Published:Updated:

கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி


தங்கம்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்ற வாரம் முழுக்கவே விலை குறைந்த தங்கம் வெள்ளியன்று மீண்டும் உயர்ந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்ததே இதற்கு காரணம்.

எனினும், சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க 1.3 டிரில்லியன் டாலர் பண உதவி செய்யப்படும் என ஜெர்மனியும் பிரான்ஸும் அறிவித்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 1,695 டாலரும், குறைந்தபட்சமாக 1,610 டாலருக்கும் விற்றது. எம்.சி.எக்ஸ். சந்தையில் 10 கிராம் தங்கம் அதிகபட்சமாக 26,946 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 26,103 ரூபாய்க்கும் விலை போனது.

அடுத்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை இன்னும் தீவிர மடையும் பட்சத்தில் தங்கம் விலை உயர வாய்ப்புண்டு. ஆயினும், அமெரிக்க டாலரின் மதிப்பையும் கவனிப்பது அவசியம்.

கமாடிட்டி


வெள்ளி!

வெள்ளி விலையும் கடந்த வாரம் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி அதிகபட்சமாக 32.25 டாலருக்கும், குறைந்தபட்சமாக 30.25 டாலருக்கும் விலை போனது. எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளி அதிகபட்சமாக 53,450 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 51,375 ரூபாய்க்கும் விலை போனது.

 உலக அளவில் மிகப் பெரிய வெள்ளி இ.டி.எஃப். ஃபண்ட் நிறுவனமான ஐஷேர் தனது வெள்ளி கையிருப்பை சுமார் மூன்று டன் அளவிற்கு குறைத்துக் கொண்டுள்ளது.

அடுத்த வாரத்தில் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும் செய்திகள் வந்து, அதனால் தங்கம் விலை உயரும் பட்சத்தில் வெள்ளி விலையும் உயரும்.

கச்சா எண்ணெய்!

ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை காரணமாக கடந்த வாரத்தில் விலை இறக்கம் கண்டு வந்த கச்சா எண்ணெய் வாரக் கடைசியில் உயர ஆரம்பித்தது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் முயற்சி செய்து வருவதை யட்டி கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு பேரல் டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் 85.98 டாலராகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 110.65 டாலராகவும் விலை போனது.

அடுத்த வாரத்தில் டாலரின் மதிப்பு தொடர்ந்து சரியும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை உயரவே செய்யும்.

கமாடிட்டி


காப்பர்!

காப்பர் விலை சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் விலை இறக்கம் கண்டு வருகிறது. இதன் விலை சமீபத்தில் ஏறவே ஏறாது என்கிற அளவுக்கு நெகட்டிவ்-ஆன சென்டிமென்டே காப்பர் டிரேடர்களிடம் நிலவுகிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சி சுணக்கம் கண்டிருப் பதாலும், சீனாவின் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும் காப்பர் விலை தற்போது டன் ஒன்றுக்கு 7,000 டாலருக்கும் கீழே விற்பனை ஆகிறது. கடந்த பிப்ரவரி முதல் இதன் விலை 31 சதவிகிதமும் கடந்த ஒரு மாதத்தில் 7 சதவிகிதமும் குறைந் திருக்கிறது.

உலக பொருளாதாரம் மீண்டும் உற்சாகமாக வளர்ச்சி அடைந்தால் மட்டுமே காப்பர் விலை பெரிய அளவில் உயர வாய்ப்புண்டு.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவில் கதகதப்பான சீதோஷ்ண நிலை நிலவு வதாலும், உலக அளவில் உற்பத்தி அதிகரித்திருப்பதாலும் இயற்கை எரிவாயுவின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஐரோப்பிய யூனியனின் இயற்கை எரிவாயுவின் தேவை கடந்த ஓராண்டு காலத்தில் 10% குறைந்திருக்கிறது. பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பிரேசில் நாட்டு அரசாங்கம் இயற்கை எரி வாயுவின் விலையை 19% குறைத்திருக்கிறது. எனவே, அடுத்துவரும் நாட்களில் இந்த விலை உடனடியாக உயரும் என்று எதிர்பார்க்க முடியாது.

-ஏ.ஆர்.குமார்

கமாடிட்டி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism