Published:Updated:

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

Published:Updated:
எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்று மியூச்சுவல் ஃபண்டுகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே மிகவும் பாப்புலரான முதலீடு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நூறு ரூபாய்க்குகூட முதலீடு செய்யலாம்; ஒரு வருட காலத் திற்கு மேல் வைத்திருந்தால் வருமான வரி கிடையாது; ஆட்டோமேட்டிக் முதலீட்டு முறை என பல சாதகமான அம்சங்கள் எஸ்.ஐ.பி.யில் உண்டு.

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும் போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.  

• முதலீட்டு ஒழுக்கம் - வீட்டுச் செலவிற்கான பணத்தை மாதாமாதம் உங்கள் வங்கியிலிருந்து  எடுப்பதுபோல, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோமேட்டிக்காக (ஈ.சி.எஸ். முறையில்) முதலீட்டுக்குப் பணம் சென்றுவிடும்.

• சந்தை இறங்கினால், நீங்கள் கொடுக்கும் அதே பணத்திற்கு அதிக யூனிட்டுகள் கிடைக்கும். சந்தை ஏறினால் அதுவரையிலான உங்களின் ஒட்டுமொத்த முதலீடும் ஏறும்.

• உங்கள் அறிவை அதிகமாக உபயோகிக்க வேண்டாம்!

• மொத்தமாக பணம் வைத்திருந்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

• முதலீடு செய்வதற்கு பணமில்லாமல் போனால்,  ஒரு மாத நோட்டீஸில் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிடலாம்!

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
##~##
இதுபோல் நன்மைகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

ஆனால், இவ்வளவு நன்மைகள் இருந்தும், நடுத்தர மக்கள் பலர் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில்லை. நடுத்தர மக்கள் பலரும் நிலம் வாங்குகிறேன் அல்லது தங்கம் வாங்குகிறேன் என்றுதான் செல்கிறார்களே தவிர, மியூச்சுவல் ஃபண்டுகள் பக்கம் செல்வதற்கு இன்னும் அஞ்சுகிறார்கள். கடந்த 10, 15, 20 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகள் கந்து வட்டி போன்ற லாபத்தை தந்திருக்கிறது. எவ்வளவு லாபம் தந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஒரு முழுமையான ஆய்வு நடத்தினோம்.  

நாம் ஒவ்வொருவரும் முதலீடு செய்யச் செல்லும்முன் நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்துதான் முதலீடு செய்வோம். அல்லது நமக்காக நமது நிதி ஆலோசகர் தேர்வு செய்து தருவார். சில ஃபில்டர் களை பயன்படுத்தி, நல்ல ஃபண்டுகளை முதலில் கண்டறிந்தோம். நாம் பயன்படுத்திய ஃபில்டர்கள் என்ன தெரியுமா?  

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

• டைவர்சிஃபைட் ஃபண்டுகள் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

• குறைந்தது ஐந்து வருடம் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.

• குறைந்தது கடந்த ஐந்து வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10% லாபம் தந்திருக்க வேண்டும். மேலும், கடந்த ஒரு வருட காலத்தில் 'நிஃப்டி 50’ தந்த லாபத்தைவிட அதிகமாக தந்திருக்க வேண்டும்.

• திட்டம் நிர்வகிக்கும் தொகை குறைந்தபட்சம்

200 கோடி ரூபாயாக இருத்தல் வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஃபண்டுகளில் இருந்து மேற்கண்ட ஃபில்டரில் நமக்கு சிக்கிய ஃபண்டுகள் மொத்தம் 22.

இந்த 22 ஃபண்டுகளில், 7 ஃபண்டுகள் 15 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருந்தவை. 2 ஃபண்டுகள் பத்தாண்டிற்கு மேல் நடைமுறையில் இருந்தவை. மீதமுள்ள 13 ஃபண்டுகள், ஐந்தாண்டிற்குமேல் நடைமுறையில் இருந்தவை. இந்த ஆய்வை இந்த தருணத்தில் எடுத்துக் கொண்டதற்கு என்ன காரணம்?

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

சந்தை விழுந்துவிட்டது, விழுந்துவிட்டது என்று ஒரு பக்கம் சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்க, மற்றொரு சாராரோ கூலாக ஒழுக்கத்துடன் முதலீடு செய்துவிட்டு, ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குறைந்த சந்தையிலேயே இந்தளவு லாபத்தை தந்திருக் கிறது என்றால், சந்தை உச்சத்தில் இருக்கும்போது  எந்த அளவுக்கு லாபம் தரும் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  

வரும்படி கம்மி என்பவர்கள், தங்கள் தகுதிக்கேற்ப முதலீடு செய்யலாம். நான் பிஸினஸ்மேன், என்னால் மாதாமாதம் முதலீடு செய்ய முடியாது என்பவர்கள் எஸ்.டி.பி. முறையில் முதலீடு செய்யலாம். ஆனால், ஏதேதோ காரணம் சொல்லி முதலீடு செய்யாமலே இருப்பது தவறு.  

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

நான் எந்த ஃபண்டில் முதலீடு செய்தாலும் நிச்சயம் லாபம் கிடைக்குமா என்று நீங்கள் கேட்கலாம். எந்த ஒரு முதலீட்டையும் போல, மியூச்சுவல் ஃபண்டுகளையும் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். அத்தோடு நின்று விடாமல் வருடத்திற்கு ஒருமுறையாவது நம் முதலீடு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறதா? சரியான ஃபண்டில்தான் நாம் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறோமா என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டும்.  

அட்டவணை 1-ஐ கவனியுங்கள். ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்டில் கடந்த 15 வருடங்களாக மாதத்திற்கு 10,000 ரூபாய் சேமித்திருந்தீர்கள் எனில், இன்றைக்கு அதன் மதிப்பு 1.72 கோடி ரூபாய்.  10,000 அதிகம், ஐயாயிரம் ரூபாய் மட்டுமே போட முடிந்திருக்கும்  எனில், இன்றைக்கு அதன மதிப்பு 86 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். நமது லிஸ்டில் இருக்கும் ஏழு ஃபண்டுகளில், சுமாராக லாபம் தந்துள்ள யூ.டி.ஐ. ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்திருந் தீர்கள் என்றால்கூட, நீங்கள் மாதாமாதம் முதலீடு செய்த 5,000 இன்று 33 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பெருகி இருக்கும்.

எஸ்.ஐ.பி. முதலீடு - பொற்காலத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

இதில், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம், 5 வருட எஸ்.ஐ.பி. ரிட்டர்ன்ஸைவிட, 10-15 வருட எஸ்.ஐ.பி. ரிட்டர்ன்ஸ் அனைத்து ஃபண்டுகளுக்குமே அதிகமாக இருக்கிறது. பிற முதலீடுகளைப் போல நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, உங்களின் ரிட்டர்ன்ஸும் நன்றாக இருக்கும்.  

இந்தியச் சந்தை இனிவரும் காலங்களில் அள்ளித் தரவேண்டியது ஏராளம்! பிறகென்ன?  உங்களது நீண்ட காலத் தேவைகளான ஓய்வூதியம், குழந்தைகள் கல்வி மற்றும் திருமணத்திற்கு நல்ல ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து, எஸ்.ஐ.பி. முறையில் துணிந்து முதலீடு செய்யுங்கள்! லாபத்தை அள்ளுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism