புத்தகத்தின் பெயர் : ஹூ சீட்ஸ் அண்ட் ஹெள (Who Cheats and How?)

ஆசிரியர்; ராபின் பேனர்ஜி

பதிப்பாளர்;  சேஜ் பப்ளிகேஷன்ஸ்

தினமும் பத்திரிகைகளைப் புரட்டினால் நிதி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு மோசடி கண்ணில் படாமல் இருக்காது. குற்றங்களில் இரண்டு வகையான குற்றங்கள் உண்டு. ஒன்று, திருட்டு, வழிப்பறி, வீடு/வங்கி புகுந்து கொள்ளையடிப்பது. இது ‘ப்ளூ காலர்’ வகையைச் சேர்ந்தது. இதில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் தண்டனை கிடைத்துவிடும்.

ஆனால், ‘ஒயிட் காலர்’ வகையைச் சேர்ந்த நிதி மோசடி களில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் பெரும்பாலும் தண்டனை கிடைப்பதில்லை. காரணம், ஆட்சி பீடத்திலும், அதிகாரத்திலும் அங்கங்கே இருப்பவர்களை `கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து’ குற்றத்திலிருந்து தப்பித்துவிடு கிறார்கள். இது மற்றவர்களையும் இந்த மாதிரியான குற்றங்களில், மோசடிகளில் ஈடுபடத் தூண்டும். அதனால்தான் இன்றைக்கு ‘ஒயிட் காலர்’ குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுமாதிரியான ‘ஒயிட் காலர்’ குற்றங்களைப் பற்றி புட்டு புட்டு வைக்கிறது `ஹூ சீட்ஸ் அண்ட் ஹெள’ என்கிற புத்தகம். இதை எழுதியிருப்பவர் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், கம்பெனி செகரட்டரியாக இருந்தவர். பிரபல நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆர்சிலர் மிட்டல், தாமஸ் குக், எஸ்ஸார் ஸ்டீல், சுஸ்லான் போன்ற நிறுவனங்களில் உயர்பதவி வகித்து, `பிசினஸ் டுடே’ பத்திரிகையால் சிறந்த சிஎஃப்ஓ (CFO) விருது வாங்கிய வருமான ராபின் பேனர்ஜி.

உலகளவில் நடந்த 500 மோசடிகள், ஏமாற்று வேலைகள் குறித்து ரத்தினச் சுருக்கமாக இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

இந்த மோசடிகளை ஆசிரியர் பல பிரிவுகளின் கீழ் – கார்ப்பரேட் மற்றும் வங்கிகள் சம்பந்தப் பட்டது என்கிறார். சீக்கிரமே பணக்காரர் ஆவதற்கான ‘பொன்ஸி’ திட்டங்கள் (Ponzi Schemes), பங்குச் சந்தையில் நடைபெறும் ‘தில்லாலங்கடி’ வேலைகள், இணையதளம் மூலம் நடைபெறும் சைபர் க்ரைம் மோசடிகள், நிறுவனத்தின் கணக்குவழக்குகளில் நடக்கும் ‘தகிடுதத்தங்கள் (falsification of books)’, ஆடிட்டிங் துறையில் உலகப் புகழ்பெற்ற கேபிஎம்ஜி, ஈ அண்ட் ஓய், டெலாய்ட், பி டபிள்யூசி போன்ற நிறுவனங்கள் செய்த மோசடி (Checkers Could be Cheaters), மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், மற்ற பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செய்த ஏமாற்று வேலைகள் என `கலந்து கட்டி’ அனைத்துத் துறைகளில் நடைபெற்ற மோசடி களை ஆதாரப்பூர்வமாக, பல ஆண்டு ஆய்வுக்குப் பின் எழுதி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும்.

ஒரு இடத்தில் ஆசிரியர் ரஷ்யப் பழமொழியான, ‘திருடியதற்காக நீ தண்டிக்கப்பட வில்லை; மாறாக,

பிடிபட்டதற் காகத் தண்டிக்கப்படுகிறாய்’ என்பதை மேற்கோள் காட்டி நமது சட்ட அமைப்பை ஒரு சாடு சாடுகிறார்.

மிகப் பெரிய அக்கவுன்ட்டிங்/ஆடிட்டிங் நிறுவனங்கள் பிரபலமான கார்ப்பரேட்டு களுக்கு உடந்தையாக இருந்ததையும் உதாரணம் மூலம் குறிப்பிட்டிருக்கிறார். 1997-ம் ஆண்டிலிருந்து 2000-மாவது ஆண்டு வரை `ஜெராக்ஸ் கார்ப்பரேஷனின்’ நிதி நிலை அறிக்கையில் தகிடுதத்தம் செய்ததற்காக கேபிஎம்ஜி–யை அமெரிக்காவைச் சேர்ந்த சந்தை கண்காணிப்பு அமைப்பான `SEC’ கண்டித்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஜெராக்ஸ் நிறுவனம் 1.5 பில்லியன் டாலர்கள் அதிக லாபம் ஈட்டியதாக அதன் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருந்தது. அந்த அறிக்கையில் கேபிஎம்ஜி நிறுவனமும் கையெழுத்து இட்டிருந்தது. இந்த ஏமாற்று வேலை கண்டுபிடிக்கப்பட்டபின் 22.5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்்தவரை, பங்குச் சந்தை மோசடிகளில் பிரபலமாக அடிபட்ட பெயர் களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஹர்ஷத் மேத்தாவும் அவரது `சீடருமான’ கேத்தன் பாரேக்கும். கேத்தன் பாரேக் கிரெடிட் ஸ்விஸ் குழுமத்திலிருந்து போலியான வங்கி டிராஃப்ட் களின் அடிப்படையில் ஏறக்குறைய ரூ.800 கோடி கடன் வாங்கியிருந் தார். 1999-2001-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொறியியல், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பங்கு மோசடிகளில் முக்கியப் பங்கு வகித்தவர்.

பங்குச் சந்தை நடவடிக்கை களில் 2017-ம் ஆண்டு வரை ஈடுபடக்கூடாது என்று இவருக்கு 2003-ம் ஆண்டு செபி தடை விதித்திருந்தபோதும் ‘லாபத்தில் பங்கு’ என்கிற ரீதியில் பல நிறுவனங்களின் மூலமாக இவர் பங்குச் சந்தையில் 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஈடுபட்டு பழைய கடன்களை எல்லாம் அடைத்தார். இன்னும் அவர் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் நண்பர்களின் வாயிலாக செயல் பட்டு வருவதாக பல செய்திகள் உறுதி படுத்துவதாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மாதிரியான மோசடி களில் ஈடுபடுபவர்களின் குணாதிசியங்கள் குறித்து 2011-ம் ஆண்டு கேபிஎம்ஜி நடத்திய ஆய்வை இவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதன்படி, இந்த மாதிரியான மோசடிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 36 வயதிலிருந்து 45 வயதிலான ஆண்கள்; பெரும்பாலும் நிதி நிலை சார்ந்த பிரிவில் ஏதேனும் ஒரு உயர்பதவியில் இருப்பவர்கள்; அவர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்” என தெரியவந்தது.

நிதித் துறை சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் புத்தக அலமாரியிலும் இருக்க வேண்டிய ரெஃபரன்ஸ் புத்தகம் இது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. யாரேனும் தவறு இழைக்க நினைக்கும்போது, இந்தப் புத்தகம் கண்ணில்பட்டு தவறு செய்யவிருப்பதைத் தடுக்கக்கூடும். இல்லையென்றால், என்னென்ன தவறுகளை எப்படி செய்யலாம், இதுவரை யார் செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவும்.

கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் கறுப்புப் பக்கத்தைத் தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

வாட்ஸ்அப் டு லேண்ட் லைன் கால்!

ஏற்கெனவே வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற ஆப்ஸ்களில் உள்ள வாய்ஸ் கால் ஆப்ஷன் காரணமாக செல்போன் நிறுவனங்கள் கதிகலங்கி வருகின்றன. இந்த நிலையில், தற்போது இந்த ஆப்ஸ்கள் மூலம் லேண்ட் லைன் நம்பர், செல்போன் நம்பர்களை நேரடியாக தொடர்புகொள்ளும் வசதி கூடிய விரைவில் வர உள்ளது. இதற்கு அமைச்சரவை குழு ஒன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது இணையதள வசதி மூலம் வாட்ஸ்அப் டு வாட்ஸ்அப் வாய்ஸ் கால் ஆப்ஷனை வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்போன் நிறுவனங்கள் இனி சம்பாதிக்க முடியுமா?