?அண்மையில் நிலத்துக்கான பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்து போட

வேண்டியதாகி விட்டது. அதில் என் புகைப்படம் ஒட்டி, கையொப்பம் பதியப் பட்டுள்ளது. இதனால் பிரச்னை எதுவும் வருமா?

செல்வேந்திரன்,

த. பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டு நிபுணர்.

“நீங்கள் யாருக்கு சாட்சிக் கையெழுத்து போட்டீர்களோ, அவர் நல்லவராக இருக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருவேளை அவர் இந்த பவர் பத்திரத்தைக் கொண்டு ஏதாவது தவறு செய்தால், உங்களுக்குப் பிரச்னை ஏற்படும். அதனால் நன்கு தெரிந்த, நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டும் சாட்சிக் கையெழுத்து போடுவது நல்லது.”

?என்எஸ்இஎல் (NSEL)-ல் இ-சீரியஸை சேர்ந்த வெள்ளி, தங்கம், பிளாட்டினத்தின் தற்போதைய நிலை என்ன? என் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

செல்வா,

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

“நேஷனல் ஸ்பாட் இந்தியா லிமிடெட் (என்எஸ்இஎல் - NSEL) என்ற இந்த நிறுவனத்தில் ரூ.5,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக கடந்த ஜூலை 2013-ல் செய்தி வெளியானது. எனவே, இந்த எக்ஸ்சேஞ்ச் முடக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், வாடிக்கையாளர்களின் டீமேட் கணக்கில் இருந்த அளவுக்குத் தங்கமும், வெள்ளியும் முடக்கப்பட்ட எக்ஸ்சேஞ்ச் வசம் இருந்ததால், அவற்றை மே, 2015-ல், அதன் ஒழுங்குமுறை ஆணையமான எஃப்எம்சி ஏலத்தின் மூலம் விற்றது. பின் டீமேட் கணக்கில் இ-கோல்ட் மற்றும் இ-சில்வர் வைத்திருப்பவர் களுக்கு, அவர்கள் டீமேட் கணக்கு துவங்கும்போது கொடுத்த வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

ஆனால், கணக்கில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பில் 90% மட்டும் செட்டில் செய்யப்பட்டது. இ-கோல்டு வாங்கியவர்கள், அதை புரோக்கர் டீமேட் கணக்கிலேயே வைத்திருந்தால், அதனுடைய செட்டில்மென்ட், புரோக்கர் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு இருக்கும்.

இது பற்றி மேற்கொண்டு தகவல் அறிய விரும்பினால், உங்கள் புரோக்கரையும், டி.பி.ஐ.யும் தொடர்பு கொள்ளுங்கள்.”

?என் வயது 35. எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.1,000 வீதம் 10 வருடங் களுக்கு கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஸ்மால் கம்பெனீஸ் ஈக்விட்டி ஃபண்ட், ஐடிபிஐ அட்வான்டேஜ் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். இவை நல்ல ஃபண்டுகளா?

@ - நரேஷ் குமார்,

த.சற்குணன், நிதி ஆலோசகர், சென்னை.

“நீங்கள் கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஸ்மால் கம்பெனீஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இவற்றின் செயல்திறன் நன்றாக உள்ளது. ஆனால், ஐடிபிஐ ஈக்விட்டி அட்வான்டேஜ் ஃபண்டுக்குப் பதிலாக ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம். இது வரிச் சேமிப்பு ஃபண்டை சார்ந்தது. ஆகையால் முதலீடு செய்யும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பணம் எடுக்க முடியாது.”

?ஷேர் சப்-புரோக்கராக வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

@ - சண்முகம்,

எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர், சேலம்.

“சப்-புரோக்கர் என்பவர் பங்குச் சந்தையில் வர்த்தக உறுப்பினர் அல்லாதவர். அதே நேரத்தில், முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக வர்த்தக உறுப்பினர் சார்பில் இயங்குபவர். செபியில் பதிவுச் சான்றிதழ் பெற்றவர்தான் சப்-புரோக்கராக செயல்பட முடியும். சப்-புரோக்கராக செபியில் பதிவு செய்த வர்த்தக உறுப்பினரை அணுகுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.”

?என்னிடமிருக்கும் ரூ.15 லட்சத்தை எதில் முதலீடு செய்தால், பாதுகாப்பாகவும் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானமும் தரும்?

மோகன் ராஜ்,

செந்தில் மதிவதனன், நிதி ஆலோசகர்.

“உங்களது முதலீட்டுக் காலம் மற்றும் வருமான வரி வரம்பை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. நீங்கள் குறைவாக ரிஸ்க் எடுக்க விரும்பினால், அஞ்சல் அலுவலக டெபாசிட்டுகள் மற்றும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டு களில் முதலீடு செய்வது நல்லது.

ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முதலீடு செய்வதாக இருந்தால், லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.சுமாராக 7% வட்டி கிடைக்கும் . இதன் சிறப்பு என்னவென்றால் நாம் பணத்தை எவ்வளவு காலம் டெபாசிட் செய்தாலும் அதற்கு ஏற்றவாறு 7% வட்டி கிடைக்கும். வங்கிகளில் மெச்சூரிட்டிக்கும் முன்னதாக பணம் எடுத்தால் அபராதம் கட்டுவதுபோல் இதில் இல்லை.

ஒரு வருட காலத்துக்கும் அதிகமாக முதலீடு செய்ய விரும்பினால், ஏஏஏ தரக்குறியீடு உள்ள கம்பெனி டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்தால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைத்தாலும் ரிஸ்க் அதிகம்.

உங்களின் ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்திலும், குறைந்தபட்சம் மூன்று வருட காலத்துக்கு முதலீடு செய்ய முடியும் என்றால், பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு(Indexation benefits) கூடுதலாக வரியை மிச்சப்படுத்த கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் குறைவாக இருக்கும்.

ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்ய முடியுமானால், நீண்ட கால அடிப்படையில் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.மற்ற எந்த முதலீட்டை யும் விட ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிக வருமானம் கொடுக்கக் கூடியது. ஆனால், ரிஸ்க் கொஞ்சம் அதிகம். உங்களின் தேவையை அறிந்து முதலீட்டை தேர்வு செய்யுங்கள்.”

? கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கலாம் என்று இருக்கிறேன். வாங்கும்முன் எந்தெந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்?

சங்கர்,

கே.அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கும்போது இரட்டிப்பு கவனத்துடன் ஆவணங்களை ஆராய்தல் வேண்டும். முதலில், கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளருக்கு அந்த நிலத்தின் மீதுள்ள உரிமையை நிலைநாட்டக்கூடிய ஆவணங்களை (Title Deeds) பரிசீலிப்பது மிக அவசியம். பின்பு தாய்ப்பத்திரங்கள், இதுநாள் வரையிலான சொத்துக்கு உண்டான வில்லங்கம் எதுவுமில்லை என காட்டக்கூடிய வில்லங்கமில்லாச் சான்றிதழ்களை சரிபார்ப்பது அவசியம்.

ஃப்ளாட் வாங்கும்போது உங்களுக்கு வந்து சேரக்கூடிய பிரிபடாத பாக நிலமானது (Undivided Share of Land) உங்கள் ஃப்ளாட்டின் (Flat) பரப்புக்கு தகுந்த விகிதத்தில் உங்களை வந்தடைகிறதா என்பதையும் கவனமாக கணக்கிடுதல் வேண்டும். அது தவிர, மொத்த கட்டுமானமானது ஒப்புதல் பெறப்பட்டு, தக்க அங்கீகாரம் பெற்ற பிளான்படி கட்டப்பட்டுள்ளதா எனப் பார்ப்பது பல பின்விளைவுகளை யும், விவகாரங்களையும் தவிர்த்துவிடும்.

விதிமுறை மீறல் (Violation / Devia tion) இல்லாத கட்டடமே வாங்குவதற்கு சிறந்தது.வரைமுறைக்கு விண்ணப்பித்துள்ளோம்; பின்பு சரி செய்துவிடலாம், சதுர அடிக்கு இவ்வளவு என அபராதம் கட்டிவிட்டால், வரைமுறைப்படுத்திவிடலாம் என வரும் உறுதிமொழிகளை முற்றிலுமாக புறக்கணித்துவிடுவது நல்லது. அதற்கென தரப்படும் விலைக் குறைப்பு மற்றும் தள்ளுபடி போன்ற வைகளால் பிற்காலத்தில் மனநிம்மதி இழப்பு நிச்சயம். மொத்தத்தில் அனைத்து ஆவணங்களுடன் வழக்கறிஞர் ஒப்புதல் பெற்று கட்டுமான பொறியாளர் ஒருவரின் ஆய்வுக்குப் பின்பு அந்த சொத்தினை வாங்குவதே சிறந்தது.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.