நம் கையே நமக்கு உதவி!

நிகழ்ச்சிகளில் சந்திக்கிற உங்கள் பழைய நண்பரின் செலவை நீங்கள் ஏற்றுக்கொள்ள

வேண்டியதில்லை!

‘நாளைக்கு, முருகேசனுடைய பேரனுக்குக் கல்யாணம். நம்ம வீட்டுல எந்த ஒரு விசேஷம்னாலும் தவறாம கலந்துக்குவான். அதனால நான் போயே ஆவணும்.’

‘சரிதான்.. நீங்க போனா கட்டாயம் சந்தோஷப்படுவாரு. ஆனா.., நம்ம நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... ஒரு கல்யாணம் காட்சின்னா சும்மாவே போயிட்டு வந்துர முடியுமா..? போனதுக்கு, எதாவது செய்யணும் இல்லையா? மேற்கொண்டு பஸ், ஆட்டோ செலவு வேற. எப்படியும் 500 ரூபா ஆயிரும். இப்போ இது தேவையா? ஒரு வாரம், பத்து நாள் கழிச்சு, போன் பண்ணி பேசுங்க... நேரேகூட, போயிட்டு வாங்க. அவரும் ரிடையர் ஆயிட்டாரு இல்ல? புரிஞ்சுப்பாரு...’

பிரச்னை என்னவென்று புரிந்திருக்குமே!

‘ஓய்வுக்காலத்தில்’, ஏற்படுகிற தர்மசங்கடங்களில் முதல் இடம் பிடிப்பது, ‘விசேஷங்களுக்கு’ செல்வதால் ஏற்படும் செலவுதான். யார் அழைத்தா லும், தட்டாமல் சென்று கலந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நல்லதுதான். பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்கிற எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட மனம் ஒப்பாதுதான். தாம் நல்ல ‘திடகாத்திரமாய்’ இருப்பதைத் தமக்குத் தாமே உறுதி செய்துகொள்ளவும், மூத்த குடிமக்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

விரும்பியோ விரும்பாமலோ, தன் வயது உடையவரின் உடல்நலத்துடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து மனம் மகிழ்ச்சி கொள்கிறது. இந்த ‘புதுப்பித்தல்’ பணி, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த ஒப்பீடுதான், துல்லியமான குறியீடு (Indicator); இந்த புதுப்பித்தல்தான், சரியான வலுவூட்டி (Energiser).

ஆகவே, ஓய்வு பெற்றோர், தாம் அழைக்கப்படும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதுதான் ஆரோக்கியம். செலவு..?

சில விட்டுக் கொடுத்தல்கள் தேவை.

1.‘மொய்’ கொடுத்தே தீருவேன், இல்லையேல் அது கௌரவக் குறைச்சல் என்கிற (தவறான) எண்ணத்தைக் கைவிட வேண்டும். மூத்தோரின் வருகையும் அவர்களின் வாழ்த்துகளும், ‘மொய்’ பணத்தைவிடவும் மிகவும் மதிப்புமிக்கது என்பது அழைப்பாளர் களுக்கும் தெரியும்.

2. பயணச் செலவுக்கே அதிகம் செலவாகுமா..? கலந்துகொள்வதைப் பற்றி சிந்திக்கக்கூட வேண்டாம். உடல்நலத்துக்கும் அதுதான் நல்லது.

3. செலவைக் கணக்கிட்டு, வசதிக் குறைவற்ற போக்குவரத்தைத் தேர்வு செய்ய வேண்டாம். அதாவது, ஆட்டோவில் மட்டுமே செல்ல முடிகிற இடத்துக்கு, பேருந்தில் சென்று, நீண்ட தூரம் நடந்துசெல்வது நல்லதல்ல. காலை, மாலை நேரங்களில் மேற்கொள் கிற நடைப்பயிற்சி வேறு; ஒரு நிகழ்ச்சிக்கு, குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்து சென்று சேர்வது என்பது வேறு.

