Published:Updated:

எஃப்எம்சி- செபி இணைப்பு: கமாடிட்டி சந்தைக்கு என்ன லாபம்?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

ற்போது நம் நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் நிதி சார்ந்த இரண்டு ஒழுங்குமுறை ஆணையங்களான எஃப்எம்சி மற்றும் செபியை இணைக்கும் நடவடிக்கைகளை நம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த திங்கள் அன்று துவக்கி வைத்தார். மேலும், இந்த இணைப்பின் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் மேம்படச் செய்யவும், எக்ஸ்சேஞ்ச் களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும், இதில் உள்ள பங்குதாரர்களுக்கும் ஒரு புதிய ஏற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

கடந்த 1953-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 60 வருட பழமை வாய்ந்த கமாடிட்டி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தி வந்தது எஃப்எம்சி (FORWARD MARKETS COMMISSION) அமைப்பு. இது, கடந்த 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 27 வருடமாக பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கவனித்தும், ஒழுங்குபடுத்தியும் வருகிற செபி (THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) அமைப்புடன் இணைக்கப்படும் என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2015-16)அறிவித்திருந்தார்.

எஃப்எம்சி- செபி இணைப்பு: கமாடிட்டி சந்தைக்கு என்ன லாபம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போதைய எக்ஸ்சேஞ்சுகள்!

எஃப்எம்சியின் கீழ் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த எஃப்எம்சியில் தேசிய அளவில் 3 எக்ஸ்சேஞ்சுகள் முறையே...

1) என்சிடிஇஎக்ஸ் (National Commodity and Derivative Exchange of India Ltd, மும்பை - NCDEX)

2) என்எம்சிஇ (National Multi Commodity Exchange, அகமதாபாத் - NMCE )

3) எம்சிஎக்ஸ் (Multi Commodity Exchange of India Ltd, மும்பை - MCX)  ஆகியனவும், பிராந்திய அளவில் ஆறு எக்ஸ்சேஞ்சுகளும் செயல்பட்டு வருகின்றன.

வர்த்தகமாகும் பொருட்கள்!

எஃப்எம்சியில் எண்ணெய் வித்துக்கள் / உணவு தானியங்கள்/  விலை உயர்ந்த உலோகங்கள்/ ஸ்பைஸஸ் என்று சொல்லக் கூடிய, நறுமணப் பொருட்கள்/ ஃபைபர்ஸ் அதாவது நார் சத்துப் பொருட்கள்/ மேலும் கொத்தவரை, சீரகம், ரப்பர், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் முதலான பொருட்களின் மீது முன்பேர வர்த்தகம் (ஃப்யூச்சர் டிரேடிங் ) நடைபெற்று வருகிறது.

ஆனால், சில சமயங்களில் இதில் வர்த்தகமாகும் பொருட்களின் விலைகள் அவ்வப்போது தாறுமாறாக ஏறுவதும், இறங்குவதுமாக இருப்பதுண்டு.

ஊக (ஸ்பெகுலேஷன்) அடிப்படையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அல்லது குறைக்கச்

எஃப்எம்சி- செபி இணைப்பு: கமாடிட்டி சந்தைக்கு என்ன லாபம்?

செய்வதும் நடைமுறையில் காணப்படுகிறது. முன்பேர வணிகத்தின் உண்மையான நோக்கம் ஹெட்ஜிங் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டது. ரொக்க வணிகத்தில் ஏற்படுகிற ரிஸ்க்கை குறைப்பதற்கு, அதாவது நஷ்டங்களைத் தவிர்ப்பதற்கு முன்பேர வர்த்தகம் ஒரு தடுப்பானாகச் செயல்படுகிறது.

அதிலிருந்து விலகி வேறு திசையில் செல்லும்போது, இவற்றைக் கட்டுப்படுத்த எஃப்எம்சிக்கு இருக்கிற அதிகாரம், ஆள் பலம், அலுவலகங்கள் மூலம்  ஒழுங்குபடுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. உதாரணத்துக்கு, என்எஸ்இஎல் (NSEL) பிரச்னை. இதில் பிரச்னையை கண்டுபிடிக்கவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டது. மேலும், விசாரணையில் எஃப்எம்சி களமிறங்கியபோது, பல பூதங்கள் வெளியாயின.

இந்த பிரச்னைக்குப் பிறகு கமாடிட்டி வர்த்தகத்தில் நம்பிக்கை குறைந்து போனது. முதலீட்டாளர்களுக்கு அச்ச உணர்வு மேலோங்கியது.

இணைப்பின் நோக்கம்!

எஃப்எம்சியானது நுகர்வோர்,உணவு மற்றும் விநியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இது 2013-ம் ஆண்டு நிதி அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது. 2003-ல் இணைப்பிற்கான முயற்சிகள் ஆரம்பித்து 2009-ல் ராஜன் கமிட்டி மூலமாக முழு வடிவம் பெற்று, நிதி சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை நிறுவனங்கள் அனைத்தையும், ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

நிதி அமைச்சகத்தின் கீழ் வருவதால், மிகுந்த கட்டுப்பாடுகளுடன், மேலும் சுய அதிகாரம் கொண்ட செபியின் ஆளுமையில் நன்றாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் அனுபவம் மிக்க செபி, கமாடிட்டி வர்த்தகத்தில் இருக்கும் ஊக வணிகத்தால் ஏற்படுகிற திடீர் ஏற்ற  இறக்கங்களைக் கட்டுப்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு, சந்தைப்பொருட்களின் விலையில் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை இந்த இணைப்பு ஏற்படுத்தியுள்ளது.

எஃப்எம்சி- செபி இணைப்பு: கமாடிட்டி சந்தைக்கு என்ன லாபம்?

‘‘வரும் காலத்தில் வங்கிகளும், அந்நிய முதலீட்டாளர்களும் கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட வழி வகுக்கப்படும்” என்று செபி சேர்மன் யூ.கே. சின்ஹா அறிவித்திருப்பதால், வரும் காலத்தில் கமாடிட்டி வர்த்தகம் முன்போல வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-14 ல் கமாடிட்டி வர்த்தகத்தின் அளவு ரூ.101 லட்சம் கோடியாக இருந்தது. இது என்எஸ்இஎல் பிரச்னையால் 2014-15 ல் ரூ.60 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது.

இணைப்புக்குப் பிறகு கமாடிட்டிக்கு என தனி பிரிவை செபி உருவாக்கி உள்ளது. இது உருவாக்கும் விதிமுறைகள், முதலீட்டாளர்களை பாதுகாக்கும் விதமாக இருக்கும் எனலாம்.

மத்திய அரசாங்கமும்,  செபியும் கமாடிட்டி வர்த்தகத்தில் புதிய நெறிமுறைகளைக் கொண்டு வந்து, எத்தகைய தவறும் நிகழாமல் தடுத்துவிடும் பட்சத்தில், இந்திய கமாடிட்டி வர்த்தகம், சர்வதேச முதலீடுகளை கணிசமாக ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சீனாவின் தேக்க நிலையால் சந்தைப் பொருட்களின் விலைகள் சர்வதேச அளவில் சரிந்துள்ளது. இந்த நிலையில் சிறு வர்த்தகர்கள் அனைத்து செய்திகளையும் உள்வாங்கிக்கொண்டு, வர்த்தகம் செய்வது நல்லது.