கடந்த பல வாரங்களாக பிசினஸ் சூட்சுமங்களை இந்தத் தொடரில் சொல்லி வந்தேன். இப்போது

வாசகர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

? புதிதாக பிசினஸ் தொடங்கத் திட்டமிட்டு வருகிறேன். எந்த தொழிலை தொடங்கலாம், எப்படி தொடங்கலாம் என்று சொல்லுங்கள்.

@ - பாலா

‘‘நீங்கள் உங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உங்களுக்கு எவ்வளவு தொழில் அனுபவம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. தொழில் தொடங்குவதற்குத் தேவையான முதலீடு, பயிற்சி போன்ற விஷயங்கள் பற்றியும் நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. உங்களுக்கு நான் எந்த தொழிலை சிபாரிசு செய்வது?

முதலில் உங்களுக்கு எந்த விதமான தொழில்களில் விருப்பம் இருக்கிறது என்று பாருங்கள். எல்லாருக்கும் எல்லா விதமான தொழில்களும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உங்களுக்குப் பிடித்தமான தொழில்களைக் கண்டுபிடிக்க சந்தைக்குச் செல்லுங்கள். தொழில் செய்கிறவர்களிடம் பேசுங்கள். ஒன்றுக்கு பத்து பேரைப் பார்த்து பேசினால், எந்தத் தொழில் எப்படி போகிறது என்பது உங்களுக்குப் புரியும்.

ஒருவர் தனக்கேற்ற தொழிலை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பது பற்றி இந்தத் தொடரில் விளக்கமாக எழுதி இருக்கிறேன். கூடிய விரைவில் இந்த தொடர் கட்டுரை ஒரு புத்தகமாக வெளிவரும். புத்தகமாக வந்தபிறகு அதை வாங்கிப் படிக்கவும். அப்போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். அதுவரை தொழில் தொடங்க நினைக்கும் உங்கள் எண்ணத்தை மட்டும் மாற்றிக் கொண்டுவிடாதீர்கள்.’’

? கடந்த 30 வருடங்களாக கப்பல் துறையில் வேலை பார்த்துவிட்டு, இப்போது துபாயில் ஒரு டிரேடிங் கம்பெனி தொடங்கி இருக்கிறேன். வட கிழக்கு ஆப்பிரிக்காவை மையமாக வைத்து சலவை சோப்பைத் தயாரித்து விற்கும் தொழிலைத் தொடங்கி இருக்கிறேன்.

எங்கள் தயாரிப்பு முன்னணி பிராண்ட்-ன் தயாரிப்பை விட சிறப்பாக உள்ளது. முன்னணி பிராண்ட் சோப்பானது மேலட்டை கூட இல்லாமல் இருக்கிறது. ஆனால், அதுதான் 85 சதவிகித மார்க்கெட் ஷேரை வைத்திருக் கிறது. நீண்ட காலமாக இந்த பிராண்ட் இருப்பதால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. பெரிய நிறுவனம் என்பதால், நிறைய உற்பத்தி செய்து கடைகளில் அடுக்கிவிடுகிறது.

எங்களுடைய தயாரிப்பை கடைகளில் விநியோகித்து சர்வே செய்து பார்த்ததில், விநியோகஸ்தர்களும் மக்களும் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள். இங்கு ஒரு ஆண்டுக்கு 8000 முதல் 9000 டன் சலவை சோப்பு விற்பனை ஆகிறது. இதில் 10%, அதாவது 800 டன் அளவுக்கு விற்பனையைப் பிடிக்க என்ன வழி என்று சொல்லுங்கள். தவிர, மொத்த விநியோகஸ்தர்கள் கடனுக்கு பொருளைக் கேட்பதும், பேரம் பேசி விலை குறைப்பதும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. நான் என்ன செய்யலாம்?

@ - ஏ.எஸ்.சுகுமார்,துபாய்.

‘‘நமது போட்டியாளர்களை நாம் எப்போதுமே குறைவாக எடை போடக் கூடாது. நீங்கள் சொன்ன அந்த முன்னணி நிறுவனம் தயாரிக்கும் சோப்பு நன்றாக இருக்கலாம். அதனால் மக்கள் அதை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கலாம். சோப்புக்கு மேலட்டை இல்லை என்பதாலேயே அது விற்பனைக்கு பாதகமான ஒரு விஷயமாக அமைந்துவிடாது. சோப்பின் மீது ஒரே ஒரு எழுத்து எழுதி இருந்தால், இது அந்த பிராண்டின் சோப்புதான் என்பதை மக்கள் புரிந்துகொண்டு விடுவார்கள்.

எனவே, அந்த சோப்பைவிட நீங்கள் தயாரிக்கும் சலவை சோப்பு மிகத் தரமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் முதல் நோக்கமாகக் கொள்ளுங்கள். தரத்தில் சிறு குறை இருந்தாலும், உங்கள் தயாரிப்பை மக்கள் எளிதில் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.

அடுத்த முக்கியமான விஷயம், விநியோகம். எந்தெந்த வகையில் எல்லாம் சந்தையில் உங்கள் தயாரிப்புகளை கொண்டு போய் சேர்க்க முடியுமோ, அந்தந்த வகையில் கொண்டு செல்லுங்கள். போட்டி நிறுவனத்துக்கு சமமாக நீங்களும் விநியோகம் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் பொருளானது எல்லோரது கண்ணிலும் பட்டு, அதை வாங்கவும் செய்வார்கள்.

மூன்றாவது முக்கியமான விஷயம், நீங்கள் தொழில் செய்ய விரும்பும் சந்தையில் உள்ள நடைமுறைகளை நீங்கள் பின்பற்றித்தான் ஆகவேண்டும். பொதுவாக, 30 நாள் கடனில் பொருளை வாங்குவது நீங்கள் இருக்கும் சந்தையில் நடைமுறை என்றால், ஆரம்ப காலத்தில் முடிந்தவரை அதை ஏற்றுக் கொண்டு, படிப்படியாக அதிலிருந்து வெளியே வரப் பாருங்கள். ‘30 நாளா...! நோ சான்ஸ்...’ என்று நீங்கள் சொன்னால், போய் வாருங்கள் என்று விநியோகஸ்தர்கள் அனுப்பி விடுவார்கள். பிறகு மீண்டும் அவர்களுடன் நாம் வியாபாரம் செய்ய முடியாமல் போய்விடும்.

இதே போலத்தான் கமிஷன் தொகையும். பொதுவாக, மற்ற நிறுவனங்கள் தரும் கமிஷனையும் தந்தே ஆகவேண்டும். விலையை குறைத்துக் கேட்டால், நம் லாபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

இந்த சமரசங்கள் எல்லாம் எத்தனை காலத்துக்கு என்பது நீங்கள் உங்கள் தொழிலை எப்படி செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் தயாரிப்பை பிரமாதமாக செய்து, அதை மக்கள் தொடர்ந்து வாங்க ஆரம்பித்து, விநியோகஸ் தர்களும் உங்களை அழைத்து கனிவாக நான்கு வார்த்தை பேசத் தொடங்குகிற காலத்தில் நீங்கள் உங்களுக்கான கோரிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக வைக்கத் தொடங்கலாம். நீங்கள் பெரிதாக வளர்ந்துவிட்டால், நீங்கள் நிபந்தனைகளைக்கூட விதிக்கலாம்.

சிறு நிறுவனமாக நான் தொழில் தொடங்கி, இத்தனை தடைகளை யும் தாண்டித்தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எனவே, ஒரு இரவில் எதையும் செய்து முடித்துவிட முடியாது. விரைப்பாக இருந்து எதையும் நம்மால் சாதிக்கவும் முடியாது. சூழலுக்கேற்ப வளைந்து கொடுத்துச் செல்லுங்கள். ஆனால், நேர்மையிலிருந்து ஒருபோதும் தவறாதீர்கள்.’’

? பெங்களூருவில் வேலை பார்க்கும் நான் நாமக்கல்லில் ஒரு ஆட்டுப்பண்ணையை தொடங்கி இருக்கிறேன். விரைவில் இதை முழுநேரமாக செய்யப் போகிறேன். உங்கள் மேலான யோசனைகளை சொல்லுங்கள்.

@ - ராஜேஷ், பெங்களூரு.

‘‘முதலில் உங்கள் பகுதியில் இருக்கும் கால்நடை வளர்ப்புத் துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளைக் கேளுங்கள். ஆடு வளர்ப்பவர்களை சந்தித்து, அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளைக் கேட்டறியுங்கள். ஒருமுறை இரண்டு குட்டி போடும் ஆடுகளை தேர்வு செய்யுங்கள். ஆடு வளர்ப்பில் பராமரிப்பு முக்கியம். எனவே, முழு நேரமாக நீங்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளாவிட்டால், லாபம் பார்ப்பது கடினம்.

ஆடு வளர்ப்பு தொடர்பாக பசுமை விகடனில் பல நல்ல கட்டுரைகள் வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரைகளில் முக்கியமான ஒரு கட்டுரையை கீழே தரப்பட்டுள்ள லிங்க்கை சொடுக்கி, படியுங்கள்.

http://bit.ly/1RE8Sn7

(கேளுங்கள்... சொல்கிறேன்)

தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு

தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.