ஒரு யானை, நூறு எறும்புகள்!

‘ஒரு நிமிஷம்... உங்க பணம், நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சது... அதை நீங்க உங்க இஷ்டப்படி

எப்படி வேணும்னாலும் செலவழிக்கலாம். இல்லைன்னு சொல்லலை... ஆனா, ஒரே ஒரு வேண்டுகோள்...’

‘சொல்லுங்க... சொல்லுங்க. என்ன, பார்த்து செலவழி... பணம் இருக்குன்னுட்டு இப்போ செலவு பண்ணிட்டா, நாளைக்கு என்ன பண்ணுவே..? இதுதானே..?’

‘அதுவும்தான். இன்னொண்ணும்..’

‘அது என்ன இன்னொண்ணு..?’

‘செலவு பண்ணுங்க. உங்களுக்குத் தோணுனதை வாங்குங்க. ஆனா, வாங்கும்போதே, அது மத்தவங்களுக்கும் பயன்படற மாதிரி ஏன் வாங்கக் கூடாது..?’

‘மத்தவங்களுக்கும் பயன்படணுமா..? எனக்கு சட்டை வாங்கறேன்... வேட்டி, துண்டு வாங்கறேன்... படுக்கைத்துணி வாங்கறேன்... அதுல போய் எப்படி..?’

‘அதுலதான் சொல்றேன். எத்தனையோ பேருக்குப் பயன்படும். என்ன புரியலியா..?

மத்தவங்களுக்கும் பயன் வரணும்னு சொன்னா, இந்தப் பொருளை அவங்களும் பயன்படுத்தணும்னு அர்த்தம் இல்லை. அப்படி நினைச்சுக்கிட்டுதான் நீங்க குழம்பிட்டீங்க...’

‘பின்னே..? அதுக்கு, வேற என்ன அர்த்தமாம்..?’

‘நாம குடுக்குற பணம், யாருக்குப் போய்ச் சேருதுன்னும் பாருங்கன்னு சொல்றேன்.

இப்போ.., ஒரு பொருள் உற்பத்தி செய்யறதுக்கு, நூறு ரூபா ஆகுது. அதை நாம நூத்துப் பத்து ரூபா குடுத்து வாங்கறோம். அப்போ, யாருக்கு அதிக பலன் போய்ச் சேருது..?’

‘அதை உற்பத்தி செய்யறவங்களுக்கு...’

‘கரெக்ட்டு. இதுவே, ஒரு பொருள் உற்பத்தி செய்ய ஆயிரம் ரூவா ஆவுது. நாம அதை, பத்தாயிரம் குடுத்து வாங்குனா..?’

‘ஆங்... இடையில இருக் கறவங்க லாபம் பார்ப்பாங்க...’

‘அதுதான். இதை நான் வாணாங்கல. ஆனா, உழைச்சு உழைச்சு ஓடாத் தேய்ஞ்சு போனவங்க இருக்காங்க இல்லை..? நம்மப் போல இருக்கறவங்களே ஆதரிக்கலைன்னா, அவங்க எங்கே போவாங்க..?’

‘நம்ம வீடு நிறைய எத்தனை அழகுப் பொருட்களை அடுக்கி வச்சு இருக்கோம்..? இதுக்காக நாம எவ்வளவு செலவு பண்ணி இருக்கோம்..? இதையெல்லாம், கைத்தொழில் கடைகள்ல வாங்கி இருந்தா..? எத்தனை தொழிலாளருக்கு பலன் கிடைக்கும்..?’

அதே பொருள். இன்னமும் நல்ல தரத்துல, இன்னமும் குறைவான விலையில, அதே சந்தையிலேயே கிடைக்குதே... ஏன் நம்ம கண்ணுல படலை..? வெளிச்சம் இல்லை. விளம்பரம் இல்லை. அதனால நாமளும் போறது இல்லை.’

‘நல்ல துணிமணி, சேலை, வேட்டி, துண்டு, படுக்கை விரிப்பு, அவ்வளவு ஏன்..? சோப்பு, எண்ணெயில இருந்து, தேன், தைலம், வாசனைப் பொருள் மட்டும் இல்லை; கலைப் பொருட்கள் வரை அத்தனையும் கிடைக்குதே...’

சமுதாயத்தில் நல்ல பொறுப்பிலே இருக்கிற ஒரு பெரியவர். கொள்கை ரீதியாக, இறை நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்துக்குள் நுழைந் தால் மிகப் பெரிய நடராஜர் சிலை! வியப்பாக இருந்தது.

‘என்ன இது..? உங்க வீட்டுல இந்த சிலை..?’

‘நீங்க அதைக் கடவுளாப் பார்க்கறீங்க. அது உங்களுடைய நம்பிக்கை. நான் ஆனா, அதை கலையா பார்க்கறேன். இதுக்குப் பின்னால இருக்கற அந்தக் கலைஞனுடைய உழைப்பை, கற்பனைத்திறனை நான் பார்க்கிறேன்!’

‘எட்டாயிரம் ரூபாதான். வாங்கிட்டு வந்துட்டேன். ‘வெளி மார்க்கெட்டுல’ இதோட விலை இருபது ஆயிரத்துக்கு மேல இருக்கும். இதை நான் கைவினை ஞர்கள் சங்கம் நடத்துற கடையில வாங்கினேன். நூறோ, இரு நூறோ போக, மீதம், கைவினைஞர்களுக்குப் போகும். இந்த ஒரு ‘பீஸ்’ வாங்குனதுல, ஒரு குடும்பம் மொத்தமும் ஒரு மாசத்துக்கு பசியில்லாம சாப்பிடும்!’

இப்ப புரிகிறதா..? சந்தையில் இரண்டு விதமான ‘வியாபாரிகள்’ இருக்கிறார்கள். இருவருமே, நமது பொருளாதாரத்தின் முக்கிய ஆட்டக்காரர்கள்தாம். யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ நாம் வேறுபடுத்திப் பார்க்கத் தேவை இல்லை. ஆனால், நடைமுறையில் என்ன வாகிறது?

சந்தைப் போட்டியில் ‘தாக்கு பிடிக்க’ முடியாமல், தன்னுடைய தொழிலில் இருந்து படிப்படி யாகத் தம்மை விலக்கிக்கொள்ள வேண்டிய நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அவர் களுக்கு கைகொடுத்து தூக்கி நிறுத்துகிற கடமை எல்லாருக்கும் உண்டு. குறிப்பாய், 50:50 பிரிவினருக்கு இது தலையாயது. ஏன் இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறோம்?

பொதுவாக, கதர், கிராமத் தொழில் பொருட்கள் எல்லாம், ‘இல்லாதவர்கள்’ தேவைக் காகவே என்கிற தவறான கருத்து, பரவலாக இருக்கிறது.

ஆகவே இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ‘வசதிப்பட்டவர்கள்’ வசம் கூடுதலாகிறது.

அதுமட்டுமல்ல. கலைப் பொருட்களை வாங்குகிற அளவுக்குப் பொருளாதார வல்லமையும் 50:50 புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது.

கணினி, மின்னணுப் பொருட்கள் போன்றவை தவிர்த்து, அனேகமாக ஏனைய அனைத்துமே இந்த வகைக் கடைகளில் கிடைக்கின்றன.

மேலும், இவற்றில் பெரும் பாலானவை, அரசாங்கமே நேரடியாக நடத்துகிற விற்பனை மையங்கள்; அல்லது, கூட்டுறவுச் சங்கத்தினரால் நிர்வகிக்கப் படுபவை.

புதிதாக தொழில்முனையும் இளைஞர்கள், ஆதரவற்றோர், வறிய நிலையில் இருப்போர் வாழ வழி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த வகைக் கடைகள், மிகவும் தரமான பொருட்களை மிகவும் நியாய மான விலையில் விற்பனை செய்துகொண்டு இருக்கின்றன. நமக்கு வேண்டிய பொருட்களை இங்கு வாங்குவதால், நமக்கும் பயன்; ‘மற்றவர்களுக்கும்’ பயன்!

