வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது. ஆனால், வீட்டு கிச்சினில் எப்போது பணம் இருக்கும் என்பது தெரியும்.

ஏனெனில் கிச்சன் என்பது பெண்களின் ஏரியா. அவர்கள் எப்போதுமே தங்களின் சிறிய அளவு சேமிப்புத் தொகையை சமையலறையில்தான் வைத்திருப்பார்கள். பெண்கள் எப்போதுமே தங்கள் நோக்கத்தில் உறுதியாக இருப்பார்கள். அதாவது, எந்த நோக்கத்துக்காக பணத்தைச் சேமிக்கிறார்களோ, அதற்காக மட்டும்தான் அந்த பணத்தை பயன்படுத்துவார்கள். வேறு எந்தக் காரணத்துக்காகவும் அந்த சேமிப்பில் கைவைக்க மாட்டார்கள். இவ்வளவு உறுதியான மனதுடன் இருக்கும் பெண்கள் ஏன் முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆச்சரியமே!

வேலைக்கு போனபின்னும்..!

முன்பெல்லாம் பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிப்பது குறைவு. ஆனால், இன்று பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் சென்று ஆண்களுக்கு இணையாக அல்லது அவர்களைவிட அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். ஆனால், வேலைக்குப் போகும் சதவிகிதம் உயர்ந்த அளவுக்குப் பெண்களின் முதலீட்டு சதவிகிதம் உயரவில்லை. இதற்கு என்ன காரணம் என்று மும்பையைச் சேர்ந்த லேடர் 7 ஃபைனானஷியஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சடகோபனிடம் கேட்டோம்.

“பெண்கள், முதலீடு செய்யக்கூடாது என நினைப்பதில்லை. அவர்கள் வாழும் சூழ்நிலை முதலீடு செய்யாமல் தடுக்கிறது. இந்தியக் குடும்பங்கள் அனைத்துமே ஆண்களின் தலைமையில் இயங்கக்கூடியதாக அமைந்துள்ளது. பணம் சார்ந்த முடிவுகளை பெரும்பாலான வீடுகளில் ஆண்களே எடுக்கிறார்கள். இதைப் பார்த்தும் வளரும் பெண்களை தன் அம்மாவைப் போலவே குடும்பத்தை நடத்தினால் போதுமே என நினைக்கிறார்கள்.

வீட்டில் உள்ள பெண்கள் முதலீடு குறித்து யோசிப்பதற்கோ அல்லது முதலீடு செய்வதற்கோ வாய்ப்புக் குறைவு. அதுவே வேலைக்குப் போகும் பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் குழந்தைகள், குடும்பத்தைக் கவனித்தாலே போதும், அதைத் தவிர்த்து வேறு வகையில் எண்ணத்தைத் திசை திருப்பினால் குடும்பத்தில் சிக்கல் வரும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை வீணாகும் என்ற பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு அதிகம்!

இன்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்வியாகவே உள்ளது. அந்த நிலையில் தங்களுடைய தினசரி

வாழ்க்கையையே பாதுகாப்புடன் நகர்த்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தன்னுடைய பணமும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் பணம் கையில் இருக்க வேண்டும் அல்லது எனக்குத் தெரிந்த நபர்களிடம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால்தான் சீட்டு, பேங்க் ஃபிக்ஸ்ட் டெபாசிட், ஆர்டி, தங்கம் போன்ற முதலீட்டுத் திட்டங்களையே அதிகம் நம்புகிறார்கள்.

தவறான தகவல்!

தெரியாத விஷயத்தில் சிக்குவதைவிடத் தெரிந்த விஷயத்தைச் செய்யலாமே எனப் பெண்கள் நினைக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடுகள் இப்போதுதான் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த முதலீடுகள் குறித்து மோசமான தகவல்கள்தான் அதிகம் வெளிவந்துள்ளது. அதனால் அந்த முதலீட்டுத் திட்டமே மோசமானது என நினைக்கிறார்கள்.

இந்த நிலையில் பெண்கள் இந்த முதலீடுகள் குறித்து ஆண்களிடம் கேட்கும்போது தவறான வழிகாட்டல்களே அவர்களுக்குக் கிடைக்கிறது. அதே நேரத்தில் முதலீட்டில் அதிக பயத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அனைத்தும் நஷ்டம் தரக்கூடிய முதலீடுகள் என நினைக்கிறார்கள்.

பிரபலமான முதலீடு!

தங்கம், சீட்டு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்டி போன்ற முதலீட்டுத் திட்டங்கள் பல ஆண்டுகளாக இருக்கக் கூடியவை. மேலும், அந்தத் திட்டங்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முதலீடு செய்திருப்பார்கள். இதன் காரணமாக அந்த முதலீடுகள் குறித்த தகவல் தெரிவதோடு மட்டும் இல்லாமல் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்யும் பெண்களின் கையில் நகைகள் இருக்கும். அதேபோல, சீட்டு மிகவும் தெரிந்தவர்களிடம் குறுகிய கால அடிப்படையில் போடும்போது ரிஸ்க் குறைவு என நினைக்கிறார்கள்.

மேலும், அந்த முதலீடு குறித்த தகவல்களை, நினைத்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என நம்பிக்கை பெண்களிடம் உள்ளது. இதனால் பெண்கள் எப்போதுமே பிரபலமான, அதே நேரத்தில் பாதுகாப்பான முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கேள்விகள் அதிகம்!

பெண்கள் சுயமாக சம்பாதித்த பணத்தில் முதலீடு செய்தாலும் அதுகுறித்த தகவல்களைக் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படிப் பகிரும்போது குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டால், அதன் மீது பல்வேறு கேள்விகள் வரும் அதையெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கும். அதுவே ஒரு ஆண் முதலீடு செய்து அதில் நஷ்டம் அடைந்தால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை இருக்காது. ஏனெனில் முதலீடு குறித்து ஆண்களுக்கு எல்லாம் தெரியும் என்ற சூழ்நிலை தற்போது உள்ளது” என்றார்.

பெண்கள் வேலைக்குப் போகும் வாய்ப்பு இப்போதுதான் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அவர்களின் வருமானத்தில் பெரும்பகுதி குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே சரியாகப் போய்விடுகிறது. அவர்கள் சம்பாத்தியத்தில் சில ஆயிரம் ரூபாய் உபரியாக மீதமாகும்போது அவர்கள் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள். தவிர, இந்த முதலீடுகள் பற்றி பெண்களுக்கு சரியாக சொல்லித் தரவும் வேண்டும். அப்போதுதான் பெண்கள் சேமிப்பில் மட்டுமல்ல, முதலீட்டிலும் கதாநாயகிகளாக இருப்பார்கள்.

பெண்களிடம் அதிக பணம் புழங்குவதை ஆண்கள் விரும்புவதில்லை!

சுபா சார்லஸ், மனநல மருத்துவர்.

பெண்கள் முதலீடு செய்யும் விஷயத்தில் ஏன் பின்தங்குகிறார்கள், இதற்கு மனரீதியான காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என மனநல மருத்துவர் சுபா சார்லஸிடம் கேட்டோம்.

“பெண்களிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதை ஆண்கள் விரும்புவதில்லை. பெண்கள் சுயமாக சம்பாதித்தாலும் அந்த பணத்தை ஆண்களிடம் கொடுக்கும் கலாச்சாரம்தான் இங்கு இருக்கிறது. இதனால் முதலீடு குறித்து பெண்களை யோசிக்கவே விடுவதில்லை. ஒரு சில பெண்கள் பொருளாதார ரீதியாக இப்போதுதான் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். அதாவது, பெண்கள் வேலைக்குப் போகும் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும்போது முதலீட்டின் சதவிகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, பெண்கள் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் பெண்களுக்கு இல்லை. அவர்கள் வேலைக்குப் போவதே குடும்பத்தின் இரண்டாவது வருமானத்துக்காகத் தான். அதாவது, பெண்களின் வருமானத்தை நம்பி பல குடும்பங்கள் இல்லை. இதனால் அவர்கள் அதிகம் லாபம் தரக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை.’’