‘எல்லாருந்தான் சம்பாதிக்கறாங்க.. எத்தனை பேரு சந்தோஷமா இருக்காங்க...?’

ரொம்ப சரி. யாரெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்..?

‘பணத்தை, கணக்கு பண்ணி செலவு பண்றாங்க பாரு... அவங்க, எப்பவும் சந்தோஷமா இருக்காங்க...’

அதுதான் சூட்சுமம். இது மாதிரி இன்னமும் சில குறிப்புகள். யோசனைகள்னே வச்சுக்குவோமே... இதை எல்லோரும் கட்டாயமா தெரிந்து வச்சுக்குவோம்.

பணத்தை நாம் கையாளும்விதத்திலும் சரி, சேமிக்கும் விதத்திலும் சரி... பணத்தை நாம் நிர்வகிப்பதில் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். நிதியை நிர்வகிக்க நாம் பின்பற்ற வேண்டியது மொத்தம் பத்து கட்டளைகள். இதை நாம் எல்லோருமே கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ‘நிதி’யைப் பொறுத்தமட்டும், அதுதான் ‘மதி!’

1. நிலைமையைப் புரிந்துகொள்வது!

நமது வருமானம் என்ன, தேவைகள் என்ன, இவற்றிலும் உடனடித் தேவைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும், எது தேவை என்பதைவிடவும், இப்போதைக்கு எது தேவையில்லை என்பதில் நிச்சயம் தெளிவு வேண்டும்.

2. கணக்கு பார்ப்பது!

எந்தவொரு செலவுக்கு முன்பும், பின்பும் கணக்கிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் போட்ட பட்ஜெட்டுக்குள் செலவு அடங்கி இருக்கிறதா என்பதை அப்போதைக்கு அப்போதே உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒருவேளை, பட்ஜெட்டைவிடக் கூடுதலாக செலவாகி இருந்தால், இயன்றவரை விரைவில், (At the Earliest Opportunity) வேறு ஏதேனும் செலவைக் குறைத்துக்கொண்டு, கூடுதல் தொகையைச் சரிக்கட்டி விட வேண்டும்.

3. கேள்வி கேட்பது!

பல சமயங்களில், கணவன், மனைவி, மகன், மகள், தாய், தந்தை என்று வேறு யார் மூலமாகவோ செலவு செய்து இருப்போம். செலவுக் கணக்கைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘பெத்தவன் கிட்டயே, செலவுக்குக் கணக்கு கேட்கறான் பாரு... இவன் எல்லாம் ஒரு மவனா..?’ என்று உணர்ச்சி வசப்பட வேண்டாம். ‘டைம் என்ன..? பேப்பர்ல என்ன நியூஸ்..?’ என்பது போல, ‘எவ்வளவு செலவு ஆச்சு..?’ என்பதையும் ‘சாதாரணமாக’ எடுத்துக்கொள்ள வேண்டும். இதில், ‘தன்மானம்’ என்பதெல்லாம், நாமாக சேர்த்துக்கொள்கிற உபரித் தொந்தரவுகள்.

வழக்கமாக வாங்குகிற கடைகளில், ‘இது என்ன விலை’ என்று கேட்பது இல்லை; ரசீதும் பெறுவது இல்லை. தவறு. கேட்டுப் பெற வேண்டும். ‘அப்படி யெல்லாம் சந்தேகப்படலாமா..?’ என்று கேட்பது அறியாமை. ‘சந்தேகம்’ என்கிற பேச்சே எழவில்லை. நம்முடைய செலவை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்கிறோம், அவ்வளவுதான்.

4. ஒப்பிடுவது!

இது அனேகமாக பல குடும்பங்களில் நடைமுறையில் உள்ளது. அதே பொருளுக்கு, சென்ற முறைக்கு இம்முறை, கூடுதலாக அல்லது குறைத்துக் கொடுத்து இருக்கிறோமா என்று ஒப்பிட்டுப் பார்ப்பது. இதற்கேற்ப, நம்முடைய பட்ஜெட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

5. ஆலோசிப்பது!

வழக்கமான செலவுகள் அல்லாத பிற செலவு என்றால், நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கவும். செலவுத் தொகையை வைத்து, எந்தளவுக்குத் தீவிர ஆலோசனை தேவை என்பதை முடிவு செய்யவும்.

வழக்கத்துக்கு மாறான எந்தவொரு செலவாக இருந்தாலும், குறைந்தபட்சம் குடும்ப அங்கத்தினர் எவரிடமாவது சொல்லிவிட்டுச் செய்யவும். இது, ‘கூடாப் பழக்கங்கள்’ நம்மை அண்டாமல் காக்கும்.

6. தீர விசாரிப்பது!

நிலம், வீடு வாங்குவது போன்ற பெரும் தொகை தொடர்பான செலவு என்றால், பலரிடம், பல முனைகளில் தீர விசாரித்தே ஆக வேண்டும். இதில் மெத்தனத்துக்கு இடம் தரவே கூடாது.

உடன் பிறந்தோர், உடன்பணி புரிவோர், நண்பர்கள், அண்டை அயலார் ஆகியோருக்குத் தெரியாமல், ‘காதும் காதும் வச்ச மாதிரி’ செய்து முடிப்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை. பெரிய அளவில் இழப்பு வந்துவிட்டால், வெளியில் சொல்லிக் கொள்ள அவமானப்படுபவர்கள் எத்தனை பேர்..? ஏன் இந்த நிலை..? அவசியம்தானா...?

7. மறு ஆய்வு செய்வது!

‘நான் முடிவு செய்தால் செய்ததுதான். முன்னே வைச்ச காலை பின்னே வைக்க மாட்டேன்...’ என்று வீராப்பு பேசுகிற வேலையெல்லாம் வேண்டவே வேண்டாம். ‘தவறான முடிவு’ என்று தோன்றினால், மறு ஆய்வு செய்ய, மாற்றிக் கொள்ள தயங்கவே கூடாது.

8. மிச்சம் வைக்கப் பழகுதல்!

ஒவ்வொரு முறை செலவு செய்யும்போதும், கையில் கொண்டு செல்லும் பணம் மொத்தத்தையும் மிச்சம் மீதி இல்லாமல் காலி செய்கிற பழக்கம் கூடவே கூடாது.

ஆயிரம் ரூபாய் கொண்டு போனால், ஐந்து ரூபாயாவது மிச்சம் வைக்கப் பார்க்கவும். பை நிறைய பொருட்கள் வாங்கி வந்தாலும், கையில் ‘அரைத் தம்பிடி’யாவது மிச்சம் வச்சுக் கொண்டு வரத் தெரிஞ்சுக்கணும்.

9. கடன் வேண்டாம்!

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக, ‘நாளைக்கு உதவும்’, ‘நமக்கென்று சொந்தமாக இருந்தால் நல்லதுதானே...’ என்கிற வகையில், சொத்துக்கள் வாங்குவதற்காக... கடன் வாங்கலாம் தவறில்லை. அதையும் திருப்பிச் செலுத்த முடியுமா.. என்பதை உறுதி செய்து கொண்டு, தேவையான அளவுக்கு மட்டும் வாங்கலாம்.

10. அறிவுடன் நடந்துகொள்வது!

வேறு ஒன்றும் இல்லை. ‘மனம் போன போக்கிலே’ செலவு செய்வது அறிவுடைமை இல்லை. தேவைக்கும் விருப்பத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து பணத்தை செலவு செய்வதே எப்போதும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.

தேவை என்பது அவசியத்தின் பாற்பட்டது. விருப்பம் - ஆசை வழியே செல்வது. மகாத்மா சொன்னதுதான் - ‘மனிதனின் அவசியத் தேவைகளைத் தீர்த்து வைக்கலாம். அதீத ஆசைகளை யாராலும் தீர்த்து வைக்க முடியாது’. இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்; புரிந்துகொண்டிருக்கிறார்கள்..?

பணம் என்று வந்து விட்டால், அதில் பொதுப் பணம், சொந்தப் பணம் என்கிற வேறுபாடெல்லாம் இல்லை. பொறுப்புணர்வும் நிதானமும் இருந்தாலே போதும். எல்லாம் ‘நல்ல படியாகவே நடக்கும். ஆம். பணத்தை நிர்வகிக்கும்போது நல்ல பக்குவம் அவசியம். எப்போதுமே ‘மதி’யுடன் ‘நிதி’யைக் கையாண்டால் எல்லோருக்குமே நிம்மதிதான்!

(நிறைவுப் பெற்றது)