4. நிகழ்ச்சியில் சந்திக்கிற பழைய நண்பரின் செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். (அவருக்காக, நீங்கள் ‘கால் டாக்சி’ பிடித்து, அவரை வழியில் ‘ட்ராப்’ செய்வது)

5. நிகழ்ச்சியில் சந்திக்கிற எவருடனும், உங்களுடைய நிதி நிலைமை குறித்து விவாதிக்க வேண்டாம். நிகழ்ச்சிகளுக்கு செல்வது மட்டும்தானா? வேறு பிரச்னைகளே இல்லையா? இருக்கின்றன. உடல் நலம், உள நலம், சின்னச் சின்ன ஆசைகள், பாசம், தன்மானம் ஆகியன பிற பிரச்னைகள்.

மருத்துவ செலவுகளில் கணக்குப் பார்க்க வேண்டாம். அரசுத் துறைகளில் பணிபுரிந்தோர் அவர்களுக்கான (CGHS) மருத்துவமனை அட்டைகளை, ‘பத்திரமாக’ வைத்துக்கொள்ளவும். சிறிய அளவிலான உடல்நலக் குறைவாக இருந்தாலும், மேற்சொன்ன அட்டை மூலமாக சிகிச்சை/ மருந்துகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது. காரணம் தெரிந்ததுதான். நமது மருத்துவ ‘வரலாறு’ (Medical History) பராமரிக்கப்படும்.

முன்னர் பணிபுரிந்த நிறுவனங்கள் மூலம் பெற்ற அல்லது தாமாக எடுத்துக் கொண்ட, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காப்பீட்டுத் திட்ட பலன்களைப் பெறுவதில் உள்ள சிக்கலான நடைமுறைகள் (Cumbersome Procedures) காரணமாக பிற மருத்துவமனைகளுக்குப் போவதை, தவிர்த்தே ஆகவேண்டும். இந்த நடைமுறைகளில் நன்கு பரிச்சயம் ஆனவர்களில் யாரையேனும் அணுகி, ஆலோசனை பெறலாம். உங்களுக்கும், உங்களைப் போன்று உள்ள பிறருக்கும், அது உதவிகரமாக இருக்கும்.

‘நம்பிக்கையான’ மருத்துவர், நன்கு பரிச்சயமான அல்லது அருகில் உள்ள ‘கிளினிக்’ ஆகிய காரணங்களால் பிற இடங்களுக்குச் செல்வதில் தவறு இல்லை. ‘சமாளிக்க முடிகிற’ அளவுக்குள் இருக்கிறவரைக்கும், எந்த பிரச்னையும் இல்லை.

அடுத்து, ‘உள நலம்’. கோயிலுக்குச் செல்வது, பத்திரிகைகள் (சொந்தமாக வாங்கி) படிப்பது, அவ்வப்போது நண்பர்கள், உறவினர்களை (குறிப்பாக, பேரன், பேத்திகளை) பார்க்கச் சென்று வருவது போன்றவை உள நலனுக்கு மிகவும் அவசியமானது. இதில் எதுவுமே, ‘வீண்’ செலவு அல்ல.

மாறாக, சிக்கனம் என்கிற பெயரில் இவற்றில் எது ஒன்றைக் குறைத்தாலும் அது, தேவையற்ற மன உளைச்சலுக்கு வழி வகுக்கும். ஆகவே, இவற்றில் ‘பட்ஜெட்’ பார்க்க வேண்டாமே!

சின்னச் சின்ன ஆசைகள். மாலை நேரத்தில் ‘கொறிப்பதற்கு’ ஏதாவது... (உடல் நலத்துக்கு ஏற்றதுதானா..?) பேரன், பேத்தியின் பிறந்த நாளுக்குப் பரிசுகள் வாங்குதல், பிடித்தமான இசை, கலை நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம், கோயிலில் ஆரத்தித் தட்டு/ உண்டியல் இடுவது, நமது சங்கத்துக்கு சந்தா மற்றும் பிற பங்களிப்பு போன்ற ‘சில்லறை’ செலவுகளைப் பெரிதாகக் கணக்கு போட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். இவை நம் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிக் கொண்டு இருக்கின்றன. தொடரட்டும்.

