யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்களேன்... ‘காலையில எழுந்ததுல இருந்து, ஒரே கடன் தொல்லை. தாங்க முடியலை. கொஞ்ச நாளைக்கு தலை மறைவா எங்கேயாவது ஓடிப் போயிர லாமான்னு இருக்கு..’

எல்லாரும் என்ன சொல்லுவாங்க. ‘ஊரு முழுக்க கடன் வாங்கிட்டு தவிக்கிறாரு...’ அதுதான் இல்லை. இந்தக் கடன் தொல்லை, அதற்கு அப்படியே நேரெதிர்.

‘உனக்கு என்னப்பா, நல்லா செட்டில் ஆயிட்டே... ரெண்டு பேரும் நிறைய சம்பாதிக்கறீங்க.. அப்படியே எனக்கும் ஏதாவது குடுத்து உதவலாம் இல்லை..?’

‘நம்மகூட படிச்ச பாலாஜிக்கு நாளைக்குக் கல்யாணம்டா... ஊர்லதான் வச்சுருக்கான்... ஒரு ஆயிரம் ரூபா இருந்தா குடேன்... அப்புறமா தர்றேன்...’

நம்மிடம் பணம் சேரச் சேர, நம் பொருளாதார நிலை உயர உயர, நம்மிடம் இனாம் கேட்டு, கடன் கேட்டு (இரண்டும் ஒன்றுதான்!) உறவினர்களும் அதைவிட நண்பர்களும் வரத்தான் செய்வார்கள்.

இல்லாதவர்களுக்கு உதவுவது என்பது வேறு. அது மனிதாபிமானம். ஆனால், எப்போதும் கடன் கேட்டு நச்சரிப்பவர்கள் வேறு ரகம். எல்லாரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியதுதான்.

தவறில்லை. அது மிகவும் நல்ல பண்பும்கூட. எந்த அளவு ‘இடம் தரலாம்..?’ என்பதிலே வரையறை வேண்டும்.

‘அஞ்சு வருஷமா சம்பாதிக்கிறதா சொல்றே... ‘கையில’ ஒரு.. பத்தாயிரம் கூட இல்லைங்கறியே... வாங்குன பணத்தை எல்லாம் என்னதான் பண்ணே...?’

‘வீட்டுக்கும் பணம் அனுப்பறது இல்லை. அதும் இல்லாம வர்றப்போ, போறப்போ அப்பா கிட்டயே பணம் வாங்கிட்டு வேற போறே... வேலைக்குப் போறியா இல்லையா..? உனக்கு சம்பளம் எவ்வளவுதான் வருது..? ஒண்ணுமே புரியலையே...’

‘எனக்கு தெரிஞ்சு உனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை... அப்புறம் ஏன் பணத் தட்டுப்பாடு வருது..?’

மேலே கேட்ட அத்தனை கேள்வி களுக்கும் சொல்ல முடியாத பதில் - ‘கேட்டா குடுக்குறதுக்கு நீங்க இருக்கீங்கல்ல, அதனால்தான்!'.

இனி நாம் காண இருப்பது, முழுக்க முழுக்க செலவு மேலாண்மை தொடர் பானது மட்டுமே. அன்பு, கருணை, தர்மம், நியாயம் என இவற்றுக்கு எல்லாம் எதிராக இருக்கிறதே என்று கலவரம் கொள்ள வேண்டாம்.

நல்ல உள்ளத்தோடு, அப்பாவியாக ஒருவன் இருந்து, அவன் கையில் பணப் புழக்கமும் இருந்து விட்டால், அவ்வளவு தான். அவனது இரக்கம், பல சுரண்டல்களுக்கு வழிவகுத்துவிடும்.

கண்ணீரும் கம்பலையுமாக கையேந்தி வருவோரின் எண்ணிக்கை சொல்லி மாளாது. எப்படியாவது ‘மோப்பம்’ பிடித்துக் கொண்டுவந்து ஒட்டிக் கொள்வார்கள்.

