நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் பகுதியில் ஏற்றுமதி இன்ஷுரன்ஸ் குறித்த

சந்தேகங்களுக்கு எக்ஸ்போர்ட் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (ஓய்வு), ஆர்.சத்தியநாராயணன் அளித்த பதில்கள்...

ஏற்றுமதியில் எதற்கெல்லாம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும்? யாரெல்லாம் இந்த இன்ஷூரன்ஸை வழங்குகிறார்கள்?

``முதலில் ஏற்றுமதியாளர்கள், எதற்கெல்லாம் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டிலிருந்து பொருட்களை மற்றொரு நாட்டிற்கு வியாபார நோக்குடன் எடுத்துச் செல்வது தொடங்கி, விற்ற பொருட்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் வரை உள்ள ரிஸ்க்குகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதில் இரண்டு வகையான இன்ஷூரன்ஸ் இருக்கின்றன.

அ. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்பவர், தன் பொருளை துறைமுகம் அல்லது சரக்கு விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்வது தொடங்கி, வாங்குபவர் நாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு, அவர் தன் குடோனுக்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் வரையில் உள்ள ரிஸ்க்குக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதற்கு டிரான்ஸிட் இன்ஷூரன்ஸ் (Transit insurance) என்று பெயர். இந்த வகையான இன்ஷூரன்ஸை இந்தியாவில் உள்ள அனைத்துப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் வழங்குகின்றன.

ஆ. பொருளை வாங்குபவர் அதற்கான பணத்தை ஏற்றுமதி செய்தவருக்குத் தரும் வரை உள்ள ரிஸ்க்குக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதற்கு இந்தியாவில் முதன்மையாக இசிஜிசி என்கிற நிறுவனம் இன்ஷூரன்ஸ் வழங்கி வருகிறது. இதற்கு கிரெடிட் இன்ஷூரன்ஸ் (Credit Insurance) என்று பெயர். தற்போது சில பொதுத்துறை நிறுவனங்களும் இந்த வகையான ரிஸ்க்குகளுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய முன் வந்திருக்கின்றன.

ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குள்ள ரிஸ்க்குகளுக்கேற்ப காப்பீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.''

நான் அப்பளத்தை துனீசியா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். அதிக வெப்பம் காரணத்தால், என் அப்பள பாக்கெட்களில் குறிப்பிட்டுள்ள எடையை விடக் குறைந்துவிடுகிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

``எந்தவொரு பொருளாக இருந்தாலும், ஒப்பந்தம் செய்துகொண்ட தரம் அல்லது அளவுகளில் மாற்றம் இருந்தால் அதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. இது போன்ற சமயங்களில் ஏற்றுமதியாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து எடை குறைந்துவிடாமலும், சொன்ன தரம் மற்றும் அளவுகளை மாற்றாமலும் பார்த்துப் பொருட்களை அனுப்ப வேண்டும்.''

நான் ரஷ்யாவுக்குக் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்கிறேன். அந்த நாட்டில் சாதாரணமாக நிலவும் கடும் குளிர், என் கடலை மிட்டாயின் தரத்தை குறைத்துவிடுகிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

``இதற்கு இரண்டாம் கேள்விக்குச் சொன்ன பதில்தான். கடலை மிட்டாயாக இருந்தாலும், இறக்குமதியாளரிடம் சென்று சேரும் வரை அதனுடைய தரத்துக்கு ஏற்றுமதியாளர்தான் பொறுப்பு.''

ஒவ்வொரு முறை பொருளை ஏற்றுமதி செய்யும்போதும் தனித்தனியாக இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டுமா?

``ட்ரான்ஸிட் இன்ஷூரன்ஸ் ஒவ்வொருமுறையும் தனித்தனியாக எடுக்க வேண்டும். ஆனால், கிரெடிட் இன்ஷூரன்ஸை மொத்தமாகவும் தனித்தனியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.''

நான் செவ்வாழைப் பழங்களை விளைவிக்கிறேன். நான் வாழைப் பழங்களை உற்பத்தி செய்வது தொடங்கிப் பொருளை வாங்குபவர் கையெழுத்து போட்டு பொருளை தங்கள் கைவசம் எடுத்துச் செல்லும் வரை உள்ள அனைத்துக் கட்டங்களுக்கும் எனக்கு இன்ஷூரன்ஸ் தேவை. எந்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் வழங்குகிறது. ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி செய்கிறேன்.

``இன்றைய தேதியில், விவசாயப் பொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை இந்திய அரசாங்கமும் மற்றவர்களும் வரவேற்கிறார்கள். ஏற்றுமதியாளர்களுக்குத் தங்கள் பொருட்களைக் கொண்டு சேர்த்துப் பணம் வாங்கும் வரை என ஒவ்வொரு காலகட்டத்திலும் இன்ஷூரன்ஸ் முக்கியம். இதற்கான ட்ரான்ஸிட் இன்ஷூரன்ஸ்களை அனைத்துப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும், கிரெடிட் இன்ஷூரன்ஸை இசிஜிசி நிறுவனமும் வழங்குகின்றன. இவற்றில் பலவிதமான பாலிசிகள் உள்ளன. தங்களுக்கேற்ற பாலிசிகளை ஏற்றுமதியாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.''

