Published:Updated:

நாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?

நாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?

புத்தகத்தின் பெயர்: Risk Savvy: How To Make Good Decisions

ஆசிரியர்: Gerd Gigerenzer

பதிப்பாளர்: Penguin Books Ltd

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது கெர்ட் கிகெரென்செர் எழுதிய ‘ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?’  என்பதைச் சொல்லும் புத்தகத்தை.

அறிவு என்பதே பயத்துக்கான மருந்து என்ற கருத்துடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். அயர்லாந்தில் எரிமலையின் சாம்பல் பறந்து பிரச்னையாயிற்றே நினைவிருக்கிறதா? கொஞ்ச காலத்துக்கு முன்னால் சப்-ப்ரைம் கிரைஸிஸ் வந்ததே அது நினைவிருக்கிறதா? அட, சமீபத்தில் உலகையே உலுக்கிய தொற்று நோய்கள் சில வந்ததே, அதாவது நினை விருக்கிறதா? 

நாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?

எதுவும் நினைவில்லை! ஒரு பிரச்னையை நாம் மறக்க இன்னொன்று தேவைப்படுகிறது. நாம் அனைவருமே எப்போதாவது (எப்போதாவது என்ன அடிக்கடி என வைத்துக் கொள்வோமா?) ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்கிறோம். அப்புறம் அதை விட்டு வெளியே வர முயல்கிறோம்.

தனிநபர் என்றால் சரி. நாட்டையே பாதிக்கும் பிரச்னை என்றால் என்ன செய்கிறோம்? 

புதுப்புது பிரச்னைகள் வருகிறது. அதை எதிர்கொள்ள புதுப்புது டெக்னாலஜிகளை கண்டுபிடிக்கிறோம். புது சட்டங்களை கொண்டுவருகிறோம்.  அடுத்த முறை சப் –ப்ரைம் கிரைஸிஸ் வராமல் இருக்க ஏதாவது கடுமையான முயற்சிகள் எடுக்கிறோம். அதற்காக கடுமையான சட்டங்கள் இயற்றுகிறோம். திறமையான ஆலோசகர்களையும் நியமித்து வைக்கிறோம். 

தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பிக்க  எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கிறோம்? சோதனைகள் கடுமையாக நடக்கிறது. எங்கு சென்றாலும் ஃபுல் பாடி ஸ்கேனர்கள், தனிநபர் சுதந்திரம் என்பதை கூட நாம் விட்டுத் தர தயாராகிவிட்டோம். பாதுகாப்பாக இருக்கவேண்டும் அல்லவா?

இது போன்ற விஷயங்களில் நாம் மறந்து போவது ஒன்றே ஒன்றைத்தான். இதுபோன்ற  பல ரிஸ்க்குகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சில மனிதர் களும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதைத்தான்.  

அது ஏன் ஒரு சில மனிதர்கள் என்கிறீர்களா? சோம்பேறித் தனம் மனித இயல்பு என்பதா லேயே நாம் பல விஷயங்களில் அறிவுக்கூர்மையை மங்கவைத்துக் கொள்கிறோம் என்கிறார் ஆசிரியர். 

சோம்பேறித்தனத்துடன் கூடிய சுகபோக வாழ்க்கைவாழ நினைக்கும் எண்ணமே நம்மை ஸ்மார்ட்போனுக்கும், டிவி போன்ற விஷயங்களுக்கும் அடிமையாக்கிவிடுகிறது.  அதனாலேயே கார் ஓட்டும் போதும் பைக் ஓட்டும் போதும் செல்போனில் பேச முயற்சிக் கிறோம் என்கிறார் ஆசிரியர்.

வீணாகும் நேரமும் நாம் எடுக்கும் ரிஸ்க்கின் அளவும் தெரியாமல் நாம் காரியங்களில் இறங்குகிற முடிவினை எடுக்கிறோம்

உதாரணத்துக்கு,  அமெரிக்காவில் சொல்லப்படும் வானிலை அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி அதை மனிதர்கள் பலரும் எப்படி புரிந்துகொள்ள முயல்கின்றனர் என்று விளக்குகிறார் ஆசிரியர். 

சனிக்கிழமை அன்று மழை வருவதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்பு இருக்கிறது. ஞாயிறன்று மழை வருவதற்கு 50  சதவிகித வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த வார இறுதியில் மழை வருவதற்கு நூறு சதவிகித வாய்ப்பு இருக்கிறது என்பதைப் போன்றது என்கிறார் ஆசிரியர்.  சிரிப்பாய் வருகிறது இல்லையா?

நாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?

இதை கொஞ்சம் ஆராய்வோம். வானிலை ஆய்வு மையம் நாளை மழை வர 30 சதவிகித வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் பலரும் ஒரு நாளின் முப்பது சதவிகித நேரம் மழை வர வாய்ப்புள்ளது (24 மணிநேரம் x 30 சதவிகிதம் = 8 மணி நேரம்) என்று நினைக்கின்றனர் சிலர்.

இன்னும் சிலரோ அந்த மாகாணத்தில் 30 சதவிகித இடத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் அப்படியே பெய்தாலும் தாங்கள் இருக்கும் இடத்தில் பெய்யாது என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார் ஆசிரியர்.