பணம் வாங்குகிறவர்கள் மிக புத்திசாலிகள். அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். எப்போது கேட்கலாம், போனில் கேட்கலாமா, நேரில் கேட்கலாமா, எவ்வளவு பணத்துக்கு என்ன காரணம் சொன்னால் எடுபடும் என்று யோசித்து, சிரிக்க வைத்து, நெகிழ வைத்து, வாதம் செய்து தான் திட்டமிட்ட படி, எப்படியும் பணத்தைக் ‘கறந்து’ விடுவார்கள்.

எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். இல்லையேல், மனவருத்தம் கொள்ள நேரும். அப்படியென்றால்..? யாருக்கும் உதவவே கூடாதா..? ஊஹூம். அப்படிச் சொல்வோமா..?

‘தானாக’ நம் காதில் வந்து விழுகிற கோரிக்கைகள், நமக்குத் தெரிந்து நெருக்கடியில் இருப்பவர்கள், முன்னர் நமக்கு நல்லது செய்து, நாம் நன்றிக் கடன் பட்டு இருப்பவர்கள், நமது குடும்ப, சமூகக் கடமை (social obligation) என்கிற வட்டத்துக்குள் வருபவர்கள்.. (ஆசிரியரின் மகன்/மகள் போன்றோர்)

இவர்களுக்கெல்லாம் கட்டாயம் உதவத்தான் வேண்டும். ஆனால், கடன் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டு இருப்பவர்களை (habitual borrowers) ஊக்குவிக்க வேண்டாம். (வாடிக்கையா..? அதையே தொழிலாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்!)

வருமானத்தின் ஒரு பகுதியை, தானமாகத் தருவதை நாம் வாழ்க்கை நெறியாகக் கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட தொகைக்குள், தகுதியான வர்களுக்கு, மனமுவந்து உதவி செய்ய லாம். அதற்கு மேல்..? வேண்டாமே...

‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’; ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’; ‘தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்’; ‘தக்கார்க்கு ஈக’ என்பவை யெல்லாம், மனித நேயத்துக்கு எதிரான வாசகங்கள் அன்று. மாறாக, செலவு மேலாண்மையின் முக்கிய விதிமுறைகள்.

ஒரு முக்கிய குறிப்பு: தாய், தந்தை, உடன் பிறந்தோருக்கு உதவுவதில், மேற்சொன்ன எந்த விதிமுறையும் குறுக்கே வராது. அது, நமக்கு நாமே தந்து கொள்வது.

கடன், வாங்குவதும் இல்லை; தருவதும் இல்லை என்று சிலர் சொல்கிற தத்துவம், செலவு மேலாண்மையைப் பொறுத்தமட்டில், நூற்றுக்கு நூறு சரி.

பல சமயங்களில் இல்லை என்று சொல்ல முடியாமல், கடன் தந்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு நாம் தள்ளப்படுகிறோம். அதுபோன்ற சமயங்களில் என்ன செய்வது?

சில யோசனைகள்:

1. திருப்பித் தராவிட்டாலும் பரவாயில்லை (அதுதான் நடக்கப் போகிறது) என்கிற அளவில் எவ்வளவு தர முடியுமோ, அவ்வளவு மட்டும் தந்து, நிறுத்திக் கொள்ளலாம்.

2. எந்தச் செலவுக்காகக் கேட்கிறாரோ, அந்தச் செலவை நாமே செய்துவிடுவது. பள்ளிக் கட்டணம் என்றால், பள்ளியின் பெயரிலேயே காசோலை தருவது. இதன் மூலம், ‘நல்ல காரியத்துக்கு’ உதவினோம் என்கிற மனநிறைவாவது கிட்டும்.

3. கடன் தொகை, சில நூறுகளைத் தாண்டினால், குறைந்தபட்சம், முன்தேதியிட்ட காசோலைகளை வாங்கி வைத்துக்கொண்டு தரவும்.

4. பெரிய தொகை என்றால், தக்க ஆவணம் தயார் செய்து, முறையாக கையொப்பம் பெற்று, பிறகு தரவும். அதுவும், ரொக்கமாகத் தரவே வேண்டாம். காசோலை மட்டுமே சரியான வழிமுறை.

5. எத்தனை நாட்களில் கடன் திரும்பி வரும்; மற்றும் கடன் பெறுபவரின் நம்பகத்தன்மை, கடனைத் திருப்பிச் செலுத்த ‘வல்லமை’ ஆகியவற்றைப் பரிசீலித்து, பிறகு கடன் தரவும்.

6. ‘வேண்டாம்’ என்று மூளையின் ஒரு மூலையில் தோன்றினாலும், கடன் தராதீர்கள்.

7. கடனைத் திரும்பப் பெறுவதற்காக, ‘பின்னாலேயே’ அலைய வேண்டி வரலாம். அதனால், நமது நேரம் செலவாகாத படிக்கு, அவரைச் சந்திக்கக் கூடியதாக இருந்தால் நல்லது. உதாரணத்துக்கு, நம் அலுவலகத்தில் நம்முடனே பணி செய்வோருக்குத் தரலாம். நம்முடன் பள்ளியில் படித்த, இப்போது வேறு ஏதோ ஒரு ஊரில் வசிப்பவன் என்றால், சற்றே யோசிக்கத்தான் வேண்டும்.

8. பிறரின் கடனுக்கு உத்தரவாதம் தராதீர்கள். யாரோ தருகிறார், யாரோ வாங்குகிறார்... ஒரு தாள்ல ஒரே ஒரு கையெழுத்துதானே... என்ன குடியா முழுகிவிடப் போகிறது..? என்கிற அறியாமை, நம் நாட்டில் பரவலாக இருக்கிறது. கடன் உத்தரவாதப் பத்திரம் என்பது, நிலத்துக்குள் புதைந்து கிடக்கும் கண்ணி வெடி போன்றது. ‘ஒதுங்கி’ சென்று விடுங்கள்.

9. சிலரின் எளிமையும் நேர்மையும் நமக்கு மிகவும் பிடித்து இருக்கும். அத்தகைய ஒருவர், நெருக்கடியில் இருக்கிறார் என்று தெரிந்தால், ஓடோடிச் சென்று உதவுங்கள்.

10. கடன் தந்துவிட்ட பிறகு, ‘தவிர்த்து இருக்கலாமே..’ என்கிற சிந்தனையும், ‘ஏமாந்து விட்டோமே... திரும்ப வராமலே போய் விடுமோ..?’ என்கிற கவலையும் நமது சுமூகமான வாழ்க்கைச் சூழலை பாதிக்கவிடக் கூடாது. ‘நண்பனுக்காக செய்தேன்..’ ‘உறவினனுக்குத்தானே தந்தேன்..’ என்று மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டு, இயல்பு வாழ்க்கையைத் தொடரவும்.

நாம் வாங்குகிற கடனைவிடவும், நாம் கொடுத்த கடன்தான், பல சமயங்களில் நம்மைத் தூங்க விடாமல் செய்கிறது.

ஆகவே, கணவன்/ மனைவியையோ, உடன் பணி புரிபவரையோ.. யாரையாவது கலந்து ஆலோசித்து, கவனத்துடன் செயல்படுதல் மிக முக்கியம்.

இனி, மூத்தோர், அதுதாங்க முதியோர், கடைப்பிடிக்க வேண்டிய நிதி முறைகள்...

(சேர்ப்போம்)

பிசினஸ் ஆலோசகராக மாறிய ஜாக் மா!

அலிபாபா நிறுவனத்தை தொடங்கி மிகப்பெரும் வெற்றியை அடைந்த ஜாக் மா பிசினஸ் ஆலோசகராக மாறியிருக்கிறார். அதுவும் இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு பிசினஸ் தொடர்பான ஆலோசனைகள் சொல்வதற்கான ஆலோசகராக அவர் மாறியிருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அலிபாபா.காம் மூலம் சீன சந்தையை எப்படி அணுகலாம் என்பது பற்றி ஜாக் மா ஆலோசனை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பிரதமரின் இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது இங்கிலாந்து அரசாங்கம்.