Published:Updated:

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

Published:Updated:

தனியா - ஏலக்காய்

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கடந்த அத்தியாயத்தில் மிளகு, சீரகம் குறித்து பார்த்தோம். இந்த இதழில் தனியா (மல்லி), ஏலக்காய் ஆகியவற்றைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

'ஈகிள் (கழுகு), ஸ்கூட்டர், டபுள் பேரட் (இரட்டைக் கிளி), சிங்கிள் பேரட் (ஒற்றைக் கிளி), சூப்பர் கிரீன்... இதெல்லாம் என்ன என்கிறீர்களா? 'தனியா’ அல்லது மல்லியின் (விதை) சில வகை சந்தைப் பெயர். இதில் பல வெரைட்டி உண்டு என்றாலும், சில பெயர்கள் சுவாரஸ்ய மானவை. இதில், பாதாமி வகைதான் 65 - 70 % சந்தையில் வர்த்தகமாகிறது. சர்வதேச அளவில், மல்லி உற்பத்தியில், தேவையில், ஏற்றுமதியில் என அனைத்திலும் நம்பர் ஒன் இந்தியாதான்.

அன்றாட சமையலில் வாசனைப் பொருளாக மட்டுமல்லாமல் பாக்டீரியாவிற்கு எதிரான மருத்துவ குணங்களுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது தனியா. மொத்த உற்பத்தியில் ஐம்பது சதவிகிதத்திற்குமேல் மசாலா தயாரிப்புக்குச் செல்கிறது அதுவும், தென்னிந்தியாவில் தான்.

விதைக்கப்பட்ட உடன் கொஞ்சம் குளிர்ச்சியான தட்ப வெப்பநிலையும் வளர்ந்தபின் அதிக அளவில் வெயிலும் தேவை என்பதால், இதற்கேற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. விதைக்கப்பட்டு பயிர் அறுவடைக்கு வர 3 முதல் 4 மாதங்களாகும். பொதுவாக, அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பயிரிடப்பட்டு ஜனவரி கடைசியில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை அறுவடை யாகி, சந்தைக்கு வரும்.

உலகின் மொத்த உற்பத்தியில் 80% இந்தியாவில்தான். இதில் சுமார் 50 சதவிகிதத்திற்குமேல் ராஜஸ்தானில். அதையடுத்து, அசாம், பீகார், சத்தீஷ்கர், ஒடிஷா, குஜராத், இமாசலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகிறது.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

உற்பத்தியில் சுமார் பத்து  சதவிகிதத்திற்குள்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பத்து ஆண்டு களுக்கு முன்னர் சுமார் 12,000 டன்களுக்கும் கீழே இருந்த ஏற்றுமதி இப்போது மூன்று மடங்குக்குமேல் அதிகரித்து 38,500 டன்களுக்குமேல் இருக்கிறது. ரூபாய் மதிப்பில் பார்த்தால், 2000-01-ம் ஆண்டில் 35 ரூபாய் கோடியாக இருந்த நமது ஏற்றுமதியின் மதிப்பு இன்று 170 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.

மல்லி விளையும் இதர நாடுகள்: பாகிஸ்தான், மொராக்கோ, கனடா, ருமேனியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, உக்ரைன், ஈரான், எகிப்து, துருக்கி, இஸ்ரேல், சீனா, அர்ஜென்டினா,  மெக்ஸிகோ ஆகியவை.

இறக்குமதி செய்யும் நாடுகள்: இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஓமன், பக்ரைன். குவைத், சௌதி அரேபியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவை. இவை, பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள்.

ஆகஸ்ட் 2008 தொடங்கி என்.சி.டி.எக்ஸ்-சில் வர்த்தகமா கிறது. குறைந்தபட்ச வர்த்தக / டெலிவரி அளவு 10 மெட்ரிக் டன். டெலிவரி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா-வில்.

நவம்பர் 18-ம் தேதி அன்று முதிர்வடையும் ஒப்பந்தம் குவிண்டால் ஒன்றுக்கு 5,453 ரூபாய் என வர்த்தகமாகிறது. டிசம்பர் 20-ம் தேதி ஒப்பந்தம் 5,500 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதில், ஓரளவு லிக்விடிட்டி உள்ள நவம்பர் மாத ஒப்பந்தம், வர்த்தகத்திற்கு ஏற்றது.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

தனியா வர்த்தகம் அதிகம் நடப்பது ராஜஸ்தானில் உள்ள ராம்கஞ்ச் மண்டியிலும் பரன் மண்டியிலும்தான்; குணா மண்டி, மத்தியப் பிரதேசத்தில் கும்பராஜ் மார்க்கெட், ஷியோபூர் கலான், பையோரா, ஆந்திராவில் குண்டூர், வரவக்கோன்டா, நந்தியால், கர்நாடகாவில் தாவங்கரேயில், உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, ஜான்பூரிலும், குஜராத்தில் ஜுனகத்தில், தீசாவில், கேரளாவில் ஆலப்புழையில் தமிழ்நாட்டில் திருச்சி, விருதுநகர் சந்தைகளிலும் வரத்து எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து விலைப்போக்கு அமையும்.

