நம்மில் பெரும்பாலானோர் ரிட்டயர்மென்டுக்குப் பிறகு சராசரியாக 20 முதல் 30 வருடங்கள் எந்தவித வருமானமும் ஈட்டாமல் முதலீடுகளை மட்டுமே நம்பி வாழ வேண்டியிருக்கிறது. இந்த 20 முதல் 30 வருட ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் தேவையான நிதியை முன்யோசனையுடன் இளமையிலேயே திட்டமிடுவது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

ஏனெனில் இந்தியாவில் 11 சதவிகிதத்துக்கும் குறைவான வர்கள் மட்டுமே அரசு பென்ஷன் திட்டங்களில் சேர்ந்து உள்ளார்கள். மிச்சமுள்ள சுமார் 90% பேர் நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கான திட்டங்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

ஓய்வுக்காலத்துக்கான முதலீடுகள் பல உள்ளன. இவற்றில் யாருக்கு எந்த முதலீடு ஏற்றது, அதை எப்படி அடையாளம் காண்பது என்கிற கேள்விகளுக்கு பதில் சொன்னார் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளானர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ராமலிங்கம்.

“ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை மேற்கொள்ள ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களான பிஎஃப், பிபிஎஃப், விபிஎஃப் போன்ற திட்டங்கள் உள்ளன.

ஆனால், பாதுகாப்பான வழிகளில் முதலீட்டை மேற்கொள்வதால், ஓய்வுக்குப்பின் நமக்கு தேவைப் படும் பணம் முழுமையாக இந்த ஓய்வூதிய கார்பஸ் மூலமாக கிடைக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் இவற்றில் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டைத் திட்டமிடும்போது பாதுகாப்பான முதலீடுகளை மட்டுமே தேர்வு செய்யக்கூடாது.

இளைஞர்கள் ரிஸ்க் எடுக்கலாம்!

முப்பது வருடங்களுக்குமுன் இருந்த விலைவாசிக்கும், இப்போதிருக்கும் விலை வாசிக்கும் உள்ள

வித்தியாசத்தைச் சொல்ல வேண்டியதில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதைத்தான் பணவீக்கத்தின் தாக்கம் என்கிறார்கள். இந்தத் தாக்கம் அடுத்த முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பது தெரியாதபட்சத்தில் இளம் வயதினர் தங்களின் ஓய்வுக்கால முதலீடுகளைத் திட்டமிடும்போது ரிஸ்க் எடுக்க தயங்கக்கூடாது.

ஓய்வுக்கால நிதி என்பது நீண்ட கால முதலீடு என்பதால் இளைஞர்கள் தங்களது முதலீட்டை ரிஸ்க் உள்ள ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

நீண்ட தூரப் பயணத்துக்கு சைக்கிளைக் காட்டிலும், விமானம் அல்லது ரயிலைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித் தனம். அதேபோல், நீண்டகால முதலீட்டுக்கு வெறும் பாது காப்பான முதலீட்டை மட்டும் மேற்கொள்ளாமல் சற்று ரிஸ்க் எடுத்து முதலீடு செய்தால் ஓய்வுக் கால நிதி அதிகமாகக் கிடைக்கும்.

உதாரணமாக, ஒருவர் தனது 25 வயதிலிருந்து மாதம் ரூ.20,000 தனது ஓய்வூதிய வயது 55 வரை பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்து, அதற்கு சராசரி யாக ஆண்டுக்கு 8% வருமானம் கிடைக்கும்பட்சத்தில், 30 ஆண்டு கழித்து அவருக்கு ரூ.2.82 கோடி கிடைக்கும்.
இதுவே அவர் ரிஸ்க் எடுத்து ரூ.10,000-ஐ ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டிலும், ரூ.10,000-ஐ பிபிஎஃபிலும் முதலீடு செய்தால், 30 வருடம் கழித்து அவருக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் ரூ.3 கோடியும், பிபிஎஃப் மூலம் ரூ.1.4 கோடியும் கிடைக்க வாய்ப்புள்ளது. (ஈக்விட்டி ஃபண்டின் சராசரி ஆண்டு வருமானம் 12%).

ஓய்வுக்காலத்துக்காகத் திட்டமிடுபவர்கள் தங்கள் முதலீடுகளை எப்படி பிரித்து முதலீடு செய்தால், அதிக கார்பஸ் தொகையைப் பெறலாம் (பார்க்க அட்டவணைகள்)என்பதை அறிவது அவசியம்.

ஒருவர் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறாரோ, அந்த அளவு அவருக்கு அதிக தொகை கிடைக்கும். எனவே, உங்கள் ஓய்வுக்காலத்துக்கான முதலீடு களை இன்றே தொடங்குங்கள்.

ஓய்வுக்குப்பின் என்ன செய்ய வேண்டும்?

இதுவரை ஓய்வுக்காலத்துக் கான முதலீடுகளை எப்படித் திட்டமிடுவது என்று பார்த்தோம். இப்போது ஓய்வுக்குப்பின் வருமானம் வர என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஓய்வுக்காலத்துக்காக நீங்கள் முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த கார்பஸ் தொகை யிலிருந்து உங்களுடைய வாழ்நாள் வரைக்குமான வருமானத்துக்கு அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், வங்கி எஃப்.டி., கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள் போன்ற திட்டங்களில் உங்களுடைய தேவைக்கேற்ப முதலீட்டை மேற்கொள்ளலாம்.

ரிட்டயர்மென்ட் ஆனியுட்டி திட்டங்கள்!

ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றான ரிட்டயர்மென்ட் ஆனியுட்டி திட்டங்கள் பற்றி ஸ்ரீராம் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் விற்பனை மற்றும் புராடக்ட் டெவலப்மென்ட் தலைவர் டி.ராமநாதனிடம் கேட்டோம்.

‘‘ரிட்டயர்மென்ட் ஆனியுட்டி திட்டங்கள் என்பது நிரந்தர வைப்பு நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதா மாதமோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ ஓய்வுக்காலத்துக்குப்பிறகு அந்த நபர் உயிருடன் உள்ளவரை வழங்கப்படும் முதலீட்டுத் திட்டம் ஆகும்.

இந்த ஆனியுட்டிகள் எல்ஐசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ஹெச்டிஎஃப்சி, ஶ்ரீராம் லைஃப் போன்ற லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இந்த ஆனியுட்டி திட்டங்கள், உடனடி ஆனியுட்டி (Immediate Annuity), குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆனியுட்டி (Deferred Annuity) ஆகிய இரண்டு வகைகளில் உள்ளன.

குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆனியுட்டி (Deferred Annuity) திட்டத்தில் இரண்டு படிநிலைகள் உள்ளன. ஒன்று, பீரிமியம் செலுத்த வேண்டிய 15 - 20 வருடங்கள்; இரண்டாவது, நம்முடைய தொகையை நாம் திரும்பப் பெறும் காலம். அப்போது கிடைக்கும் தொகையை எடுத்து உடனடி ஆனியுட்டி திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாகப் பெறலாம்.

இந்த ஒத்திவைக்கப்பட்ட ஆனியுட்டி திட்டங்கள் எண்டோவ்மென்ட் அல்லது ஈக்விட்டி சந்தையுடன் தொடர்பு உள்ள திட்டங்களாக இருக்கும். இந்த வகையில் உங்கள் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை செய்யலாமா எனில், அது அவ்வளவு சரியான முடிவாக இருக்காது.

ஏனெனில் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவன திட்டங்களில் ஏஜென்ட் கமிஷன், ஃபண்ட் மேனேஜ்மென்ட் கட்டணம் மற்றும் பாலிசி நிர்வகிப்பு கட்டணம் போன்றவற்றால் உங்களுக்குக் கிடைக்கும் தொகைக் குறைவாகவே இருக்கும்.

எனவே, இந்தத் திட்டத்தில் செலவீனங்கள் போக, ஆண்டுக்கு 6 சதவிகித வருமானம் தருகிறது எனில், நீங்கள் உங்கள் ஓய்வுக்கால முதலீட்டில் ஒரு பகுதியை மாதா மாதம் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் 100 சதவிகித ஈக்விட்டியில் முதலீடு செய்ய விரும்பவில்லை எனில், பேலன்ஸ்டு ஃபண்டு களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஏனெனில் பேலன்ஸ்டு ஃபண்டுகள் 65% ஈக்விட்டிகளிலும், மீதத்தை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. இதனால் உங்களுடைய ரிஸ்க்கின் அளவு குறைக்கப்படும். பேலன்ஸ்டு ஃபண்டுகளின் கடந்த பத்து வருட டிராக் ரெக்கார்டைப் பார்க்கும்போது, கூட்டு வட்டி அடிப்படையில் அவை 15 - 20 சதவிகித வருமானம் தந்திருக்கிறது. இது மற்ற முதலீட்டுத் திட்டங்களின் வருமானத்தைவிட அதிகம். மேலும், இதற்கு நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி இல்லை. டிவிடெண்டுக்கும் வரி இல்லை.

உடனடி ஆனியுட்டி திட்டம்!

இது கிட்டத்தட்ட ஒரு பென்ஷன் திட்டம் போலவே செயல்படும். இது ஒரே ஒரு பிரீமியம் உள்ள திட்டம்; இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ததுமே உங்களுக்கான பென்ஷன் கிடைக்க ஆரம்பித்துவிடும். இது முதலீட்டாளர்களுக்கு வரம் போன்றது. இந்தத் திட்டத்தில் நிதி ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை 80சி பிரிவில் வரி விலக்கு உண்டு.

முதலீட்டாளர்கள் இவற்றில் மாதா மாதமும், காலாண்டுக்கு ஒரு முறையும், ஆண்டுக்கு ஒரு முறையும் என எப்படி வேண்டுமானாலும் தங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம். நிரந்தர வைப்பு நிதி போலவே செயல்படும் இந்தத் திட்டம் முதலீட்டாளரின் வாழ்நாள் முழுவதும் உத்தரவாத வருமானத்தைப் பெறும் வகையில் உள்ளது.

இந்த உடனடி ஆனியுட்டி திட்டத்தில் கிடைக்கும் வருமானம், முதலீட்டாளர் வயது மற்றும் தொகையைப் பொறுத்து 5 முதல் 7% வரை என்ற நிலையில் மாறுபடும். தற்போது இதில் எந்த வரிப் பிடித்தமும் இல்லை.

ஆனால், முதலீட்டாளரின் வருமான வரி வரம்பைப் பொறுத்து ஆனியுட்டி வருவாய்க்கு வரி உண்டு. உதாரணத்துக்கு, 60-80 வயதுள்ள ஒரு மூத்த குடிமகனுக்கு ரூ.3 லட்சம் வரை வருமான வரியில் விலக்கு உண்டு. 80 வயதைத் தாண்டியவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வரி ஏதும் இல்லை.

மேலும், இந்தத் திட்டங்களைப் பொறுத்தவரை, தனிநபர் ஆனியுட்டி அல்லது குடும்ப ஆனியுட்டி என பல திட்டங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, குடும்ப ஆனியுட்டியில் முதலீட்டாளர் தனது வாழ்நாள் முழுவதும், மற்றும் தனது இறப்புக்குப் பிறகு குடும்பத்தாரும் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான திட்டங்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம்.

அவரது இறப்புக்குப் பிறகு எந்தத் தொகையும் கூடுதலாகச் செலுத்த வேண்டியதில்லை. மேலும், இதில் உள்ள, ‘ரிட்டர்ன் ஆஃப் பர்ச்சேஸ் ப்ரைஸ்’ லைஃப் ஆனியுட்டி திட்டத்தின் கீழ், ‘முதலீடு செய்த தொகை’ முழுவதையும், முதலீட்டாளரின் இறப்புக்குப் பின்னர் நாமினி பெற்றுக்கொள்ளலாம். ஆனால், திட்டங்களைத் தேர்வு செய்வதில் முதலீட்டாளர்கள் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும்.

ஏனெனில், ஆனியுட்டி திட்டங்களில் உள்ள பிரச்னை, அதன் லிக்விடிட்டி தன்மை குறைவாக இருப்பதுதான். மற்ற இன்ஷூரன்ஸ் திட்டங்களைப் போலவே, இதிலும் பாலிசி எடுத்த 15 நாட்களுக்குள் ரத்து செய்துவிட முடியும். இன்ஷூரன்ஸ் நிறுவனம், முதலீடு செய்த தொகையை, முத்திரை வரி, ஆனியுட்டி செல வீனத் தொகை போன்றவற்றைக் கழித்துக்கொண்டு திருப்பி அளித்துவிடும்.

ஓய்வுக்கால முதலீட்டுக்கு தகுந்த மாற்று திட்டங்கள் ஏதும் இல்லாததாலும், இந்த பட்ஜெட்டில் சேவை வரியை 3.5 சதவிகிதத்திலிருந்து 1.4 சதவிகிதமாகக் குறைத்ததாலும், சிங்கிள் பிரீமியம் உடனடி ஆனியுட்டி திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

நிம்மதியான ஓய்வுக் காலத்துக்காகத் திட்டமிடுப வர்கள் தங்களின் வாழ்வுமுறை, வரவு மற்றும் செலவு, குடும்பத் தேவை போன்றவற்றுக்கேற்ப தங்களின் ஓய்வுக்கால வருமானத்தைக் கணித்து, அதற்கேற்றாற்போல் இளமைக் காலத்திலேயே முதலீடுகளைப் பிரித்து செய்யும்பட்சத்தில் நமது ஓய்வுக்காலத்தை நிம்மதியாக, சந்தோஷமாகக் கழிக்க முடியும்.

பிரித்து முதலீடு செய்யுங்கள்!

ஓய்வுக்காலத்துக்கான முதலீடுகளைத் திட்டமிடும்போது ஒரே திட்டத்தில் முழுத் தொகையையும் முதலீடு செய்யாமல், நிதி ஆலோசகரை ஆலோசித்து பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன், ஓய்வு பெற இருக்கும் காலம் போன்றவற்றுக்கேற்ப முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்.

காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டங்கள் வேண்டாமே!

காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பெரும்பாலான திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டை மேற்கொள்வதால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. யூலிப் திட்டங்களில் உள்ள அதிக கட்டணம், முதலீடு செய்த திட்டம் நன்றாக செயல்படவில்லை எனில் எளிதாக வெளியேற முடியாது. இது போன்ற காரணங்களால் ரெடிமேட் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.