Election bannerElection banner
Published:Updated:

ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!
ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

400 வது இதழ் ஸ்பெஷல்

ங்களுக்கு 400 லட்சம் ரூபாய் (4 கோடி ரூபாய்) பணம் கிடைத்தால்,  அதை 400 கோடி ரூபாயாக மாற்ற

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

என்ன செய்வீர்கள்?

நாணயம் விகடனின் 400-வது இதழ் ஸ்பெஷலை முன்னிட்டு இப்படி ஒரு கேள்வியை வாசகர்களிடம் கேட்டோம். சுவாரஸ்யமான பதில்களை சொன்னார்கள். சேலத்தில் சிறுதொழில் வியாபாரம் செய்துவரும் ஜெயலட்சுமியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் கனவுலகத்துக்கே சென்றுவிட்டார். அவரை உலுப்பி நிஜ உலகத்துக்கு கொண்டுவந்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டோம்.

“400 லட்சம் நிச்சயம் பெரிய தொகை. என் கணவருக்கு டிராவல்ஸ் வெக்கணுங்குறது கனவு. அதனால் குழந்தைகளுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்துட்டு, மீதமுள்ள காசுல ஒரு டிராவல்ஸ் வச்சு தருவேன்.  எனக்குன்னு எதுவும் தேவையில்லை. நம்ம குழந்தைகளும், கணவரும் நல்லா இருந்தா நாமலும் ராணி மாதிரி வாழலாம்ல...! எனக்கு கிடைச்ச  400 லட்சமே போதும். அதை 400 கோடியாக பெருக்க திட்டமில்லை’’ என்றார். ‘‘சரி, பணத்தை எப்ப குடுப்பீங்க?’’ன்னு அவர் கேட்டவுடன், நாம் ஜூட் ஆனோம்.
அடுத்து, இன்ட்டீரியர் வொர்க் செய்யும் செல்வகுமாரை சந்தித்தோம். மனுஷனுக்கு ஸ்போர்ட்ஸ் என்றால் அவ்வளவு பிரியமாம். “400 லட்சம் ரூபாய் கிடைத்தால் என் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட பிறகு விளையாட்டில் திறமை இருந்தும் பணம் இல்லாமல் கஷ்டப்படும் விளையாட்டு வீரர்களுக்கு என்னாலான உதவிகளை ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆரம்பித்து உதவுவேன். பொதுவாக இந்தியாவில் திறமை இருந்தும் வாழ்வில் முன்னேற முடியாமலும், முன்னேற வாய்ப்பு கிடைக்காமலும் போகிறவர்கள்தான் தவறான வழிகளை தேர்ந்தெடுத்து தங்கள் வாழ்கையையும், தங்களைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்கையையும் பாழாக்கிவிடுகிறார்கள். நான் தொடங்கும் அகாடமி மூலம் ஏழை இளைஞர்களின்  திறமைக்கு தீனி போடுவேன்’’ என்று நரம்பு புடைக்க பேசினார்.

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

அடுத்து யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்று ஆளை தேடிக் கொண்டிருந்த போது முக்கால் பேன்ட் போட்டுக் கொண்டு ஹாயாக நடந்துவந்து கொண்டிருந்தார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி டெமியன். “எனக்கு 40 மில்லியன் ரூபாய் கிடைச்சா, சென்னைல வசிக்கிற குழந்தைகளுக்கு, நல்ல வசதிகளோட ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தருவேன். அதுல நல்ல காசு வந்தா இந்தியாவுலேயே செட்டிலாகிடலாமே. அதுக்கப்புறமும் ஏதாவது கொஞ்சம் பணம் மீதமிருந்தா… நீங்க விருப்பப்பட்டா நாம எல்லா எங்க பிரான்ஸ் நாட்டுக்கு ஒரு டூர் போகலாம். எங்க நாட்ல ஒயின் ரொம்ப ஃபேமஸ். பிரான்ஸுக்கு வர்றீங்களா...?’’ என்றபடி நம்மைக் கலாய்க்க, அங்கிருந்து ‘யெஸ்’ ஆனோம்.

வெயிலில் அலைந்து தலை சுற்றியதால், ஒரு ஜூஸ் கடையை தேடிக் கண்டுபிடித்தோம். மாசக் கடைசி என்பதால் ஒன் பை டூ கரும்பு ஜூஸை ஆர்டர் செய்துவிட்டு, கடை முதலாளி சுரேஷிடம் அந்தக் கேள்வியைக் கேட்டோம். “எனக்கு 400 லட்சம் கிடைச்சா , இந்த கரும்பு ஜூஸ் கடைய எடுத்துட்டு , காஃபி டே, கே.எஃப்.சி மாதிரி ஒரு பெரிய பிராண்டட் ரெஸ்டாரன்ட் வெச்சி, கண்ணாடி கிளாஸ், ஏ.சி.லாம் போட்டு பிசினஸ் செஞ்சி பெரிய ஆள் ஆயிடுவேன். நான் வளர்ந்ததுக்கு அப்புறம், எனக்கு கீழ ஒரு 4 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பேன். அப்படியே 400 லட்சம் 400 கோடி ஆகிடும்’’ என்றவர், 400 ‘எல்’-ஐ 400 ‘சி’யா மாற்ற நான் ரெடி. பணம் குடுக்க நீங்க ரெடியான்னார். உடனே தந்தோம், கரும்பு ஜூஸுக்கான 10 ரூபாயை. அடச் சீ என்றபடி, கரும்பு புழியும் மிஷினின் வேகத்தை அதிகப்படுத்தினார்.

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

கரும்பு ஜூஸ் குடித்துவிட்டு சில்லென்று நாம் இருக்க, கல்லூரியை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்த சுபாஷினியை நிறுத்தி நம் கேள்வியைக் கேட்டோம்.

“எனக்கு 400 லட்சம் கிடைச்சா… அதை நேரா அப்பா கையில் கொண்டுபோய் கொடுத்திடுவேன். ஏனா, ஒரு

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

பையன் அவனுக்கு தேவையான பணத்த அவனே எடுத்துக்குவான். ஆனா, ஒரு பொண்ணு தன்னோட அப்பா-அம்மாவோட எதிர்பார்ப்புகள பூர்த்தி செய்யுறதை தான் தன்னோட சந்தோஷமா நினைப்பா. அப்படி பார்த்தே நாங்க, சாரி, நான் வளர்ந்துட்டேன். என் வளர்ப்பும் அப்படித்தான். இந்த பணத்த எனக்காக செலவு பண்ணனும்னா, 400 லட்சமும் செலவாகுற வரைக்கும் உலகத்த சுத்தனும். பல கலாசாரங்களையும், பல மனிதர்களையும் சந்திக்கணும்’’ என்றார். நல்ல பொண்ணா இருக்கீங்களே சுபாஷினி! உலகத்தை சுத்தி வர்ற உங்க ஆசை நிறைவேறட்டும் என்று வாழ்த்திவிட்டு, மாயமானோம்.

வரும் வழியில்  டீக்கடை மாஸ்டர் பாலமுருகனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் தன் பிசினஸ் புரபோசலை பற்றி விலாவாரியாக சொல்ல ஆரம்பித்துவிட்டார். “எனக்கு 400 லட்சம் கிடைச்சதுனா, கான்கிரீட் கல்லு செய்ற கம்பெனி ஆரம்பிச்சிடுவேன். இந்தக் கடையில வேலை பாக்குறதுக்கு முன்னாடி சில வருஷம் கான்கிரீட் கல்லு செய்யுற வேலைய பாத்திருக்கேன். அதனால தெரிஞ்ச தொழிலயே நல்லபடியா செய்வேன். அதுக்கு மெஷின், ஆள் கூலி எல்லாம் சரியாபோயிடும். அந்த மாதிரி பிசினஸ் செஞ்சு நாலு கோடிய நானூறு கோடியா மாத்திருவேன்.

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

மத்தவங்களுக்கு வேலை கொடுத்து அவங்கள முன்னேத்தி, நானும் மேல வந்துருவேன்’’ என்று முகம் மலர பேசியவரிடம், அப்ப வரட்டுங்களா அண்ணாச்சி என்றவுடன், கடுப்பாகி டீ போட ஆரம்பித்தார்.

அண்ணாச்சியைப் பார்த்துவிட்டு, அடுத்த ஏரியாவுக்குள் நுழைவதற்குள் நம் பைக்கை சைடு வாங்கி நின்றார் ஆட்டோ டிரைவர் கில்லாடி பாபு (எ) ஹரி பாபு. பேரே ஜோரா இருக்கே, அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று அவரிடமும் அந்தக் கேள்வியைக் கேட்டோம். “என் கடனை எல்லாம் அடைச்சிட்டு, கூட ஆட்டோ ஓட்டுறவங்களோட கடனையும் அடைச்சிருவேன். இந்த 400 லட்சத்தை 400 கோடியா மாத்தனும்னா, மவுண்ட் ரோட்ல ஒரு பெரிய இடத்தை வாங்கி, பிசினஸ் பண்ணப்போரேன்னு சொல்லி, பேங்க-ல 400 கோடி கடன் வாங்கிட்டு, விஜய் மல்லைய்யா மாதிரி வெளிநாட்டுக்கு ஓடிருவேன். அந்த 400 கோடிக்கு வெளிநாட்டுல இதே மாதிரி இடம் வாங்கி பிசினஸ் பண்றேன் என்று  அங்க இருக்குற பேங்க்ல கடன் வாங்கி ஏமாத்திட்டு இந்தியா வந்து செட்டில் ஆயிருவேன்’’ என்றார். அய்யா, இப்படி எத்தனை பேர் கெளம்பி இருக்கீங்க! என்றபடி கில்லாடி பாபு ஆட்டோவை நாம் சைடு வாங்கினோம்.

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

போகிற வழியில் யங்ஸ்டர் ஒருவர் அழகான ஆடி காரை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தார். அவர் பெயர் கிருஷ்ணன். ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்  படிக்கும் மாணவர். ‘‘நீங்க குடுக்கிற 400 லட்சத்தை என் புராஜெக்ட்டுக்கு யூஸ் பண்ணிக்குவேன். எனக்கு கார்ன்னா ரொம்ப பிடிக்கும். பெங்களூர்ல ஒரு நல்ல கார் ‘Garage’ ஓபன் பண்ணுவேன். ஆட்டோமொபைல்ஸ் சம்பந்தமான துறையில இன்வெஸ்ட் பண்ணுவேன். புதுசு புதுசா கார் ரீமாடல் செஞ்சி நல்ல விலைக்கு விப்பேன். இப்போ பேரன்ட்ஸோட பாதுகாப்புல இருக்கேன். எனக்குன்னு கமிட்மென்ட்ஸ் வரும்போது, அத சமாளிக்கிறதுக்கு மிச்ச பணத்தை யூஸ் பண்ணுவேன்’’ என்று பக்காவாக பேசினார். ‘‘தம்பி, நீங்க நல்லா வருவீங்க தம்பி’’ என்று வாழ்த்தி விட்டுக் கிளம்பினோம்.

 ரூ.400 லட்சம் to ரூ.400 கோடி!

சரி, கடைசியாக இந்த கேள்வியை ஒரு கல்லூரி மாணவியிடம் கேட்டு முடித்துவிடுவோம் என்று நினைத்தபடி விநோதினி என்ற மாணவியை நிறுத்திக் கேட்டோம். ‘‘400 லட்சம் ரூபாயா... வாவ், நம்பவே முடியலை. நான் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக 4 கோடி ரூபாய்ல ஒரு மருத்துவமனை கட்டுவேன். 4 கோடிக்கு ஒரு ஹாஸ்பிட்டல்ன்னா, 400 கோடிக்கு 100 ஹாஸ்பிட்டல் கட்டலாமே... இதனால மக்களும் ஆரோக்கியமா இருப்பாங்க. நம்ம பணமும் பெருகும்’’ என்றவரிடம்,

‘‘எக்ஸ்க்யூஸ்மி, நீங்க நாணயம் விகடன் படிப்பீங்களா?’’ என்று கேட்டோம். ‘‘யெஸ்’’ என்றார். கை குலுக்கிவிட்டு நகர்ந்தோம்.

பார்த்தீங்களா, நம்ம ஜனங்க மனசுல எவ்வளவு ஆசை! ஆசை இருக்கிறது எப்போதும் தப்பில்லை. அது யதார்த்தமான, நேர்மையான ஆசையா இருக்கிறது அவசியம் இல்லையா?

பா.நரேஷ், ஜெ.விக்னேஷ், ச.ஆனந்தப்பிரியா.

படங்கள்:  கி.கிரண் குமார், சூ.நந்தினி.

தொகுப்பு: மு.சா.கெளதமன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு