? என் வயது 26. சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். 2014-ல் 10 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தேன். 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் ?

மோகன்குமார்,

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“டேர்ம் இன்ஷுரன்சஸை அதிகப்படுத்த அதே இன்ஷுரன்ஸ் நிறுவனத்தையோ அல்லது வேறு ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனத்தையோ அணுகி, மீண்டும் ஒரு புதிய படிவத்துடன், அடையாள அட்டை, முகவரிச் சான்று மற்றும் வருமானச் சான்று கொடுத்து, மருத்துவப் பரிசோதனை செய்து அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.”

?கடந்த இதழில் சப்-புரோக்கராக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள்! அதற்கு தேர்வு ஏதாவது எழுத வேண்டுமா?

சண்முகம்,

ரமேஷ், மேனேஜர், நெஸ்டோ குரூப் ஆஃப் கம்பெனீஸ்

“என்ஐஎஸ்எம் (NISM - National Institute of Securities Markets) நடத்தும் ஈக்விட்டி டெரிவேட் டீவ்ஸ் தேர்வு எழுதி குறைந்தது 60 சதவிகித மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வுக்கான கட்டணம் ரூ.1,500. இந்த தேர்வை ஆன்லைன் மூலம் எழுத வேண்டும். கல்வித் தகுதி பிளஸ் 2. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு புரோக்கரிடம் சப் புரோக்கராக சேர்ந்து பணிபுரிய முடியும். இது தவிர, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ரெலிகேர் போன்ற பங்குத் தரகு நிறுவனங்களில் டீலர் அல்லது ரிலேஷன்சிப் மேனேஜராக பணியாற்றலாம். ஆரம்பத்தில் மாதம் ரூ.15,000 கிடைக்கும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தால், ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை வருமானம் கிடைக்கும். வேலைக்குச் சேர எண்ணமில்லை என்றால் பங்குத் தரகு நிறுவனங்களுக்கு சேனல் அல்லது பிசினஸ் பார்ட்டனராக செயல்பட முடியும். இதற்கு முதலீடு அதிகம் தேவைப்படாது.”

?நானும் எனது மனைவியும் சேர்ந்து 50 லட்ச ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்க இருக்கிறோம். நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்கிறோம். எங்களுக்கு எந்த மாதிரியான வரிச் சலுகைகள் கிடைக்கும்?

ஜெயக்குமார்,

என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ.

“வீடு மற்றும் வீட்டுக் கடன் வாங்கு வதற்கான வரிச் சலுகைகளின்படி, 80-சி பிரிவின் கீழ் அசல் திருப்பி செலுத்திய தொகையில் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை வரிச்சலுகை வழங்கப்படும். பத்திரச் செலவு மற்றும் கிரையச் செலவுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். (வீட்டுக் கடன் வாங்கவில்லை என்றாலும் இந்தச் சலுகை வழங்கப்படும்). 24 பிரிவின் கீழ் சுய ஆக்ரமிக்கப்பட்ட வீட்டுக்கான கடன் வட்டி அதிகபட்சம் ரூபாய் 2,00,000 வரை வரிச் சலுகை வழங்கப்படும். கட்டுமானப் பணி முடிவதற்குமுன் உள்ள காலத்துக்கான வட்டி, கட்டுமான பணி முடிந்த ஆண்டில் இருந்து அடுத்துவரும் நான்கு ஆண்டுகளுக்கு (மொத்தம் 5 ஆண்டுகள் ) சமமாகப் பிரித்து வரிச் சலுகை வழங்கப்படும். 80-EE பிரிவின் கீழ் நிதி ஆண்டு 2016-17 முதல், முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூபாய் 50,000 வரிச் சலுகை வழங்கப்படும். மனைவி மற்றும் கணவர் சேர்ந்து வாங்கிய சொத்துக்கான வரிச் சலுகைகள் இருவருக்கும் சமமாக வழங்கப்படும்.”

?வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான ஃபார்ம் 16-ஐ (Salaried class) ஒருவேளை நிறுவனர் (employer) தர மறுத்தாலோ/ தாமதப்படுத்தினாலோ, அதற்கு வேறு வழி ஏதேனும் உண்டா? இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது ?

பாஸ்கரன்,

சிஏ.ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ், ஈரோடு.

“ வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஃபார்ம் 16 கிடைக்கவில்லை எனில், www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் சென்று லாக்-இன் செய்து, ஃபார்ம் 26 AS-ஐ டவுன்லோடு செய்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருப்பின் ஃபார்ம் 24 Q-யை வருமான வரி அலுவலகத்துக்கு நிறுவனர் (Employer) கட்டாயம் குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி தாக்கல் செய்தால் மட்டுமே ஆன்லைனில் ஃபார்ம் 16-ஐ டவுன்லோடு செய்ய முடியும். தவறினால் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ரூ.200-ஐ அபராதமாக வருமான வரி அலுவலகத்துக்கு நிறுவனர் கட்ட நேரிடும்.

ஒருவேளை தங்களுடைய டிடிஎஸ் தொகை அங்கு காணப்படாவிட்டால் அல்லது உங்கள் நிறுவனர் அதை அரசாங்கத்துக்குச் செலுத்தத் தவறியிருந்தால், நீங்கள் உங்கள் அருகில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் டிடிஎஸ் வருமான வரி அதிகாரியிடம் முறையிடலாம். உங்கள் நிறுவனரைத் தொடர்பு கொண்டு ரிட்டன் பதிவு செய்யுமாறு வருமான வரி இலாகாவில் இருந்து வலியுறுத்துவார்கள்.”

?வங்கிகளில் பிபிஎஃப் முதலீட்டை ஆரம்பிக்க முடியுமா, ஆன்லைன் வசதி இருக்கிறதா?

வெ. சண்முகம்,

ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர்.

“அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் மற்றும் சில பொதுத் துறை வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பிபிஎஃப் முதலீட்டை தொடங்க வழிவகை செய்துள்ளது. ஆன்லைன் வழியாக சுலபமாக பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இது நீண்ட கால முதலீடு என்பதால், இந்தத் திட்டத்தின் பயன்கள் மற்றும் அம்சங்கள் குறித்து உங்களுடைய நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்தபின் முதலீடு செய்வது நல்லது”

?என் வயது 25. மாத சம்பளம் ரூ.25,000. மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். எஸ்ஐபி முறையில் எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் குரோத் ஆப்ஷனில் ரூ.2000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரெகுலர் பிளான் குரோத்தில் ரூ.2000, எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட் ரெகுலர் பிளான் குரோத்தில் ரூ.2,000. இதுதான் என்னுடைய தற்போதைய போர்ட்ஃபோலியோ. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். போர்ட்ஃபோலியோவை மாற்ற வேண்டுமா? மீதியிருக்கும் 4,000 ரூபாயை எதில் முதலீடு செய்வது?

தினேஷ்,

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ் வெல்த் அட்வைசர்ஸ்

“நீங்கள் முதலீடு செய்வதற்காக தேர்வு செய்திருக்கிற ஃபண்டுகள் அனைத்துமே நல்ல ஃபண்டுகள்தான். உங்களின் முதலீட்டை தொடருங்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35-ல் முதலீடு செய்யுங்கள். இது நல்ல டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் ஆகும். உங்களின் முதலீட்டு ஆர்வத்தை பாராட்டுகிறேன். ஃபைனான்ஸ் சம்பந்தமான இதழ்களை படியுங்கள். பீட்டர் லிஞ்ச் எழுதிய ‘Once upon the Wall Street’ என்ற புத்தகத்தை படியுங்கள். இதை படிக்கும்போது யாருடைய வழிகாட்டுதலும் இன்றி நீங்களாகவே நேரடியாக பங்கு சார்ந்த வர்த்தகத்தில், முதலீட்டில் ஈடுபட முடியும்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!