Published:Updated:

66 வயது... அயராத உழைப்பு!

66 வயது... அயராத உழைப்பு!
பிரீமியம் ஸ்டோரி
66 வயது... அயராத உழைப்பு!

பிசினஸ்

66 வயது... அயராத உழைப்பு!

பிசினஸ்

Published:Updated:
66 வயது... அயராத உழைப்பு!
பிரீமியம் ஸ்டோரி
66 வயது... அயராத உழைப்பு!
66 வயது... அயராத உழைப்பு!

றுபத்து ஆறு வயதிலும் தன் தளராத உழைப்பால் வெற்றிகரமான பிசினஸ் உமனாக செயல்பட்டு, ‘சபாஷ்’ போடவைக்கிறார், நந்தினி ஷர்மா. 1977-ம் வருடத்தில் 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்  ‘த்ரிவேணி எக்ஸ்போர்ட்ஸ்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட  இவரது நிறுவனம், ஆரம்பத்தில் தோல் பொருட்களைத் தயாரிப்பதுடன் ஏற்றுமதியும் செய்துவந்தது. கால மாற்றத்தில், மக்களின் ரசனைக்கேற்ப `நஷா’ஸ் பெயின்ட்டர்ஸ் கார்டன்' என பெயர் மாற்றம் அடைந்து தற்போது கஸ்டமைஸ்டு கிஃப்ட் ஷாப்பாக சென்னை, தி.நகரில் இயங்கி வருகிறது. 40 வருடங்களாக பிசினஸில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் பெண்மணியான நந்தினி ஷர்மாவிடம் பேசினோம்.

66 வயது... அயராத உழைப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பிசினஸ் பண்ணணும்னு முடிவெடுத்த சமயத்துல தோல் பொருட்களோட விலை ரொம்ப அதிகமா இருந்துச்சு. குறைஞ்ச விலையில்  தரமான தோல் பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தா நல்ல வரவேற்பு இருக்கும்னு எனக்கு தோணுச்சு. இதுக்காக, சில கனரக தயாரிப்பு இயந்திரங்களை இறக்குமதி செஞ்சேன். அதுக்கப்புறம்  எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலின் உதவியுடன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தேன். ஆர்டர்கள் நிறையவே வர ஆரம்பிச்சது. எல்லா ஆர்டர்களையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன்’’ என்னும் நந்தினி ஷர்மா பிசினஸில் தான் உணர்ந்த தவறு பற்றியும் பேசினார்.

``நமக்கு வர்ற ஆர்டர்களை மிஸ் பண்ணக் கூடாதுன்னு எல்லாத்தையும் கையில எடுத்தப்ப ஒன்றிரண்டு ஆர்டர்களை டெலிவரி செய்ய தாமதம் ஆகிடும். அப்படி நடந்துச்சுன்னா அது நமக்குதான் நஷ்டம். சரியான நேரத்துல பொருட்களுக்கான சரியான தொகை கிடைக்காம போயிடும். என் தவற்றை உணர்ந்து அதை நான் ஆரம்பத்துலயே சரிபண்ணிக்கிட்டேன்.

66 வயது... அயராத உழைப்பு!

அதுக்கப்புறம்  உற்பத்தி வேலைகளை குறைச்சுக்கிட்டு, கார்ப்பரேட் கிஃப்ட்ஸ் செய்யலாம் என முடிவு செய்தேன். அதற்கு நல்ல மார்க்கெட்டும் இருந்தது. வங்கியின் உதவியுடன் என் கம்பெனியின் பொருட்களின் மேல் ஓவர்டிராஃப்ட் எடுத்து, தொழிலை மேம்படுத்தினேன். ஐந்தே ஆண்டுகளில் சென்னையில் இருக்கும் முன்னணி கார்ப்பரேட் கிஃப்ட் தயாரிப்பாளர்களோடு என்னுடைய  நிறுவனமும் போட்டியில் இறங்கியது. என்னுடையே சிநேகிதி வல்சா ஷ்யாம் சுந்தர் எனக்குத் துணையாக மார்க்்கெட்டிங் செய்ய முன்வந்தார்” என்று கூறியவர், தன்னுடைய கணவரின் பணி ஓய்வுக்குப் பிறகு, தன்னுடைய வேலைகளை கொஞ்சம் லேசாகக் குறைத்துகொண்டு, `நஷா’ஸ் பெயின் டர்ஸ் கார்டன்’ என்கிற கஸ்டமைஸ்டு கிஃப்ட் ஷாப்பை தொடங்கியிருக்கிறார்.  கண்கவர் கிஃப்ட் பொருட்களுடன் பல கஸ்டமர்களின் ஆதரவையும் தன்னகத்தே வைத்திருக்கும் நந்தினி ஷர்மா புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ஆலோசனை சொல்லும்போது,

``சிறு தொழில் செய்ய ஆரம்பிப்பவர் களுக்கு நான் சொல்வதெல்லாம் இந்த மூன்று விஷயங்கள்தான். தரம், நேரம் தவறாமை, மார்க்கெட்டிங்... ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்’’ என்கிறார்  நம்பிக்கையூட்டும் விதமாக!

மு.சித்தார்த்  படங்கள்: மா.பி.சித்தார்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism