தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடம். டீ தயாரிப்பு தொழிற்சாலை உள்ள ஊட்டியில் அதிக வரவேற்பு உள்ள தொழில் இது. இதில் மட்டும் வருடத்துக்கு 50 ஆயிரம் டன் கழிவு தேவைப்படுகிறது.

வரிக்குப் பின் வருமானம்:  10% கிடைக்கும்.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...
அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

" எப்போதும்  வரவேற்பு!"

கருணாகரன், சன் கம்பெனி, கோவை. 

“பயோமாஸ் எரிபொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காற்று மாசுபடாத வகையில் எரிபொருள் பயன்படுத்தினால்தான் தொழில் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைக்கும். இதனால் இதன் தேவை எப்போதும் குறையாது. வீணாகும் பொருளிலிருந்து இன்னொரு பொருளை தயாரிக்கும்போது 5% வரி கட்ட வேண்டும். இது ஒன்றுதான் இதில் உள்ள ஒரு நெகட்டிவ் அம்சம். தொடர்ந்து நிறுவனங்களுடன் பேசி தரமான எரிபொருளை வழங்குவதே தொழில் வெற்றிக்கு முக்கியமானது.”

5 டிஷ்யூ பேப்பர்!

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இன்றைக்கு எல்லோரது எதிர்பார்ப்பு. இதனால் மட்டும்தான் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் நம்புகிறார்கள். மேலும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் நம் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கு டிஷ்யூ  பேப்பர் அவசியமாக உள்ளது. மேலும், ஹோட்டல், மருத்துவமனை, சுற்றுலா ஸ்தலங்கள், வீடுகள், நிறுவனங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. டிஷ்யூ பேப்பர் தொழிலின்  வளர்ச்சி, வருகிற 2016 ஆண்டுக்குள் சராசரியாக 4.9 சதவிகிதமாக இருக்கும்.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

தேவையான இயந்திரம்: பலவிதமான டிஷ்யூ பேப்பர்கள் சந்தையில் தேவைப்படுகிறது. எனவே, ஒவ்வொரு விதமான டிஷ்யூ பேப்பரைத் தயாரிக்க தனித்தனி மெஷின் உள்ளது. 27X27 செ.மீ அளவுள்ள டிஷ்யூ பேப்பர் தயாரிப்பதற்கு டூ கலர் பிரின்டிங் மெஷின், எம்போஸிங் மெஷின், ரோலர் ஆகியவை தேவை. இந்த எந்திரங்கள் கோவை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கிடைக்கிறது.

தொழில் வாய்ப்பு: ஹோட்டல், மருத்துவமனை, பியூட்டி பார்லர்கள், வீடுகள் ஆகிய இடங்களில் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வரிக்குப் பின் வருமானம்: 10%  கிடைக்கும்.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

‘‘நேரடி மார்க்கெட்... கூடுதல் லாபம்!’’

அன்பரசி நோபல், சென்னை.  கட் கிஃப்ட் பேப்பர்ஸ்.

அதிக வருமானம்... அற்புதமான எதிர்காலம்...

“கடந்த 15 வருடமாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன். டிஷ்யூ பேப்பரின் தேவை அதிகம் உள்ளதால், உற்பத்தியின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. அனைத்து வகையான டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் எந்திரம் வைத்திருந்தால் அதிக லாபம் பார்க்க முடியும். மேலும், நேரடி மார்க்கெட் செய்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். டிரேடர்களிடம் பேப்பரை விற்கும்போது மார்ஜின் குறைய வாய்ப்புள்ளது. டிஷ்யூ பேப்பரின் தேவைக்கேற்ப சரியான தரத்தில் பேப்பர் இருந்தால், வாடிக்கை யாளர்களை எளிதில் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

தொழில் துவங்கும் போதே பெரிய அளவில் யூனிட் போடுவது நல்லது. அப்போதுதான் உற்பத்தி செலவு குறையும். அதனால் குறைந்த விலையில் டிஷ்யூ பேப்பரை விற்க முடியும். அதிகப் போட்டி உள்ள தொழில். இதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.”

குறிப்பு: மேற்கூறிய அனைத்து தொழில்களுக்கும் என்இஇடி(New Entrepreneurship Cum Enterprise    Development Scheme (NEEDS)  என்ற திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்கும் மதிப்பில் 25% மானியம் கிடைக்கும்.

தகவல் உதவி: TANSTIA – FNF Service Centre

இரா.ரூபாவதி

படங்கள்: ப.சரவணகுமார், தே.தீட்ஷித், மு.குகன்,  டி.அசோக்குமார்.

அடுத்த கட்டுரைக்கு