Published:Updated:

உலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்!

உலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்!

சோ.கார்த்திகேயன்

உலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்!

லகம் முழுவதும் முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இது தான் ‘பனாமா பேப்பர்ஸ்’.

இதுவே முதல்முறை!

பனாமாவில் உள்ள மொசாக் ஃபான்செகா என்ற சட்ட உதவி நிறுவனம், கம்பெனிகள் வாங்க விற்க, பதிவு செய்ய உள்ளிட்ட சேவைகளைச் செய்து வருகிறது. உலகின் மிகப் பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்றாக உள்ள இந்த நிறுவனத்திடமிருந்து ஏறக்குறைய 11.2 மில்லியன் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கம் (International Consortium Of Investigative Journalism) ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தி யுள்ளது. கறுப்புப் பணம் குறித்த ஆவணங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படு வது இதுவே முதல்முறை.

அமிதாப், ஐஸ்வர்யா ராய்!

உலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizபனாமா பேப்பர்ஸ் பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உதவியாளர்,பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபி உட்பட பலர் இடம்பெற்றிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எஃப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரமோட்டர் சமீர் கெலாத்தி ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் பனாமா நாட்டில் ஏன் பணத்தை பதுக்குகின்றனர் என்பது உட்பட பல விஷயங்கள் குறித்து கோவைையச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம். அவர் பல விவரங்களை விளக்கமாகச் சொன்னார்.

உலகை உலுக்கும் ஊழல்!

“மத்திய அமெரிக்க நாடான பனாமாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொசாக் ஃபான்செகா என்ற சட்ட நிறுவனம், இந்த மோசடியை செய்துவந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அடையாளம் தெரியாத ஒருவர் இந்த ஆவணங்கள் குறித்து அளித்த தகவல்கள் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. பின்னர் சர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கம் கடந்த பல மாதங்களாக இந்த தகவல்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, சட்டத்துக்கு புறம்பாக மோசடி செய்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி மொசாக் ஃபான்செகா என்கிற நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக உலகெங்கும் 2.14 லட்சம் நிறுவனங்கள் வரி தஞ்சம் தந்த நாடுகளில் (Tax Heaven Countries) நிறுவனங்களைத் துவங்க ஒரு கருவியாக இருந்து செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பனாமா எனும் சொர்க்கபுரி!

பொதுவாக, எந்த நாட்டில் வரித் தொகை குறைந்த அளவில் இருக்கிறதோ அல்லது வருமான வரியே இல்லாமல் இருக்கிறதோ, அந்த நாடுகள் வரி தஞ்சம் தந்த நாடுகள் என்று அழைக்கப் படுகின்றன. உதாரணமாக, மொரிஷியஸ், பிரிட்டீஷ் வெர்ஜீனியா ஐலண்ட், சைப்ரஸ், கேமன் ஐலண்ட் போன்ற நாடுகள் வரி தஞ்சம் தந்த நாடுகளாக கருதப்படுகிறது. அதாவது, இந்த நாட்டில் வருமான வரியே இல்லாததால், இங்கே முதலீடு செய்து பின்னர் வளரும் நாடுகளில் முதலீடு செய்யும்போது, அதன் மூலம் ஏற்படும் லாபத்துக்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும், இந்த நாட்டில்தான் அந்த நிறுவனங்கள் தலைமையிடமாக கொண்டு செயல்படுவதால், இந்தப் பங்குகளை விற்பனை செய்யும்போது மூலதன லாபம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. இந்தப்  பங்குகளுக்கு  டிவிடெண்ட் அறிவிக்கும்போது இந்த டிவிடெண்டுக்கான வரி ஏதும் இங்கு செலுத்த வேண்டியதில்லை.

எப்படிப் பணத்தை பதுக்குகிறார்கள்?

பனாமா பேப்பர்ஸ் அறிக்கையில் கிடைத்த தகவலின்படி, 22.9 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1500  லட்சம் கோடி ரூபாய்) வரி தஞ்சம் தந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கறுப்புப் பணத்தை பதுக்க நினைப்பவர்கள் முதலில் வரி தஞ்சம் தந்த நாடுகளில் நிறுவனத்தை ரிஜிஸ்டர் செய்வார்கள். ஆண்டுக்கு சிறிய தொகையை கொடுக்கும்பட்சத்தில் அவர்களே அங்குள்ள ஒரு நபரை இயக்குநராக நியமித்துவிடுவார்கள். இவர்களை போலி இயக்கு நர்கள் என்று கூறுவர். இதுபோன்ற நிறுவனங்களின் முக்கிய நன்மையே ரகசியத்தை பாதுகாப்பதுதான்.

இந்த நாட்டின் தகவல் பரிமாற்ற சட்டத்தின்படி, இந்த நாட்டில் முதலீடு செய்துள்ளவர்கள் தொடர்பான எந்தவொரு விவரங்களையும் கேட்டு பெற  முடியாது. இந்தியாவிலிருந்து இது குறித்த விவரங்களை கேட்டாலும், அந்த நாடு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை முறியடிக்கும் வகையில் புதிய தகவல் பறிமாற்ற சட்டங்கள் கொண்டுவந்து 2017-ம் ஆண்டிலிருந்து எல்லா நாடுகளுக்கும் சர்வதேச அளவில் தகவல் பரிமாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகை உலுக்கும் ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல்!

ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை!

2003-ம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியில் முன்அனுமதி பெற்றுதான் முதலீடு செய்ய வேண்டும் என்றிருந்தது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட கொள்கையின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களில் முன்அனுமதி இன்றி முதலீடு செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், இதற்கும் ஒரு வரம்பு உண்டு. தற்போது 2.5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.65 கோடி ரூபாய் வரை) வரை நிதி ஆண்டுக்கு முதலீடு செய்யலாம் என்கிற நிலை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் இது வெறும் 75 ஆயிரம் டாலராகவே இருந்தது. ஆகவே, இந்த தாராளமயமாக்கப்பட்ட கொள்கையின் கீழ் அதிகளவிலான பணத்தை கொண்டு சேர்க்க வாய்ப்பில்லை. எனினும் இது குறித்த விசாரணை நடந்த பிறகுதான் அனைத்து உண்மையும் தெரியும்.

வருமான வரிப் படிவம்!


கடந்த ஆண்டு வருமான வரிச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் சொத்து வைத்து இருந்தாலோ, வருமானம் ஈட்டினாலோ அந்த விவரங்கள் குறித்து வருமான வரிப் படிவத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. ஆகவே, அவர்களின் கடந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலைப் பார்த்தாலே இந்த விவரங்கள் புரிந்துவிடும். ஆனால், இதற்கு சில காலம் தேவைப்படலாம்.

மேலும், 2015-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை வைத்துள்ளோர் தாமாக முன்வந்து வரி மற்றும் அபராதம் செலுத்தும்பட்சத்தில் அவர்கள் மீது சிறை தண்டனை விதிக்காமல் மன்னிக்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத் தியது. இந்த சட்டத்தில் 700-க்கும் குறைவானவர் களே தாமாக முன்வந்து வரியையும், அபராதத்தையும் செலுத்தியுள்ளனர். இது மத்திய அரசாங்கத்துக்கு ஒரு ஏமாற்றமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் பனாமா பேப்பர்ஸ் குறித்த அறிக்கை வந்துள்ளது பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் சர்வதேச அளவிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்” என்றார்.

சட்டம் தன் கடமையை செய்யுமா..?

இந்தியாவிலிருந்து பிரபல நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. பனாமா பேப்பர்ஸ் ஊழலில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் சொத்து வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்னும் முழுமையான விவரங்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. ‘இது வெறும் ஆரம்பம்தான்’ என்கிறார் கள் இந்த தகவல்களை வெளியிட் டவர்கள். இது குறித்து இன்னும் அதிக தகவல்கள் வெளிவரும் பட்சத்தில் இதில் சிக்கியுள்ளோருக்கு கடும் நெருக்கடி ஏற்படும். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, வெளிநாடுகளில் இவர்கள் வைத்தி ருக்கும் பணத்தை திரும்பவும் இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பதே சாதாரண மனிதர்களின் எதிர்பார்ப்பு.