இன்டகிரேட்டட் நிறுவனம், என்எஸ்இ மற்றும் என்எஸ்டிஎல் நிறுவனங்களுடன் இணைந்து நாணயம் விகடன் நடத்திய ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா - அஸெட் அலோகேஷன்’ விழிப்புஉணர்வு நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய இன்டகிரேட்டட் நிறுவனத்தின் துணைத் தலைவர் செல்வகுமார், தனது நிறுவனம் 112-வது கிளையை மும்பையில் தொடங்கப் போவதாக சொன்னார்.

அவரைத் தொடர்ந்து பேசிய என்எஸ்டிஎல் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் ஆரோக்கியராஜ், டீமேட் சேவைகளில் என்எஸ்டிஎல் அமைப்பின் பங்கு பற்றி விளக்கினார்.

அடுத்து பேசிய இன்டகிரேட்டட் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் ரவிச்சந்திரன், “பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்கிற கூட்டு வட்டி சக்தி வாய்ந்தது. சரியான முதலீட்டில் தொடர்ந்து முதலீடு செய்யும் பூனை அளவு பணம் புலி அளவுக்கு மாறும். கூட்டு வட்டியில் வருமானம் தருவதில் பங்குச் சந்தை முதலீட்டுக்கு ஈடுஇணை இல்லை. ஆனால், நாமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நமக்கு போது மான புரிதலும், பணமும் வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து ஐஇபி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் குருராஜன், “நம் குடும்பம் நம்மை நம்பியுள்ளது. எனவே, நாம் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியானது வரிச் சலுகை என்று மட்டும் இல்லாமல், நம் குடும்ப நன்மைக்காகவும் இருக்க வேண்டும்’’ என்றவர், ஒருவர் அவசியம் எடுக்க வேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சொன்னார்.

நிறைவாக பேசிய நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, “நம் வாழ்க்கையில் செய்யும் தவறுகளைத் தான் நம் முதலீடுகளிலும் செய்கிறோம். எல்லா முதலீடுகளிலும் நமக்கு பொறுமையும் நிதானமும் மிக அவசியம். நாம் செய்யும் முதலீடுகள் மூலம் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும், அதற்கு எத்தனை காலம் காத்திருக்கலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் நம்மிடம் இருக்க வேண்டும்’’ என்று கூறி முடித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக வாசகர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதிலளித்தனர்.

படம்: சூ.நந்தினி