Published:Updated:

ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் வாங்கிக் குவித்த சொத்துக்கள்!

Vikatan Correspondent

லோதா கமிட்டிதான் தீர்வா?சுச்சேதா தலால், நிர்வாக ஆசிரியர், மணிலைஃப்.

ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் வாங்கிக் குவித்த சொத்துக்கள்!
ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் வாங்கிக் குவித்த சொத்துக்கள்!

முதலீடு தொடர்பாக போதிய விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தினால், பாடுபட்டு சேர்த்த பணம் பல ஆயிரம் கோடி ரூபாயை பண முதலைகளிடம் தந்து இழந்து வருகிறார்கள் அப்பாவி மக்கள்.

இப்படி நடக்கும் மோசடித் திட்டங்களில் மிக முக்கியமானதும், பெரியதுமான மோசடி, பிஏசிஎல் நிறுவனம் செய்த மோசடி. 

ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் வாங்கிக் குவித்த சொத்துக்கள்!

ஜெய்ப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பிஏசிஎல் நிறுவனம், பேல்ஸ் அக்ரோடெக், பேல்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என பல பெயர்களில் மோசடி செய்தது. அப்பாவி மக்களின் நிலம் மீதான ஆசையைக் குறிவைத்து, கூட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த இருபது ஆண்டுகளாக தட்டிக் கேட்பதற்கு ஆள் இல்லாமல் செயல்பட்டு வந்தது. முதலீடு செய்யும் பணத்துக்கு நிலம் தருவதாகச் சொல்லி 5.85 கோடி மக்களிடமிருந்து முறைகேடாக மொத்தம் ரூ.49,100 கோடியைத் திரட்டியது. அவர்களில் பெரும்பாலானோர் மிகக் குறைவான வருவாய் ஈட்டுபவர்கள். நாட்டின் மிகப் பெரிய பிராபர்ட்டி நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்று பெருமிதப்பட்டார்கள் அவர்கள். ஆனால், இறுதியில் மொத்தமாக ஏமாற்றப்பட்டார்கள். கால் சென்ட் நிலம்கூட யாருக்கும் தரப்படவில்லை. அவர்களுடைய பணமும் திருப்பித் தரப்பட வில்லை.

கிட்டதட்ட 13 வருடங்கள் மிக மெதுவாக செயல்படும் நம் முடைய சட்டங்களை ஏய்த்தபடி தொடர்ந்து மோசடி செய்துவந்த இந்த நிறுவனத்தின் மீது இறுதியாகத் தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, மக்களை ஏமாற்றி மோசடி செய்த ரூ. 55,000 கோடி தொகையை பிஏசிஎல் நிறுவனம் மீண்டும் மக்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும். அப்படி செய்யாதபட்சத்தில் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியம் அதன் அனைத்துச் சொத்துக்களையும் முடக்கி, அந்தத் தொகையை மீட்டு மக்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த மக்கள் எங்கு போய் முறையிட்டும், அவர்களுடைய பணம் திரும்ப கிடைத்தபாடில்லை. அவர்களின் இந்தப் பிரச்னை குறித்த செய்திகள்கூட எப்போதாவது தான் வெளியாகின்றன.

ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் வாங்கிக் குவித்த சொத்துக்கள்!

ஆஸ்திரேலியாவில் சொத்து!

பிஏசிஎல் போன்ற பெரு நிறுவனங்களின் மோசடிகளை விசாரிப்பதில், சிபிஐ, செபி போன்ற பல அமைப்புகளுக்குப் பங்கு இருப்பதால் குழப்பங்களும், விசாரணையில் தாமதமும் ஏற்பட்டுவந்த நிலையில், தி ஆஸ்திரேலியன் என்கிற செய்தித்தாள் ஒரு அதிர்ச்சி செய்தியைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது.  பிஏசிஎல் நிறுவனத்தின் சொந்தக்காரரான நிர்மல் சிங் பங்கூவுக்கும், அவரது குடும்பத்துக்கும் குயின்ஸ்லேண்ட் கோல்டு கோஸ்ட் கடற்கரையில் உளள் ஒரு உல்லாச விடுதியில் ரூ.660 கோடி மதிப்பிலான முதலீடு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இது மட்டுமல்லாது மடகாஸ்கர், துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் அவர்க

ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் வாங்கிக் குவித்த சொத்துக்கள்!

ளுடைய முதலீடு இருப்பதாக அந்தச் செய்தித்தாள் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட்லீயை ரூ.2 கோடி கொடுத்து, பேல்ஸ் நிறுவனத்தின் தூதராக வாங்கி அந்த நாட்டின் நம்பகத்தன்மையைப் பெற்றது பிஏசிஎல். இந்த நிறுவனத்தின் ஏமாற்றுத்தனங்களை அறியாத அவரோ, தான் இந்த நிறுவனத்தின் தூதர் மட்டுமல்ல, பேல்ஸ் குரூப் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவன் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். ஆனால், பிஏசிஎல் மீதான நடவடிக்கைகளுக்குப் பின்னர் அந்த வார்த்தையிலிருந்து பின்வாங்கினார்.

இந்த ஆதாரங்கள் போதாதா?

பிஏசிஎல் நிறுவனத்தின் மீது கறுப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இந்த ஆதாரங்கள் போதாதா? ஆனால், ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளோ, “பங்கூ ஒரு மோசடிக்காரர் என இந்திய புலனாய்வுத் துறை ஆணையத் திடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் மட்டுமே அவர் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கூறிவிட்டது. அதுவும் இன்று வரை நடந்தபாடில்லை.

இந்தியச் சட்டங்களும், இங்கு நடக்கும் விசாரணைகளும், எடுக்கப்படும் நடவடிக்கைகளும் எல்லோரும் அறிந்ததே. 30 வருடங்களுக்கு முன் நடந்த போஃபர்ஸ் ஊழலிலிருந்து சமீபத்திய ஸ்பீக் ஏசியா, சிட்டி லிமோசைன் என எத்தனையோ ஊழல்களைப் பார்த்து விட்டோம். சிட்டி லிமோசைன் நிறுவன மோசடிக்குக் காரணமான அதன் நிறுவனர் சையத் எம் மசூத் (சக் தே இந்தியா படத்தை தயாரித்தவர், இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நெருங்கிய தோஸ்து இவர்!) ரூ 1,300 கோடி வரை மோசடி செய்ததாக எஸ்.எஃப்.ஐ.ஓ.
(Serious fraud investigation office) புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.900 கோடி மதிப்பிலான பணம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட் டதாகவும் ஒரு அரசியல்வாதி மூலம் தெரிய வந்திருக்கிறது. ஸ்விஸ் பேங்கில் மசூத்துக்கும், அவர் மனைவிக்கும் கணக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் மோசடி செய்த தொகை ரூ.500 கோடியிலிருந்து ரூ.1,000 கோடி அளவில்தான் இருக்கும் என்று சில செய்தித் தாள்கள் தகவல் வெளியிட் டுள்ளன. அப்படியானால், மீதப் பணமெல்லாம் எங்கு போனது?

சையத்துக்கு எதிராக 2003-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டு, மூன்று ஆண்டுகளில் அந்த வழக்கு நீர்த்துப் போனது. ஏமாற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. இவர் மீது போடப்பட்ட நூற்றுக்கும் மேலான வழக்குகள் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படவுள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற முன்னிலையில் மேல்முறையீடு செய்யப்படும். இப்படியே காலம் மட்டுமே நகரும். வழக்கில் எந்த முன்னேற்றமும் இருக்காது. இப்படி இந்தியாவில் நடந்த ஊழல்கள் மீதான விசாரணைகள் அனைத்தும் குழப்பங்களாலும், கூட்டுச் சதியினாலும் அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ரோகாட்டரி கடிதம் (Rogatory letter) சொதப்பல்களாலும் இன்று வரை முடியாமல் இழுத்தடிக் கப்பட்டு வருகின்றன. குற்றவாளி களும் தப்பித்து வருகிறார்கள் என்கிறபோது பிஏசிஎல் மோசடியில் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?

ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் வாங்கிக் குவித்த சொத்துக்கள்!

நம்பிக்கைத் தருமா லோதா கமிட்டி?

ஆனால், பிஏசிஎல் விஷயத்தில் சில மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. பிஏசிஎல் மீதான விசாரணையை முன்னெடுக்க முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் செபி அமைப்பின் இரு மூத்த அதிகாரிகளும் உள்ளனர். பிஏசிஎல் நிறுவனத்திடமிருந்து நிலங்களையும், பணத்தையும்  மீட்டு உரியவர்களுக்கு திருப்பி அளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கு தேவையான ஆதரவும், அதிகாரமும் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கமிட்டியினால் பிஏசிஎல்லுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துக்களை அவை விற்கப்படுவதற்குமுன் இந்தியா கொண்டுவர சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆணையத்தை உடனடியாக செயல்படவைக்க முடியுமா என்பது தெரியவில்லை. மேலும் ஏன் கறுப்புப் பண தடுப்பு சட்டத்தின்படி இந்த மோசடி மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன.

மேலும், இது போன்ற ஊழல்கள் மீதான நடவடிக்கைகளும் ஊழல்களும் பல அமைப்புகளின், அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ ஒப்புதல்கள் கிடைத்து விசாரணை முடிவதற்குள் பல ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன. பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு இழப்பும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுகிறது. நாளுக்கு நாள் பணத்தின் மதிப்பு குறைந்துவரும் நிலையில், இது போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடி வழக்குகள் காலம் தாழ்த்தாமல் விசாரிக்கப்பட வேண்டும். காரணம், காலம் தாழ்த்தப்பட்டு கிடைக்கும் நீதி மட்டுமல்ல, காலதாமதமாகக் கிடைக்கும் பணத்தினாலும் எந்தப் பயனும் இல்லை.

எனவே, பிஏசிஎல்-க்கு மட்டுமல்ல, எந்தவொரு பெரிய மோசடியோ, ஊழலோ, அதனைத் தடுக்கவும் உடனடியான நடவடிக்கைகள் எடுக்கவும் தேவையான பலம் இந்த கமிட்டிக்கு இருக்க வேண்டும். அதற்கு இந்த லோதா கமிட்டியுடன் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைகோர்க்க வேண்டும். அப்போதுதான் பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் விரைவில் கைப்பற்றப்பட்டு, முதலீட்டாளர்களின் பணமும் திரும்ப வழங்கப்படும்.

பிஏசிஎல் விவகாரத்தில் லோதா கமிட்டிக்கு கிடைக்கும் வெற்றிதான் இனிவரும் மோசடிகள் பற்றி கவலையில்லாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு உண்டாக்கும். அப்படியொரு நல்ல காலம் பிறக்குமா? அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்குமா?

நன்றி: Moneylife

தொகுப்பு: ஜெ.சரவணன்

மொபைல் மூலம் பணப் பரிமாற்றம்: எஸ்பிஐ முதலிடம்!

மொபைல் போன் மூலம் பணப் பரிமாற்றம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை வழங்குவதில் எஸ்பிஐ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த 2015 டிசம்பரில் மட்டும் எஸ்பிஐ வங்கி தனது மொபைல் சேவை மூலம் 17,636 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்திருக்கிறது. மொபைல் பணப் பரிமாற்ற சந்தையில் 36 சதவிகிதத்தைப் பெற்று முன்னணியில் இருக்கிறது எஸ்பிஐ வங்கி. ஐசிஐசிஐ வங்கி ரூ.10,577 கோடியும், ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.8,716 கோடியும், ஆக்ஸிஸ் வங்கி ரூ.6,267 கோடியும், கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.2,324 கோடியும் பணப் பரிமாற்றம் செய்துள்ளன.