நம் பிசினஸில் நாம் சிறந்து விளங்க வேண்டுமெனில், ஆறு முக்கிய ஸ்டேக் ஹோல்டர்களை எந்தக் குறையும் இல்லாமல் திருப்தியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கடந்த அத்தியாயத்தில் சொன்னேன். அந்த ஆறு ஸ்டேக் ஹோல்டர், அதாவது பங்காளிகளில் நமக்கு மூலப் பொருட்களை சப்ளை செய்கிறவர்களுக்கு நாம் தரவேண்டிய முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துச் சொன்னேன்.

அடுத்து நாம் பார்க்கப்போவது முக்கியமான ஸ்டேக் ஹோல்டரான, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள். இதைப் பற்றி பார்க்கும் முன்பு பிசினஸுக்கான பணத்தை எப்படி கொண்டுவருவது என்பது பற்றி முதலில் சொல்கிறேன்.

பிசினஸ் ஆரம்பிக்கிறபோது மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது, பணம்தான். என்னிடம் பிரமாதமான ஐடியாக்கள் இருக்கிறது. ஆனால், அதை செயல்படுத்த தேவையான நிதி என்னிடம் இல்லை. வங்கிக்குச் சென்று கடன் உதவி கேட்டால், அடமானமாக தர என்ன சொத்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதிக வட்டிக்கும் யாரிடமிருந்தும் மூலதனக் கடனைப் பெற முடியாது. இந்த நிலைமையில் எனக்குத் தேவையான பணத்தை நான் எப்படித்தான் பெறுவது என்று பலரும் மனம் புழுங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

பிசினஸ் ஆரம்பித்தபோது நானும் ஏறக்குறைய இந்த நிலையில்தான் இருந்தேன். எனக்கு பணத் தேவை என்பது ஆரம்பத்தில் அதிகமாகவே இருந்தது. இந்தப் பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்று யோசித்தபோது, ராபர்ட் டி.ஷூலர் (Rober T. Schuller) சொன்ன ஒரு பொன்மொழி என் நினைக்கு வந்தது. அவர் சொன்ன பொன்மொழி இதுதான்: ‘Nobody has a money problem; only idea problems’. அதாவது, பணம் என்பது யாருக்கும் பிரச்னை அல்ல. ஆனால், ஐடியாதான் பிரச்னை என்று சொல்லி இருந்தார்.

இதற்கு அர்த்தம்? பணம் என்பது உலகம் முழுக்க கொட்டிக் கிடக்கிறது. தொழிலுக்கு தேவையான பணத்துக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. ஆனால், அதை எப்படி கொண்டு வருவது என்பது குறித்த ஐடியாக்கள்தான் நம்மிடம் இல்லை. வித்தியாசமாக யோசித்தால், அடுத்தவர்களின் சட்டைப் பையில் இருக்கும் பணத்தை எப்படி நம் தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

இந்த பொன்மொழியைப் படித்ததும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதை நான் நன்றாக உள்வாங்கிக்

கொண்டேன். தவிர, முழுவதுமாக நம்பவும் செய்தேன். இதனால் எனக்கு மிகப் பெரிய பலன் கிடைத்தது. இந்த பொன்மொழியை நான் நம்பாமல் போயிருந்தால், இதுவும் ஒரு வாசகம் என்று நினைத்து அதை தீவிரமாக கடைப்பிடிக்காமல் போயிருந்தால், என்னால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது.

நான் பிசினஸ் ஆரம்பித்த நாள் தொடங்கி இன்றுவரை எனக்கு எப்போதெல்லாம் பணத் தட்டுப்பாடு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த பொன்மொழி சொல்கிறபடிதான் நடப்பேன். அப்படி யோசிக்கும்போது புதிதுபுதிதாக ஐடியாக்கள் வரத்தான் செய்கின்றன. அதனால் என பணப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவே செய்கிறது.

நான் ஷாம்பு பிசினஸ் ஆரம்பித்தபோது, குறைந்த முதலீட்டில்தான் தொடங்கினேன். சுமார் 15,000 ரூபாய்தான் என் முதலீடாக இருந்தது. இந்த பணத்தை வைத்து, ஷாம்பு தயாரித்து அதை மார்க்கெட்டில் விநியோகிக்க டிஸ்ட்ரிப்யூட்டர்களை தேடிப் போனோம். அவர்கள், ‘‘தம்பி, உங்க பிராண்ட் மார்க்கெட்டுக்கு புதுசா இருக்கு. மக்களுக்கு முன்னபின்ன தெரியாத பிராண்ட்டா இருக்கிறதால, பொருளைக் கடன்ல குடுங்க’’ என்று கேட்டனர்.

சில டிஸ்ட்ரிப்யூட்டர்கள் 30 நாட்களுக்கும், இன்னும் சில டிஸ்ட்ரிப்யூட்டர்கள் 45 நாட்களுக்கும் கடனில் பொருட்களைக் கேட்டனர். பொருளை விற்றபிறகு பணம் வாங்கிக் கொள்ளும்படி சொன்னார்கள்.

டிஸ்ட்ரிப் யூட்டர்கள் கேட்கிற மாதிரி நான் செய்தேன் எனில், ஒரே ஒரு நகரத்துக்கு மட்டுமே என்னால் பொருட்களை தயாரித்துத் தரமுடியும்.என் தொழிற்சாலை ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஓட்ட முடியும். டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் தந்த பொருளை விற்று, அவர்கள் அந்தப் பணத்தை திருப்பித் தந்தபின், மீண்டும் மூலப்பொருட்களை வாங்கி, ஷாம்பு தயாரித்து, டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கு தரமுடியும். மற்ற நாட்களில் எல்லாம் என் தொழிற்சாலை சும்மா இருக்க வேண்டியதுதான். மாதம் முழுக்க வேலை தரமுடியவில்லை என்றால், அவர்கள் எப்படி தொடர்ந்து வேலை செய்வார்கள்?

ஆக, இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தது. ஒன்று, இந்த பிசினஸை நடத்த அதிகமான பணம் வேண்டும். இல்லாவிட்டால் நடத்த முடியாது. இரண்டாவது, அதிகமாக விளம்பரம் செய்து நம் பிராண்டை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் உடனே காசு தந்து எங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவார்கள். இந்த இரண்டுமே ஆரம்ப நிலையில் இருக்கும் எனக்கு சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. என்ன செய்து இந்தப் பிரச்னையை தீர்ப்பது என்று யோசித்தபோதுதான், ராபர்ட் சூலரின் இந்த பொன்மொழி நினைவுக்கு வந்தது.

உடனே என் விற்பனைப் பிரதிநிதிகள் எல்லோரையும் அழைத்தேன். இப்போதிருக்கும் நிலையில் நம்மால் யாருக்கும் கடன் தரமுடியாது. புதிதாக முதலீட்டைக் கொண்டுவரவும் முடியாது. இந்த நிலையில் புதிதாக பணத்தைக் கொண்டுவர என்னதான் வழி என்று யோசித்து சொல்லுங்கள் என்றேன்.

உடனே ஒரு விற்பனைப் பிரதிநிதி, ‘‘சார், நீங்க கவலைப்படாதீங்க. இன்னும் இரண்டு நாள்ல நான் பணத்தோட வர்றேன். என் திறமையை வச்சு முன்னாடியே டிஸ்ரிப்யூட்டர்களை அப்பாயின்ட் பண்ணி பணத்தை வாங்கிட்டு வர்றேன். நாம் ஏன் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டும்?’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவர் போன இரண்டு நாட்களுக்குள்ளேயே அவரிடமிருந்து ஒரு டெலிகிராம் வந்தது. ‘‘அட்வான்ஸ்ட்டாக 7,500 ரூபாய் பணம் வாங்கிவிட்டேன். பொருட்களை தயாரிக்கும் வேலையில் இறங்குங்கள்’’ என்று அந்த டெலிகிராமில் அவர் சொல்லி இருந்தார்.

எங்களுக்கு ஒரே ஆச்சரியம். உடனே எல்லா விற்பனைப் பிரதிநிதிகளையும் அழைத்தேன். ஒரு குறிப்பிட்ட விற்பனைப் பிரதிநிதி மட்டுமே ஏதோ செய்து, பணத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் என்ன செய்தார் என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் எல்லோரும் அதை பின்பற்றலாம் என்று சொல்லி, எல்லா விற்பனைப் பிரதிநிதிகளையும் அழைத்தேன்.

எல்லோரும் வந்தபின், ‘என்ன செய்து டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் அட்வான்ஸ்டாக பணத்தை வாங்கினீர்கள்’ என்று அந்த விற்பனைப் பிரதிநிதியிடம் கேட்டேன். ‘‘மார்க்கெட்டில் அனுபவமிக்க டிஸ்ட்ரிப்யூட்டர்களை நாம் அணுகும்போதுதான் நம்மிடம் கடன் கொடுக் கிறார்கள். அனுபவமிக்க டிஸ்ட்ரிப்யூட்டர்களை அணுகுவதைவிட, தொழில் அனுபவம் கொண்ட அதேநேரத்தில் இந்தத் தொழிலுக்கு புதிதான நபர்களைக் கண்டுபிடித்து, இந்தத் தொழிலில் இருக்கும் வாய்ப்புகளை எடுத்துச் சென்னேன்.

உதாரணமாக, சைக்கிளை வாடகைக்கு விடுகிற வர்களிடம், ‘நீங்கள் ஷாம்பு டிஸ்ட்ரிப்யூட்டராக

மாறலாமே?’ என்று கேட்டேன். அந்த யோசனை அவர்களுக்கு பிடித்திருந்தது. சைக்கிள் வாடகை பிசினஸ் என்பதைவிட ஷாம்பு டிஸ்ட்ரிப்யூட்டர் என்பது அவர்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால், ‘எங்களுக்கு இந்த தொழில் தெரியாதே’ என்றார்கள். ‘கவலைப்படாதீர்கள், நானே உங்களுக்கு சொல்லித் தருகிறேன். அதை படிப்படியாக நீங்களே கற்றுக் கொண்டு, பிற்பாடு நீங்களே இந்த பிசினஸை செய்யலாம். அதுவரை உங்களுக்கு நான் உதவுகிறேன்’ என்று சொன்னேன். ‘இந்தத் தொழிலில் இறங்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்?’ என்று கேட்டார்கள். ‘2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஆகும்’ என்றேன். உடனே ஒருவர் 2,000 ரூபாயும் இன்னொருவர் 5,000 ரூபாயும் அட்வான்ஸ்ட்-ஆக தந்தார். இது மாதிரி யான நிறைய பேரை இனி பிடிக்கப் போகிறேன்’’ என்றார்.

அந்த விற்பனைப் பிரதிநிதி வித்தியாசமாக யோசித்திருந்ததை எங்கள் எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்தது. உடனே மற்ற விற்பனைப் பிரதிநிதிகளும் இந்த கோணத்தில் யோசித்து செயல்பட ஆரம்பித்தார்கள்.

பணம் வந்தவுடன் பொருட்களை தயார் செய்து அதை டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் கொடுத்தோம். அவர்கள் ஷாம்பு டிஸ்ட்ரிப்யூஷன் தொழிலுக்கு புதிது என்பதால், நமது விற்பனைப் பிரதிநிதிகளே அந்த பொருட்களை விற்றுத் தந்தார்கள். மூன்று, நான்கு நாட்களில் அந்த பொருட்களை விற்றுவிட்டு, பணத்தை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க, அட, அவ்வளவு சீக்கிரம் பணம் வந்துடுச்சா? அப்ப இந்தாங்க, அடுத்த செக் என அவர்கள் அடுத்தடுத்து செக் கொடுக்க, எங்களுக்குத் தேவையான பணம் தாராளமாக கிடைக்க ஆரம்பித்தது.

இது ஒருபக்கமிருக்க, நான் என் அளவில் வேறு மாதிரியாக முயற்சித்தேன். அதாவது, என் தொழிலில் முதலீடு செய்யும்படி எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கேட்டேன். பலரும் முதலீடு செய்ய தயங்கினார்கள். முடிவாக ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை நான் அவர்கள் முன்பு வைத்தேன். அதாவது 40,000 ரூபாய் முதலீடு செய்தால், அடுத்த நான்கு மாதங்களில் அந்தப் பணம் திரும்பக் கிடைத்துவிடும். தவிர, கூடுதலாக இன்னொரு 40,000 ரூபாய் கிடைக்கும். அதாவது, நான்கு மாதங்களில் போட்ட முதலீடு 100% லாபத்துடன் திரும்பக் கிடைக்கும் என்று சொன்னேன். இதையும் கேட்டு யாரும் பணத்தைப் போட முன்வரவில்லை.

இறுதியில் என் நண்பர் ஒருவர் ரிஸ்க் எடுத்து, முதலீடு செய்ய வந்தார். அவருக்கு சொன்னபடியே நான்கு மாதத்தில் அசல் 40,000 ரூபாயையும் லாபம் 40,000 ரூபாயையும் திருப்பித் தந்தவுடன் மகிழ்ந்து போனார். உடனே அடுத்த 40,000 ரூபாயைத் தந்தார். அவரைப் பார்த்து இன்னொரு நண்பர், அவரைப் பார்த்து மேலும் சிலர் என ஒரு கட்டத்தில் 125 பேக்டரிகள் நண்பர்களின் பணத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தது. வித்தியாசமாக யோசித்ததன் விளைவாகவே, இதுமாதிரி பணத்தைப் புரட்ட முடிந்தது. கையில் பணமில்லையே, கடன் யாரும் தரமாட்டேன் என்கிறார்களே, வங்கியில்கூட கடன் கிடைக்க மாட்டேன் என்கிறார்களே என்று நான் புலம்பிக்கொண்டே இருந்திருந்தால், நானும் காணாமலே போயிருப்பேன்.

வித்தியாசமான வழிகளில் யோசித்து பணத்தை கொண்டு வர இப்படி சில, பல வழிகள் இருந்தாலும் நீங்கள் பிசினஸ் செய்ய கடன் தர வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இருக்கின்றன. பிசினஸ் கடன்களை பெற இந்த நிறுவனங்களை எப்படி அணுகலாம் என்பது குறித்து அடுத்த இதழில் சொல்கிறேன்.

(ஜெயிப்போம்)

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.

அதிகரித்த உற்பத்தி...சர்க்கரை விலை குறையுமா?

கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடங்கிய சர்க்கரை உற்பத்தி சுமார் 24% அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 30-ம் தேதி வரையிலான அறுபது நாட்களில் 2.36 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் சொல்லி இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 1.89 மில்லியன் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்த விற்பனை ஆண்டில் ஆறாவது ஆண்டாக தொடர்ந்து அதிக சர்க்கரை உற்பத்தி இருக்கலாம்!