Published:Updated:

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 15

பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth

பிரீமியம் ஸ்டோரி

முதலீட்டு லாபத்தில் வரிகள் மற்றும் கட்டணங்கள் (Taxes and Fees) முக்கிய இடத்தை

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 15

பிடித்திருக்கின்றன. லாபத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு சட்டத்துக்கு உட்பட்டு குறைவாக ஒரு நிறுவனம் அல்லது ஒரு முதலீட்டாளர் வரி கட்டுகிறாரோ, அந்த அளவுக்கு லாபம் அதிகரிக்கும். அதிகமாக சொத்து சேர்த்த நபர்கள் அல்லது நிறுவனங்கள் வரி விஷயத்தில் விழிப்பு உணர்வுடன் இருப்பதை காணலாம்.

முதலில் வரிகள் ஏற்படுத்தும்  பாதிப்பை பார்ப்போம்.

நீங்கள் 30 சதவிகித வருமான வரி வரம்பில் இருந்து, வரிக்கு பிந்தைய நிலையில் ரூ. 1 லட்சம் மிச்சப்படுத்த திட்டமிட்டால், வரிக்கு முந்தைய நிலையில்       ரூ.1,42,857 சம்பாதித்து இருக்க வேண்டும். அதாவது, 42.8% அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.

நீண்ட காலத்தில் வரி என்ன பாதிப்பை ஏற்படுத்து கிறது என்பதைப் பார்ப்போம்.

வருமானத்தில் வரிகளின் விளைவு என்கிற அட்டவணையின் படி பார்த்தால், ரூ. 1 லட்சம் முதலீடு செய்து, அதற்கு 10% வருமானம் கிடைத்து, வரி எதுவும் இல்லை என்றால் 40 வருடத்தில் கிடைக்கும் தொகை 45,25,926 ரூபாயாக இருக்கும். இதுவே வருமானத்துக்கு 30% வரி கட்டினால், கையில் கிடைக்கும் தொகை ரூ. 14,97,446 ஆகும். வரியை தவிர்க்கும்பட்சத்தில், நீங்கள் மூன்று மடங்கு பணக்காரர். நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது இந்த வரி வித்தியாசம் அதிகமாக இருப்பதை அட்டவணையி லிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

வருமான வரியைக் குறைக்க பல்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு வரி எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 15

வழக்கமாக, நீண்ட கால முதலீட்டை அரசுகள் ஊக்குவிக் கின்றன. அப்படி நீண்ட கால முதலீட்டை மேற்கொள்பவர் களுக்கு அதிகமாக வரிச் சலுகையும் அளிக்கப்படுகிறது. இந்தியாவில், பங்குகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் நீண்ட கால மூலதன ஆதாய வரி எதுவும் கிடையாது.

ஒருவர் 30% வரி வரம்பில் இருக்கிறார் என்று எடுத்துக் கொண்டால்...

1. ஒருவர் நீண்ட கால முதலீட்டைத் தேர்ந்தெடுத்து, பங்குகளில் முதலீடு செய்திருக் கிறார். நீண்ட காலத்தில் அவர் வருமான வரி எதுவும் கட்டத் தேவையில்லை என்பதால் விரைவிலேயே செல்வந்தராகி விடுவார்.

ஃபிக்ஸட் டெபாசிட் ஓராண்டில் 9% வருமானம் தருகிற நிலையில், பங்குகள் 7% வருமானம் தந்தாலே, பங்கு முதலீடு மிகவும் கவர்ச்சிகர மானதாக இருக்கும். காரணம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.  ஃபிக்ஸட் டெபாசிட்டில் 9% வட்டி கிடைத்தாலும், வரிக்கு பிறகு கையில் கிடைக்கும் வருமானம் 6.3 சதவிகிதமாக  குறைந்து விடும். அப்போது பங்குச் சந்தை தந்த 7 சதவிகித வருமானம் லாபகரமாக இருக்கும். மேலும், பங்கு முதலீடு மூலம் கிடைக்கும் டிவிடெண்ட்டுக்கும் வரி கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. நீண்ட காலத்தில் பவர் ஆஃப் காம்பவுண்டிங் மூலம் பங்கு முதலீடு மிகவும் அதிகமாக பெருகி இருக்கும்.

2. ஒருவர் பங்கு வர்த்தகத்தில் (ஒரு ஆண்டுக்குள் அடிக்கடி பங்குகளை வாங்கி / விற்பது), ஈடுபட்டு வருகிறார். அவர் ரூ. 1,42,857 சம்பாதிக்கும்பட்சத்தில் குறுகிய கால மூலதன ஆதாய வரி கட்டியபிறகு 1,00,000 ரூபாய்தான் அவரிடம் இருக்கும்.

அதேநேரத்தில், அவர் முதலீட்டாளராக இருக்கும் பட்சத்தில், (பங்குகளை ஓராண்டுக்கு மேல் வைத்திருப் பவர்), அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கைவசம் இருக்க வேண்டும் என்றால், ரூ.1 லட்சம் சம்பாதித்தால் போதும்.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 15

மேலே இதுவரைக்கும் நாம் பார்த்ததிலிருந்து, உங்களிடம் பணம் இருந்து அதனை நீண்ட காலத்தில் வரிச் சுமை இல்லாமல் அதிக லாபமடைய பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். டிவிடெண்ட்டுகள் மற்றும் மூலதன ஆதாயங்கள், செல்வம் விரைவாக சேர உதவும்.

நாம் வரியை தனியாக கட்டு வதால், அதன் பாதிப்பை அறிகிறோம். அதேநேரத்தில், கட்டணங்கள் முதலீட்டு தொகையிலிருந்து தானாக கழிக்கப்படுவதால், குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முதலீட்டு தொகையிலிருந்தே கட்டணம் எடுக்கப்படுவதால் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இந்தக் கட்டணம் நம் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். காரணம், இந்தக் கட்டணம் முதலீடு செய்யும் தொகையில் 1.5 முதல் 3% ஆக இருக்கிறது.

மேலே கூறப்பட்ட உதாரணத்தில், முதலீட்டுக் கட்டணம் 3%. முதலீடு செய்பவரின் வருமான வரம்பு 30% என வைத்துக்கொள்வோம்.

ஒருவர் ரூ. 1 லட்சம் முதலீடு செய்கிறார். இந்த முதலீடு 40 ஆண்டுகளுக்கானது. ஆண்டுக்கு வருமானம் 10% கிடைக்கிறது. முதலீட்டுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது எனில்,  அவருக்கு மொத்தம் கிடைப்பது 45,25,926 ரூபாய். இதுவே முதலீட்டுக்கான கட்டணம் 3% என்றால், அவருக்கு கிடைப்பது 13,38,372 ரூபாய். இது 30 % வரிக்கு பிந்தைய வருமானமான 14,97,446 ரூபாயைவிட குறைவு என்பதை கவனத்தில் கொள்ளவும். கட்டணத்தை தவிர்க்கும் பட்சத்தில் நீங்கள் 3.3 மடங்கு அதிக பணக்காரராக இருப்பீர்கள்.

அட்டவணை விவரப்படி (பார்க்க, அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை) குறைவான கட்டணம் இருக்கும்பட்சத்தில் முதலீட்டாளருக்கு அதிக வருமானம் கிடைத்திருப்பதை பார்க்கலாம்.         

மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுக்கு ஆண்டு வருமானம் தந்து வருவதாக நாம் வைத்துக் கொள்வோம். ஆனால், கட்டணம் மூலம் வருமானம் வெகுவாக குறைந்திருக்கிறது. இழப்பு ஏற்படும்போது, மூலதனம் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதாவது, வருமானத்துக்கான வாய்ப்பு குறைகிறது.

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 15

வரிகள் என்பது லாபத்தில் ஒரு பகுதியாக செலுத்தப் படுகிறது. கட்டணங்கள், மூலதனத்தில் ஒரு பகுதியாக கழிக்கப்படுகிறது.

பயிர் நன்றாக விளைந்தால், அதன் ஒருபகுதியாக வரிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பயிர் நன்றாக விளையவில்லை எனில், கட்டணம் என்பது விவசாயிகளின் விதைகளி லிருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறது. இது, சாகுபடிக்கான விதை அளவை குறைத்து விடுகிறது. அதாவது, பயிர் விளைச்சல் தானாக குறைந்துவிடுகிறது.

துணிச்சலான மற்றும் புத்திசாலி முதலீட்டாளர்கள், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்த ஃபண்டுகளில்  கட்டணம் சுமார் 0.5 சதவிகிதமாக இருக்கும். இந்த இண்டெக்ஸ் ஃபண்டுகள், இண்டெக்ஸ் அளவுக்கு வருமானத்தைக் கொடுக்கும்.

நீண்ட காலத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடு சுமார் 15% வருமானத்தை தந்திருக்கிறது. 3%

பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 15

கட்டணம் வசூலிக்கப்படும் ஒரு ஃபண்டின் வருமானம் இண்டெக்ஸைவிட  30 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது, இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர் 15% வருமானம் பெறுகிறார் எனில், 3% கட்டணம் வசூலிக்கும் ஃபண்ட் சுமார் 19% வருமானம் தர வேண்டும்.

நீண்ட காலத்தில் பங்குச் சந்தையை விட அதிக வருமானம் தொடர்ந்து பெறுவது என்பது மிகவும் கடினம். எனவே, முதலீட்டாளர்கள் நிஃப்டி பீஸ் போன்ற இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

முதலீட்டுக்கான கட்டணம் மற்றும் வருமானம் மீதான வரியைக் கணக்கிட்டு முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்பதை முதலீட்டாளர்கள் மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.

• புத்திசாலி முதலீட்டாளர் கள், கட்டணத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், அதிக வருமானம் தருகின்ற திட்டங்களை தேர்வு செய்வார்கள்.

• அவர்கள் வரி அதிகமாக கட்டுவதை தவிர்த்து, அல்லது வரியைக் குறைத்து முதலீட்டை லாபகரமாக மாற்றுவார்கள்.

தொகுப்பு: சி.சரவணன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு