Published:Updated:

நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் தற்கொலை!- தனித்துவிடப்பட்ட குழந்தைகள்

நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் தற்கொலை!- தனித்துவிடப்பட்ட குழந்தைகள்
நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் தற்கொலை!- தனித்துவிடப்பட்ட குழந்தைகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரி நகரில் வசித்துவந்தவர், ராமச்சந்திரன். இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகள் நிவேதாஸ்ரீ  8-ம் வகுப்பு படித்துவருகிறார். இளைய மகள் அனிதாஸ்ரீ-க்கு 3 வயதாகிறது.  ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ராம்ஜி என்ற பெயரில் ஃபைனான்ஸ் மற்றும் ஏர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்தார். மகேஸ்வரி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டென்டாக வேலைபார்த்துவந்தார்.

இந்த நிலையில், இன்று கணவனும் மனைவியும்  தற்கொலைசெய்து கொண்டாதாகக் கூறப்படுகிறது. தற்கொலைசெய்துகொள்வதற்கு முன்பு  ராமச்சந்திரன்,  திருமயத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். தற்கொலை செய்துகொண்ட தகவலறிந்து காரைக்குடிக்கு வந்த உறவினர்கள், காரைக்குடி காவல்துறைக்குக்கூட தகவல் தெரிவிக்காமல் உடல்களை திருமயம் எடுத்துச்சென்றுள்ளனர்.

இந்நிலையில், திருமயம் போலீஸார் அவர்களது உடலைக் கைப்பற்றி, திருமயம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர். காரைக்குடி வடக்கு மற்றும் திருமயம் காவல்துறையினர், இவர்களது மரணம்குறித்து விசாரணைசெய்து வருகின்றனர். தாய், தந்தை தற்கொலை செய்துகொண்ட நிலையில், குழந்தைகள் நிவேதா ஸ்ரீ, அனிதாஸ்ரீ ஆதரவற்றுள்ளனர்.