நிறைவாக, பாசம் மற்றும் தன்மானம். மகன்/மகளுக்கு ஏதாவது ‘செய்வதாக’ இருந்தால், மருமகள்/ மருமகன் மூலம் செய்யுங்கள். அப்போது, உங்களின் பாசம், ‘கணக்கில்’ பதிவு செய்யப்பட சாத்தியங்கள் அதிகம். பேரன்/ பேத்திக்கு என்றால், ‘நேரடியாக’ செய்யுங்கள்.

உங்களின் நண்பர்கள்/உறவினர்கள்/வேண்டியவர்கள், உங்களின் மகன்/ மகளின் பார்வையில், நண்பர்கள்/உறவினர்கள்/ வேண்டியவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களுக்காக நீங்கள் சிரமப்படுவதும் செலவு செய் வதும், சரிதானா என்பதை தீவிரமாக யோசித்து முடிவு செய்யவும். இதில், உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை.

என்னுடைய சம்பந்தி, என்னுடைய மாமா, மச்சான் என்றெல்லாம் ‘கௌரவம்’ பார்த்து, செலவு செய்ய வேண்டாம்; பிள்ளைகளைக் கட்டாயப் படுத்த வேண்டாம். (‘ஆமா... நீங்கதான் இதெல்லாம் இன்னமும் சொல்லிக்கிட்டு இருக்கறீங்க... அவங்க வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு உங்ககிட்ட சொல்ல வாவது செஞ்சாங்களா..?’ - ‘துணை’வி)

நம் பணத்துக்கு ‘பங்கம்’ வராதபடிக்கு, பாசம், தன்மானம் எல்லாவற்றையும் தக்கவைத்துக் கொள்ளலாம். செலவு செய்து இவற்றைப் பாதுகாத்துக் கொள்ள, அவசியம் என்ன இருக்கிறது?

மன்னிக்கவும். செலவு ‘மேலாண்மை’ என்று வந்துவிட்ட பிறகு, நம் மனதை சற்றே கல்லாக்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆக, இதுதான் செய்தி: உடல் நலத்துடன், உள நலத்துடன், பாசம், தன்மானத்துடன் வாழ, நமக்கென்று நம் கையில் நாலு காசு இருக்க வேண்டும். அதற்கான வழிமுறையில் தடங்கலாக இருக்கக்கூடிய எதையும் ஒதுக்கிவிடுவதுதான் அறிவுடைமை. இதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொண்டால், ஓய்வுக்காலம், உண்மை யிலேயே உல்லாசமாக அமையும்.

இதுவரை குடும்பம்/ தனிநபர் சார்ந்த மேலாண்மை பற்றியே பார்த்தோம். இனி, நிறுவனங்களின் பக்கம் பார்வையைத் திருப்புவோமா..? இயன்றவரை ரத்தினச் சுருக்கமாகப் பார்ப்போம். முதலில் அரசாங்கம்!

(சேர்ப்போம்)

இடிஎஃப்: 12 வருடங்களில் 12 மடங்கு வளர்ச்சி!

இடிஎஃப் முதலீட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மும்பையில் ‘இந்தியா இடிஎஃப் மாநாடு 2015’ (India ETF Conference 2015) என்னும் கருத்தரங்கை நடத்தியது என்எஸ்இ. இதில் செபியின் தலைவர் யூ.கே.சின்ஹா பேசும்போது, “இந்தியாவில் இடிஎஃப் சந்தை கடந்த 12 வருடங்களில் 12 மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது’’ என்றார். என்எஸ்இயின் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா, ‘‘மொத்த ஈக்விட்டி இடிஎஃப்-ல் என்எஸ்இயின் பங்களிப்பு 97 சதவிகிதமாக இருக்கிறது. விரைவில் என்எஸ்இ இடிஎஃப்-ல் நிர்வகிக்கப்படும் தொகை 1 லட்சம் கோடியை எட்டும்’’ என்றார். தற்போது இந்தியாவில் நிர்வகிப்படும் இடிஎஃப் சொத்து மதிப்பு ரூ.15,000 கோடியாக இருக்கிறது!