Published:Updated:

நாணயம் லைப்ரரி: உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் 12 வழிகள்!

நாணயம் லைப்ரரி: உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் 12 வழிகள்!
நாணயம் லைப்ரரி: உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் 12 வழிகள்!

நாணயம் லைப்ரரி: உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் 12 வழிகள்!

புத்தகத்தின் பெயர்: எவ்ரி டே என்லைட்மென்ட் (Everyday Enlightenment)

ஆசிரியர்: டேன் மில்மேன்

பதிப்பாளர்: Grand Central Publishing

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் டேன் மில்மேன் எழுதிய ‘எவ்ரி டே என்லைட்மென்ட்’ எனும் தனிமனித உயர்வுக்கு வழிவகுக்கும் பன்னிரண்டு வழிகளைச் சொல்லும் புத்தகத்தை. 

டேன் மில்மேனுக்கு இந்த வழிகள் தெரிந்த சூழல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இழப்பின் உச்சத்தில் இருந்த நாளின் இரவில் என்று சொல்கிறார். பெரும்பாலும் நம்மில் பலரும் ஆன்மிகத்தில் உயர்நிலை அடைவதைப்பற்றியும் (ஸ்ப்ரிச்சுவல் முன்னேற்றம்), பொருளாதார ரீதியான முன்னேற்றம் அடைவதைப் பற்றியும் (மெட்டீரியலிஸ்டிக் முன்னேற்றம்)  கவலை கொண்டு இரண்டுக்கும் இடையே  சர்வசதா காலமும்அல்லாடிக்கொண்டிருக்கின்றோம்.

இந்தப் புத்தகத்தில் நான் பல இடங்களில் ஆன்மிகத்தில் உயர்வையும், பொருளாதார ரீதியான உயர்வையும் மாற்றிமாற்றி ஒரே பொருளைக் குறிப்பிடப்பிடுவதைப் போல் உபயோகப்படுத்தியுள்ளேன். இந்த மெட்டிரியலிஸ்டிக் உலகத்தில் நம்மைப் போன்ற பலரும் பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய ஆன்மிக ரீதியான முன்னேற்றத்தை  பெற்றுக் கொள்வதற்கான நிலைமையில் தானே இருக்கி்றோம் என்று புத்தகத்தின் ஆரம்பத்திலேயே உண்மையைப் போட்டு உடைக்கிறார்.

நாணயம் லைப்ரரி: உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் 12 வழிகள்!

பொருளாதார ரீதியான வெற்றிக்காக நாம் அன்றாடம் போராடும்போதே நாம் ஆன்மிக ரீதியான வளர்ச்சியை பெறுவதற்கான ஆயத்த நிலையைப் பெறுகி்றோம் என்கிறார் ஆசிரியர். மனித வாழ்வில் தோல்வியும் மரணமும் இல்லாவிட்டால் மெய்ப்பொருள் பற்றிய சிந்தனை உலகில் ஒருவருக்குக்கூட இருக்காது.

மேலும், வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை ஒருவரும் சிந்திக்கவும் மாட்டார்கள். பொருளாதார ரீதியான போராட்டங்களை எதிர்கொள்ளும்போதே அது தரும் வலிகள் நம்மில் பலரை ஆன்மிகத்தை நோக்கி நடக்கச் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  இந்தப் பொருளாதார போராட்டங்களில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையிலேயே மெய்ப் பொருளை நாம் கோயிலிலும், சர்ச்சுகளிலும், நீண்ட பெரிய பந்தல்களின் கீழேயும் தேட ஆரம்பிக்கிறோம்.

ஆனால்,  அந்தச் சூழ்நிலையில் அது நமக்கு அந்த இடங்களில் தெரிவதும், இல்லை கிடைப்பதும் இல்லை என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

பொருளாதார போட்டிநிலவும் உலகில் அன்றாட வாழ்வே ஒரு மெய்ப்பொருள் காணும் வேள்வியாகத் திகழ்கிறது. காலையில் எழுந்து தியானம் செய்யும் வேளையில் மூன்று வயது மகள் அருகில் வந்து ஆடையை பிடித்து இழுத்து அப்பா என்று கூப்பிட்ட வேளை யில் ஆசிரியருக்கு கடுமையான கோபம் வந்ததாம். தொந்தரவு செய்யாமல் அமைதியாய் இரு, நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன் என்று எச்சரித்தாராம். அதன் பின்னர் சட்டென புரிந்த விஷயம் என்னவென்றால், காலையில் அப்பாவின் அரவணைப்பு தேடி வரும் மகளை அள்ளியணைத்துக் கொள்வதே சிறந்த தியானம் என்பதுதான் என்கிறார் ஆசிரியர்.

நீங்கள் எவ்வளவு புத்திசாலி யாக இருந்தாலும் சரி, அனைவரையும் கவரும் நபராக இருந்தாலும் சரி, தனித் திறமைகளைக் கொண்டவராய் இருந்தாலும் சரி, ஒரு கணம் நீங்கள் உங்களுடைய சுய மதிப்பை பற்றி சந்தேகப்பட்டு விட்டால் அது பெரிய அளவில் உங்களுடைய முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாகிவிடும். என்னால்  முடியுமா? நான் இதற்குத் தகுதியானவனா? என்னை நம்பி இவர்கள் இந்தப் பதவியை கொடுப்பார்களா? என்ற தகுதி குறித்த கேள்விகளை ஒரு போதும் மனதில் கொள்ளாதீர்கள். 

வாழ்க்கை என்பது நிறைய வாய்ப்புகளையும் பரிசுகளையும் தரக்கூடியது என்பதை உணர்ந்திடுங்கள். ஒருபோதும் தகுதி குறித்த சுய சந்தேகங்களைக் கொண்டிராதீர்கள். அதுவே உங்களுடைய முன்னேற்றத்துக்கு முதல் தடையாகிவிடும் என்கிறார் ஆசிரியர்.

உங்களுக்குள் எக்கச்சக்கமான திறமைகள் ஒளிந்து கொண்டிருக் கிறது என்பதை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். இதுவரை வெளிக்கொணரப் பட்டவை சிலவாகவும் பல வெளியில் தெரியாமலும் இருக்கும் என்பதனை நினைவில் கொண்டே செயல்படுங்கள். எல்லோரிடத்திலும் மிகவும் அதிக அளவிலான திறமைகள் உறைந்து கிடக்கின்றன. வெளிப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அவை நிச்சயம் வெளிவரவே செய்யும் என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் 12 வழிகள்!

உங்கள் ஆயுசு முழுவதற்கும் உங்கள் கூடவே வருவது எது தெரியுமா? உங்கள் உடம்புதான் இல்லையா! அதனால் அதனை தேவையான அளவுக்கு சிறப்பாக வைத்திருப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள் என்கிறார் ஆசிரியர். உங்கள் உயிரின் வீரியம் உடம்பின் மூலமே வெளிப்படும். அதற்குத் தேவையான உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும் என்பதை மறவாதீ்ர்கள். இதற்குண்டான பல பயிற்சிகளையும் அவர் சொல்லியுள்ளார்.

பணம் என்பது கடவுளும் இல்லை; சாத்தானும் இல்லை என்று சொல்லும் ஆசிரியர், பணம் என்பது ஒரு சக்தி. அது உங்களின் அடிமையாக வேலை செய்யவும் தயாராய் இருக்கும்.உங்களை அடிமைப்படுத்தி வைக்கவும் தயாராய் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நான் அடையவேண்டிய எல்லைகள் என்ன என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படும் பட்சத்தில் பணத்துக்கு குறைவிருக்காது. அப்படி குறைவில்லாத நேரத்தில் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பொருளாதார வெற்றியையும் ஆன்மிக வெற்றியையும் ஒருசேரப் பெற முடியும் என்கிறார் ஆசிரியர்.

உலகத்தை உங்கள் மூளை எனும் ஜன்னலின் மூலமே பார்க்கிறீர்கள். உங்கள் மூளை எவ்வளவு சுத்தமாக இருக்கின் றதோ அந்த அளவுக்கு மட்டுமே தெளிவாக உலகம் உங்களுக்குத் தெரியும். எனவே, மூளையை தெளிவாக்குங்கள் என்கிறார் ஆசிரியர்.

உள்ளுணர்வு என்பது மனிதனுக்கே உள்ள மகத்தான பரிசு. உங்கள் உள்ளுணர்வை வளர்தெடுக்க முதலில் அதனை நீங்கள் நம்பவேண்டும். நீங்களே உங்கள் உள்ளுணர்வை நம்பா விட்டால் யார் நம்புவார்கள். எனவே, உள்ளுணர்வை முழுமை யாக நம்புங்கள் என்கிறார்.

அதே போல் உங்கள் உணர்ச்சி களையும் (எமோஷன்கள்) மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எமோஷன்கள் ஒரு கடலின் அலைகளைப் போன்றவை. அதுவாகத் தோன்றி அதுவாக அடங்கும் இயல்புடையது. அதுவாக வருவதால் அதனை கட்டுப்படுத்த முடியாது. எமோஷனை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அதற்கு நீங்கள் செய்யும் எதிர்வினையை (ரெஸ்பான்ஸை) மட்டுமே நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

மோஷன்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அதே சமயம் அது உங்கள் வாழ்க்கையை கைப்பற்றி கட்டுப்படுத்தி விடா மல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

பயம் என்பது ஒரு நல்ல வேலைக்காரன். ஆனால், அது மோசமான முதலாளி என்று சொல்லும் ஆசிரியர், பயம் என்பது ஒரு சுவர் அல்ல. ஒரு சிறிய தடையே. துணிவு என்பதே பயத்துக்கு நீங்கள் வைத்திருக்கும் மருந்தாகும். துணிவு என்பதை பயமின்மை என எடுத்துக் கொள்ளாதீர்கள். பயத்தை வெற்றிகொள்ள உதவுவதே துணிவு என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி: உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் 12 வழிகள்!

அன்பு என்பது வாழ்க்கையின் ரகசியம் என்பதை உணருங்கள். பயத்தையும் தனிமையையும் விரட்டும் மாமருந்து அன்பாகும். அன்பு என்பது செயல்களால் வெளிப்படுத்தப்படுவது என்பதை உணர்ந்து செயல் படுங்கள். அன்பாக இருத்தல் உங்களுக்கு ஒரு போதும் தீங்கு செய்யாது. இந்த உலகத்துக்கு நீங்கள் வந்ததற்கான காரணம் உங்களை நீங்களாக கண்டடை வதற்குத்தானே தவிர உங்களை விட உயர்ந்த ஒருவரை கண்டு அடைவதற்காக அல்ல. எனவே, அன்பு செய்தல் என்பதை ஒரு தொடர் காரியமாகச் செய்யுங்கள் என்கிறார் ஆசிரியர்.

இறுதியாக, இந்த உலகம் உங்களை ஆளாக்கியது. சம்பாதித்தீர்களோ இல்லையோ, வெற்றிபெற்றீர்களோ இல்லையோ, இந்த உலகுக்கு ஏதாவது ஒன்றை செய்யுங்கள். அடுத்தவருக்கு உதவுதல் என்பதை கொள்கையாக கொள்ளுங்கள். உதவி செய்யும் வேளையிலேயே நீங்கள் நிச்சயமாய் வளர ஆரம்பிப்பீர்கள் என்கிறார் ஆசிரியர்.

இறுதியாக ஆசிரியர் சொல்வது, உலகத்தில் எதுவும் தனிமனிதனுக்கு தடைபோடுவது இல்லை. ஏனென்றால் மனிதனை விட சக்திகொண்ட எதுவுமே உலகில் இல்லை. இதனைப் புரிந்துகொண்டாலே நமக்கு வெற்றிதான் என்று முடிக்கிறார்.

எளிய நடையில் எழுதப்பட்டி ருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படிக்கலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப்  புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

பணக்கார விவசாயிகளை கண்காணிக்கும் வரித் துறை!

ரூபாய் 1 கோடிக்கு மேலாக விவசாய வருமானத்தைக் காட்டிய பெரும் பணக்கார விவசாயிகள் பற்றி கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய அரசாங்கம். கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ.1 கோடி என பலரும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

2007-08 முதல் 2015-16 வரையிலான எட்டு ஆண்டுகளில் சுமார் 2,746 பேர் விவசாயத்தின் மூலம் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக கணக்கு காட்டி இருக்கின்றனர். இதில் 1,080 பேர் 2011-12 முதல் 2013-14 வரையிலான காலத்தில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருப்பதாக மத்திய நேரடி வரி வாரியம்  தெரிவித்துள்ளது. இதுவரை விவசாய வருமானம் எவ்வளவு இருந்தாலும் அதற்கு எந்த வரியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

அடுத்த கட்டுரைக்கு