சரிதானே..?

நமக்கு வருகிற வருமானத்தில், ‘தானம்’ தந்தோ, இலவசமாக வாரி வழங்கியோ, யாரையும் நம்மால் வாழ வைக்க முடியாது. அது சரியான வழிமுறையும் இல்லை.

ஆனால், அவர்களின் தொழில் வலுவடைய, குறைந்த பட்சம் நலிவடையாமல் இருக்க நம்மால் உதவ முடியும். (அரசு வழங்குகிற சலுகைகள்/ இலவசங்கள் வேறு வகை.)

‘கடை விரித்தேன், கொள்வார் இல்லை’ என்கிற நிலை எவருக்குமே வரக் கூடாது. அதிலும், நம் மண் சார்ந்த, மரபு சார்ந்த தொழில் புரிபவர்களுக்கு, அத்தகைய அவல நிலை வர விடாமல் தடுப்பது, நம் ‘பைகளில்’, நம் ‘கைகளில்’தான் உள்ளது.

நமக்கு நன்கு பரிச்சயமான உதாரணம். ஒரு யானை தின்கிற ஒரு கவளத்தில் இருந்து கீழே சிந்துகிற பருக்கைகளில், பல நூறு எறும்புகளின் பசியாறும். (கவளம் - யானைக்குத் தரப்படுகிற உணவு உருண்டை)

இதுபோன்றே, நாம் வாங்குகிற பொருட்களின் உற்பத்திச் செலவு போக மீதம் உள்ள தொகையில் பல குடும்பங்கள், வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்.

உலகம் முழுவதும், செலவு மேலாண்மையில் சமூகப் பொறுப்புணர்வு என்கிற ‘சங்கதி’, அலட்சிய மனோ பாவத்துடன் பார்க்கப்படுகிறது என்பது உண்மை.

ஆனால், இந்தியாவைப் பொறுத்த மட்டில், இன்னமும் கூட நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை.

‘பாக்கெட்’ பாலை விடவும், வீட்டு வாசலில் மாடு கொண்டு வந்து, அப்போதே கறந்து தரப் படுகிற பால்தான் ‘ஒசத்தி’.

என்னதான் பெரிய கோடீஸ்வரன் ஆனாலும், பொது வாழ்க்கை என்று வந்து விட்டால், கதர் ஆடைக்குத்தான் ‘மவுசு.’

மண்பாண்டங்கள், கிளிஞ்சல் பொம்மைகள், தஞ்சைக் கலைப் பொருட்கள், கைத்தறிப் பட்டு என்று இன்றளவும் அந்தந்த மாநில, கைவினைப் பொருட்களுக்கு என்று தனியே சந்தை ‘மரியாதை’ இருக்கத்தான் செய்கிறது.

கவலை தரக்கூடிய ஒரே ஒரு உண்மை, இன்றைய இளைஞர் களுக்கு இப்பொருட்களின் ‘அருமை’ முழுமையாகத் தெரியவில்லை. இவர்களின் கைகளில்தாம், செலவுக்கான பணம் மிகுந்து கிடக்கிறது. ஆகவே, செலவு மேலாண்மையில் சமூகப் பொறுப்புணர்வு, இன்றியமையாதது ஆகிறது.

குடிசை, கிராமப்புறத் தொழில்கள், அவற்றின் மூலம் சந்தைக்கு வரும் கைவினைப் பொருட்கள், இவற்றின் விற்பனையால் ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள் பற்றியெல்லாம், இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்துதலும் செலவு மேலாண்மையில் அதி முக்கிய பணியாகும்.

சரி, இளைஞர்கள்... அவர்களிடம் இருக்கும் பணம் என்றெல்லாம் சொல்கிற போதே, இன்னொரு அம்சமும் கவனத்துக்கு வருகிறதா..?

கேளிக்கை!

(சேர்ப்போம்)