Published:Updated:

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை...!

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும்  கஷ்டம் இல்லை...!
நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை...!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும்  கஷ்டம் இல்லை...!

ந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய நிதி ஆண்டு பிறந்திருக்கிறது. நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்குங்கள்.

கோடீஸ்வரரா...? நம்மால் முடியுமா என்கிற சந்தேகமே வேண்டாம். உங்களால் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆகமுடியும், எப்படி என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தால்.

நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கு தவறான முதலீடுகளை சிலர் உங்களிடம் எடுத்துச் சொல்லி,  ஆசை விதையைத் தூவுவார்கள். ஃபாரக்ஸ் டிரேடிங், ஈமு கோழி வளர்த்தல் போன்ற  திட்டங்களில் பணத்தைப் போடச் சொல்வார்கள். இந்த வழிகளில் ஒருவர் நிச்சயம் கோடீஸ்வரராக முடியாது. இவை எல்லாம் ஒருவரை ஏப்ரல் ஃபூல் ஆக்கும் திட்டங்களன்றி வேறல்ல.  

நல்ல முதலீட்டுத் திட்டத்தில் நீங்கள் சிறுக சிறுக முதலீடு செய்தால், ஒருவர் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகமுடியும். இதற்கு தொடர்ந்து முறையாக சிறிய தொகையை முதலீடு செய்தாலே போதும்.

நீங்களும் கோடீஸ்வரர் ஆகமுடியும்!

நம்மில் பலருக்கு லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆகவேண்டும் என்பது நீண்ட கால கனவாக

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும்  கஷ்டம் இல்லை...!

இருக்கிறது. ஆனால், நம்மில் ஒரு சிலர்தான் இந்த இலக்கை அடைகிறார்கள். என்ன காரணம்? கணக்கு வழக்கு இல்லாமல் செய்யும் அதிரடி செலவுகள்தான்.

இன்றைக்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 70% பேர் தங்கள் வாழ்க்கையை கடனில்தான் ஆரம்பிக்கிறார்கள். காரணம், கிரெடிட் கார்டு (கடன் அட்டை), தனிநபர் கடன், கல்விக் கடன் என்று முதல் சம்பளமே கடனுக்குத்தான் செல்கிறது. செல்போன், பைக் என கடன் வாங்கி செலவு செய்யும்போது அதற்கான இ.எம்.ஐ தொகை கட்டுவதுடன்,  வட்டியாகவே கணிசமான தொகை சென்றுவிடுகிறது. ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களை கடன்படாமல் காசு கொடுத்து வாங்கினால், வட்டிச் செலவு மிச்சமாகும். இந்தப் பணத்தை நல்ல லாபம் தரும்  திட்டத்தில் முதலீடு செய்தால், பிற்காலத்தில் நிச்சயம் கோடீஸ்வரராக முடியும்.  இதை இளம் வயதிலேயே சரியாகப் புரிந்துகொண்டு முதலீடு செய்ப வர்களே பெரிய செல்வந்தராகிறார்கள்.

ஆனால், இன்றைய இளைஞர்களோ, வாரம் ஒருமுறை தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ சினிமா பார்ப்பது; செல்போனுக்கு அடிக்கடி ரீ-சார்ஜ் செய்தல்; தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அதிக செலவு செய்தல்; இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றுவது; தனியாகவோ அல்லது நண்பர்களுடன் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடு வது என அதிகம் செலவு செய்கிறார்கள்.

இந்த செலவுகளில் கொஞ்சத்தைக் குறைத்துக் கொண்டு, மாதம் ரூ.100 சேமித்து முதலீடு செய்ய முடியுமானால், ஒவ்வொருவரும் லட்சாதிபதி ஆவது நிச்சயம். இதுவே மாதம் ரூ.1,000 சேமிக்க முடியுமானால், கோடீஸ்வரர் ஆவது உறுதி.  (பார்க்க எதிர்பக்கத்தில் உள்ள அட்டவணை!)

எப்படி, எப்படி?

இது எப்படி சாத்தியம் என்பதை விளக்கமாக பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலையில், “செலவு செய்வதற்கு பல ஆயிரம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முதலீடு செய்ய சில அரிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளன” என்கிற உண்மையை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பணத்தை சிக்கனமாக செலவழிப்ப தன் மூலம் சேமித்து, முதலீடு செய்வதை ஒருவர் தனது 40-வது  வயதில் ஆரம்பித்து எந்தப் பயனும் இல்லை. 25 வயதில் ஆரம்பித்தால் தான், கூட்டு வளர்ச்சி (Compound of Growth) தரும் முழுப் பலனை அடைய முடியும். கூட்டு வளர்ச்சி என்றால்...?

எட்டாவது அதிசயம்!

பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும் நம்மால் அந்த மாதிரி ஆக முடியாமல் போவதற்கும் முக்கியமான காரணம், கூட்டு வளர்ச்சி என்கிற விஷயத்தை நாம் புரிந்துகொள்ளாமலே இருப்பதால் தான். இந்த உலகில் முதலீட்டின் மூலம் பணக்காரர் களான அனைவரும் இந்த கூட்டு வளர்ச்சியின் மகிமையை நன்கு புரிந்துகொண்டு அதை பயன்படுத்திக் கொண்டதால்தான். 

ஒரு உதாரணம் மூலம் இதைப் புரிந்துகொள்வோம்.  இன்றிலிருந்து 30 வருடம் கழித்து உங்களுக்கு ரூ.1 லட்சம் அல்லது ரூ.1 கோடி ரூபாய் தேவை என்றால், அதனை அடைய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அதை சேமித்து வைப்பது. இன்னொன்று, அதை சரியான திட்டத்தில் முதலீடு செய்து, நீண்ட நாட்களுக்கு அதை வளரவிடுவது.

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும்  கஷ்டம் இல்லை...!

லட்சாதிபதிக்கான இலக்கு..!

உதாரணமாக, நீங்கள் 30 வருடம், அதாவது 360 மாத (30x12 = 360) காலத்துக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய உண்டியலில் மாதம் ரூ.278 சேமித்தாலே போதும், ரூ.1 லட்சம் சேர்ந்துவிடும்.

(2) ஆனால், ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.29-யை 30 வருடங்களுக்கு முதலீடு செய்தாலே நீங்கள் லட்சாதிபதியாகிவிடலாம். 30 ஆண்டு காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்த தொகை வெறும் ரூ.10,440. இது ஆண்டுக்கு 12% வளர்ச்சி கண்டால், 30-வது வருடத்தில் உங்களுக்கு ரூ.1,04,400 கிடைக்கும். அதாவது, உங்கள் 20 வயதில் மாதம் ரூ.29 முதலீடு செய்ய ஆரம்பித்தால், உங்களது 50-வது வயதில் நீங்கள் லட்சாதிபதி ஆகிவிடுவீர்கள். இதுதான் கூட்டு வளர்ச்சி என்கிற எட்டாவது அதிசயம். இதுவே மாதம் ரூ.100 முதலீடு செய்தால், அது உங்கள் 50-வது வயதில் ரூ.3.5 லட்சமாக பெருகும்.  இந்த 100 ரூபாய் முதலீட்டை 60 வயது வரை தொடர்ந்து, அதற்கு ஆண்டுக்கு 12% கூட்டு வட்டியில் வளர்ந்தால், ரூ.11 லட்சமாக பெருகும்.  இப்போது சொல்லுங்கள், கூட்டு வட்டியின் வளர்ச்சியைப் பயன்படுத்தி நீங்கள் லட்சாதிபதி யாவது பெரிய காரியமா என்ன? 

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும்  கஷ்டம் இல்லை...!

கோடீஸ்வரருக்கான இலக்கு..!

சரி, லட்சாதிபதி ஆவதற்கான வழியைத் தெரிந்துகொண்டுவிட்டோம். கோடீஸ்வரர் ஆவதற்கு...?

(1) முதல் வழி - 20 வயது உடைய நபர் ஒருவருக்கு 60-வது வயதில் ரூ.1 கோடி தேவை என்று வைத்துக் கொள்வோம். அவர் 60 வயதை அடைய  (40 x 12) = 480 மாதங்கள் இருக்கின்றன. அவர் மாதம் மாதம்  ரூ.20,833 சேமித்தால்தான், அவர் அடைய நினைக்கும் 1 கோடி ரூபாய் கிடைக்கும்.

