முதலீடு செய்யணும்; ஆனா எப்படின்னு தெரியல..? பாலிசி எடுக்கணும்; எந்த பாலிசியை எடுப்பது..?

மியூச்சுவல் ஃபண்டுல பணம் போடணும்; எந்த ஃபண்டுல போடணும்..? வீட்டு மனை வாங்கணும்; நல்லது கெட்டதை எப்படி பார்க்கிறது..? இப்படி எந்த குழப்பமாக இருந்தாலும் எங்களுக்கு பதில் தரும் பக்காவான ஆலோசகர் நாணயம் விகடன் என பல வாசகர்கள் போனிலும், விழிப்பு உணர்வுக் கூட்டங்களில் நேரில் சந்திக்கும்போதும் பெருமிதத்துடன் சொல்லி மகிழ்கிறார்கள். அவர்களில் சில பேரிடம் நாணயம் விகடன் 400-வது இதழ் ஸ்பெஷலுக்காக நாணயம் இதழோடு அவர்களுக்கான அனுபவங்களைக் கேட்டோம். சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

பர்சனல் ஆலோசகர்!

நாம் முதலில் சந்தித்த சென்னையைச் சேர்ந்த ரம்யா பார்த்திபன்,‘‘நான் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாணயம் விகடனை தொடர்ந்து படித்து வருகிறேன். மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி முதலில் ஆங்கிலத்தில்தான் படித்தேன். முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தவித்தேன். ஆனால், நாணயம் விகடன் அறிமுகமான பிறகுதான் மியூச்சுவல் ஃபண்டைப் பற்றி எளிதாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடிந்தது. நாணயம் விகடனில் வரும் நிதித் திட்டமிடல் போன்ற ஆலோசனைகள் எனக்குப் பல நேரங்களில் உதவியாக இருந்துள்ளது. வரி சேமிப்பு, இன்ஷூரன்ஸ், கல்விக் கடன், தங்கத்தில் முதலீடு போன்றவற்றில் எனக்கு சரியான ஆலோசனைகளைச் சரியான நேரத்தில் நாணயம் விகடன் கொடுத்திருக்கிறது. நிதிச் சுதந்திரம் மிக்க எதிர்காலத்தை எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதையும், அவசர காலங்களை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்பதையும் நான் அதன் மூலம் கற்றுக்கொண்டேன். நாணயம் விகடன் எனக்கு இப்போது பர்சனல் ஆலோசகராக மாறிவிட்டது. பொதுவாக, பெண்களுக்குச் சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க நாணயம் விகடன் பக்கபலமாக இருக்கும்’’ எனச் சொல்லி மகிழ்ந்தார்.

உண்மையை உணர்ந்தேன்!

இவரை அடுத்து நம்மிடம் பேசிய ச.மாறன்,‘‘நான் கடந்த பத்து ஆண்டுகளாக நாணயம் விகடன் படித்து வருகிறேன். பங்குச் சந்தை என்றால் ஒரு சூதாட்டம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நாணயம் விகடன் படித்த பிறகுதான் அதன் உண்மையான சூட்சுமம் புரிந்தது. இப்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் துவங்கி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது வரை நிபுணத்துவம் அடையும் நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். எனக்குக் கிடைத்த நன்மை எனக்குத் தெரிந்தவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக என் நண்பர்களிடம் நாணயம் விகடனை படியுங்கள் என்று சொல்லி வருகிறேன். வெறும் 20 ரூபாயில் 200 ரூபாயை மிச்சப்படுத்தித் தரமுடியும் என்றால் அது நாணயம் விகடனால்தான் முடியும்’’ எனப் புகழ்ந்தார்.

பயனுள்ள பொக்கிஷம்!

அடுத்ததாக நாம் சந்தித்தது தஞ்சாவூரைச் சேர்ந்த வாசகர் ஆறுமுகசாமி. ‘‘நான் கடந்த நான்கு வருடங்களாக நாணயம் விகடனை வாரம் தவறாமல் படித்து வருகிறேன். அதனைப் படித்த பின்புதான் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றித் தெரிந்துகொண்டேன். தற்போது பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலியவற்றில் முதலீடு செய்து வருகிறேன். நிதி சார்ந்த பல ஆலோசனைகளை வழங்கிவரும் மிகவும் பயனுள்ள பொக்கிஷமாக நாணயம் விகடன் உள்ளதால், கடந்த நான்கு வருட பிரதிகளை ஒன்றுவிடாமல் பாதுகாத்து வருகிறேன். மேலும், நாணயம் விகடன் நடத்திய விழிப்பு உணர்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டும் பயன் அடைந்துள்ளேன்’’ என பெருமிதப்பட்டார்.

வேல்யூ இன்வெஸ்டார் ஆக்கிய ஆலோசனை!

அடுத்து பேசிய மருத்துவர் ஏ.சரவணவேல், ‘‘ஆரம்பத்தில் டே டிரேடிங்கில் ரூ.1.5 லட்சம் வரை நஷ்டமடைந்தேன். அப்போதுதான் என் தந்தை எனக்கு நாணயம் விகடனை அறிமுகப்படுத்தினார். அதைப் படித்தபிறகுதான் பங்குச் சந்தையைப் பற்றிய எனது பார்வையே மாறியது. நான் மருத்துவராக இருப்பதால் என்னால் தினமும் சந்தையைப் பின்பற்ற முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு வாரமும் நாணயம் விகடன் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதோடு, முதலீடு குறித்த அறிவையும் ஆலோசனை களையும் எனக்கு வழங்கி வருகிறது. இப்போது நான் வேல்யூ இன்வெஸ்டராக இருக்கிறேன். டிரேடராக இல்லா மல் முதலீட்டாளராக லாங் டேர்ம் ஈக்விட்டிகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கிறேன். அதேபோல் ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தேன். தற்போது அதனை இரண்டு கோடியாக அதிகரித்துள்ளேன். இப்போது எனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையில்லாமல் இருக்கிறேன். எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறேன். எனக்கென ஒரு போர்ட்ஃ போலியோவை உருவாக்கி வைத்திருக்கிறேன். இவையனைத்துமே நாணயம் விகடன் எனக்கு கற்றுக் கொடுத்ததுதான்’’ என மகுடம் சூட்டினார்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தேன்!

சேலத்தை சேர்ந்த பிரதாப், ‘‘நான் கடந்த ஒரு வருடமாக நாணயம் விகடன் வாசித்து வருகிறேன். அதற்கு முன்பு வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எல்லாம் எதற்கு என்று முன்பு நினைப் பேன். இன்ஷூரன்ஸ் என்றாலே இறந்தபிறகு வர்ற பணம் என்று நினைப்பேன். ஆனால், நாணயம் விகடன் என் எண்ணத்தை மாற்றியது.

இன்ஷூரன்ஸ் எவ்வளவு முக்கியமானது என்பதை எனக்கு தெளிவாக எடுத்துச் சொன்னது. அதுமட்டுமில்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் நல்ல ஆலோசனை வழங்கியது. பணவீக்கம் என்றால் என்ன, பணவீக்கத்திலும் எப்படி வருமானம் பார்ப்பது போன்ற விஷயங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் இப்போது டேர்ம் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளேன். இப்போதெல்லாம் நாணயம் விகடனை படிக்காமல் இருப்பதே இல்லை.’’ என பரவசப்பட்டார்.

இன்னும் பல வாசகர்கள் தங்களுக்கு வளம் தரும் நாணயம் விகடனை இந்த நல்ல தருணத்தில் வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

படங்கள்: ப.சரவணக்குமார், ம.அரவிந்த்.