எனது வீட்டின் மாடி போர்ஷனை நான்கு வருடத்துக்கு முன்பு வாடகைக்கு விட்டேன். எந்தவிதமான ஒப்பந்தமும் நான் செய்துகொள்ளவில்லை. இப்போது என் மகனுக்கு வீடு தேவைப்படுவதால், வீட்டை காலி செய்துதரும்படி சொன்னால், காலி செய்ய மறுக்கிறார். அந்த வீட்டிலிருந்து அவரை காலி செய்ய என்ன வழி?

கண்ணன், திருச்சி,

சுரேஷ்பாபு, வழக்கறிஞர், சென்னை.

“உங்கள் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வீட்டை காலி செய்வது பற்றி ஒரு பதிவுத்தபால் மூலம் அறிவிக்க வேண்டும். அந்தக் கடிதத்தில், மகன் குடியேறுவதற்கு வீடு வேண்டுமென்றும், அந்தப் பகுதியில் தனக்கு சொந்தமான வீடு இல்லையென்றும், 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்து தரவேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.

இந்தக் கடிதம் கிடைத்தபிறகும் அவர் வீட்டை காலி செய்யவில்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடி வழக்குப்பதிவு செய்யலாம். நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். பதிவுத்தபாலின் நகல், அத்தாட்சிக் கடிதம், தபால் அனுப்பியதற்கான ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.”

எனக்கு கோவையில் இரண்டு கிரவுண்ட் இடம் இருக்கிறது. அதில் ஒரு பில்டர் ஆறு அபார்ட்மென்ட்கள் கட்டி, அதில் எனக்கு இரண்டு அபார்ட்மென்ட்டும் பணமும் தருகிறேன் என்று சொல்கிறார். எனக்கு மூலதன ஆதாய வரி எப்படிக் கணக்கிடப்படும் ?

வெற்றிவேல், கோவை,

என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ.

“உங்களுக்கு கிடைக்கும் தொகை மற்றும் கொடுக்கப்படும் இரண்டு வீடுகளுக்கு கட்டுமான நிறுவனம் செலவிடும் தொகை ஆகியவற்றின் கூட்டுத் தொகை தங்களுடைய வருமானமாகக் கணக்கிடப்படும். அவ்வாறு கணக்கிடப்பட்ட தொகையிலிருந்து வீட்டு மனை வாங்கியதற்காக தாங்கள் செலவிட்ட பணத்தின் தற்கால மதிப்பு மற்றும் வீட்டு மனை சார்ந்த செலவுகளை கழித்தபின் பெறப்படும் தொகை மூலதன ஆதாயமாகக் கருதப்படும்.

மேலும், வருமான வரிச் சட்டம் பிரிவு 54F-இன் கீழ் வீட்டு சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரி விலக்கு பெறலாம்.”

என் வயது 29. குவைத்தில் வேலை செய்து வருகிறேன். இன்னும் ஆறு வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு வந்துவிடலாம் என்று இருக்கிறேன். ஐசிஐசிஐ-ன் தொடர் ஓய்வு கால பென்ஷன் திட்டத்தில் (Systematic Retirement Solution-ii (pension scheme) ஐந்து வருடத்துக்கு ரூ.3 லட்சம் வீதம் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். 11 வருடங்கள் கழித்து மாதம் ரூ.21,000 எனக்கும், எனக்குப்பின் என் மனைவிக்கும், பிறகு நாமினிக்கும் கிடைக்கும் என்கிறார்கள். இந்த திட்டம் நல்ல திட்டமா? இதைவிட வேற நல்ல திட்டம் இருந்தால் சொல்லுங்கள்.

தம்பி,

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர் , ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம்

“ஐசிஐசிஐ புரூ சிஸ்டமேட்டிக் திட்டம் (தொடர் ஓய்வுகால பென்ஷன்) ஒரு பென்ஷன் தரும் வகையான யூலிப் பாலிசி. இந்த பாலிசியில் வருடாந்திர முதலீடு செய்தால், 45 வயதுக்கு மேல் உங்களுக்கு பென்ஷன் கிடைக்கும்.

உங்கள் வயது 29 என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் 16 வருடங்கள் முதலீடு செய்தால்தான் அதற்கான பயனை பெற முடியும். யூலிப் பாலிசிகளில் முதலீடு செய்யும் பணத்தில் செலவுகளை பிடித்துக்கொண்டு மீதமுள்ள தொகையை முதலீடு செய்வதால், முதலீட்டுக்குண்டான வருமானம் குறைவு. ஆகவே, இந்த பாலிசியைத் தவிர்ப்பது நல்லது.

அதேநேரத்தில், நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, ஒரு டேர்ம் பிளான் எடுப்பது நல்லது.”

எனது தந்தை இறந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் அடமானம் வைத்த சொத்து குறித்த விவரம் தெரிய வந்தது. வாரிசுதாரராகிய நான் அந்த சொத்தை பெறுவது எப்படி?

சண்முகம், திருப்பூர்,

கே.அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“முதலில் உங்கள் தந்தை ஏற்படுத்தியிருந்த அடமானத்தை ரத்து செய்வதற்காக, அவர் வாங்கிய கடனை, இறந்துபோன நபரின் வாரிசுதாரராகிய நீங்கள் வட்டியுடன் செலுத்த தயாராக இருப்பதை தெரிவித்து, அடமானம் பெற்றுள்ள நபருக்கு பதிவுத் தபால் மூலம் அறிவிப்பு ஒன்று அனுப்புதல் வேண்டும். ஆறாண்டு கால தாமதத்துக்கான தகுந்த காரணங்களை தெரிவிப்பது அவசியம்.

அடமானம் பெற்றுள்ளவர் அந்த அறிவிப்பினை பெற்றுக்கொண்டு, அடமானத்தை ரத்து செய்து, அதற்கென உங்கள் பெயரில் ஒரு ரசீது (Receipt for Cancellation of Mortgage) ஏற்படுத்தி, அடமானம் வட்டியுடன் பைசல் செய்யப்பட்டுவிட்டது என ஒரு பத்திரத்தை பதிவு செய்து தருவார்.

அப்படி அவர் செய்துதர மறுக்கும்பட்சத்தில் இந்த விபரங்களை சொல்லி, மேற்படி நபருக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் ‘அடமான ரத்துக்கான’ (Redemption of Mortgage) வழக்கை தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். நீதிமன்றம் நிச்சயம் உத்தரவு கொடுக்கும். சொத்து, வாரிசுதாரராகிய உங்கள் வசம் வந்து சேரும்.”

கடந்த மூன்று மாதங்களாக எனது பரிவர்த்தனை குறித்த எந்த அறிக்கையையும் நான் கமாடிட்டி வர்த்தகம் செய்யும் புரோக்கிங் நிறுவனம் தரவில்லை. பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லை. இது தொடர்பாக நான் எங்கு புகார் அளிப்பது ?

செந்தில்குமார்,

தி.ரா.அருள்ராஜன்,தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

“பொதுவாக, கமாடிட்டி வியாபாரம் செய்யும்போது, ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் வியாபாரத்துக்கு உண்டான, கான்ட்ராக்ட் நோட் எனப்படும் எழுத்து மூலமான ஆவணம் அனுப்பப்பட வேண்டும்.

இந்த கான்ட்ராக்ட் நோட்டை, உங்களுக்கு ரசீது போல் அல்லது நீங்கள் அனுமதி கொடுத்து இருந்தால், உங்கள் இமெயில் ஐடிக்கு அனுப்புவார்கள். மேலும், வரவு செலவு கணக்குக்கு உண்டான ஸ்டேட்மென்ட் மூன்று மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக உங்கள் புரோக்கர் அனுப்புவார்.

அப்படி வரவில்லை, கேட்டும் தரப்படவில்லை என்றால், நீங்கள் சம்பந்தப்பட்ட எக்ஸ்சேஞ்சுக்கு, உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

இதுவே எம்சிஎக்ஸ் எக்ஸ்சேஞ்ச் என்றால், நீங்கள் புகார் செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி: grievance@mcxindia.com.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய, நீங்கள் பார்க்கவேண்டிய இணையதளம்: http://www.mcxindia.com/investorrelations/grievances/redressal.html.

உங்கள் பிரச்னை இன்னும் தீரவில்லை என்றால், அதே எக்ஸ்சேஞ்ச் மூலமாக, நீங்கள் ஆர்பிட்ரேஷன் என்று சொல்லப்படுகிற வகையில் அந்த புரோக்கர் மீது ஒரு வழக்கையும் தொடுக்கலாம்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.