(2) இரண்டாவது வழி, ரூ.1 கோடி தேவை எனில், 12%, கூட்டு வட்டியில் வளர்ச்சி அடையக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு மாதமும் ரூ.849 முதலீடு செய்துவந்தாலே போதும். 480 மாதங்கள் செய்யும் மொத்த முதலீடு ரூ.4,07,520 ஆகும். இது 40 ஆண்டுகளில் 12% கூட்டு வளர்ச்சியில் வளர்ந்தால்,  60 வயதில் கிடைக்கும் தொகை ரூ.1 கோடி-ஆக இருக்கும். இதுவே ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 மாதம் முதலீடு செய்தால், ரூ.1.17 கோடி கிடைக்கும். (மியூச்சுவல் ஃபண்டில் இவ்வளவு லாபம் கிடைக்குமா என்று கேட்பவர்கள் 48-ம் பக்கத்திலுள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வருமானம் எப்படி? என்கிற அட்டவணையைப் பார்க்கவும்!) 

ஆக, நீண்ட கால கூட்டு வளர்ச்சியின் மூலமாக கிடைக்கக்கூடிய முதலீட்டை தேர்ந்தெடுத்தால் நமது இலக்கை புத்திசாலித்தனமாக சுலபமாக அடைய முடியும். இந்த உத்தியைத்தான் உலகப் பணக்காரர்களும், செல்வந்தர்களும், கோடீஸ்வரர் களும் பயன்படுத்தி, பல ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருக்கின்றனர்.

எவர் ஒருவர் பணத்தை நீண்ட காலத்துக்கு உழைக்க வைக்கிறாரோ, அவரே  லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரராகவும் மாறுகிறார் என்பதை புரிந்துகொண்டு,  கோடீஸ்வரர் ஆவதற்கான முயற்சிகளை இப்போதே எடுப்போம்.

வாசகர்களின்   கேள்விகளுக்கான பதில்!

 ‘‘ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம், எப்படி?’’ என்கிற தலைப்பில் இந்தக் கட்டுரையை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டோம். இதைப் படித்த வாசகர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள். அந்த கேள்விகளுக்கான பதில் இதோ:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது நம்பக்கூடிய தல்ல என்று சொல்லி இருந்தார். முகமது அப்துல்லா.மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (SEBI) கட்டுப்படுத்தி வருகிறது. ஃபண்ட் நிறுவனங்கள் சிறு தவறு செய்தாலும், கடுமையாக தண்டிக்கிறது செபி. இதிலிருந்தே இந்த முதலீட்டில் பெரிய தவறு எதுவும் நடக்காது எனலாம். 

‘மியூச்சுவல் ஃபண்ட்டைவிட அஞ்சல் சேமிப்பு, என்.எஸ்.இ. முதலீடே சிறந்தது என்று சொல்லி இருக்கிறார் காந்திமதி. அவர் சொன்ன அனைத்து முதலீடுகளுமே அதிகபட்சம் 8% மேல் வருமானம் தராது. தவிர, அதிகபட்சம் 6 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய முடியும். மீண்டும் முதலீடு செய்தால், அப்போதுள்ள  வட்டியே கிடைக்கும். முதிர்ச்சி அடையும்போது கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு எனில் ஓராண்டுக்குப்  பிறகு வரி எதுவும் கட்டத் தேவையில்லை.

பாலாஜி என்கிற வாசகர், எந்த மாதிரியான ஃபண்டை தேர்ந்தெடுப்பது, ஒரே ஃபண்டில் 60 வயது வரை முதலீடு செய்யலாமா, மியூச்சுவல் ஃபண்டை கண்காணிக்க பங்குச் சந்தை சார்ந்த அறிவு வேண்டாமா எனக் கேட்டுள்ளார். என்ன நோக்கத்துக்காக, எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மாறும். ஒரு ஃபண்டைத் தேர்வு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த ஃபண்டின் பெர்ஃபார்மன்ஸை பரிசீலிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்டைக் கண்காணிக்க பங்குச் சந்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்தாலே போதும்.

அடுத்த கட்டுரைக்கு