?என்னிடம் பான் கார்டு இல்லை. படிவம் எண் 60-ஐ எதற்கெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்?

கஜேந்திரன்,

ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

“வருமான வரிச் சட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரந்தரக் கணக்கு எண் குறிப்பிடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், பான் எண்ணைப் பெறாதவர்கள் படிவம் 60-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்வரும் நிகழ்வுகளில் ஒருவர் பான் கார்டு இல்லை என்றால் படிவம் 60-ஐ சமர்ப்பிக்கலாம்.

ரூ.5,00,000-க்கு மேல் அசையா சொத்துக்கள் வாங்கும்போது / விற்கும்போது, மோட்டார் வாகனங்கள் (இரு சக்கர வாகனங்கள் தவிர) விற்கும்போது / வாங்கும்போது, வங்கியில் ரூ.50,000-க்கு மேல் வைப்பு நிதி வைக்கும்போது, ரூ.1,00,000-க்கு மேல் பங்குகளை விற்கும்போது / வாங்கும்போது, ரூ.50,000-க்கு மேல் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கும்போது, அலைபேசி அல்லது தரை வழி தொலைபேசி எண்ணைப் பெற விண்ணப்பிக்கும்போது, தங்கும் விடுதி அல்லது உணவகத்தில் ரூ.25,000-க்கு மேல் பணம் செலுத்தும்போது, வங்கிகளில் ரூ.50,000-க்கு மேல் வரைவு காசோலை (டிடி) எடுக்கும்போது படிவம் எண் 60-ஐ சமர்ப்பிக்கலாம். இந்த படிவம் எண் 60 என்பது ஒரு வேலை தடை பெறாமல் இருக்க தற்காலிக தீர்வுதான். எனவே, பான் எண் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அதற்கு ஒன்றும் அதிகம் செலவாகப் போவதில்லை.”.

?தனுஷ் டெக்னாலஜீஸ் (Dhanus Technologies) பங்குகள் தற்போது வர்த்தகமாகவில்லை. இந்தப் பங்கின் விலை 65 பைசாவாக (முக மதிப்பு ரூ.10) இருந்தபோது, 6 லட்சம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கியிருக்கிறேன். இந்தப் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

@ - கேசவன்,

எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர், சேலம்.

“சில காலமாக தனுஷ் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகள் வர்த்தகமாகவில்லை. பங்குச் சந்தையின் நடைமுறையைச் சரியாக பின்பற்றாமல் இருந்ததால், இந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக 0.08 பைசாவுக்கு இந்த பங்கு வர்த்தகமானது. இனிமேல் இந்தப் பங்கு வர்த்தகம் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது. எனவே, இந்தப் பங்கில் முதலீடு செய்துள்ள பணம் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது.”

?என் வயது 26. சுமார் 12 வருடங்கள் கழித்து ரூ.10 லட்சம் தேவை. என்னால் தற்போது மாதம் 3,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால் என் இலக்கை அடைய முடியும்?

@ - சிவக்குமார்,

விஜய்பாபு, நிதி ஆலோசகர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் , கோவை.

“நீங்கள் பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் ரூ.3,000 வீதம் 12 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தால் 12% கூட்டு வட்டி அடிப்படையில் சுமார் ரூ.9.7 லட்சம் கிடைக்கும்.”

?பூர்வீக சொத்து வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு மாறினால், அவர் மற்ற வாரிசுகளின் அனுமதி இல்லாமல் அவர் விருப்பப்பட்டவருக்கு தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா?

@ - முரளி,

கே.அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம்

“இந்து வாரிசுரிமைச் சட்டப்படி (Hindu Succession Act) மற்ற வாரிசுகள் இருக்கும்போது, வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே பூர்வீக சொத்து கிடைத்திருக்க வாய்ப்பில்லை. முன்னோர்களிடமிருந்து ஏதாவதொரு ஆவணம் மூலமாக, அதுவும் பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாக அந்த பூர்வீக சொத்தினை அந்த நபர் அடைந்திருந்தால், அவர் விருப்பப்பட்ட நபருக்கு தான செட்டில்மென்ட் செய்ய முடியும். பல வாரிசுகள் இருக்கும்போது, பூர்வீக சொத்தாக இருப்பதால், அவர்கள் அனுமதி கொடுத்தாலும், அவரவர் பாக பாத்தியதையை விடுதலை செய்து கொடுக்காமல், அவர் விரும்பியவாறு தான செட்டில்மென்ட் செய்ய இயலாது.”

?என்னுடைய ஓய்வுக்கால பென்ஷனில் இருந்து என்னுடைய பேரன், பேத்திகளின் வருங்கால படிப்பு மற்றும் திருமணத்துக்கு எஸ்ஐபி முறையில் மாதம் ரூபாய் 5,000 முதல் இரண்டு பேருக்கும் 10 வருடத்துக்கு செலுத்த உள்ளேன். வருமான வரி இலக்கு பெற எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேரலாம்?

@ - தனசேகர்,

த.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்

“நீங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காக எஸ்ஐபி முதலீட்டை தேர்ந்தெடுத்துள்ளது சரியான முடிவாகும். அதனுடன் சேர்த்து வரி சேமிப்பையும் திட்டமிடுதல் என்பது நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் வரிச் சேமிப்புக்கு பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்வது உகந்ததாகும். ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ஃபண்ட்- குரோத், ஆக்ஸிஸ் லாங் டேர்ம் அட்வான்டேஜ் ஃபண்ட் -குரோத்.”

?அலுமினியம், காப்பரை இடிஎஃப் மூலம் வாங்கலாமா?

வெற்றி,

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்

“இடிஎஃப் என்பது ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் வகையை சார்ந்தது. நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பணத்தைத் திரட்டி அதை ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்களில் அல்லது வேறு ஒரு பொருளில் முதலீடு செய்வார்கள். பதிலுக்கு பொதுமக்களுக்கு யூனிட்களை டீமேட் கணக்கில் கொடுப்பார்கள். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், நிஃப்டி, சென்செக்ஸ் போன்றவற்றின் வளர்ச்சியைவிட கூடுதலான லாபம் காட்ட முனைவார்கள். ஆனால், இடிஎஃப் திட்டங்களின் நோக்கம், அது முதலீடு செய்யும் குறியீட்டு எண் அல்லது பொருளின் நகர்வை மட்டுமே பிரதிபலிக்க வைப்பது. அந்த திட்டங்கள் பங்குச் சந்தைகளில் (NSE & BSE) வியாபாரம் ஆகிறது. அந்த வகையில், இடிஎஃப். திட்டங்களில் திரட்டப்படும் பணம், பங்குச் சந்தை சார்ந்த நிஃப்டி, பேங்க் நிஃப்டி, சென்செக்ஸ், இன்னும் பல குறியீட்டு எண்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. இவை தவிர, தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

ஆனால், அலுமினியம், காப்பர் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும் திட்டங்கள் இந்தியாவில் இன்னும் தொடங்கப்படவில்லை.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.