திருவிழா, பண்டிகை, திருமணம் மற்றும் விஷேச காலங்களில் தேவை அதிகரித்து விலையும் உயரலாம். இவை தவிர, பொதுவான காரணங்களாலும் விலை மாறலாம். நீண்டகால அடிப்படையில் விலை அதிகரிக்கலாம் என்றாலும்,

நடப்பாண்டில் ஏற்றுமதி கடுமையாக குறைந்துள்ளதால், தற்காலிகமாக இறங்குமுகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

 உதவியாக இருக்கும் இணையதளம்:

ஏலக்காய்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

மசாலாப் பொருட்களின் அரசி என அழைக்கப்படும் ஏலக்காய்,  பெரும்பாலான உணவு வகைகளில் வாசனைக்காகச் சேர்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 70% உற்பத்தி கேரளாவிலிருந்தும், 20% கர்நாடகாவிலிருந்தும் மீதம் 10% உற்பத்தி தமிழகத்திலிருந்தும் கிடைக்கிறது. உற்பத்தியில் 90 சதவிகிதத்திற்குமேல் நம் நாட்டிலேயே பயன்படுத்தப் படுகிறது; 10% மட்டுமே ஏற்றுமதியாகிறது. செப்டம்பர் முதல் ஜனவரி வரை சந்தைக்கு விற்பனைக்கு வரும்.

ஏலக்காய் வளர்க்கும் மற்ற நாடுகள்: கௌதமாலா (உலகின் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி இங்குதான்), இந்தியா, இலங்கை, கம்போடியா, வியட்நாம், லாவோஸ், எல்சால்வடர், தான்சானியா, ஹோன்டுராஸ், பப்புவா நியூகினியா ஆகியவை.

 ஏலக்காய் பயன்படுத்தும் நாடுகள்: மேற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஸ்காண்டிநேவியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள்.

இறக்குமதியில் நம்பர் ஒன் சவுதி அரேபியா; அதற்கு அடுத்து குவைத். ஐக்கிய அரபு  எமிரேட்ஸ், சீனா, ஜப்பான், ஹாங்காங், நெதர்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய வையும் இறக்குமதி நாடுகள்.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

சரி, உங்களுக்கெல்லாம் ஏலக்காய் டீ தெரியும்; ஆனால், எங்காவது ஏலக்காய் காபி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'கவா’ எனும் பாரம்பரியம்மிக்க ஏலக்காய் காபி அரேபியர்கள் மத்தியில் பிரபலம். இதில் சர்க்கரைக்குப் பதில் பேரீச்சம்பழச்சாறு சேர்க்கப் படுகிறது.

எம்.சி.எக்ஸ்.ஸில் தற்போது 4 ஒப்பந்தங்கள் வர்த்தகமா கின்றன. நடப்பாண்டில் நவம்பர் 15-ம் தேதி முதிர்வடையும் ஒப்பந்தம், கிலோ ஒன்று 692ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. (ஒரு கட்டத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய்க்கு (!) மேல் வர்த்தகமானதும் உண்டு. டிசம்பர் மாதம் 15-ம் தேதி முடிவடையும் ஒப்பந்தம்

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

735 ரூபாய்க்கும், அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஒப்பந்தம் 767 ரூபாய்க்கும், பிப்ரவரி 15-ம் தேதி ஒப்பந்தம் 793 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. எல்லா ஒப்பந்தங்களுமே ஓரளவுக்கு லிக்விடிட்டியோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

குறைந்தபட்ச வர்த்தக /டெலிவரி அளவு: ஒரு குவிண்டால் (100 கிலோ); வர்த்தகத்துக்கு முன் கட்ட வேண்டிய முன்பணம்: 5%. டெலிவரி: கேரளாவில், இடுக்கி மாவட்டத்தில் வந்தன்மேடு மற்றும் போடிநாயக்கனூர்.

மும்பை, டெல்லி, கான்பூர், கர்நாடகாவில் மெர்காரா, சக்லாஷ்பூர், மங்களூர், கேரளாவில் கொச்சி, தொடுப்புழா, குமுளி, தேக்கடி, நெடும்கன்டம், புளியன்மலா, தமிழகத்தில் கம்பம், போடி, பட்டிவீரன்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட சில இடங்களிலும் உள்ள ஏலக்காய் சந்தைகளின் வர்த்தகமும் சரக்குப் போக்குவரத்தும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

கடந்த ஆண்டு தொட்ட உச்சத்திலிருந்து பாதிக்கும் கீழ் இறங்கிவிட்டதால், இப்போதைய விலையில் வாங்குவோருக்கு 'மார்ஜின் ஆஃப் சேஃப்டி’ அதிகம். எனவே, அதிக பாதிப்பு வராது என்று நம்பலாம். என்றாலும், டெக்னிக்கலாக பார்க்கும்போது இறங்குமுகம்தான் தொடரும். அல்லது 720 ரூபாயைத் தாண்டும் வரை பெரிய அளவில் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும்.

(தொடர்ந்து கலக்குவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism