இளைஞர்களுக்கு முதலீடு குறித்த அறிவும், விழிப்பு உணர்வும் இல்லையென்று பொத்தாம் பொதுவாக

சொல்லிவிட முடியாது. ஈரோட்டைச் சேர்ந்த தனபால் எப்படி திட்டமிட்டு முதலீடு செய்கிறார் என்பதை அறியும்போது கொஞ்சம் ஆச்சரியமும் பிரமிப்பாகவும் இருக்கத்தான் செய்கிறது. தனபால் என்ன சொல்கிறார்...

எனக்கு 28 வயது. எம்பிஏ படித்திருக்கிறேன். சொந்த ஊர் கரூர். அப்பா அம்மா அங்குதான் இருக்கிறார்கள். நான் சிறு வயதிலிருந்தே ஈரோட்டில் என் அம்மாச்சி (அம்மாவின் அம்மா) வீட்டில்தான் இருக்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட எந்தச் செலவுகளும் இல்லை. என் வருமானம் முழுவதையும் முதலீட்டுக்காகவே ஒதுக்குகிறேன். இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். மாத சம்பளம் பிடித்தம் போக ரூ.15,500. ஆண்டுக்கு ரூ.2,500 வரை சம்பள உயர்வு இருக்கும். பங்குச் சந்தை வர்த்தகம் மூலமாக மாதம் ரூ.10,000 வரை சம்பாதிக்கிறேன். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள திட்டம் உள்ளது. வேலைக்குப் போகும் பெண்ணாக பார்த்து வருகிறோம். என் 31 வயதில் முதல் குழந்தை, 33 வயதில் இரண்டாவது குழந்தை என பிளான் வைத்துள்ளேன். இரண்டு குழந்தைகளுக்கும் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்.

ஈரோட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்துள்ள மனையில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். அதற்காக வீட்டுக் கடன் ரூ.13.5 லட்சத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த மாதம் வீடு கட்டும் வேலையைத் தொடங்க உள்ளேன். 20 ஆண்டுகளில் கடன் தொகையைக் கட்டிமுடிக்கும் வகையில் ரூ.8,860 இஎம்ஐ செலுத்த வேண்டும்.

என் 30 வயது முதல் 60 வயது வரை மனைவியும், குழந்தைகளும் ஆசைப்படும் நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் டூர் போக வேண்டும். அடுத்ததாக, 58 வயதுக்குப் பிறகான மகிழ்ச்சியான ஓய்வுக் காலத்துக்கு தயாராக வேண்டும். இவற்றுக்கு திட்டம் தேவை.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ.5 லட்சத்துக்கு வைத்துள்ளேன். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும” என

நிறைய கனவுகளுடன் கேட்ட தனபால் தனது ஃபைனான்ஷியல் விவரங்களை அனுப்பி வைத்தார்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

‘‘பாலா, பங்குச் சந்தை என்றாலே அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கும் பல இளைஞர் களுக்கிடையே நீங்கள் பாசிட்டிவ்வாக உள்ளீர்கள். ஆனால், முழுநேர பணியில் இருந்துகொண்டு இன்ட்ரா டே டிரேடிங் செய்து லாபம் பார்ப்பது எப்போதும் சாத்தியமாகும் என்று நினைக்க வேண்டாம். நல்ல பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யுங்கள்.

உங்கள் திருமணத்துக்குப் பிறகு உங்கள் மனைவியின் மாத சம்பளமும் சேரும்போது குடும்ப வருமானம் இரட்டிப்பாகலாம் . அப்போது பிளான் பெரிய அளவில் மாறுபடலாம். இன்றைய நிலையில் உங்கள் வருமானத்துக்குள் எந்தெந்த இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீட்டை தொடங்க வாய்ப்பிருக்கிறது எனப் பார்ப்போம்.

நீங்கள் திருமணத்துக்குப் பிறகு வீடு கட்டும் திட்டத்தை வைத்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு மனைவியாக வருபவர் பார்க்கும் வேலை,இடம், வாய்ப்புகளைப் பொறுத்து முடிவு எடுக்க முடியும். உதாரணமாக, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இடம் பெயரும் நிலை வருமானால், மாதாந்திரச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அந்த நிலையில், நீங்கள் தற்போது வாங்கியுள்ள மனையில் வீடு கட்டி, ஒருவேளை வாடகைக்கு விடும் நிலை வந்தால், அந்த வருமானம் உங்களுக்கு இஎம்ஐ கட்டும் அளவுக்கு இருக்காது. வீட்டுக் கடனுக்கு 9.5% வட்டி எனில், நீங்கள் குறிப்பிட்ட தொகைக்கு 20 வருட அடிப்படையில் ரூ.12,500 இஎம்ஐ செலுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல ரூ.8,860 அல்ல.

இன்னொரு முக்கியமான விஷயம், டிரேடிங் மூலமான வருமானம் என்பது நிரந்தரமான வருமானமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, அதனை அடிப்படையாக வைத்து முதலீட்டை அமைப்பது தவறு.

பிறக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் முன்கூட்டியே முதலீட்டை தொடங்கலாம். வீடு கட்டும் இலக்கை தள்ளி வைக்கும் பட்சத்தில், நீங்கள் குறிப்பிட்டுள்ள வருமான கணக்குப்படி மீதம் ரூ.10,000 இருக்கும்.உங்கள் குழந்தைகளுக்காக மாதம் ரூ.5,000 முதலீடு செய்யும்பட்சத்தில், 20 வருடங்களில் 13.4% வட்டி வருமான அடிப்படையில் ரூ.59.8 லட்சம் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும்போதும் இதற்கான முதலீட்டை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக, தற்போது உங்களுக்கு மாதம் ரூ.15,000 தேவை எனில், உங்கள் ஓய்வுக்காலத்துக்கு அடுத்த 30 ஆண்டுகளில் 7% பணவீக்க அடிப்படையில் மாதம் ரூ.1.3 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கான கார்பஸ் தொகையாக ரூ.3.45 கோடி வேண்டும். அதற்கு நீங்கள் மாதம் ரூ.5,500 முதலீடு செய்ய வேண்டும். உங்கள் பி.எஃப் தொகையையும் சேர்த்தே சொல்கிறேன்.

நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வேண்டும் என உங்கள் ஆசையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பொதுவாக, நடுத்தர வருமான பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு இதுபோன்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது கடினமே. இதை நிறைவேற்ற வேண்டுமானால், வாழ்க்கையின் மிக முக்கியமான இலக்குகளை தியாகம் செய்தாக வேண்டும்.உங்கள் திருமணத்துக்குப் பிறகு குடும்ப வருமானம் பெரிய அளவில் அதிகரிக்கும் சூழலில், இந்த இலக்குக்கான திட்டமிடுதலை வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது செய்துவரும் எஸ்ஐபி முதலீடுகள் மூலமான தொகையை வீடு கட்ட தொடங்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டுக் கடனை குறைத்துக்கொள்ளலாம். சீட்டு மூலமாகக் கிடைக்கும் தொகையை திருமணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை மிரே அஸெட் எமர்ஜிங் புளுசிப் -1,500, ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி -ரூ.1,500, பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி - ரூ.2,000 எனத் திட்டமிடவும். குழந்தைகளுக்கான முதலீட்டை எஸ்பிஐ ஈக்விட்டி -ரூ2,500, ஃப்ராங்க்ளின் பிரைமா ப்ளஸ் - ரூ.2,500 எனத் திட்டமிடவும்.

45 வயது வரை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் 80% முதலீடு செய்யுங்கள். பிறகு அதனை 60% -ஆக மாற்றிக்கொள்ளவும். டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.50 லட்சத்துக்கு எடுத்துக்கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு உங்கள் முதலீட்டில் சில மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்!’’

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

* நிதி ஆலோசகர்
சுரேஷ் பார்த்தசாரதி
(SEBI registered investment advisor- Registration
no – INA200000878.)

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களை குறிப்பிட்டு அனுப்புங்கள். உங்கள் செல்போன் நம்பரை தவறாமல் குறிப்பிடவும். தொடர்புக்கு: 9940415222