Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
ஷேர்லக் ஹோம்ஸ்

''வெற்றி, வெற்றி'' என்று முழங்கியபடி நம் கேபினுக்குள் நுழைந்தார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஜரூராக வெளியாகிக் கொண்டிருந்ததைப் பார்த்து உற்சாகமாகிவிட்டாரோ என்று நாம் அவரை ஒரு மாதிரியாகப் பார்க்க, ''மாருதி நிறுவனத்தின் ஸ்டிரைக் முடிந்ததைத்தான் சொல்கிறேன்’ என ஒரு சின்ன விளக்கம் கொடுத்துவிட்டு, மேட்டருக்கு வந்தார். நாமும் சுறுசுறுப்பாக குறிப்பெடுக்க ஆரம்பித்தோம்...

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வ
ருகிற 25-ம் தேதி, அதாவது செவ்வாய்க்கிழமை அன்று ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடக்கிறது. இந்த முறையும் கால் சதவிகிதம், அதாவது 0.25% அளவிற்கு வட்டி விகிதத்தை உயர்த்த நிறையவே வாய்ப்பிருப்பதாகப் பலரும் கிசுகிசுக்கிறார்கள். பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதோடு, இரட்டை இலக்கத்தை அடைந்துவிட்டதே என்கிற கவலை ரிசர்வ் வங்கிக்கு அரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஏற்கெனவே 12 முறைக்கும் அதிகமாகவே கடனுக்கான வட்டியை அதிகரித்து விட்டது. மீண்டும் உயர்த்தினால் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் பாதிப்படையும். இதனால், நிறுவனங்களின் லாபம் கணிசமாகக் குறையும். எனவே, இன்னொரு முறை வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டவே வேண்டாம் என்கிறது தொழில் துறை வட்டாரம்.

கடந்த முறை வட்டி விகிதத்தை உயர்த்தியபோது பெரிய ரியாக்ஷன் இல்லாமல் இருந்ததுபோல, இந்த முறையும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வட்டி விகித உயர்விற்கு ஏற்ப சந்தை பெரிய அளவில் சரிய வாய்ப்பிருக்கிறது. தவிர, அன்றைய தினம் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பையரி முடிவு நாள். அது மட்டுமில்லாமல்,  ஐரோப்பிய கடன் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் ஐரோப்பிய யூனியன் சம்மிட் மாநாட்டில் வெளியாகப் போகிறது.

ஷேர்லக் ஹோம்ஸ்

சாதாரணமாக ஒரு புயல் வந்தாலே சந்தை சதிராடும். ஒரே நேரத்தில் மூன்று புயல் தாக்கினால் சந்தை என்னத்திற்காகும்? எனவே, அன்றைய தினம் உம் வாசகர்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லும்!''

''கண்டிப்பாக! சரி, 'தங்க’மான அந்த கேரள நிறுவனத்தில் பிரச்னையாமே!'' - அடுத்த செய்திக்கு அவருக்கு அடி எடுத்துக் கொடுத்தோம்.

''இந்த நிறுவனத்தின் மும்பை கிளையில் இருந்த நகைகள் கொள்ளை போன செய்திக்குப் பிறகு இந்த பங்கின் இமேஜ் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் 'மல்ட்டி பேகர்’ ஆக பார்த்து வரப்பட்ட இந்தப் பங்கை அதன் புரமோட்டர்கள் முடிந்த போதெல்லாம் விற்று வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு 60 சதவிகிதத்திற்குமேல் பங்கு வைத்திருந்த இதன் புரமோட்டர்கள் இன்றைக்கு வெறும் 36 சதவிகிதப் பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

தவிர, குவாலிஃபைடு இன்ஸ்டிடியூஷனல் பிளேஸ்மென்ட் (கியூ.ஐ.பி.) கூடிய விரைவில் வர நடவடிக்கை எடுத்து வருகிறதாம். கியூ.ஐ.பி. என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு எதிரானது என்றுதான் அர்த்தம். எனவே, கடந்த காலத்தில் கிடைத்த லாபம் இந்தப் பங்கில் இனி கிடைக்காது என்கிறார்கள். ஒன்று, உஷாராக கவனியுங்கள் அல்லது விற்றுவிடுங்கள் என்பதே விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும் ஆலோசனை!''

''ஐ.பி.ஓ.க்கள் அட்டகாசமான லாபம் தர ஆரம்பித்துவிட்டதைக் கவனித்தீரா?'' - ஏலக்காய் டீ கொடுத்தபடி கேட்டோம்.

''எம் அண்ட் பி சுவிட்ச் நிறுவனத்தைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்?'' என்று கேட்டபடி ஏக் தம்மில் குடித்து முடித்தவர் மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

''கடந்த வியாழக்கிழமை அன்று சுமார் 179 ரூபாய்க்கு டிரேட் ஆக தொடங்கிய இந்தப் பங்கு அன்றைய தினமே 133 வரை இறங்கியது. அவ்வளவுதான், போட்ட பணம் நாசம் என்று எல்லோரும் இந்த பங்கை விற்க, சரசரவென உயர்ந்து 317 ரூபாய் வரை உயர்ந்தது. இது கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திற்கும் அதிகம். கோடிக்கணக்கான பங்குகள் அன்றைக்கு கை மாறின. எனக்குத் தெரிந்து எந்த ஒரு பங்கும் முதல் நாளிலேயே இப்படி ஒரு ஏற்றத்தைக் கண்டதில்லை. முதல் நாள்தான் இப்படி என்றால், இரண்டாம் நாளும் 20% உயர்ந்து, அப்பர் சர்க்யூட்டை தொட்டது. இதேபோல ஒன்லைஃப் கேபிட்டல் என்கிற பங்கும் ஒரே வாரத்தில் 80% லாபம் தந்திருக்கிறது. பெரிய பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளே குட்டிக் கரணம் போட்டுக் கொண்டிருக்கும் போது, பிரகாஷ் கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற நிறுவனம் 31% லாபம் தந்திருக்கிறது. ஆனால், தக்ஷீல் சொல்யூஷன், திஜாரியா பாலிபிப் என்கிற நிறுவனங்கள் 70 சதவிகிதத்திற்குமேல் நஷ்டம் தந்திருக்கின்றன.

ஷேர்லக் ஹோம்ஸ்

இந்தப் பங்குகளில் சில பெரிய டிரேடர்கள்  நுழைந்து இஷ்டத்திற்கு விளையாடுவதுதான் இப்படி பேயாக ஆட்டம் போடுவதற்குக் காரணம். யார் இந்த டிரேடர்கள்? இப்படிச் செய்வது சரியா? என்பதை எல்லாம் விசாரித்து சொல்ல வேண்டிய வேலை செபி-யுடையது. ஆனால், இதற்கெல்லாம் செபி என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.''

''அநியாயம், அநியாயம்'' என்று சொல்லிவிட்டு, ''அடுத்த மேட்டர் என்ன'' என்றோம்.

''இரும்புத் தாதுவின் விலை குறைந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட 20% வரை குறைந்து விட்டது. இது ஜே.எஸ்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால், சேச கோவா நிறுவனத்துக்கு நெகட்டிவ்வாக அமையும்.

இதேபோல, காப்பர் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. இது ஹிண்டால்கோ மற்றும் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு நெகட்டிவ்-ஆக இருக்கும்.

கோல் இந்தியா வெளிநாடுகளில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. அது பாசிடிவ் செய்தியாக இருந்தாலும், இதனால் உடனடி நன்மை எதுவும் ஏற்படப் போவதில்லை''

ஏறக்குறைய புறப்படத் தயாரானவர், ''டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து வருகிறது. தற்போது டாலர் 50 ரூபாயில் இருக்கிறது. விரைவில் 52 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படிச் செல்லும்பட்சத்தில் இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் அதிகமாக எடுக்க வாய்ப்பிருக்கிறது.

தவிர, அடுத்த வாரத்தில் மூன்று நாள் மட்டுமே வர்த்தகம் நடக்கும். புதன், வியாழன் என இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை. வெள்ளிக்கிழமை சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் அன்று கொஞ்சம் நிதானத்தோடு டிரேட் செய்வது நல்லது.

முகூர்த் டிரேடிங் பற்றி நீரே நல்ல அட்வைஸ் தந்திருக்கிறீர். எனவே, நான் தீபாவளி வாழ்த்துக்களோடு நிறுத்திக் கொள்கிறேன்'' என்றவரிடம், ஷேர் டிப்ஸ் என்று இழுத்தோம்... ஓ.என்.ஜி.சி. என்று ஒரு பேப்பரில் குறித்து தந்துவிட்டு புயலாய் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism