Published:Updated:

உள்ளம் கேட்குமே... 'மோர்மிளகா'!

உள்ளம் கேட்குமே... 'மோர்மிளகா'!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளம் கேட்குமே... 'மோர்மிளகா'!

ஆன்லைன் ஃபுட் பிசினஸில் கலக்கும் பெண்கள்...பிசினஸ்!

உள்ளம் கேட்குமே... 'மோர்மிளகா'!

ஆன்லைன் ஃபுட் பிசினஸில் கலக்கும் பெண்கள்...பிசினஸ்!

Published:Updated:
உள்ளம் கேட்குமே... 'மோர்மிளகா'!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளம் கேட்குமே... 'மோர்மிளகா'!

ஃபுட் பிசினஸை `ஆப்' மற்றும் `வெப்சைட்' வெர்ஷனில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் ‘மோர்மிளகா’ டீமை சேர்ந்த சென்னைப் பெண்கள்!

‘‘எனக்குத் தெரிஞ்ச ஒரு சமையல் மாமி, தினமும் ஒரு வீட்டுக்குப் போய் சமைச்சுத் தருவாங்க. தன் கைப்பக்குவத்தையே முதலீடாக்கின அவங்க சாதுர்யத்தோட டெக்னலாஜிக்கல் வெர்ஷனா யோசிச்சதுதான், ‘மோர்மிளகா’. அதாவது, ஒருத்தர் வீட்டுக்குப்போய் நாம சமைக்காம, நம்ம வீட்டில் சமைக்கிறதையே கூட ரெண்டு பேருக்கு சேர்த்து சமைச்சு, அதை கஸ்டமர்ஸுக்கு சப்ளை பண்றது. அந்த கஸ்டமர்ஸை தெரிஞ்சவங்க, உறவினர்கள், நண்பர்களில் தேடாம, இணையத்தில் சந்திக்க நினைச்சதுதான் அடுத்த ஹைலைட்!’’

- சுவாரஸ்யமாக ஆரம்பித்தார் 'மோர்மிளகா' டீமில் ஒருவரான விஜயலட்சுமி.

உள்ளம் கேட்குமே... 'மோர்மிளகா'!

‘‘நான், என் தோழிகள், தோழிகளின் தோழிகள்னு சிலர் இணைந்தோம். பிசினஸின் முதல் கட்டமா, என் கஸின் உதவியோட ‘மோர்மிளகா’வுக்கு என ஒரு `மொபைல் ஆப்' மற்றும் `வெப்சைட்' உருவாக்கினோம். வீட்டில் சமைக்கும் உணவுகளை போட்டோ எடுத்து, ஆப் மற்றும் வெப்சைட்டில் அப்லோடு செய்வோம். அதைப் பார்த்துட்டு, கஸ்டமர்ஸ் தங்களுக்குப் பிடிச்ச உணவை ஆர்டர் செய்வாங்க. அதை அவங்க வீட்டிலேயே டெலிவரி செய்துடுவோம். இதுதான் ‘மோர் மிளகா’வோட வொர்க்கிங் சிஸ்டம்’’ எனும் விஜயலட்சுமி, சென்ற வருடம் ஜூலை மாதம் இதை ஆரம்பித்திருக்கிறார்.

‘‘ஆரம்பத்தில் எங்களுக்கு கஸ்டமர்களா வந்த சிலர், பின்னர் ‘நாங்களும் சமைச்சுத் தர்றோம்’னு பார்ட்னர்களா சேர்ந்துக்கிட்டாங்க. இப்போ 10 பெண்கள் இதில் கலக்கிட்டு இருக்கோம். மயிலாப்பூர், மந்தைவெளி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை... இந்த ஏரியா மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்தான் இப்போதைக்கு எங்க பிசினஸோட கவரேஜ் எல்லை. 10 பேரும் இந்த ஏரியாவுக்குள்தான் இருக்கிறோம். கஸ்டர்மர்ஸும் பெரும்பாலும் இந்த ஏரியாவுக்குள் இருந்துதான் ஆர்டர் செய்வாங்க.

நாங்க 10 பேரும், மறுநாளுக்கு நாங்க என்ன சமைக்கவிருக்கோம் என்பதை முதல் நாள் மதியம் 3 மணிக்குள் வெப்சைட், `ஆப்'பில் அப்டேட் செய்துடுவோம். அந்த மாலையில் இருந்தே ஆர்டர்கள் துவங்கிடும். டெலிவரிக்கு இப்போதைக்கு ரெண்டு பேர் வேலைபார்க்கிறாங்க. மினிமம் ஆர்டர் 80 ரூபாய்க்கு இருந்தாலே டோர் டெலிவரி செய்றோம். சைவ உணவுகள் மட்டும்தான் சமைக்கிறோம். சவுத் இந்தியன் மற்றும் நார்த் இந்தியன் டிஷ்கள்தான் இப்போதைக்கு செய்து கொடுக்கிறோம்’’ என்ற சாந்தி தந்த மெனு கார்டைப் பார்த்தோம். வெரைட்டி ரைஸ்... ஆட் ஆன்ஸ், முருங்கைக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், சௌசௌ - கேரட் கூட்டு, தக்காளி ரசம் காம்போ, கேப்ஸிகம்-ஆனியன் புலாவ், புல்கா - ஆலூ கோபி மசாலா என்று மயக்குகிறது மெனு.

மோர்மிளகா’ பெண்களிடம் பேசினோம்.

‘‘தினமும் வீட்டுக்கு சமைக்கிறதையே கொஞ்சம் எக்ஸ்ட்ராவா சமைக்கிறோம் அவ்ளோதான். ஆனா, இதுல கிடைக்கிற வருமானம் எங்களுக்குத் தந்திருக்கிற தன்னம்பிக்கை பெருசு. ஹோம்மேக்கர்ஸான நாங்க இப்போ பிசினஸ் விமன். சராசரியா ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 800 வரை சம்பாதிக்க முடியும். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பணத்தைவிட முக்கியமான விஷயம், பாராட்டு. எவ்ளோதான் ஆசை ஆசையா சமைச்சாலும், ‘சூப்பர்’னு வீட்டில் ஒரு பாராட்டு கிடைக்காது பெரும்பாலான பெண்களுக்கு. ஆனா, எங்களோட வெப்சைட்ல ‘ரசம் அமிர்தமா இருந்தது’, ‘சாம்பார் சான்ஸே இல்லை’னு எல்லாம் கஸ்டமர்ஸ் கமென்ட் பண்ணும்போது, அந்த அங்கீகாரம் எங்களுக்கு பெரிய உற்சாகமா இருக்கு’’ என்கிறார்கள் மகிழ்வும் நெகிழ்வுமாக.

ரிட்டயர்ட் தம்பதிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பேச்சிலர்ஸ் என அனைத்துத் தரப்பிலும் கஸ்டமர்களை கொண்டுள்ளது ‘மோர்மிளகா’. ‘‘சனி, ஞாயிறு நிறைய ஆர்டர்கள் வரும். வழக்கமா சமைக்கும் சாம்பார், குழம்பு, பொரியல்னு நிறுத்திக்காம, கண்டதிப்பிலி ரசம், பிரண்டைத் துவையல்னு நகர வாழ்க்கையில் காணாமல்போன உணவு வகைகளையும் எல்லாம் எங்க மெனுவில் சேர்க்கிறதால, கஸ்டமர்கள் கூடிட்டேதான் இருக்காங்க. டெலிவரிக்கு ஆள் போதவில்லைனாலோ, பசங்க வேலைக்கு வரலைன்னாலோ நாங்களே கிளம்பிடுவோம். அந்த பெர்ஃபெக்‌ஷனும் எங்க ப்ளஸ். ஆர்டர் வராத நாள்னு ஒருநாள்கூட கிடையாது. சென்னை வெள்ளத்தில் மக்கள் உணவில்லாம தவிச்சப்போ, நாங்க எல்லோரும் எங்க வீட்டுல இருந்த சமையல் பொடிகளைக்கொண்டு வெரைட்டி ரைஸ்செய்து, பலருக்கும் தந்து உதவினோம்’’ எனும் உஷா, ரேவதியின் புன்னகையில் பெருமிதம். 

‘‘சீக்கிரமே டின்னரும் ஆர்டர் செய்யலாம் ‘மோர்மிளகா’யில்!’’ என்று கியாரன்டி தருகிறார்கள் கரண்டி பெண்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மு.சித்தார்த், படம்:மா.பி.சித்தார்த்