Published:Updated:

வெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்!

கேண்டில் பிசினஸ்

வெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்!

கேண்டில் பிசினஸ்

Published:Updated:

‘‘கேண்டில் பிசினஸுக்கு இன்னிக்கு நிறைய வரவேற்பு இருக்கு. பிறந்தநாள் கேண்டிலில் இருந்து

வெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்!

ஆரத்தி கேண்டில் வரை, பல தளங்களில் கேண்டிலின் தேவை இருக்கு. அதில் வெரைட்டி காட்டினா, இந்த பிசினஸில் வெற்றி மிக அருகில்தான்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- அளவான புன்னகையும், அளவற்ற நம்பிக்கையும் தந்து பேசுகிறார், சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ‘மிர்ரா கிரியேஷன்ஸ்’ கிராஃப்ட் ஷாப்பின் உரிமையாளர் அமிர்தஜோதி.

வெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்!

‘‘நாலு வருஷம் முன்னாடி வரைக்கும், நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. சைடு வொர்க்கா கிராஃப்ட் பார்த்துட்டு இருந்தேன். ஒரு கட்டத்தில், இந்த கிராஃப்ட்டில் ஏற்பட்ட ஈடுபாடும், அது தந்த வருமானமும் என்னை வேலையை விட வெச்சது. எம்ப்ராய்டரி, ஃபோக் பெயின்ட்டிங்ஸ், டெரக்கோட்டா ஜுவல்லரி, கிட்ஸ் கிராஃப்ட்ஸ், வால் ஹேங்கிங்ஸ், கேண்டில்ஸ் செய்றது மட்டுமில்லாம, பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன்!’’ - அறிமுகம் தந்து, தொடர்ந்தார் அமிர்தஜோதி... 

‘‘மனுஷன் ஒளியை வணங்க ஆரம்பிச்ச காலத்தில் இருந்து இன்று வரை விளக்குகளின் வடிவங்களிலும் பல பரிணாமம். ‘விளக்கு’ என்பதற்கு அறியாமை என்னும் இருட்டை விலக்குதல்னு அர்த்தம். நம் நாட்டில் மட்டுமில்ல... அமெரிக்காவில் ஒவ்வொரு வருஷமும் கொண்டாடப்படும் ‘ஹாலோவீன் தின’த்தன்று, வீட்டில் நல்ல வெளிச்சம் தரும் வகையில் கேண்டில் ஏற்றினால், சுற்றியிருக்கும் கெட்டது ஒழிந்து, நல்லது ஏற்படும் என்பது அந்த நாட்டு மக்களோட நம்பிக்கை.

கார்த்திகை மற்றும் கிறிஸ்துமஸ் நேரங்களில், கேண்டில்களுக்கு டிமாண்ட் அதிகமாகும். தவிரவும், பர்த்டே கேண்டில், ஆரத்தி கேண்டில், ஸ்டார் ஹோட்டல்களில் அலங்கார கேண்டில்னு இதுக்கான தேவை வருடம் முழுசுக்கும் இருக்கும் என்பதால், கியாரன்டி உள்ள தொழில் இது! தண்ணீரில் மிதக்கும் ஃப்ளோட்டிங் கேண்டில், வாசனை பரப்பும் அரோமா கேண்டில், கலர் கேண்டில், வாஸ்து கேண்டில்னு இதில் பல வெரைட்டிகள் உண்டு. ஃப்ளோரல் கேண்டில்கள் மற்றும் அரோமா கேண்டில்களை வீட்டில் ஏற்றும்போது, நற்சிந்தனை உருவாகும்; நற்செயல்கள் நடைபெறும்,  ஐஸ் கேண்டில் (ஐஸ் மோல்டுகளில் உருவாக்கும் கேண்டில்) ஏற்றும்போது, மனதில் சந்தோஷம் நிலைக்கும்னு, கேண்டில் சார்ந்த நம்பிக்கைகள் நிறைய.

வெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்!

வீட்டை அலங்கரிக்கவும், கேண்டில் லைட் டின்னர்களிலும் பில்லர் கேண்டில்கள் பெரிதும் பயன்படுத்தப்படுது. உடலில் டாட்டூஸ் போட்டுக்கொள்வதுபோல, டாட்டூஸ் டிசைன் கொண்ட கேண்டிலும் உண்டு. குழந்தைகளின் விழாக்களுக்கு டெடிபியர் போன்ற டிசைன் கேண்டில்களைப் பயன்படுத்தும்போது, சிலிக்கான், அலுமினியம் இரண்டிலும் மோல்டு செய்யலாம். அலுமினிய மோல்டில் சமயங்களில் மெழுகு வெளியில் வந்துவிடும் என்பதால், சிலிக்கான் மோல்டு பரிந்துரைக்க ஏற்றது!’’ - கேண்டில் மேக்கிங்கின் சேப்டர்களை விளக்கிய அமிர்தஜோதி,

‘‘ஒரு கேண்டில் மேக்கிங் கிளாஸ் முடிச்சுட்டு, வீட்டிலேயே இந்த பிசினஸை ஆரம்பிச்சுடலாம். மார்க்கெட்டிங் கஷ்டமில்லை. ஆனா, வீட்டுக்குள்ளேயே இருந்தா சுலபமும் இல்லை. மேலே குறிப்பிட்ட எல்லா தேவைகளுக்கான கேண்டில்களுக்கும் உரிய இடங்களைத் தேடிப்போய் வாய்ப்பு கேட்கலாம். உதாரணமா, ஆரத்தி கேண்டில்களுக்கு திருமண மண்டப புக்கிங் அலுவலகம், அலங்கார மற்றும் கேண்டில் லைட் டின்னருக்கான கேண்டில்களுக்கு ஸ்டார் ஹோட்டல்கள், பிறந்தநாள் பார்ட்டி கேண்டில்களுக்கு கேக் ஷாப்கள்னு அந்தந்த இடங்களை அணுகி ஆர்டர்களைப் பெறும் வழியை அடையணும். தவிர, இன்னிக்கு எல்லா தொழில்களுக்கும் சிறந்த விளம்பர மற்றும் விற்பனைத்தளமா இருக்கிற இணையத்தையும் பயன்படுத்திக்கலாம்.

ஒரு அலங்கார கேண்டிலுக்கு குறைந்தபட்சம் 40 ரூபாயில் இருந்து விலை வைக்கலாம். வெரைட்டி, ஃபினிஷிங்கை பொறுத்து விலையை அதிகரிக்க லாம். கேண்டில் மட்டுமில்லாம, மற்ற கிராஃப்ட் அயிட்டங்களையும் கத்துக்கிட்டு களத்தில் இறங்கினா, ஆர்டர்களும் நான்-ஸ்டாப் ஆகக் கிடைக்கும். வீட்டில் இருந்தே மாசம் 20,000-க்கும் மேல வருமானம் பெற முடியும்னா, இனியும் தாமதிக்க வேண்டாம்தானே!’’

 - மெழுகை அச்சில் ஊற்றிய வாறே விடை கொடுத்தார் அமிர்தஜோதி.

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism