‘இது என்னங்க அநியாயமா இருக்கு..? நாலஞ்சு பஸ் இருக்கறவங்க எல்லாம், லட்சம் லட்சமா லாபம்

பார்க்கறாங்க.. நாலாயிரம்... அஞ்சாயிரம் பஸ்ஸு வச்சிக்கிட்டு, இத்தனை கோடி நஷ்டம்னா எப்படிங்க..? இதே கட்டணம்தானே அவங்களும் வாங்கறாங்க? அவங்களுக்கு மட்டும் எப்படி கட்டுப்படி ஆவுது? லாபமா வருது? கார்ப்பரேஷன் வண்டிங்க மட்டும் எப்பவும் ஏன், நஷ்டத்துலயே ஓடுது?’

இங்கே ‘கார்ப்பரேஷன்’ பஸ் என்பது ஒரு உதாரணம்தான். தொலைபேசித் துறை, அஞ்சல் அலுவலகம் என மத்திய, மாநில அரசாங்கங்கள் நடத்தும் பல்வேறு நிறுவனங்கள் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் பல எழுவதுண்டு. இந்த கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்...

பொருளாதாரத்தில், ஒரு குறிப்பிட்ட சொல் அடிக்கடி பயன்படுத்தப்படு கிறது. அந்த சொல்தான் உற்பத்தித் திறன்(Productivity) என்பது. மேலோட்டமாகப் பார்த்தால், உற்பத்தி செய்வதில் உள்ள திறமை. இப்படித் தானே பொருள் வருகிறது?

அது ஓரளவுக்குத்தான் சரி. காரணம், ‘திறமை’, ‘திறன்’ இரண்டுக்கும் இடையே, சட்டென்று புரிந்துகொள்ள முடியாத படிக்கு, மிக மெல்லிய வேறுபாடு இருக்கிறது.

திறமை (Talent), ஒருவரின் அறிவு மற்றும் உழைப்பு சார்ந்தது. திறன் (Capacity) என்பதோ, ஒருவரின் அதிகபட்ச பங்களிப்பு பற்றியது. விசைத் திறன், குதிரைத் திறன் என்றெல்லாம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? ஒரு இயந்திரத்தின் அதிகபட்ச செயல்பாட்டின் அளவீடு.

‘திறன்’ என்பது, 1) ஒருவரின் திறமை; 2) அவரது செயலின் உண்மையான விளைவு (Actual Result) இரண்டுக்கும் இடையிலான விகிதம் எனலாம். இதற்கு மேல், டெக்னிக்கலா போக வேண்டாம்.

ஆனால், உற்பத்தித் திறனைப் பற்றி இந்த அளவுக்கேனும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே, எடுத்த எடுப்பில் வருகிற கேள்வி லாபமா - நஷ்டமா? இந்த வினாவுக்கான விடை, உற்பத்தித் திறனில் அடங்கி உள்ளது. இந்த விகிதம் ஆரோக்கியமானதாக இருந்தால், வினாவுக்கான விடையும் அதே அளவு ஆரோக்கியமானதாக இருக்கும்.

இப்போதைக்கு நம்மைப் பொறுத்தவரை, ஒரே ஒரு அம்சம்தான் பிரதானம். அதுதான் செலவு!

உற்பத்தித் திறனுக்கும் செலவு களுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஒருவர், தனது சபரிமலை யாத்திரைக்கு, பத்தாயிரம் செலவு செய்கிறார். அதையே, வேறு ஒருவர், இரண்டாயிரத்தில் நிறைவேற்றி விடுகிறார்.

முன்னவருக்கு ‘வசதியாக’ இருந்த யாத்திரை, பின்னவருக்கு ‘திருப்தியாக’ இருந்தது. (இருவருக்குமே வசதியாகவும் திருப்தியாகவும் இருந்து இருக்கலாம்.) ஆனால், ‘விளைவு’ என்பது ஒன்றுதான்.

ஒருவருக்கு செலவு பத்தாயிரம் ரூபாய்; மற்றவருக்கோ இரண்டாயிரம் ரூபாய். பிற அம்சங்களைத் தவிர்த்து, செலவுத் தொகையை மட்டுமே கணக்கில்கொண்டு பார்த்தால், முன்னவரைவிட, பின்னவரின் உற்பத்தித் திறன் ஐந்து மடங்கு அதிகம்! எப்படி..? பத்தாயிரம் ரூபாயில், பின்னவரைப் போல், ஐந்து பேர் சென்று வரலாமே!

சுமாரான மாத சம்பளத்தில் இருக்கும் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட நினைக்கிறார். ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி, ஒரு நல்ல ஓட்டலில் தனது மகனின் பிறந்த நாள் விழாவை நடத்தலாம்.

இன்னும் சிறப்பாகவும், குறைவான செலவிலும், வீட்டிலேயே, நன்கு திட்டமிட்டு, கொண்டாடலாம். எந்த அளவுக்குக் குறைந்த செலவில் ஒரு செயலை செய்து முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒருவர் 100 ரூபாயில் தயாரிக்கிற ஒரு பொருளை, ஏறத்தாழ அதே தரத்தில், 110 ரூபாய்க்கு நாம் தயாரித்தால், நம்முடைய உற்பத்தித் திறன் குறைவுதானே? (அவர் 120 ரூபாய்க்கு விற்கிறார்; நான் 150-க்கு விற்கிறேன் என்பதெல்லாம், ‘அவுட் ஆஃப் சிலபஸ்’)

இனிவர இருக்கும் பகுதிகளை தயவு செய்து, ‘பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை’ என்கிற கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்க்கவும். கூரிய கத்தி மேல் நடப்பது போன்று ஆபத்தானது இது. இதனாலேயே இது குறித்து எழுத பேச விவரம் அறிந்தவர்கள் தயங்குகிறார்கள்.

எந்தவொரு மனக் கிலேசத்துக்கும் இடம் தராமல், இதுவும் ஒரு ‘சப்ஜெக்ட்’; இதையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் பார்க்கவும்.

‘குறைந்த செலவில் நிறைந்த லாபம்’. இதுதான், செலவு மேலாண்மை பரிந்துரைக்கும் உற்பத்தித் திறன். இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், தோல்வியைச் சந்திக்கிற களம். இத்தனை பொதுத் துறை நிறுவனங்கள் லாபம் சம்பாதிக் கின்றனவே... அதை ஏன் யாரும் சொல்வது இல்லை..?

காரணம், இந்த லாபம் இன்னமும் கூட அதிகமாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம்தான். அதாவது, கிடைத்திருக்கும் இந்த அளவு லாபமும், சரியான செலவு மேலாண்மையினால் வந்ததல்ல; மாறாக, தவறான செலவுகளையும் மீறி கிடைத்தது.

எளிமையாகச் சொல்வதானால், இன்னமும் அதிக லாபம் கிடைத்து இருக்க முடியும். ஆனாலும், கிடைத்ததைக் கொண்டு திருப்திப் பட்டுக் கொள்கிறோம்.

ஒருவர், தனியார் பஸ் முதலாளி. ஓட்டுநர், நடத்துனர் ஆகியோருக்கு எவ்வளவு சம்பளம் தருவார்..? பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கிற வேலையே செய்கிற, அரசுப் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட குறைவாக தருவார்.

ஒரு பேருந்துக்கு மாதம் ஒன்றுக்கு, தொழிலாளர் ஊதியத்துக்கு என்று சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை (எட்டு மணி நேரப் பணி அடிப்படையில், இரண்டு ஓட்டுநர், இரண்டு நடத்துனர் ஆகியோருக்கு) அரசுப் போக்குவரத்தில் செலவு ஆகிறது.

இதன் மீது, எரிபொருள் விலை, பராமரிப்புச் செலவு ஆகியன சேர்த்தால், ஒரு பேருந்துக்கு, ஒரு மாதத்துக்கு, சுமார் மூன்று லட்ச ரூபாய் செலவு. அதாவது, நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்.

நாள்தோறும் இவ்வளவு பணம், வசூல் ஆகுமா..?

தனியார் துறையில், அனைத்துச் செலவுகளும், வசூல் தொகைக்குள் அடங்கி விடுவதை உறுதி செய்து கொள்கிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், ஊதியம், இன்னம் பிற வசூலுடன் இணைக்கப்பட்ட செலவுகள். (Collection linked Expenditure) அதனால் லாபம் ஈட்ட முடிகிறது.

தனியார் செய்வது சரி; அரசுத் துறையில் நடப்பது தவறு என்பதல்ல. அரசுக்கு என்று, சில சமூகக் கடமைகள் உண்டு. பொறுப்புகள் உண்டு.
தொழிலாளர் நலன், சாமான்யர்களின் வாழ்க்கை நிலை, அரசாங்கத்தின் கொள்கைகள் என்று பல அம்சங்கள் இதில் அடங்கியிருப்பதால், பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை விதிகளை முழுவதுமாகக் கடைபிடிக்க முடிவதில்லை.

இந்த விஷயத்தில் ‘ஏதாவது செய்ய வேண்டும்’ என்பதற்காக, சிறிய அளவிலேனும், ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்று அவ்வப்போது அறிவிக்கப்படும். கடுமையான எதிர்ப்பின் காரணமாக நாளடைவில் அது தானாகவே மறைந்தும் போகும்.

பொதுத் துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்க வேண்டும் என்றால், நிதிகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு (Fiscal Discipline) மிக அவசியம்.

நம் நாட்டைப் பொறுத்தவரையில், மறு நடவடிக்கை, மறு ஆய்வு, மறு சீரமைப்பு என்று எதுவாக இருந்தாலும், அதன் விளைவு என்னவோ, கூடுதல் செலவு என்று மட்டுமே இருந்து வருகிறது.

நேர்மையான விலையில், தரமான மூலப் பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்தல், இயந்திரங்களின் கொள்முதல், தொடர்ந்த நீடித்த பராமரிப்பு போன்றவற்றின் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகளுக்கு வழியில்லாத அமைப்பு முறையை (Fool-proof system) ஏற்படுத்துதல், அதி நவீனத் தொழில்நுட்ப முறையை அமல்படுத்துதல், சீரான சுமூகமான நிர்வாகம் - தொழிலாளர் நல்லுறவைப் பேணுதல், வணிகத்தில் இடைத் தரகர்களின் தலையீட்டை அறவே ஒழித்தல் ஆகியனவற்றை செய்தாலே போதும்; லாபம் ஈட்டுவது உறுதி.

ஆனால்... பல திசைகளில் இருந்தும் எழுகிற ‘இழுப்புகளும்’ அழுத்தங்களும், போதாக் குறைக்கு வலுவான அரசியல் காரணிகளும் சேர்ந்துகொண்டு, பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை என்பது, ஏட்டில்கூட இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது.

செலவு மேலாண்மையின் விதிகளுக்கு உட்பட்டு நிர்வகிக்க முடியுமானால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களுமே லாபம் ஈட்டக் கூடியனதாம். இனி, பொதுப் பணத்தைக் கையாள்வோருக்கான செலவு விதிகள் சில...

(சேர்ப்போம்)

இந்தியர்களின் வெளிநாட்டு முதலீடு குறைந்தது!

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடு ரூ.15,000 கோடியாக குறைந்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் 2.88 பில்லியன் டாலர் (ரூ.19,000 கோடி) அளவில் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தன.

ஆனால், இந்த ஆண்டு அந்த முதலீடு 21% சரிந்து, 2.28 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதில் 1.72 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களிலும், 210.94 மில்லியன் டாலர் கடன்களிலும், 341.82 மில்லியன் டாலர் ஈக்விட்டி திட்டங்களிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.