இது யாருடைய பிரச்னை என்று  மக்கள் குழப்பிக்கொள் கிறார்களா என்றால் அதுதான் இல்லை. காரணம், நிபுணர்கள் வாய்ப்பினை தெளிவுபடுத்தும் வண்ணம் சொல்வதேயில்லை என்பதுதான் என்கிறார்.

என்னதான் டெக்னாலஜி அதிகரித்து இத்தனை சதவிகித வாய்ப்பு இருக்கிறது என்பதை தெளிவாக சொல்ல முடிந் தாலுமே இறுதியில் குழப்பமே மிஞ்சுகிறது இல்லையா?

இதனாலேயே நீங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதை நன்கு  தெரிந்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற சூழல்களில் நாம் நடந்து கொள்ளவேண்டிய விதம்தான் என்ன? இத்தனை சதவிகித வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால், எதில் எத்தனை சதவிகிதம் என்பதை தெளிவாகக் கேட்டுப் பழகுங்கள். 

மழை வருவதற்கான வாய்ப்பா? 24 மணி நேரத்தில் எத்தனை மணி நேரம்? மொத்த ஊரில் எவ்வளவு இடத்தில் என்பது  போன்ற தெளிவான கேள்விகளை கேட்டுப் பழகுங்கள் என்கிறார் ஆசிரியர்.

என்ன சார்? மக்களை என்ன அவ்வளவு சுலபத்தில் எடை போடுகிறீர்கள் என சண்டைக்கு வராதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், மக்கள் ஒன்றும் விவரமில்லாதவர்கள் அல்ல.  ரிஸ்க் குறித்து நம் கல்விமுறை ஒன்றையுமே சொல்லித் தருவதில்லை என்பதில்தான் பிரச்னையே என்கிறார் ஆசிரியர். எனவே, ரிஸ்க்கை பற்றி புரிந்துகொள்ள வேண்டும்  என்றால் என்ன செய்யவேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

நம் அனைவராலுமே ரிஸ்க்கை எப்படி கையாளுவது என்பதை தெரிந்து அதற்கேற்றாற் போல் நடந்துகொள்ளமுடியும்.

 பொதுவாக, இதில் ரிஸ்க் குறித்த நிபுணர்கள்,  பிரச்னையின் ஒரு அங்கமாக இருக்கிறார்களே தவிர, பிரச்னையை தீர்க்க உதவுபவர்களாக இருப்பதில்லை. அதிலும் ரிஸ்க் குறித்த சரியான புரிதல் இல்லாத நபருடைய கையில் அதிகாரம் கிடைத்தால் கேட்கவே வேண்டாம். மக்களை கலங்கடித்துவிடுவார்கள் இவர்கள் என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: ரிஸ்க்கை அறிந்து சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?

எப்போதுமே பிரச்னைகள் கடினமானதாக இருக்கும்போது நாம் தேடும் விடைகளும் கடினமாக இருக்கவேண்டும் என்ற நினைப்புடனே தேடு கிறோம். இதையும் முழுமையாக தவிர்க்கவேண்டும் என்கிறார் ஆசிரியர். 

இந்த மூன்று விஷயங்களையும் அடிப்படையாக புரிந்து கொண்டால் மட்டுமே ரிஸ்க்கை நம்மால் கையாள முடியும் என்கிறார் ஆசிரியர்.

அடுத்தபடியாக ஆசிரியர் சொல்வது, நிரந்தரம் மற்றும் நிச்சயம் என்று இந்த உலகில் ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தை.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொன்னதைப் போல, இந்த உலகில் மரணமும் வரிகளும் மட்டுமே நிரந்தரம் மற்றும் நிச்சயம் என்பதை நாம்  புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

ஒரு விஷயத்தில் என்ன ரிஸ்க் இருக்கிறது என்பதே தெரியாத பட்சத்திலும் முழுக்க முழுக்க ஐயப்பாடுகள் நிலவும் போதும் புள்ளிவிவரங்களையும் பயன்படுத்தி அது குறித்த முடிவுகளை எடுக்கலாம் என்று சொல்கிறார்  ஆசிரியர்.

அதே சமயத்தில் ஒரு விஷயத்தில் குறிப்பிட்ட சில விஷயங்களே புரியாத ரிஸ்க்காக இருக்கும்போது ஓரளவு உள்ளுணர்வை வைத்தே முடிவுகளை எடுக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

இந்த உலகில்  மகிழ்ச்சியுடன் வாழ மூன்றே பிரிவுகளில் இருக்கும் ரிஸ்க்குகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று, உடல்நலம் குறித்த ரிஸ்க்குகள். இரண்டாவது, பண நலம் குறித்த ரிஸ்க்குகள். மூன்றாவது, டிஜிட்டல் உலகில் இருக்கும் ரிஸ்க்குகள்.

இந்த மூன்றையும் கையாள ஸ்டாட்டிஸ்டிக்கல்  திங்கிங் (புள்ளியல் சார்ந்த எண்ண ஓட்டம்), உள்ளுணர்வு மற்றும் ரிஸ்க் குறித்த மனிதர்களின் சைக்காலஜி என்ற மூன்று விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் ஆசிரியர்.

 இவை குறித்து விலாவாரியாக உதாரணங்களுடன் விளக்கங் களை இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார்.

ரிஸ்க் எடுக்க யோசிப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது எனலாம்.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)