நான் ஏற்றுமதி செய்த பொருட்களுக்குப் பொருளை வாங்கியவரிடமிருந்து பணம் வர வேண்டும். இப்படி ஏற்றுமதி செய்த தொகைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறதா?

``அதற்காகவே இந்திய அரசு இசிஜிசி என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்கி வருகின்றன. ஏற்றுமதியாளர் தங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸை இசிஜிசி நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ள முடியும். மற்ற நாட்டு இறக்குமதியாளர் பணம் தர இயலாத நிலைக்கு ஆளானாலோ அல்லது அவரது நாட்டில் துறைமுகத்திலேயே வைத்துவிட்டு எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலோ, சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுத்துக்கொள்ள முடியும். அதேபோல், நம்மிடமிருந்து பொருட்களை வாங்குபவர் அந்த நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்திய பணத்துக்கு மாற்றம் செய்ய முடியாமல் போனாலும் காப்பீடு வழங்கப்படுகிறது.''

ஒரு வாடிக்கையாளர் வாங்கிய பொருளை திடீரெனத் திருப்பி அனுப்பிவிடும் பிரச்னைகளுக்கு எதாவது இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா ?

''வாடிக்கையாளர் தரம் அல்லது அளவுகளில் குறைபாடு இருக்கிறது என்ற காரணத்தினால் பொருளை திருப்பி அனுப்பினால், அதற்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்பட மாட்டாது.''

நான் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் துணிகளை ஏற்றுமதி செய்கிறேன். அந்த நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பார்த்தால், எனக்குப் பணம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு ஏதாவது இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

''முடியும். அதற்குதான் இசிஜிசி நிறுவப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளருக்கு தேவையான பாலிசி எடுத்துக்கொண்டால், அதற்கேற்ப இன்ஷூரன்ஸ் கிடைக்கும்.''

நான் வேர்க்கடலை ஏற்றுமதி செய்கிறேன். ரூ.5 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு பாலிசி எடுக்க வேண்டுமெனில், ட்ரான்ஸிட் மற்றும் கிரெடிட் இன்ஷூரன்ஸ்களுக்குப் பிரீமியம் எவ்வளவு? பிரீமியம் தொகையை எப்படிச் செலுத்த வேண்டும்?

''அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளை முன்வைத்து உலக நாடுகள் ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றன. அரசியல் மற்றும் பொருளாதாரம் நன்றாக உள்ள நாடுகள் முதல் பிரிவிலும், ஏதேனும் ஒன்று மட்டும் நன்றாக உள்ள நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவுகளிலும், அரசியல் மற்றும் பொருளாதாரத்தோடு சேர்த்து மனித வளம், இயற்கை வளங்கள், உற்பத்தித் துறை போன்ற காரணிகளை வைத்து மற்ற பிரிவுகளும் வகைப்படுத்தப்படுகின்றன.

கிரெடிட் மற்றும் ட்ரான்ஸிட் இன்ஷூரன்ஸ் பிரிமீயம் என்பது நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளுக்கேற்ப மாறும். இவற்றுக்கான பிரீமியம் தொகை நம் தேவைக்கேற்ப, விற்பவரின் கிடங்கிலிருந்து வாங்குபவரின் கிடங்கு வரை முற்றிலுமாக மாறுபடும்.

வாங்குபவர் 'ஃப்ரீ ஆன் போர்ட்' என்று ஒப்பந்தம் செய்திருந்தால், ஏற்றுமதியாளர் அவரது கிடங்கிலிருந்து இந்தியத் துறைமுகம் வரை காப்பீடு செய்யவேண்டும். இன்றைய காலகட்டத்தில் மேற்படி ஒப்பந்தத்தில் வாங்குபவர் காப்பீடு செய்யவில்லை எனில், அதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு இந்தியாவில் உள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கன்டின்ஜன்ஸி லையபலிட்டி பெறமுடியும். ஆனால், இதற்குத் தகுந்த பிரீமியம் கட்டவேண்டும். ஏற்றுமதி கான்ட்ராக்ட்படி, ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கேற்ப, பொருளின் விலைக்கேற்ப, பொருளை வாங்குபவர் தரும் காலத்துக்கேற்ப காப்பீட்டுக்கான பிரீமியம் மாறுபடும். பீரீமியத்தைக் காசோலையாக, நிஃப்ட் மூலமாக செலுத்தலாம்.''

ட்விட்டர் கேள்வி பதில்களை விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=11088

நாணயம் விகடன் ட்விட்டரில்...

பத்திரப் பதிவு குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு நவம்பர் 11, 2015 புதன்கிழமை மாலை 4 - 5 மணி

வரை பதில் அளிக்கிறார்...

ஆ.ஆறுமுகநயினார், எம்ஏ, பி.எல்.முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு - சட்ட அலுவலர்), பதிவுத் துறை தமிழ்நாடு அரசு.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என்று ட்விட் செய்யுங்கள். அல்லது facebook.com/naanayamvikatan மூலமாகவும் கேட்கலாம்.