Published:Updated:

குட் பை ஸ்டீவ்!

குட் பை ஸ்டீவ்!

குட் பை ஸ்டீவ்!

குட் பை ஸ்டீவ்!

Published:Updated:

தொட்டில் குழந்தை!

குட் பை ஸ்டீவ்!

ரேனோ... - அமெரிக்க நெவாடா மாநிலத்தில் இருக்கும் ஊர்... இங்கே சூதாட்டம் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற விளையாட்டு. எண்பது வயது முதியவர் ஒருவர் காசினோவில் உட்கார்ந்து கொண்டு வஞ்சிர மீன் நூடுல்ஸைச் சாப்பிடுகிறார். அவர்தான் காசினோவின் வைஸ் பிரசிடென்ட் ஜண்டாலி. அவருடைய கண்கள் நொடிக்கு ஒருமுறை அவருடைய ஐபோன் மீது. பத்து முறைக்கு மேல் போன் செய்துவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட் பை ஸ்டீவ்!

னால், மோனோ ஸிம்ப்ஸன் போனை எடுக்கவே இல்லை. 56 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த தவறை நினைத்து வருந்துகிறார் ஜண்டாலி. மோனா ஸிம்ப்ஸன் ஜண்டாலியின் மகள். அமெரிக்காவின் பிரபல நாவலாசிரியை. ஜண்டாலியின் மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். அகால மரணமடைந்துவிட்ட தனது மகனின் மறைவு குறித்து அவன் உடலின் பக்கத்தில் இருக்கும் மகளோடு பேசத்தான், காலையிலிருந்தே போன் செய்கிறார். ஆனால் அவரோடு பேச மகள் தயாராக இல்லை!

உலகமே புகழும் மகனையும் அவர் குழந்தையாக இருக்கும்போது பார்த்ததுதான். நினைவு தெரிந்தபிறகு மகன் அவரைப் பார்க்கவேயில்லை. பார்க்க முயற்சி எடுக்கவுமில்லை.

##~##
1954. சிரிய நாட்டைச் சேர்ந்த அப்துல் ஃபட்டா ஜான் ஜண்டாலி அமெரிக்க விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, ஜோயன் கரோல் சியபல் என்கிற சக மாணவியோடு காதல் உருவானது. திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். வெளிநாட்டவரை, வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ய ஜோயன் வீட்டில் சம்மதிக்கவில்லை.

அந்த நாட்களில் கல்யாண மாகாமல், குழந்தை பெற்றுக் கொள்வதை சமுதாயம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், திருமணத்திற்கு முன்பு ஸ்டீவ் உருவாகி இருந்தார். சொந்த ஊரில் இருந்தால்தானே அவமானம்? கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான்ஃபிரான்சிஸ்கோ நகரத்துக்குப் போனார்கள். பிப்ரவரி 24 , 1955. அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அதை ஆசையோடு வளர்த்தெடுக்க அம்மா, அப்பா இருவருக்குமே இஷ்டமில்லை.

குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே, 'இந்தக் குழந்தை நமக்கு வேண்டவே வேண்டாம், தத்துக்கொடுத்து விடுவோம்’ என்று முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான அலுவலகத்தில் பதிவு செய்தார்கள். முதலில் தத்து எடுக்க முன்வந்தவர் ஒரு வழக்கறிஞர். தான் மகனை உதறித் தள்ளினாலும், தத்து எடுக்க விரும்புபவர்கள் அவனை கல்லூரிப் படிப்பு படிக்க வைக்க வேண்டும், அப்போதுதான் அவன் சொந்தக் காலில் வசதியாக வாழ்வான் என்னும் கனவு அம்மா ஜோயனுக்கு இருந்தது.

மகராசன் எந்த ராசியில் பிறந்தானோ, இந்த ஆசையில் அடுத்த இடி விழுந்தது. தத்து எடுக்க ஒப்புக்கொண்ட வழக்கறிஞர் மனதில் மாற்றம். 'எனக்கு ஆண் குழந்தை வேண்டாம்; பெண் குழந்தையை மட்டுமே வளர்க்க ஆசைப்படுகிறேன்.'' -சமுதாயம் அந்த இளநெஞ்சுக்குக் கொடுத்த இரண்டாம் உதை!

குட் பை ஸ்டீவ்!
குட் பை ஸ்டீவ்!

தத்து எடுப்பவர் வரிசையில் அடுத்ததாக இருந்தவர்கள் பவுலா ஜாப்ஸ், அவர் மனைவி கிளாரா ஜாப்ஸ். பவுலா பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். பழைய கார்களை வாங்கி ரிப்பேர் செய்து விற்கும் மெக்கானிக். இவருக்கும் கிளாராவுக்கும் படிப்பின் முக்கியத்துவம் தெரியுமா, குழந்தையை கல்லூரிக்கு அனுப்புவார்களா என்கிற பயம் ஜோயனுக்கு இருந்தது. எனவே, ஜாப்ஸ் தம்பதிகளிடம் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதி வாங்கிக் கொண்டார், 'இவனைக் கல்லூரிப் படிப்பு படிக்க வைக்கிறேன்'' என்று!

ஜாப்ஸ் தம்பதிகள் ஸ்டீவை அன்போடு வளர்த்தார்கள். எந்தக் காலகட்டத்தில், தாங்கள் அவனுடைய சொந்த அம்மா, அப்பா இல்லை என்று சொன்னார்கள் என்பது தெரியவில்லை. அம்மா, அப்பாவால் தூக்கி எறியப்படும் குழந்தைகளுக்கு நெஞ்சில் நீங்காத ரணம் இருக்கும். தன் பெற்றோர்கள் மீது, சொந்தங்கள் மீது, சமுதாயத்தின் மீது கோபம் இருக்கும். யாரையும் நம்ப மாட்டார்கள், எந்த நண்பனையும், உறவையும் தங்களை நெருங்க விடமாட்டார்கள். அதே சமயம், யாராவது தன்னிடம் அன்பு காட்டமாட்டார்களா, அங்கீகரிக்க மாட்டார்களா என்று ஏங்குவார்கள்.

குட் பை ஸ்டீவ்!

பிறர் கவனத்தை ஈர்க்க, சமுதாயம் ஏற்படுத்தியிருக்கும் விதிகளை உடைப்பார்கள். தங்களைத் தூக்கி எறியக் காரணமாக இருந்த பெற்றோர் களுக்கும், சமுதாயத்துக்கும் 'நான் யார் என்று நிரூபித்துக் காட்டுகிறேன் பார்'' என்கிற வெறியோடு அலைவார் கள். இந்த வெறி ஒரு காட்டாற்று வெள்ளம். இதை சீர்ப்படுத்தினால் அது மின்சார சக்தியாகும்.இல்லாவிட்டால், பேரழிவு சக்தியாகும். பெரும்பாலான தொட்டில் குழந்தைகளைக் கிரிமினல்களாக்குவது இந்த வெறிதான்.

ஸ்டீவிடமும் இந்த வெறி இருந்தது. சின்ன வயதில் அவர் ஒரு வால் பையன். படிப்பில் அவர் கவனம் செலுத்தியதாகவே தெரியவில்லை. 'வகுப்பில் பட்டாசு வெடித்தார், பாம்புவிட்டார்'' என பலவிதமாகச் சொல்கிறார்கள். எப்படியோ தட்டுத் தடுமாறி நான்காம் வகுப்புக்கு வந்தார். அப்போது அவருடைய வகுப்பு ஆசிரியை இமோஜின் டெடி ஹில்.

படிப்பில் ஜீரோ, வால் தனத் தில் ஹீரோவாக இருந்த ஸ்டீவை இமோஜினுக்குப் பிடித்தது. இந்தப் பொடியனிடம் ஏதோ பொறி இருக்கிறது என்பதை உணர்ந்தார். 'சமத்துப் பாப்பா, நல்லாப் படி. படிச்சாத்தான் பெரிய ஆளா வரமுடியும்'' என்றெல்லாம் பேசிப் பார்த்தார். ஸ்டீவ் மசியவில்லை. இந்தப் பையனை எப்படியாவது வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று சபதம் எடுத்தார். அதற்காக அவர் எடுத்த ரூட் 'லஞ்சம்!’

'ஸ்டீவ், நீ வகுப்பில் முதல் மார்க் வாங்கினால் சாக்லேட் தருகிறேன், பொம்மை வாங்கித் தருகிறேன், ஐந்து டாலர் பரிசு தருகிறேன்'' என்று சொன்னார். கை மேல் பலன். ஸ்டீவ் மார்க் எகிறியது. ஸ்டீவுக்கு இரட்டை புரமோஷன் கிடைத்தது. நான்காம் வகுப்பிலிருந்து நேராக ஆறாம் வகுப்பு. அன்பு காட்டுபவர்கள் இருந்தால், பரிசுகள் போன்ற அங்கீகாரங்கள் கிடைத்தால், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று காட்டினார் ஸ்டீவ்.

குட் பை ஸ்டீவ்!

ஜாப்ஸ் தம்பதிகள் தங்கள் மகனைப் பற்றி பெருமைப்பட்டார்கள். இரட்டை புரமோஷன் ஸ்டீவுக்கு சந்தோஷத்தையும், வருத்தத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்தது. தன் சாதனை சந்தோஷம். அதே நேரத்தில், அவன் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் கிடையாது. ஆறாம் வகுப்புக்காக புதிய பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும். அவனிடம் அன்பு காட்டிய இமோஜின் டீச்சரைப் பார்க்க முடியாது. இமோஜின் டீச்சரை வாழ்நாள் முழுக்க ஸ்டீவ் மறக்கவேயில்லை. பல பேட்டிகளில் அவரை நன்றியோடும், பாசத்தோடும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

ஸ்டீவ் புதுப் பள்ளிக்குப் போனார். அந்தப் பள்ளிக்கூடம் ஏழை மக்கள் வாழ்ந்த பகுதி. பசங்களுக்குப் படிப்பில் விருப்பமே கிடையாது. வகுப்பை கட் பண்ணிவிட்டு ஊர் சுற்றுவதிலும், கலாட்டா செய்வதிலுமே நேரத்தை செலவிட்டார்கள். அங்கே படிப்பு சுத்தமாக இல்லை. வால்தனத்திலும் அவரைவிடப் பெரிய தாதாக்கள் இருந்தார்கள். நம்மால் இங்கே முத்திரை பதிக்க முடியாது என்பதை ஸ்டீவ் உணர்ந்தார்.

பிடிவாதம் ஸ்டீவின் உயிரோடு கலந்த குணம். அவரைப் பொறுத்தவரை அவர் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான். ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று தீர்மானித்தால்,  அதை அடைந்தே தீரவேண்டும். முடியாது என்ற வார்த்தை அவர் அகராதியிலேயே கிடையாது.

ஸ்டீவுக்குப் பதினொரு வயது. ஒருநாள் பள்ளியிலிருந்து வந்தார். 'நான் இனிமேல் இந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன். இங்கேதான் போக வேண்டுமென்று நீங்கள் சொன்னால், எனக்குப் படிப்பே வேண்டாம்.''

ஸ்டீவின் பிடிவாதம் ஜாப்ஸ்களுக்குத் தெரியும். மகனுக்காக, லாஸ் ஆல்ட்டோஸ் ஊருக்கு வீட்டை மாற்றினார்கள். கியூப்பர்ட்டினோ ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்டீவைச் சேர்த்தார்கள். இந்த மாற்றம்தான் எந்தத் துறையில் ஈடுபட வேண்டும் என்பதை ஸ்டீவுக்கு உணர்த்தப் போகும் ஒரு போதி மரமாக இருக்கப்போகிறது என்று அப்போது யாருக்குமே தெரியாது.

(பாடம் படிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism