யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்தியாவில் 90 சதவிகிதத்துக்கும் மேலான மக்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியர்களில் சுமார் 4 கோடி மியூச்சுவல் ஃபண்ட் போலியோக்களே உள்ளன. இந்த நான்கு கோடி போலியோக்களிலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட போலியோக்களை வைத்திருக்கலாம் என்பதால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாத நிலை.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்கிற பரப்பில் எல்லா மக்களையும் கொண்டுவர பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன. இத்தனைக்கும் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் செயல்பட ஆரம்பித்தது இன்று நேற்றல்ல. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்டுகள் செயல்படத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் முதன்முதலாக 1964-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியாதான். இது யூடிஐ என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு வங்கி, அஞ்சலக சேமிப்பு, எல்ஐசி, பங்குச் சந்தை தவிர வேறு ஏதாவது புதிய முறையில் சேமிக்க / முதலீடு செய்ய வேண்டுமென்றால், யூடிஐ மட்டும்தான் அதற்கு வழி அமைத்துத் தருவதாக இருந்தது.

வெற்றிகரமாக நடந்துவந்த இந்த நிறுவனத்தில் பின்னாளில் பிரச்னைகள் வந்தது. அது சமயம் மத்திய அரசாங்கம் தலையிட்டு அந்த நிறுவனத்தை இரண்டாக பிரித்தது. எஸ்யூயூடிஐ என்பதை ஒரு நிறுவனமாகவும் மற்றும் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் என்பதை வேறு ஒரு நிறுவனமாகவும் பிரித்தது. இப்படிப் பிரித்ததால், 2003-ம் ஆண்டு உருவானதுதான் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். எஸ்யூயூடிஐ மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதேபோல், யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் செபி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பழைய யூடிஐ-யில் இருந்து பல திட்டங்கள் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு நிர்வாகம் செய்வதற்காக மாற்றப்பட்டன.

தற்போது இந்த நிறுவனம் 1,05,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து, இந்தியாவில்

ஐந்தாவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக உள்ளது. பல பங்கு சார்ந்த மற்றும் கடன் சார்ந்த திட்டங்களை நிர்வகித்துவரும் இந்த ஃபண்ட் நிறுவனத்தின் சிஇஓ லியோ பூரி ஆவார். தற்போது செபியின் சேர்மனாக இருக்கும் யூ.கே.சின்ஹா, இந்த நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆவார்.

இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஸர்கள் நமது பொதுத் துறை நிறுவனங்களான எஸ்பிஐ, எல்ஐசி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகும். இந்த நான்கு நிறுவனங்களும் சேர்த்து, யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் 74% பங்குகளை வைத்துள்ளன. மீதி 26% பங்குகளை அமெரிக்க இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டி.ரோவ் பிரைஸ் வைத்துள்ளது. 1937-ம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்க நிறுவனமான டி.ரோவ் பிரைஸ் உலகெங்கிலும் 14 நாடுகளில் 773 பில்லியன் டாலர்களுக்கு மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

யூடிஐ இண்டர்நேஷனல், யூடிஐ வென்ச்சர்ஸ், யூடிஐ ரிட்டையர்மென்ட் சொல்யூஷன்ஸ் போன்றவை யூடிஐ ஏஎம்சி-யின் (AMC – Asset Management Company) 100 சதவிகித சொந்தமான துணை நிறுவனங்களாகும். துபாய், லண்டன், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலும் தனது அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

மீடியம் டு லாங்க் டேர்மில், குறைவான ஏற்ற இறக்கத்தில் தொடர்ச்சியாக சீரான வருமானத்தை தனது முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் முதலீட்டு தாரக மந்திரமாக உள்ளது. சந்தையில் இருக்கும் ஃபண்டுகளில் தனது ஃபண்டுகள் டாப் 25 சதவிகிதத்துக்குள் இருக்குமாறு முயற்சி செய்கிறது.

யூடிஐ மியூச்சுவல் ஃபண்டுக்கு ஆய்வுக் குழு (Research team) மிகவும் பலமாக உள்ளது. அதேபோல் 150-க்கும் மேற்பட்ட கிளைகளையும், 45,000-க்கும் மேற்பட்ட நிதி ஆலோசகர்களையும் கொண்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் பலவிதமான திட்டங்களை இ்ந்த நிறுவனம் வழங்குகிறது. உதாரணத்துக்கு, ஓய்வுக்கால முதலீடு, குழந்தைகள் உயர் கல்விக்கான முதலீடு, இன்ஷூரன்ஸுடன் கூடிய முதலீடு, பங்கு சார்ந்த முதலீடுகள், கடன் சார்ந்த முதலீடுகள், கலப்பின முதலீடுகள், தங்கம் போன்ற பல வகையான முதலீடுகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

இந்த நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைவர் அனூப் பாஸ்கர் ஆவார். இவர் யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ், யூடிஐ ஈக்விட்டி, யூடிஐ மிட் கேப் போன்ற திட்டங்களை சுயமாக நிர்வகித்து வருகிறார். இந்தத் திட்டங்களின் செயல்பாடு நன்றாக இருந்து வருகிறது. இதற்குமுன் சுந்தரம் மற்றும் ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணியாற்றியவர் இவர். சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்டை வெற்றிகரமாக நிர்வகித்தார் இவர்.

மிகவும் தரமான பங்குகளையே எப்போதும் இவர் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துக் கொள்கிறார். இந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த திட்டங்களின் தலைவர் அமன்தீப் சிங் சோப்ரா ஆவார்.

டி.ரோவ் பிரைஸ் நிறுவனத்தின் உதவியுடன், யூ.டி.ஐ பெரிய அளவில் செயல்முறைகளை மேம்படுத்தியுள்ளது. அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல், தொடர்ச்சியாக ஒரு நிலையான செயல்பாட்டை கொடுத்து வருகிறது. ஒரு தனி ஃபண்ட் மேனேஜரின் மேல் நிறுவனம் கொண்டுள்ள ரிஸ்க்கை குறைப்பதற்கு, 30 சதவிகிதத்துக்கும் மேலான சொத்துக்களை ஒரு ஃபண்ட் மேனேஜர் நிர்வகிப்பதை இந்த நிறுவனம் அனுமதிப்பதில்லை.

இந்த நிறுவனத்தில் பலரும் பயன்பெறும் வகையில், பல திட்டங்களுக்கு குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500-ஆக வைக்கப்பட்டுள்ளது. நீண்டகால அனுபவம், ஸ்டிராங் ரிசர்ச் டீம், அனுபவமுள்ள ஃபண்ட் மேனேஜர்கள், நல்ல திட்டங்கள் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கேற்றாற்போல் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

யூடிஐ டாப் ஈக்விட்டி/கடன் திட்டங்கள்!

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.5,108 கோடி), யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.4,620 கோடி), யூடிஐ சிசிபி பேலன்ஸ்ட் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.3,392 கோடி) ஈக்விட்டி திட்டங்கள் ஆகும்.

கடன் திட்டங்களைப் பொறுத்தவரை, யூடிஐ லிக்விட் கேஷ் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.12,851 கோடி), யூடிஐ டிரஷரி அட்வான்டேஜ் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.10,903 கோடி) யூடிஐ மணி மார்க்கெட் ஃபண்ட் (நிர்வகிக்கும் தொகை ரூ.9,118 கோடி).