Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... 5 வருடங்களில் வீடு வாங்க மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்... 5 வருடங்களில் வீடு வாங்க மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

{?}  30-40 லட்சம் ரூபாயில் ஒரு வீடு வாங்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.10,000 செலுத்தினால் ஐந்து வருடங்களில் வீடு வாங்க இயலுமா?

பண்டிதன், கோவை,

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ் வெல்த் அட்வைசர்ஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மியூச்சுவல் ஃபண்ட்... 5 வருடங்களில் வீடு வாங்க மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

‘‘நீங்கள் எஸ்ஐபி முறையில் மாதம் 10,000 ரூபாயை ஐந்து வருடத்துக்கு முதலீடு செய்து வந்தால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 18% வருமான அடிப்படையில் ரூ.9.4 லட்சம் கிடைக்கும். பத்து வருடம் முதலீட்டை தொடர்ந்தால் ரூ.31 லட்சம் கிடைக்கும்.  நீங்கள் ஐந்து வருடத்தில் வீடு வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் மாதம் 30,000 ரூபாயை முதலீடு செய்தால் சுமார் 29 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் இலக்கை நீட்டிப்பதா, இல்லை அதிகத் தொகையை முதலீடு செய்வதா என்பதை முடிவு செய்யுங்கள்.”

{?} எஸ்ஐபி முறையில் சுந்தரம் செலக்ட் மிட் கேப், சுந்தரம் ஸ்மைல் ஃபண்ட், ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ்,  ஹெச்டிஎஃப்சி டாப் 200, டிஎஸ்பி  டாப் 100, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், ஃப்ராங்க்ளின் இந்தியா ஹைகுரோத் கம்பெனீஸ், யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட், யூடிஐ லிக்விட் ஃபண்ட், மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட், எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட், எஸ்பிஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சீரிஸ் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். எந்த ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்?

சௌந்தர்ராஜன், சென்னை,

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

‘‘நீங்கள் எஸ்ஐபி முறையில் செய்வது மிகவும் சரியான ஒன்று. இதன் மூலம் பிரதானமாக ரிஸ்க்கை குறைக்கலாம். நீங்கள் எட்டுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் 13 வகையான ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள். இவ்வாறு செய்ய தேவையில்லை. உங்களின் தேவைக்கேற்ப உடனடித் தேவைக்கு லிக்விட் ஃபண்ட் (பிர்லா சன் லைஃப் கேஷ் மேனேஜர்) நீண்ட கால தேவைக்கேற்ப (10 வருடங்களுக்கு மேல் உள்ள கோல் என்றால்) சுந்தரம் செலக்ட் மிட் கேப், ஸ்மைல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். ஹெச்டிஎஃப்சி டாப் 200,எஸ்பிஐ பேங்கிங், ஃப்ராங்க்ளின் ஹைகுரோத் ஃபண்ட் ஆகியவற்றை தொடரலாம்.”

மியூச்சுவல் ஃபண்ட்... 5 வருடங்களில் வீடு வாங்க மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

{?} என் வயது 48.  ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேலும் முதலீடு செய்து மாத வருமானம் பெறும் வகையில், பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான கம்பெனியை கூறுங்களேன். ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

சுப்பிரமணியன், இராமநாதபுரம்,

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்

“அதிக ரிஸ்க் எடுக்க விரும்ப வில்லை என்றால் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான்கு லட்சம் ரூபாயை ஃபிக்ஸட் டெபாசிட்டிலும், மீதியிருக்கும் ஒரு லட்சம் ரூபாயை ஐசிஐசிஐ புரூ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும் முதலீடு செய்யுங்கள். ஈக்விட்டி மார்க்கெட்டில் முதலீடு செய்தால் ரிஸ்க் உள்ளது. அதே நேரத்தில் உங்களின் இலக்கை நிர்ணயித்து ஈக்விட்டியில் முதலீடு செய்யும்போது மார்க்கெட் சுழற்சியில் பணவீக்கத்தைத் தாண்டி வருமானத்தை ஈட்ட வாய்ப்பும் உள்ளது.”

{?} இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் என்ஆர்ஐ எஸ்பி கணக்கு 10 வருடங்களாக வைத்துள்ளேன். இரண்டு முறை 10.5% வட்டியில்  வீட்டுக் கடன் வாங்கி கட்டி முடித்துள்ளேன். மூன்றா வதாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தபோது கமர்ஷியல் வட்டி விகிதம் 15.5% என்கிறார்கள். ஆர்பிஐ விதிப்படி, ஒரு நபருக்கு இருமுறைதான் வீட்டுக் கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும் என்கிறார்கள். வேறு ஏதாவது வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்குமா ? என்ஆர்ஐ வீட்டுக் கடனுக்கும் ஆர்பிஐ விதி பொருந்துமா?

வேல்முருகன், நாகர் கோவில், ஆர்.கணேசன்,

உதவிப் பொது மேலாளர்(ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.

“பொதுவாக, வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் இருமுறை  மட்டுமே வீட்டு கடன்கள் வழக்கமான வட்டியில் வழங்கப்படும். மூன்றாவது முறை வீட்டுக் கடன் வாங்கும்போது வழக்கமான வட்டியைவிட அதிக வட்டி வாங்கப்படும். பல வங்கிகள் வழக்கமான வட்டியைவிட 0.5% கூடுதலாக வசூலிக்கும். இது வங்கிக்கு வங்கி மாறும். வாடிக்கையாளர்கள் மூன்றாவது வீட்டுக் கடனுக்கு தங்களுக்கு ஏற்ற வங்கி அல்லது நிதி நிறுவனங்களை அணுகலாம். ஏற்கெனவே இரண்டு வீட்டுக் கடன்களை வாங்கியிருப்பதை வெளிப்படையாகக் கூறிவிடுவது நல்லது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் எந்த விதிவிலக்கும் இல்லை.”

மியூச்சுவல் ஃபண்ட்... 5 வருடங்களில் வீடு வாங்க மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

{?} நான் பத்து மாதங்களுக்கு முன்பு கோல்டு இடிஎஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தேன். கொஞ்சம் வருமானம் கிடைத்தது. இப்போது இதிலிருந்து வெளியேற விரும்புகிறேன். கிடைத்த வருமானத்துக்கு  வரி உண்டா?

விவேக், சென்னை, 

ஜி.என். ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ், ஈரோடு

‘‘கோல்டு இடிஎஃப் பண்டுகளில் செய்த முதலீட்டை 36 மாதங்களுக்குள் திரும்பப் பெற்றால் அதில் கிடைக்கும் லாபத் தொகை குறுகிய கால மூலதன ஆதாயமாக (short term capital gains) கருதப்படும். அந்தத் தொகைக்கு பொருந்தக்கூடிய அதிகபட்ச விகித வரி செலுத்த நேரிடும்(Maximum Marginal Rate). பொதுவாக, இந்தியாவில் அதிகபட்ச வரி விகிதம் 30% ஆகும்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com