அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

வழிகாட்டும் ஒலி

"சொந்தக்காலில் நிற்க உதவும் சூப்பர் பிசினஸ்!"

‘‘படிப்பு, வேலை போன்ற காரணங்களால் குடும்பத்தைப் பிரிந்து பெருநகரங்களுக்கு வந்து

வழிகாட்டும் ஒலி

சேர்ந்தவர்கள், பேச்சிலர்கள் மற்றும் வயோதிகர்கள்... இவர்கள் எல்லாம் ஏங்கும் விஷயம்... வீட்டுச் சாப்பாடு. அதுதான் கேட்டரிங் பிசினஸ் தொடங்கும் புள்ளி!’’

வழிகாட்டும் ஒலி

- கேட்டரிங் பிசினஸில் 10 வருடங்கள் அனுபவம் கொண்ட சென்னையைச் சேர்ந்த பாலச்சந்திரன், தொடர்ந்து பேசுகிறார்...

‘‘பெண்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பான வருமானம் கொடுக்கும் தொழில், கேட்டரிங். ஒரு வீட்டில் சராசரியாக நான்கு பேர் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுக்கத் துணிந்தால், நம்பிக்கையுடன் தொடங்கலாம், கேட்டரிங் பிசினஸை! மேலும், பணி ஓய்வு பெற்றவர்களும் கேட்டரிங்கில் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க லாம். அப்படி ஒய்வு பெற்ற அரசு அலுவலர்தான், நான். இப்போது கேட்டரிங் பிசினஸில் பிஸியாக, யாரின் தயவும் இன்றி சொந்தக்காலில் நிற்கிறேன்.

வழிகாட்டும் ஒலி

முதலில் வீட்டுக்கு அருகில் இருக்கும், வீட்டுச் சாப்பாடு கிடைக்காத வாடிக்கையாளர் களைக் கண்டடைந்து, காலை நேரத்தில் டிபன் வகைகள், மதியம் வெரைட்டி சாத வகைகள், இர வில் டிபன் வகைகள் என்று ஆரம்பிக்கலாம். சுவைக்கும் தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போது, கிடைத்த வாடிக்கையாளர்கள் நிரந்தரமாவதுடன், அவர்கள் மூலமே மற்ற வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். படிப்படியாக பிசினஸை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஆண்டு முழுக்க கேட்டரிங் ஆர்டர்கள் எடுக்கலாம். ஆடி, மார்கழி போன்ற முகூர்த்தங்களற்ற மாதங்களிலும், கோயில், திருவிழா பிரசாத ஆர்டர்கள் எடுக்கலாம். எனவே, தடையில்லா வருமானம் தரக்கூடிய பிசினஸ் இது’’ என்ற பாலச்சந்திரன்...

•  தற்போது கேட்ரிங் பிசினஸுக்கு எத்தகைய வரவேற்பு உள்ளது?

•  கேட்ரிங் பிசினஸுக்கு எப்படித் திட்டமிடுவது மற்றும் முதலீடு செய்வது?

•  வீட்டில் இருந்தபடியே கேட்ரிங் பிசினஸை எப்படித் தொடங்குவது?

வழிகாட்டும் ஒலி

•  கேட்ரிங் பிசினஸுக்குத் தேவையான மூலப்பொருட்களை எப்படி குறைந்த விலையில் வாங்குவது?

•  பிசினஸை ஆரம்பித்த பின் அதிக வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது?

•  திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர்கள் பெறுவது எப்படி?

•  கேட்ரிங் பிசினஸில் வெற்றிகரமான தொழிலதிபராவது எப்படி?

- இந்தக் கேள்விகளுக்கு ‘வழிகாட்டும் ஒலி’ குரல் வழியில் ஆலோசனைகள் வழங்குகிறார்.  டிசம்பர் 29 முதல்  ஜனவரி 4 வரை 044 - 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்!

கு.ஆனந்தராஜ் படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்