‘உங்களுக்கு எவ்வளவு வேணும் சொல்லுங்க... போட்டுத் தர்றேன்... என் வூட்டுப் பணமா இது..? எவனுதோ... என் கையில குடுத்து வச்சிருக்கானுங்க... அவ்வளவுதான். நாளைக்கே என் இடத்துக்கு வேற எவனாவது வரலாம். நான் இங்கே இருக்கற வரைக்கும் தாராளமா குடுக்கறேன். வாங்கிக்கிட்டுப் போங்க..’

இன்னொரு வகையும் உண்டு. ‘பாருங்கண்ணே... இதுவே என்னோட பணம்... என் பையில இருந்து எடுத்துக் குடுக்கறதா இருந்திச்சி... நீங்க கேட்கக் கூட வேணாம். நானே அள்ளி விடுவேன். ஆனா, இது ஊரார் வூட்டுப் பணம். ஒவ்வொரு ரூவாயும், பார்த்துப் பார்த்துத்தான் செலவு பண்ணணும். நாளைக்கி நம்மளைப் பார்த்து எவனும் கேள்வி கேட்கறமாதிரி நடந்துக்கக்கூடாது. என்ன சொல்றீங்க..?’

பொதுப் பணத்தைக் கையாள்வதில், இப்படி இரு வகை மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘நேர்மை’ - அப்படி ஒன்றும் முற்றிலுமாக இல்லாமல் போய்விடவில்லை. ஓர் உயரிய நோக்கத்துக்காக ஒரு பொது அமைப்பு தொடங்கப்படுகிறது. அறக் கட்டளையாக பதிவு செய்யப்படுகிறது. அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகளில் ‘நம்பிக்கை’ வைத்து பலர் நிதியுதவி செய்கிறார்கள். அரசாங்கமும் வரிச் சலுகைகள் வழங்குகிறது.

(இது மாதிரியான அமைப்புகளை ஆங்கிலத்தில் அழகாக, ‘ட்ரஸ்ட்’ (நம்பிக்கை) என்று அழைக்கிறார்கள். ஆனால், தமிழில் ஏனோ ‘அறக்கட்டளை’ என்றே சொல்கிறார்கள். ஏதோ ‘தர்மத்துக்கு’ செய்வதாக ஒரு பொருள்! பிறரிடம் நிதி வசூலித்து, அவர்களுடைய பணத்தில் செய்கிற எதுவும் எப்படி ‘தர்மம்’ ஆகும்..?)

என்ன எதிர்பார்க்கப்படுகிறது..? பொது அமைப்பின் சேவை சிறக்க வேண்டும், அதன்மூலம் பொது மக்களுக்கு நன்மை சென்று சேர வேண்டும்.

இது எப்போது சாத்தியம் ஆகும்..? சேர்ந்த நிதியை, முறையாக செலவழிக்கும்போது.

கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி - முறையான செலவு. அதுதானே மையப் புள்ளி..?

ஆனால், ‘வரவு’களைப் பெருக்கு வதுதான், இதுபோன்ற அமைப்புகளின் பிரதான செயல்பாடாக மாறிவிட்டது. ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்..?’ ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்..?’ நியாயம்தான். ஆனால், மையப் புள்ளி அதுவல்லவே!

‘மையப் புள்ளி’ என்பதன் கருத்துரு (‘கான்செப்ட்’) புரிந்துகொள்ளப்படவே இல்லை. அதனால் வந்த கோளாறுதான் இது.

ஒரு வட்டம் வரைய நினைக்கிறோம். ஒரு புள்ளியை ஆதாரமாகக் கொண்டு, அதைச் சுற்றித்தானே வரைகிறோம்..?

எது முதலில்..? புள்ளி. அதாவது, நோக்கம். அதற்கான செலவு. இதனைச் சுற்றி, வருகிற நன்கொடைகளுக்கு ஏற்ப, வட்டம் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால், பொதுப் பணத்தைக் கையாள்வது எப்படி என்கிற வினாவுக்கு எளிதில் விடை கிடைத்துவிடும்.

‘தன் கையை விட்டு’ செல்கிற ஒவ்வொரு வரவும் (செல்கிற வரவு - செலவு!) பொது நோக்கத்தை ஒட்டியே இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கோயில் திருப்பணி, பள்ளிக் கட்டடம் புதுப்பித்தல், ஏரி, குளம் தூர் வாருதல் (?) போன்ற பொதுக் காரியங்களில் ஈடுபட அழைத்தால் பலபேர் ஒதுங்கிவிடுகிறார்களே... அது ஏன்?

‘அதெல்லாம் பணம் புழங்கற இடம்ங்க... நமக்கு எதுக்குங்க அந்த வேலை..? நம்மகிட்ட வந்து கேட்டாங்களா... நூறோ, இருநூறோ குடுத்துட்டு ஒதுங்கிடணும். அதுக்கு மேல ‘இழுத்துப் போட்டுக்கிட்டு’ வேலை செஞ்சா, அனாவசியமா நம்ம பேரு கெட்டு போயிரும். எதுக்கு இந்த வேண்டாத வேலை..?’

பழி பாவத்துக்கு அஞ்சுகிறவர்கள், பொதுப் பணத்தைக் கையாள முன்வருவது இல்லை. அதனால், ‘வந்த வரைக்கும் லாபம்’ என்று ‘துணிந்து இறங்குகிறவர்’ கையில் பொதுப் பணம் சென்று சேர்ந்துவிடுகிறது. ஆக, யார் மீது தவறு..? புரிகிறதா..?

பொது நிதியைத் திறம்பட நிர்வகிப்பதும், நியாய மாக முறைப்படி செலவு செய்வதும், அத்தனை பேருக்கும் இயலுகிற காரியமல்ல. ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், மிகவும் ஆச்சரியமான உண்மையை நாம் மறந்து விடுகிறோம்.

பல நூற்றாண்டுகளுக்கு (ஆயிரமாண்டுகள் என்றும் சொல்லலாம்!) முன்பு இருந்தே, நம் நாட்டில் மிகப் பெரிய காரியங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நம் மூதாதையர், மிகவும் திறமையாகவும் நேர்மையாகவும் பொதுப் பணத்தைக் கையாண்டு இருக்கிறார்கள்.

எத்தனை எத்தனை ஆலயங்கள்! ஏரிகள், குளங்கள்! அன்ன சத்திரங்கள்! ‘தர்ம ஆஸ்பத்திரிகள்’! கல்வி நிலையங்கள்! கல்வியறிவு பெருகாத காலத்திலேயே அவர்களால் சாதிக்க முடிந்தது.... ‘அதிகம் படித்த’ நம்மால் ஏன் இயலாமல் போகிறது...? ‘பொது நிதி’ என்றாலே, நம்மில் பலரும் ஏன் ஓடி ஒளிகிறோம்..?

வரிந்து கட்டிக் கொண்டு கேள்வி கேட்க முன்வருகிற நாம், வலிய வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன்..? ‘அவப் பெயர் வந்து விடுமோ...? யார் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ...? ‘சண்டை சச்சரவு’களை எதிர் கொள்ள நேருமோ..? ‘எதற்கு வம்பு..?’

இப்படி பல காரணங்களும் இருக்கலாம். ஆனால், இவற்றையும்விட மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. நிதி மேலாண்மையில், நாம் வெகுவாகப் பின்தங்கிவிட்டோம். நிரம்பப் படித்தவர்களிடம்கூட, நிதியைக் கையாள்வதில், ஒருவித அச்சம் நிலவுகிறது.

‘அய்யய்யோ... இவ்வளவு பணம் எல்லாம், என்னால ‘ஹேண்டில்’ பண்ண முடியாதுப்பா... ஆளை விடு’ என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டு ‘தப்பித்துக்கொள்கிறவர்கள்’ எத்தனை பேர்..?

‘ஆமா... இவரால தன்னோட வருமானத்தையே ஒழுங்கா வச்சிக்கத் தெரியலை.. இந்த லட்சணத்துல ஊராரோட பணத்தைப் பாதுகாக்கப் போறாராம்...’ (இப்படி சொல்கிறவர் வேற யாரு..? நம்மை நன்கு அறிந்துவைத்து இருக்கிற ‘வாழ்க்கைத் துணை’தான்.)

சிறு வயதில் இருந்தே, பணத்தைக் கையில் கொடுக்கும்போதே, ‘பார்த்து.. பத்திரம்... கோட்டை விட்டுடாதே... சரியா கணக்கு பண்ணி வாங்கிக்கினு வா...’ என்று எத்தனை எச்சரிக்கைகள்... அறிவுரைகள்! பணத்தை இயல்பாகக் கையாளத் தெரியாமல் வளர்ந்துவிட்டோம்.
‘க்கும்.. மொத்தப் பணத்தையும் செலவழிச்சுட்டியா..? உன் தம்பியைப் பாரு... நான் குடுத்த நூறு ரூபாயும் அப்படியே வச்சு இருக்கான்... அவனைப் பார்த்தாவது கத்துக்கோ...’ நம்முடைய ‘நிதி அறிவு’ இப்படித்தான் சொல்லித் தருகிறது.

‘அப்படியே வச்சுக்கணும்னா, என்கிட்டே ஏன் குடுத்தீங்க..? நீங்களே வச்சிக்க வேண்டியதுதானே..?’ என்று ‘பெரியவன்’ திருப்பிக் கேட்டால், அதனை ‘விதண்டாவாதம்’ என்று கட்டம் கட்டிவிடுகிறோம்.

அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக, மனமுவந்து புத்தகம் படிக்கிற வழக்கம் மறைந்து

போய்விட்டது; தேர்வு வந்தால்தான் புத்தகத்தைத் தொடுவது; அதுவரை ‘அழுக்கு படாமல்’ பார்த்துக் கொள்வது என்றாகிவிட்டது. அதைப்போலவே, கொடுக்கல் வாங்கலுக்கான ஒரு சாதனமாகப் பயன்படுத்த வேண்டிய பணத்தை, ‘மறைத்து வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்’ என்கிற அந்தஸ்தில் உயர்த்தி வைத்துவிட்டோம்.

பொறுப்பு உணர்ந்து சாமர்த்தியமாகப் பணத்தைக் கையாளத் தெரிந்தவர்கள் இல்லாமல் போனதால், யார்யார் கைகளிலோ அகப்பட்டுக் கொண்டு, பொதுப் பணம், வீணாகிறது; சீரழிகிறது. பணக் கையாடல், முறைகேடுகளில் பெரும்பாலானவை, நிதி நிர்வாகத் திறமையின்மை காரணமாக விளைந்தவைதாம்.

நிதி நிர்வாகத்தில் தேர்ச்சி பெற என்ன செய்யலாம்..? நிறுவனத்துக்கு சென்று கற்றுக் கொள்ள வேண்டும்..? பொருளாதாரத்தில் பண்டிதராக இருக்க வேண்டும்..? ஊஹூம். அவசியமே இல்லை. சற்று ஆர்வம் மட்டும் போதும்.
‘பத்து கட்டளைகள்’. பொதுப் பணம் மட்டும் அல்ல; நமது சொந்தப் பணத்தைக் கையாள்வதிலும் இவைதாம் அடிப்படை விதிகள். தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். நிதி மேலாண்மை புரிந்து விடும். நிறைவாய், எளிமையான அந்தப் பத்து கட்டளைகள் என்ன..?

(சேர்ப்போம்)

1 கோடி எல்இடி பல்ப்... ஆந்திரா சாதனை!

எல்இடி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் 1 கோடி எல்இடி பல்புகளை விநியோகித்து ஆந்திர அரசாங்கம் சாதனைப் படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் எல்இடி பல்புகளை பயன்படுத்துமாறு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. குறைவான அளவில் மின்சக்தியை நுகரும் எல்இடி (ஒளி உமிழும் டையோடு) தொழில்நுட்பம் கொண்ட பல்புகள் நம்முடைய மின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் உள்ளதால் இதனைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருவது முக்கியமான விஷயம்.